அக்கா ஒன்று சொல்வதும், தங்கை அதற்கு ஒத்து ஊதுவதும், தங்கை குற்றம்சாட்டினால் அக்கா அதை எடு்த்துக் கொடுப்பதுமாக சில வருடங்களாக இந்த சகோதரிகளால் இந்தி திரையுலகம் பரபரப்பாகவே இருந்து வருகிறது
இப்போது இவர்களின் தாக்குதல்நடிகை டாப்ஸி மீது. டாப்ஸிக்கும் இந்த சகோதரிகளுக்கும் இடையில் நல்லுறவே கிடையாது. கங்கனாவின் நடிப்பு ஸ்டைல், டிரெஸ்ஸிங் சென்ஸ், பேச்சு.. இதையெல்லாம் அப்படியே அச்சு பிசகாமல் காப்பியடித்து செய்கிறார் டாப்ஸிஎன்று கங்கனாவின் சகோதரி ஒரு முறை குற்றம்சாட்டி எழுதியிருந்தார். அப்போது டாப்ஸிக்கு இந்த இரண்டு சகோதரிகளும் சேர்ந்து ‘சீப்பான காப்பி’ என்று பட்டப் பெயர் சூட்டி அழைக்க ஆரம்பித்தார்கள்.
டாப்ஸியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஹஸீல் தில் ரூபா’ என்ற திரைப்படம் நெட் பிளிக்ஸில் வெளியாகிறது. இதையொட்டி டிவீட்டரில் தனது ரசிகர்களுடன் உரையாடினார் நடிகை டாப்ஸி.
அப்போது ஒரு ரசிகர், கங்கனா டிவீட்டரில் இல்லையே..? நீங்க அவரை மிகவும் மிஸ் செய்கிறீர்களா..? என்று கேட்டிருக்கிறார். இதற்குப் பதிலளித்த டாப்ஸி, எனது வாழ்க்கையில் கங்கானாவுக்கு எந்த தொடர்பும், சம்பந்தமும் இதுவரையிலும் இல்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை. அவர் என்னை தனிப்பட்ட முறையில் என் குடும்பத்தையே மிகவும் காயப்படுத்திவிட்டார்.
இதைப் படித்துவிட்டு கங்கனா இன்ஸ்டாகிராமில் டாப்ஸிக்கு பதில் சொல்லியிருக்கிறார்.
டாப்ஸி ஒரு பி கிரேடு நடிகை அவரைப் போன்றவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னுடைய பெயரைப் பயன்படுத்தி, என்னுடைய ஸ்டைலில் நடிப்பது, சான்ஸ் கேட்பது, தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்வது என்று செய்து வருகிறார்கள்.