மாநாடு நேரடியாக திரையரங்கில்-தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

வி.ஹவுஸ் புரொடக்க்ஷன் சார்பில்

சுரேஷ்காமாட்சி தயாரிப்பில்வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.மதன்கார்க்கி பாடல்கள் எழுதியிருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு, கே எல் பிரவீண் படத்தொகுப்பு, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகள், உமேஷ் ஜே குமார் கலை இயக்கத்தையும் செய்துள்ளனர்.

அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது இந்தப்படத்தில் இடம்பெறும் ’மெர்ஸைலா’ என்கிற பாடல் வெளியாகி உள்ளது. மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடியுள்ளனர்.

இந்தப்பாடல் உருவான விதம் குறித்தும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை நாயகன் சிலம்பரசன் இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்தனர்

 இதுபற்றி சிலம்பரசன் கூறுகிறபோது
வெங்கட்பிரபு எப்பவுமே கதை சொல்ல மாட்டாரு. மாநாடு படத்தைப் பத்தி ஒரு ஐடியா மட்டும் சொன்னாரு. அது கேக்கவே வித்தியாசமா இருந்துச்சு. வெங்கட்பிரபு விளையாட்டான ஆளு. ஆனா இந்தப்படம் பார்த்ததும் நீங்க தான் இந்தப் படத்தை எடுத்தீங்களான்னு அவர்மேல ஆச்சர்யம் வரும் எஸ்ஜே சூர்யா ஒய்.ஜி.மகேந்திரன் ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சதைப் பார்த்து எனக்கே டயலாக் மறந்து போய் நின்னுட்டேன். நான் பண்ற டென்சனுக்கு எஸ்ஜே.சூர்யா காட்டுற ரியாக்சனுக்கு தியேட்டர்ல இரசிகர்கள் என்ன மாதிரி ரியாக்சன் காட்டுவாங்கன்னு பாக்குறதுக்கு ஆவலா இருக்கேன். இந்தப்படத்தை தியேட்டர்ல பாக்குற இரசிகர்கள், படம் முடிஞ்சதும் அப்படியே எஸ்ஜே சூர்யாவை தூக்கிட்டுப் போயிருவாங்க.
இந்தப்படம் ஏன் தள்ளிப்போச்சுன்னு தெரியல. ஆனா அந்த நேரத்துல பண்ணியிருந்தா கூட இவ்வளவு சரியா வந்திருக்காதுன்னு தான் சொல்வேன். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இவ்வளவு நாள் பொறுமையா இருந்து இந்தப்படத்தை முடிச்சிருக்கார்னா உண்மையிலேயே பெரிய விஷயம்.நல்ல படம் கொடுத்தா மக்கள் பாராட்டுறாங்க. மோசமான படம் கொடுத்தா கழுவி ஊத்துறாங்க. இந்த மாநாடு படத்தைப் பார்த்துட்டு இவ்வளவு சுவாரஸ்யமா ஒரு விசயத்தைச்சொல்லிருக்காங்களே என்றுஅந்த வேலைக்கு மரியாதை கொடுப்பாங்க.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகிறபோதுஒரு நல்ல படம் தனக்குத் தேவையானவற்றை தானே தேடிக்கும்னு சொல்வாங்க. அது இந்த மாநாடு படத்துக்குப் பொருந்தும். இந்தக் கதையைச் சொல்றதுக்கு முன்னாடி எஸ்டிஆரின் மாநாடு அப்படின்னு ரெண்டே வார்த்தைதான் வெங்கட் பிரபு எங்கிட்ட சொன்னார். கதையை தாமதமாகத்தான் சொன்னார். இந்தப்படம் ஆரம்பிக்க தாமதமான சமயத்துல பல நெகடிவ் விஷயங்கள் பேசப்பட்டாலும், இந்தபடம் தள்ளிப்போனதால பல நன்மைகள் நடந்திருக்கு. சிம்பு வெயிட் லாஸ் பண்ணினார். எஸ்ஜே சூர்யா இந்தப்படத்துக்குள்ள வந்தார்.மற்ற படங்கள்ல கல்யாணியைப் பார்த்ததுக்கும் இந்தப்படத்துல பார்க்குறதுக்கும் நிறைய வித்தியாசம் தெரியுது. ஒவ்வொருநாளும் ஸ்பாட்ல கூடவே இருந்துருக்கேன். அத்தனை பேரோட உழைப்பையும் நேர்ல பாத்துருக்கேன். படம் முடிஞ்சு பார்க்கும்போது நாம உழைச்ச உழைப்பு வீணாகல அப்படின்னு ஒரு திருப்தி வந்துச்சு. சிம்பு-வெங்கட் பிரபு ரெண்டு பேருக்குமே இது பெரிய படமா இருக்கும்” என்றார்.

மாநாடு படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முயற்சித்தது, கேட்ட விலைக்கு வியாபாரம் முடியாமல் போனதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பற்றி சுரேஷ் காமாட்சியிடம் கேட்டபோது
மாநாடு படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை இப்படம் பற்றி வெளியான செய்திகளில் எதிர்மறையான, உண்மையில்லாத செய்திகள்தான் அதிகமாக வந்திருக்கிறது அதுபோன்ற வதந்திதான் இந்த செய்தியும் என்றவரிடம்
ஓடிடி உரிமைக்கு 40 கோடி ரூபாய் கேட்டதாகவும் விலை அதிகம் என அவர்கள் கூறியதாக செய்திகள் வந்து கொண்டிருப்பது பற்றி என்ற போது
படத்தின் பட்ஜெட் வட்டி இல்லாமல்இதுவரை 30 கோடி ரூபாய் இங்கு படத்தின் பட்ஜெட், அதனை என்ன விலைக்கு விற்பனை செய்தால் லாபகரமாக இருக்கும் என்பது வியாபார அனுபவம் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் அதனைப் பற்றிய புரிதல் பத்திரிகையாளர்களிடம் இல்லை அதன் காரணமாக இப்படிப்பட்ட செய்திகள் வருகின்றன
நெருப்பில்லாமல் புகையாதே என்ற போது
மாநாடு படம் தயாரிப்பதே நெருப்பாற்றில் நீந்திகரை சேருவது போன்று.தான் ஐம்பதுகோடி ரூபாய் வரை மாநாடு படத்தை விலைக்கு கேட்டனர் அவர்கள் கேட்பது பிரிமியர் உரிமை அது முடியாது என்றதால்தான் இது மாதிரியான வதந்திகள் வண்டிவண்டியாக வருகிறது
பட்ஜெட்டை காட்டிலும் அதிக விலை என்கிறபோது முடியாது என கூறுவது ஏன் என கேட்ட போது
மாநாடு படத்தை திரையரங்கில் பார்த்தால் மட்டுமே அதன் பிரம்மாண்டத்தை அனுபவிக்க முடியும் அதனால் எவ்வளவு தாமதமானாலும் தியேட்டர்களில் வெளியிட்ட பின் ஒடிடி தளங்களில் வெளியிடலாம் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார் சுரேஷ் காமாட்சி

Related posts

Leave a Comment