தளபதி65 படப்பிடிப்புடன் இன்று தொடங்கியது

தமிழ் சினிமாவில் வசூலில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் விஜய். படத்துக்கு படம் வசூலில் சாதனை படைத்துவருகிறார். அந்த வரிசையில் இந்த வருடம் ரிலீஸான மாஸ்டரும் வசூலில் சாதனை படைத்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியானது மாஸ்டர். இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஜய் நடிக்க இருக்கும் படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார். விஜய் 65 என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் நெல்சன். இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் ரிலீஸூக்குத் தயாராகிவிட்டது. கடந்த மார்ச் 26ஆம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய இப்படம், தேர்தல் காரணமாக தள்ளிப் போய் மே 13ஆம் தேதி ரம்ஜானுக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படம் தள்ளிப் போனதால், இவரின் விஜய் 65 படமும் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் படத்தில் எந்த மாற்றமும் இல்லையாம். திட்டமிட்டபடி படப்பிடிப்பைத் துவங்க இருக்கிறார்கள்.விஜய் 65 படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியது. சன்பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் படத்தின் துவக்க விழா நடைபெற்றது. விஜய் உட்பட படத்தின் கலைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இரு நாட்கள் சென்னையில் படப்பிடிப்பை நடத்த திட்டம். அதன்பிறகு, தேர்தல் முடிந்ததும் வெளிநாடு ஷூட்டிங்கிற்குச் செல்கிறார்கள்.

Related posts

Leave a Comment