தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கையூட்டிய கர்ணன்

தமிழக அரசியல், சமூகத்தில், ஊடகங்களில், தயாரிப்பாளர்கள் மத்தியில் கர்ணன் படத்திற்கு தமிழகம் முழுவதும் கிடைத்த ஓபனிங் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது சில இடங்களில் மாஸ்டர் படத்தின் முதல்நாள் வசூலை முறியடித்து முன்னேறியிருக்கிறது வசூல் விபரங்களை கேட்டு தமிழ்சினிமா வட்டாரம்ஆச்சரியப்பட்டு

போயிருக்கிறது.கர்ணன் படம் திருநெல்வேலிக்கு அருகில் கோவில்பட்டியில் படமாக்கப்பட்டது 9.04.2021 காலை 5 மணி காட்சிக்கு திருநெல்வேலியில் வேன், டிராக்டர்களில் தேவேந்திர வேளாளர்கள் அமைப்பின் கொடியுடன் திரையரங்குகளில் குவிந்து படத்தை கொண்டாடி தீர்த்தனர் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூலை காட்டிலும் இங்கு கர்ணன் அதிகம் வசூல் செய்திருக்கிறது முதல் நாள்மொத்த வசூல் 74 லட்ச ரூபாய் ஆகியுள்ளது

மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், இராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய விநியோக பகுதியில் 36 திரைகளில் திரையிடப்பட்ட கர்ணன் படத்துக்கான ஓபனிங் விஜய், அஜீத் படங்களின்.
ஒபனிங்கை முறியடித்திருக்கிறது 36 திரைகளில் சாதாரண டிக்கட் கட்டணத்தில் 1 கோடியே 36 லட்சம் ரூபாயை மொத்த வசூலாக குவித்திருக்கிறது கர்ணன்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் திரையரங்குகளில் இயல்பான தனுஷ் ரசிகர்களுடன் தலித் சமூக இளைஞர்கள் இது எங்கள் உரிமையை, பெருமையை பேசுகிற படம் என்கிற கர்வத்துடன் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளில் கூடியதை ஆச்சர்யத்துடன் திரையரங்க உரிமையாளர்களும், ஊழியர்களும் பார்த்தனர்.

கர்ணன் படம் பார்க்க வந்த கூட்டம் வழக்கமாக தியேட்டருக்கு வருகிற கூட்டமல்ல குறிப்பிட்ட சமூகம் தன் எழுச்சியாக கிளம்பி வந்த கூட்டமாகவே பார்க்க முடிகிறது
2020 பிப்ரவரியில் வெளியாகி வெற்றிபெற்ற திரெளபதி படத்திற்கு இது போன்ற கூட்டத்தை காணமுடிந்தது என்றனர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் விநியோக பகுதியில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 2 கோடியே 85 லட்சம் ரூபாய் முதல்நாள் மொத்த வசூல் செய்திருக்கிறது கர்ணன்

இதற்கு இணையாக வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், சிதம்பரம், பாண்டிச்சேரி பகுதிகளை உள்ளடக்கிய வட ஆற்காடு, தென்னாற்காடு விநியோக பகுதியில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் கர்ணன் படத்திற்கு திரையரங்குகள் மூலம் மொத்த வசூல் ஆகியுள்ளது

சென்னை நகரம் பொதுவான சினிமா ரசிகர்கள், தனுஷ் ரசிகர்கள் கர்ணன் படத்தை காலை 5 மணி சிறப்பு காட்சி முதலே திரையரங்குகளை நிரப்பி கல்லாவை நிரப்பியிருக்கின்றனர்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் சுல்தான் முதல் வாரம் செய்த மொத்த வசூலை நேற்று ஒரே நாளில் செய்திருக்கிறது என்பதுடன் கொரானா முடக்கத்துக்கு பின் திரையரங்குகள் இயங்க தொடங்கினாலும் உட்லண்ட்ஸ் தியேட்டரில் அரங்கு நிறைந்த காட்சிகளாக எந்த படமும் ஓடவில்லை அதை நேற்றைய தினம் கர்ணன் முறியடித்திருக்கிறது இந்த திரையரங்கில் சென்னை நகரத்தின் முதல் நாள் மொத்த வசூல் 1 கோடியே 18 லட்சம் ரூபாய்

திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளை உள்ளடக்கிய திருச்சி விநியோக பகுதியில் கர்ணன் 95 லட்சம் ரூபாயை மொத்த வசூல் செய்திருக்கிறது
சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்செங்கோடு மாவட்டங்களை கொண்ட சேலம் விநியோக பகுதியில் முதல் நாள் மொத்த வசூல் 77 லட்சம் ரூபாய் கர்ணன் படத்திற்கு கிடைத்திருக்கிறது

புதுமையான படைப்புகளை எப்போதும் வரவேற்று ஆராதிக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி மாவட்டங்கள் இடம்பெறும் கோயம்புத்தூர் விநியோக பகுதியின் மொத்த வசூல் செங்கல்பட்டு ஏரியாவுக்கு இணையாக இருக்கும் ஆனால் கர்ணன் திரைப்படத்தின் முதல்நாள் மொத்த வசூல் 1 கோடியே 48 லட்ச ரூபாய் என்பது நிறைவானது என்றாலும் குறைவானது என்கின்றனர் வர்த்தக வட்டாரத்தில்
முதல்நாள் மொத்தவசூல் அளவிற்கு இரண்டாம் நாள் வசூல் இருக்காது என்றாலும் சென்னை, செங்கல்பட்டு, மதுரை விநியோக பகுதியில் முதல்நாள் மொத்த வசூலை நெருங்கும் என்கின்றனர் தியேட்டர் வட்டாரத்தில்

பரியேறும் பெருமாள், அசுரன், இந்த இரண்டு படமும் பாக்ஸ்ஆபீஸ் அடிப்படையில் வெற்றி படங்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது இவை இரண்டும் தலித் உரிமை பற்றி பேசிய படங்கள் அதன் வரிசையில் கர்ணன் உரிமையை பற்றி பேசுவதாக கூறப்பட்டாலும் இந்த நாட்டின் பூர்வகுடிகள், வாளேந்தி ஆண்ட பரம்பரை நாங்கள் என்பதை திரைமொழியில் நுட்பமாக கூறியிருப்பது மற்ற முண்ணனி நாயகர்களின் படங்களுக்கு கிடைக்காத ஓபனிங் கிடைக்க அடித்தளமிட்டதை மறுக்க முடியாது என்கின்றனர் நேர்மையான சினிமா விமர்கர்கள். கர்ணன் படத்தின் வெற்றி தமிழ் சினிமாவில் படத்தயாரிப்பின் திசைவழியை மாற்றுவதற்கான கூறுகளாக அமையும் என்கின்றனர் தயாரிப்பாளார்கள்

Related posts

Leave a Comment