மணி இவ்வளவு சீக்கிரம் நீ போயிருக்ககூடாது-நடிகர் சத்யராஜ்

தமிழ்சினிமா எத்தணையோ படைப்பாளிகளைக் கடந்து வந்திருக்கிறது அப்படிப்பட்ட படைப்பாளிகளில் சிலரே மறைந்த பின்னரும் நினைவில் கொள்ளத் தக்க சாதனையோ, செயலோ செய்ததால் மனதில் வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட படைப்பாளிகளில்ஒருவரான மணிவண்ணன் நினைவுதினம் இன்று எல்லோருக்கும் ஒரு அரசியல்  கொள்கை இருக்கும் என்றபோதும் சிலர் அதைத் தமது தொழில் தொடர்பான விஷயங்களில்வெளிப்படுத்துவது இல்லை.வேறு சிலரோ தமது தொழிலும் தமது அரசியல் வெளிப்படும்படி நடந்துகொள்வர். மணிவண்ணன் இரண்டாம் ரகம். அவரைப் பொறுத்தவரை அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கான அரசியல், ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல். அவை தொடர்பான படங்களை உருவாக்குவதில் மட்டுமே மணிவண்ணனுக்கு நம்பிக்கை இருந்தது. மார்க்சிய சித்தாந்தம், தமிழ்த் தேசியம், தமிழீழ அரசியல் போன்றவற்றில் பிடிப்பு கொண்டிருந்த மணிவண்ணன் 50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணனின் படங்களில் முப்பதுக்கும் மேற்பட்டவை வசூலைக் குவித்தவை. என்றபோதும், வெற்றியின்போது தலையில் கொம்பு முளைத்ததும் இல்லை, தோல்வியின் போதும்…

Read More

முதல்வரான மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்

தமிழ்நாடுமுதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக   மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். நாளை மாலை சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின்னர் நாளை மறுநாள் (17-ந் தேதி) முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில்   மு.க.ஸ்டாலின்   பங்கேற்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் அவர் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை மறுநாள் காலை டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது 35 முக்கிய வி‌ஷயங்கள் பற்றி பிரதமருடன்  முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்  பேச உள்ளார்.…

Read More

தமிழ்நாடு அரசின் ஏழு இலக்குகள்

தமிழக அரசின் 7 இலக்குகளை எட்ட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கொரோனா பரவல் தமிழகத்தில் 13 ஆயிரமாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணி தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 15) ஆலோசனை நடத்தினார். இதில் புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சியர்களும் கலந்துகொண்டனர். அப்போது , கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுத்திட மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நோய்த் தொற்றுப் பரவல் எண்ணிக்கையை மேலும் குறைத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், கல்வியில் – வேலைவாய்ப்பில் – சமூகப் பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதிகாரத்தை, பதவியைப் பயன்படுத்தித் தங்களது கடமையை ஆற்ற வேண்டும். வளரும் வாய்ப்புகள் – வளமான தமிழ்நாடு! மகசூல் பெருக்கம்,…

Read More

பன்னீர்செல்வம்தான் என் சாய்ஸ் – சசிகலா

சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசிய ஆடியோ சில வாரங்களாகவே வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில்… அவர்களில் 15 பேரை திடீரென அதிமுகவில் இருந்து நீக்கி நேற்று (ஜூன் 14) அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்று (ஜூன் 15) சசிகலாவின் இன்னொரு ஆடியோ வெளியாகியிருக்கிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியைச் சேர்ந்த சிவனேசன் என்ற அதிமுக நிர்வாகியுடன் சசிகலா பேசும் ஆடியோவில், ‘இனி என் முதுகில் குத்த இடமே இல்லை’என்று குறிப்பிட்டுள்ளார், ஓபிஎஸ்சைதான் நான் முதல்வராக தொடர வைக்க நினைத்திருந்ததாகவும் ஆனால் அவராகவேதான் ராஜினாமா செய்துவிட்டுச் சென்றுவிட்டதாகவும் தேனி சிவனேசனிடம் சொல்லியிருக்கிறார் சசிகலா. “அந்த சமயத்துல அவருதானப்பா போனாரு… இல்லேன்னா அவரைத்தானே நான்…’என்று சிவனேசனுக்கு பதில் சொன்ன சசிகலா தன்னுடன் பேசிய தொண்டர்களை கட்சியை விட்டு நீக்கியதையும் கண்டித்துள்ளார். “என்னோட பேசுறாங்க, நீங்க வாங்கம்மானு கூப்பிடுறாங்கன்றதுக்காக கட்சிக்காரவுங்களை…

Read More

ரைட்டர் திரைப்படம்உருவான கதை….

அட்டகத்தி,மெட்ராஸ்,கபாலி,காலா, படங்களின் மூலம் தலித் உரிமைகள் பேசும் இயக்குநராக கவனம் ஈர்த்தவர்பா.ரஞ்சித், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். அந்த ஆண்டு திரையரங்குகளில் வசூலைக் குவித்தபடங்களின் பட்டியலில் பட்ஜெட் அடிப்படையில் அதிக லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்று தந்த படங்களில் முதல் இடத்தை பிடித்தது பரியேறும் பெருமாள் தலித் உரிமை பேசும் படமாக இருந்தாலும் திரைமொழியில் அதனை கையாண்ட விதம் காரணமாகஅனைத்து சமூகத்தினரின்பாராட்டுக்களையும் பெற்ற படமாக இருந்தது அதனைத்தொடர்ந்துஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்றொரு படத்தை தயாரித்தார். சர்வதேச ஆயுத வியாபாரத்தை பற்றி பேசிய இந்த படம் வணிகரீதியாக தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படமானது இந்த நிலையில் சில பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து தனது நீலம் புரடொக்‌ஷன்ஸ் சார்பாக மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஜேக்கப், சுரேஷ்…

