சொன்னது சொன்னபடி கர்ணன் திரைக்கு வருவான்-தாணு அறிவிப்பு

தமிழ் சினிமா பத்து மாதவனவாசத்திற்கு பிறகு ஜனவரி மாதம் மாஸ்டர் படத்தின் மூலம் தன்னை புதுப்பித்து கொண்டது இருண்டு இருந்த திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்து நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சினார்கள் தேங்கி இருந்த படங்கள் வெற்றிதோல்வியை பற்றி கவலைப்படாமல் ரீலீஸ் செய்யப்பட்டது எந்தப் படமும் படத்தின் முதலீட்டை மீட்டு கொடுக்கும் வகையில் திரையரங்குகளில் வசூல் ஆகவில்லை சோர்ந்து இருந்த திரையரங்குகள் “சுல்தான்” ஏப்ரல் 2 அன்று ரீலீசுக்கு பின் சுறுசுறுப்படைந்தன தமிழகத்தில் உள்ள 1100 திரைகளில் 600 திரைககள் வரை இந்தப்படம் வெளியானது எஞ்சிய திரைகளில் ஏப்ரல் 9 அன்று கர்ணன் படம் திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டு ஏப்ரல் 6 மாலையில் முன்பதிவு தொடங்கப்பட்டது
கலைப்புலி தாணு தயாரிப்பில் தயாராகும் படங்கள் வெளியாகும் நேரத்தில் ஏதேனும் பிரச்சினையை எதிர்கொள்ளும் அதுவே அப்படத்திற்கு இலவச விளம்பரமாக அமைந்துவிடும் 2019 அக்டோபர் 4ம் தேதி அசுரன் வெளியாகும் போது, நெருக்கடியை சந்தித்தார் கலைப்புலி தாணு செப்டம்பர் 20 அன்று வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரையரங்குகளில் வசூல் குறையாமல் ஓடிக்கொண்டிருந்தது அதனால் முதல் தரமான தியேட்டர்கள் தேவையான எண்ணிக்கையில் கிடைப்பதில் சிரமம் இருந்தது கிடைத்த தியேட்டர்களில் படம் வெளியாகி வெற்றிபெற்றது
100% இருக்கை வசதி அனுமதியுடன் தியேட்டர்கள் நடத்த அனுமதி இருந்து வந்ததுதிடீரென்று இந்தியா முழுமையும் கொரானா தொற்றுஅதிகரித்து வருவதால் மத்திய மாநில அரசுகள் தளர்வுகளுடன்
கூடிய சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறதுஅதில்திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் இயங்கவேண்டும் என மாநில அரசுகள் அறிவித்திருக்கிறது
கர்ணன் படம் தனுஷ் நடித்த படங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட படம் அதற்கு ஏற்பவே திரையரங்குள் ஒப்பந்தம், பிரம்மாண்டமான விளம்பரங்கள் என்று படத்திற்கானபுரமேஷான் வேகமெடுத்து வந்த நிலையில் 50% இருக்கைக்கு மட்டுமேடு அனுமதி என்பது” கர்ணன்” வியாபாரத்தை மாற்றும், வசூல் குறையும் இதனால், கர்ணன் பட வெளியீடு தள்ளிப்போகும் என்று சிலர் பேசத் தொடங்கினார்கள்.
அதற்கு உடனே முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஏற்கெனவே 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்கிற விதி இருந்தபோதுதான் விஜய் நடித்த மாஸ்டர் வெளியாகி மாபெரும் வசூலைக் குவித்தது.இப்படமும் அது போல வசூலைக்குவிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

Related posts

Leave a Comment