தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் விஷால் கிருஷ்ணன்இவர்,விஷால் ஃபிலிம் ஃபேக்டரி எனும் தயாரிப்பு நிறுவனம் மூலமாகப் படங்களையும் தயாரித்து வருகிறார்.
படத்தயாரிப்புக்காக விஷால் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் கடன் வாங்கி உள்ளார் இதற்காக
தனது வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட சில உறுதிமொழி பத்திரங்களை ஆவணங்களாக அளித்து கடன் வாங்கியுள்ளார்பின்னர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும் உறுதிமொழி பத்திரங்களைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதுதொடர்பாக மேலும் மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் நேற்று (9.06.2021) புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஊரடங்கு காரணமாக கடந்த ஒருவருட காலமாக ஊடகங்களில் விஷால் என்கிற நடிகர் காணாமல் போயிருந்தார் ஏற்கனவே தனது அலுவலக பெண் ஊழியர் பணமோசடி செய்தார் என போலீசில் புகார் செய்து சில நாட்கள் ஊடக செய்திகளில் இடம்பிடித்தார் இந்த முறை தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீது குற்றம்சுமத்தி காவல் நிலையம் வரை சென்றுள்ளார் விஷால் புகாரின் உண்மை தன்மை என்ன என்பது குறித்து தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தரப்பில் கேட்டபோது விஷால் தயாரித்த இரும்புத்திரைபடத்துக்காக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி – திருப்பூர் சுப்பிரமணியம் இணைந்து நடத்தும் நிதிநிறுவனத்திடம் கடன் வாங்கியுள்ளார் விஷால் இந்த கடனுக்கு உத்திரவாதமாக தனது வீட்டுப் பத்திரங்கள், மற்றும் சில ஆவணங்களை கொடுத்துள்ளார் விஷால் இந்த கொடுக்கல் வாங்கல் சம்பந்தமானவற்றை ஆயுதபூஜை படத்தின்இயக்குநர் சிவக்குமார் என்பவர் பார்த்து வந்துள்ளார் கடன் வாங்கியவர்கள் கொடுக்கும் ஆவணங்கள் அனைத்தும் இவரிடமே இருக்குமாம் திடீர் என இயக்குநர் சிவக்குமார் மாரடைப்பு காரணமாக காலமானார் அவரிடம் இருந்த விஷால் சம்பந்தமான ஆவணங்கள் எங்கிருக்கிறது, எங்கே வைத்திருக்கிறார் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் உண்மைநிலையை விளக்கமாக விஷாலிடம்கூறிஇரும்புத்திரைபடத்