தோனி, கபாலி தமிழ்படங்களில் நடித்த இந்தி நடிகை ராதிகா ஆப்தே கதாபாத்திரத்திற்காக நிர்வாணமாகவும் நடிக்க கூடிய நடிகை என்பதுடன் எதிர்மறையான விமர்சனங்கள்பற்றிகவலைப்படாதவர்
இப்போதுநடிகை ராதிகா ஆப்தேவுக்கு எதிராக டிவிட்டரில் திடீரென்று போராட்டம் வெடித்துள்ளது. #BoycottRadhikaApte என்ற ஹேஸ்டேக் மூலமாக ராதிகா ஆப்தேவைக் கண்டித்து டிவீட்டரில் திடீர் எதிர்ப்புப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
காரணம், சமீபத்தில் ஆபாசப் படங்களைத் தயாரித்து, வெளியிட்டதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். அது குறித்து இதுவரையிலும் எந்தவொரு பாலிவுட் நடிகரும் கருத்துத் தெரிவிக்கவில்லை. நாட்டு நடப்பு சம்பந்தமாகவும், பெட்ரோல் விலை சம்பந்தமாகவும், குடியுரிமைச் சட்டம் சம்பந்தமாகவும் பல்வேறு நடிகர், நடிகைகள் தங்களது கருத்துக்களை கடந்த காலங்களில் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்
ஆனால், இப்போது தேசத்திற்கு ஒரு அசிங்கமாகத் தெரியும் இந்த ஆபாசப் பட வழக்கில் ஒரு நடிகையின் கணவரே கைது செய்யப்பட்டிருக்கிறார். எங்கே போனார்கள் பாலிவுட் ஹீரோக்கள்..? ஹீரோயின்கள்..? என்று டிவீட்டரில் பலரும் கொதிக்கிறார்கள்.இதில் இவர்களது கோபப் பார்வையில் சிக்கிக் கொண்டவர் நடிகை ராதிகா ஆப்தே. அவர்தான் 2016ல் இந்தியில்வெளியான Parchad என்ற படத்தில் முழு நிர்வாணமாக நடித்திருந்தார். அந்தக் காட்சி அந்தக் கதைக்குத் தேவைப்பட்டது. அதனால் நடித்தேன் என்று ராதிகா சொல்லியிருந்தார். அந்தக் காட்சியை படக் குழு வேண்டுமென்றே லீக் செய்து பரபரப்பூட்டியதாக அப்போதே புகார்கள் எழுந்தன.
ராதிகா ஆப்தே தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய படங்களிலேயே நடித்து வருகிறார். “என் உடல், என் உரிமை.. என் நிர்வாணம் எனக்குப் பிடித்தால் நான் எப்படியும் நடிப்பேன்…” என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதை முன் வைத்துதான் இப்போது டிவீட்டர்வாசிகள் “ராதிகா ஆப்தே போன்றவர்களால் இந்தியாவின் கலாச்சாரமும், பண்பாடும் அழிக்கப்படுகிறது. இதனால் ராதிகாவை நாம் புறக்கணிக்க வேண்டும். அவருடைய படங்களை நாம் பார்க்கக் கூடாது. சமூக வலைத்தளங்களில் அவரைத் தொடரக் கூடாது” என்றெல்லாம் பல வகை, வகையான நிபந்தனைகளுடன் ராதிகா ஆப்தே மீதான எதிர்ப்புப் போராட்டம் தற்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது.