நடிகைக்கு எதிராக தேச துரோக வழக்கு ரத்து செய்ய மறுப்பு

கேரளா மாநிலம் அருகே அரபிக்கடலில் உள்ளது லட்சத் தீவுகள். இதன் தற்காலிக நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பாஜகவை சேர்ந்தபிரபுல் கோடா பட்டேல் கொண்டு வரும் சில நிர்வாக மாற்றங்களுக்கு அத்தீவு மக்களும், அரசியல் கட்சிகளும்எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

லட்சத்தீவை சேர்ந்த நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா தனியார்தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கொரோனாவை உயிரி ஆயுதமாக அரசும், லட்சத்தீவு நிர்வாக அதிகாரியும் பயன்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார். இதற்காக, அவர் மீது லட்சத்தீவு போலீசார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்தனர்.

இதை ரத்து செய்யும்படி கேரள உயர் நீதிமன்றத்தில் சுல்தானா தாக்கல் செய்த மனு (02.07.2021)விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றார். இதை ஏற்ற உயர் நீதிமன்றம், சுல்தானா மீதான தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்டது.

Related posts

Leave a Comment