இயக்குனர் ஹரிக்காக விட்டுக் கொடுத்த மிஷ்கின்

ஒரு படத்துக்கான அறிவிப்பு வெளியாவது எளிது. இந்த இயக்குநர் படத்தில் அந்த நடிகர் நடிக்கிறார் என்றெல்லாம் அறிவிப்பு வரலாம். ஆனால், அந்தப் படம் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டுமென்றால் தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். தயாரிப்பாளர் இல்லாமல் ஒரு படம் உருவாகாது. அப்படி, எத்தனையோ படங்கள் தயாரிப்பாளர் கிடைக்காமல் வெயிட்டிங்கில் இருக்கும்.சான்றாக, தனுஷ் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் -2 படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்தப் படத்துக்கான தயாரிப்பாளர் உறுதியாகவில்லை. தயாரிப்பாளர் கிடைத்தால் தான் ஆயிரத்தில் ஒருவன்-2 அடுத்த கட்டத்துக்கு நகரும்.

இன்னொரு சான்று கூட சொல்லலாம், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க அருவா படம் தயாராக இருந்தது. ஆனால், சூர்யாவுக்கு ஹரி சொன்ன கதையில் கருத்து வேறுபாடு இருந்ததால் அது இப்போதைக்கு நடக்காது என்றாகிவிட்டது. அதன்பிறகே, அருண்விஜய் நடிக்க ஹரி இயக்க இருக்கும் படதகவல் வெளியானது. அந்த தகவல் வெளியாகி சில மாதங்கள் வரை தயாரிப்பாளர் கிடைக்காமலேயே படம் துவங்க முடியாமல் இருந்தது. ஒருவழியாக, தயாரிப்பாளர் உறுதியானதும் தற்பொழுது அருண்விஜய் – ஹரி படமானது தயாராகிவருகிறது.தயாரிப்பாளர் உறுதியாவதில் சில சிக்கல்களும் இருக்கிறது. ஒரு நடிகரின் முந்தைய படத்தின் வியாபாரத்தைவைத்தே அடுத்தப் படத்தின் பட்ஜெட் நிர்ணயிக்கப்படும். அருண்விஜய் நடிப்பில் வெளியான கடைசி படமான மாஃபியா படம் செய்த வசூல் வைத்தே, அடுத்தடுத்தப் படங்கள் தயாராகும். அப்படி தயாரானால் தான் எந்த சிக்கலும் இல்லாமல் இந்தப் படத்தின் லாபம் கைமேல் கிடைக்கும்.

சரி விஷயத்துக்குள் வருவோம். ஹரி – அருண்விஜய் கூட்டணி போலவே இன்னொரு கூட்டணியும் பேசப்பட்டது. மிஷ்கின் – அருண்விஜய் கூட்டணி தான் அது. மிஷ்கின் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்க இருக்கும் தகவலும் ஏற்கெனவே வெளியானது. ஆனால், தயாரிப்பாளர் உறுதியாகாமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இந்நிலையில், இந்தக் கூட்டணிக்கு தயாரிப்பாளர் உறுதியாகிவிட்டார்.

நடிகர் கயல் சந்திரனின் சகோதரர் ரகுநாதன் தான் இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறார். அவர், ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தை தயாரித்தவர். இவர் தயாரிப்பில் 11 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. இதில் அருண்விஜய் சம்பளம் 3 கோடி, மிஷ்கினுக்கு 3.5 கோடி சம்பளமாம். மீதமிருக்கும் 4.5 கோடியில் படம் உருவாக இருக்கிறது. பொதுவாக, ஒரு படத்தில் நடிகரின் சம்பளம் தான் அதிகமாக இருக்கும். இந்தப் படத்தில் மிஷ்கினுக்காக சம்பளத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறார் அருண்விஜய். aஹரி படத்துக்கு முன்பே உறுதியான கூட்டணி இது.

Related posts

Leave a Comment

fourteen + three =