Read More

விஷாலின் வேடிக்கையான புகாரும் உண்மைநிலவரமும்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் விஷால் கிருஷ்ணன்இவர்,விஷால் ஃபிலிம் ஃபேக்டரி எனும் தயாரிப்பு நிறுவனம் மூலமாகப் படங்களையும் தயாரித்து வருகிறார். படத்தயாரிப்புக்காக விஷால் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் கடன் வாங்கி உள்ளார் இதற்காக தனது வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட சில உறுதிமொழி பத்திரங்களை ஆவணங்களாக அளித்து கடன் வாங்கியுள்ளார்பின்னர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும் உறுதிமொழி பத்திரங்களைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதுதொடர்பாக மேலும் மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் நேற்று (9.06.2021) புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஊரடங்கு காரணமாக கடந்த ஒருவருட காலமாக ஊடகங்களில் விஷால் என்கிற நடிகர் காணாமல் போயிருந்தார் ஏற்கனவே தனது அலுவலக பெண் ஊழியர் பணமோசடி செய்தார் என போலீசில் புகார் செய்து…

Read More

மறைக்க சொல்லும் மத்திய அரசு மறுக்கும் தமிழ்நாடு அரசு

தடுப்பூசிகள் இருப்பு விவரத்தை வெளியிடக் கூடாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆனால், தடுப்பூசி குறித்து மக்களிடையே உண்மை நிலையைத் தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் குழந்தைகள் நல ஆலோசகா் பிரதீப் ஹல்தார், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”தடுப்பூசிகளின் இருப்பு, அவை பாதுகாக்கப்படும் வெப்பநிலை போன்ற தகவல்களை இ-வின் என்ற தளத்தில் மத்திய அரசு சேமித்து வைத்துள்ளது. இந்த மின்னணு அமைப்பில், கொரோனா தடுப்பூசி பற்றிய விவரங்களை மாநில அரசுகள் தினசரி பதிவேற்றம் செய்கின்றன. இதில் பதிவு செய்யப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை என்பதால், தடுப்பூசி திட்டத்தை மேம்படுத்த மட்டுமே அந்த தகவல்களை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும். அந்த மின்னணு அமைப்பில்…

Read More

உயிர் பாதுகாப்பு கேட்கும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

அரசியலிலிருந்து விலகுவதாகத் தேர்தலுக்கு முன்பு சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், கடந்த மாதம் இறுதியிலிருந்து தொண்டர்களிடமும், கட்சி பிரமுகர்களிடமும் பேசும் ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்றும் கூட சசிகலா பேசும் மற்றொரு ஆடியோ ஒன்று வெளியாகி அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம், சசிகலா பேசும் அந்த ஆடியோவில், சசிகலா: ஹலோ…ஆனந்தன் நல்லா இருக்கீங்களா… ஆனந்தன்.. ஆனந்தன்: நல்லா இருக்கேன்மா… நான் உளுந்தூர்பேட்டை ஆனந்தன்மா… சசிகலா: என்ன இப்படி சொல்றீங்க… உங்களை நல்லா தெரியும்… எப்படி மறக்க முடியும் ஆனந்தன்: தாயில்லா பிள்ளையாக தவிச்சுகிட்டு இருக்கிறோமா நாங்க, மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு… எங்களுக்காக வாங்க… சசிகலா: ஒண்ணும் கவலைப்படாதீங்க.. சீக்கிரமே நல்லது நடக்கும். ஆனந்தன்: அரசியலிலிருந்து விலகி போறேனு நீங்க சொன்னதுல இருந்து, நானும் அரசியலுக்கு முழுக்குபோட்டுட்டேன். அம்மாவுக்காகவும், இந்த…

Read More

அதிமுகவில் கொரடாவும் கொங்கு மண்டலத்துக்கா?

அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர், அதாவது எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க கடந்த மே 10ஆம் தேதி, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடியது. அதில் பன்னீர்செல்வத்துக்கும் பழனிசாமிக்கும் இடையேயான கடுமையான வாக்குவாதத்துக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ஓபிஎஸ்ஸுக்கு வேண்டுகோள் வைக்கப்பட, அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அப்போது ஏற்பட்ட சலசலப்பால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா உள்ளிட்ட பதவிகளுக்கு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாமல் போனது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரைச் சந்தித்து அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடர்பாக ஆலோனை நடத்துகிறார் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில், திடீரென அதிமுக தலைவர்களுக்கு சட்டமன்றக் கட்சி துணைத் தலைவர், கொறடா பற்றிய கவலை ஏற்பட்டிருக்கிறது.…

Read More

வடபழநி கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்த நபரை அடையாளம் காட்டாதது ஏன்?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையின் இந்த முதல் மாதத்தில் அடிக்கடி செய்திகளில், இடம்பெற்ற அமைச்சர்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் முக்கியமானவர். கடந்த ஜூன் 7 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெளியிட்ட அறிவிப்பும் மிக முக்கியமானது. திமுக ஆட்சி என்றால் இந்து கோயில்களை கவனிக்க மாட்டார்கள் என்ற பொதுவான ஒரு கருத்தை உடைக்கும் வகையில், வடபழனி முருகன்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 250 முதல் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை மீட்டுவிட்டதாக ஜூன்7 ஆம் தேதிதான் அறிவித்தார் அமைச்சர் சேகர்பாபு. அன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , “முதல்வரின் உத்தரவுப்படி சிதிலமடைந்திருக்கும் அனைத்து கோயில்களையும் புனரமைக்கும் நோக்கில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான கலைஞர் நகரில் உள்ள 5.5…

Read More