பீஸ்ட் தலைப்பு மட்டும் காப்பியா கதையும் காப்பியா?

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில்விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் சூட்டப்பட்டு(21.06.2021) நேற்று மாலை 6 மணிக்கு அதன் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார், பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்அனிருத் இசை அமைக்கிறார்.ரசிகர்களுக்காக

இரண்டாவது பார்வை போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் பீஸ்ட் என்ற தலைப்பில் பல மொழிகளில் படங்கள் தயாராகி உள்ளன. அவைகள் அனைத்தும் பெரும்பாலும் க்ரைம் த்ரில்லர் மற்றும் சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகை படங்கள் என்கிற தகவல்கள் சமூகவலைதளங்களில் சினிமா விமர்சகர்களால் பதிவு செய்யப்பட்டு வருகின்றன பீஸ்ட் என்பதற்கான பொருளை கூகுளில் அதிகமானவர்கள் அறிய முற்பட்டுள்ளனர்

பீஸ்ட் என்றால் மிருகத்தனமானவன், மிருக குணம் என்ற பொருள் இருப்பதால் சைக்கோ த்ரில்லர், க்ரைம் த்ரில்லர் வகை படங்களுக்கு இந்த டைட்டில் வைப்பது எல்லா மொழியிலும் நடக்கிற விஷயம்.

கடந்த ஆண்டு இத்தாலியன் மொழியில் தி பீஸ்ட் என்ற படம் வெளிவந்தது. இதனை லூடுவிகோ டி மார்ட்டினோ இயக்கி இருந்தார். வார்னர் பிரதர்ஸ் தயாரித்திருந்தது. இது ஆக்க்ஷன் த்ரில்லர் வகை படம்.

2017ம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரான படம் பீஸ்ட். இதனை மைக்கேல் பெர்சே இயக்கி இருந்தார், ஜெசி பக்லி, ஜானி பிளைன் நடித்திருந்தார்கள். அகிலே பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இது பிசியாஜிக்கல் த்ரில்லர் வகை படம்.

இதுதவிர 2019ம் ஆண்டு தி பீஸ்ட் என்ற பெயரில் ஒரு கொரியன் படம் வெளிவந்தததுநீயூ ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்திருந்தது. இது க்ரைம் த்ரில்லர் வகை படம். 2004ம் ஆண்டு வெளிவந்த 36 குயய் டெஸ் ஆர்பவெர்ஸ் என்ற பிரெஞ்சு படத்தின் ரீமேக். இவையெல்லாம் சில உதாரணங்களே

பொதுவாக முன்ணனி நடிகர்கள் நடிக்கும் படங்களின் விளம்பர முதல் பார்வை வெளியானவுடன் அது எந்த கொரியன், ஈரானிய, ஹாலிவுட் படங்களின் உல்டா என்பதை சில மணிநேரங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விமர்சனம் செய்கிற வழக்கம் கடந்த பத்தாண்டுகளாக தமிழ் சினிமாவில் நடந்துவருகிறது இதைப்பற்றி அப்படம் சம்பந்தபட்டவர்கள் எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை தெரிவித்தது இல்லை அது போன்றுதான் விஜய் நடிக்கும் படத்திற்கும் தற்போது விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன

படத்தின் தலைப்பு மட்டும்தான் காப்பியா, கதையும் காப்பியா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Related posts

Leave a Comment