பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாமதமாவதை உறுதிப்படுத்திய கார்த்தி

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இந்திய சினிமா உலகம் எதிர்பார்க்கும் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

கொரானா தொற்று அச்சத்தால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஐதராபாத்தில் பிரமாண்டஅரங்குகள் அமைத்து சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. அடுத்தகட்ட படப்பிடிப்பு

எப்போது என்று அறிவிக்கப்படவில்லை

இந்நிலையில், ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியான’சுல்தான்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் கார்த்தி – ராஷ்மிகா இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்கள்.

அப்போது ‘பொன்னியின் செல்வன்’ குறித்த கார்த்தியிடம் கேட்கப்பட்டது.அதற்கு,

எனது அடுத்த படம் மணிரத்னம் சாருடைய ‘பொன்னியின் செல்வன்’தான். இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளது. 5 பாகங்கள் கொண்ட புத்தகத்தை, 2 பாகங்கள் கொண்ட படமாக உருவாக்கி வருகிறார்1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக் கதை. ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார் எனப் பெரிய நடிகர்கள் பட்டாளமே இருக்கிறது. 70 சதவீதப் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.கொரானா பிரச்சினையால் படம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம். இது மிகப்பெரிய படம். இந்தக் கதையைத் தமிழ்த் திரையுலகம் கடந்த 60 ஆண்டுகளாகப் படமாக்க முயன்று வருகிறது. அது இப்போதுதான் நடைபெறுகிறது.

பொன்னியின் செல்வன்’ அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக இப்போது மத்தியப் பிரதேசத்துக்குப் போயிருக்க வேண்டியது. கொரானா தொற்றுப் பிரச்சினையால் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை. சென்னை அல்லது ஐதராபாத்தில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்.

இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.

அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது மீண்டும் கொரானா அச்சுறுத்தல் ஏற்பட்டது
இதனால் படப்பிடிப்பு வேலைகளை  நிறுத்தி வைத்துவிட்டார்கள் என்றும் மணிரத்னம் அலுவலகத்துக்கும் காலவரையறையற்று விடுமுறை விட்டுவிட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது. இத்தகவலை நடிகர் கார்த்திதற்போதுஉறுதிப்படுத்தியிருக்கிறார்

Related posts

Leave a Comment