தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு காரணமாக திரையரங்குகளை தொடர்ந்து நடத்துவதில் நெருக்கடி ஏற்பட்டு உள்ளதுஇம்மாதம் இறுதியில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட பெரிய படங்களும் மறு தேதி குறிப்பிடபடாமல் பட வெளியீட்டை ஒத்திவைப்பதாக அறிவித்து உள்ளனர்
தற்போது திரையரங்குகளில் சுல்தான்,கர்ணன் ஆகிய இரு படங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கின்றன கொரானா பயம் காரணமாக குடும்பங்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வருவதில்லை அதன் காரணமாக 20% பார்வையாளர்கள் படம் பார்க்க வருவதே அபூர்வமாக இருக்கின்றது. தியேட்டருக்கு பழைய, புதிய படங்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது இது சம்பந்தமாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று முன்தினம் இணையவழி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது
ஏதேனும் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தும்போது மட்டுமே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தியேட்டரை மூடுவதாக சங்கம் முடிவு எடுக்க முடியும் அப்படிப்பட்ட சூழல் இப்போது தமிழகத்தில் இல்லை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே-2 நடைபெற உள்ளது அதன் பின்னரே புதிய அமைச்சரவை அமையும்.
கொரானா தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக அமைய உள்ள அரசாங்கம் என்ன முடிவு எடுக்கின்றார்களோ அதனையொட்டியே திரையரங்கு தொழில் சம்பந்தமாக நாம் முடிவுக்கு வர முடியும் அதுவரையிலும் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் படங்களை தொடர்ந்து திரையிடுவதுதான் சரியானதாக இருக்கும் என பெரும்பான்மையினர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
எனவே புதிய அரசு அமையும் வரையில் ஓடிக்கொண்டிருக்கும் சுல்தான்,கர்ணன் படங்களை ஓட்டுவது என்றும், திரையரங்கு உரிமையாளர்கள் அவர்களின் சூழலுக்கு ஏற்ப திரையரங்கை நடத்துவது அல்லது மூடி வைப்பது என முடிவெடுத்து கொள்வது என அறிவுறுத்தப்பட்டுள்ளது
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அரசு அமைய மூன்று வார காலம் இருப்பதால்அதுவரைசுல்தான்,
கர்ணன் படங்கள் தியேட்டர்களில் தாக்கு பிடிக்குமா என விசாரித்தபோது அதற்கு வாய்ப்பே இல்லை இம்மாத இறுதிக்குள்திரையரங்குக்குபார் வையாளர்கள் வராததால், புதிய படங்கள் வெளியீடு இல்லாததால் ஏற்கனவே மூடப்பட்ட 150 தியேட்டருடன்சுமார் 500 தியேட்டர்களை மூட வேண்டியிருக்கும் எஞ்சிய தியேட்டர்களில் ஒன்று இரண்டு காட்சிகள் மட்டும் கௌரவத்துக்காக ஓட்டப்பட்டு கொண்டிருக்கும் என்றனர்