பான் இந்திய படைப்பாக உருவாகி வரும் “குபேரா படத்தின் முதல் சிங்கிள், இசை ரசிகர்களை புயலாக தாக்கியுள்ளது. ‘குபேரா’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘போய் வா நண்பா’ அதிரடி இசையில், மென் மெலடி கலந்து அசரடிக்கிறது. இப்பாடல் மூன்று தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ், இயக்குநர் சேகர் கம்முலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இப்பாடல் உருவான பின்னணி காட்சிகள், தனுஷின் குரல், மற்றும் அவரின் அசத்தலான நடனம், ராக் ஸ்டார் டிஎஸ்பியின் மயக்கும் இசை, அருமையான வரிகள், எனக் கேட்கும் போதே மாய உலகிற்கு அழைத்து செல்கிறது. சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மேஜிக்கை காணும் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது இப்பாடல். மனித உணர்வுகளின் குவியலாக, அற்புதமான உணர்வுகளைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், உலகம் முழுவதும் ஜூன் 20ஆம்…
Read Moreசச்சின் – திரை விமர்சனம்
கண்டதும் காதல் என்பதில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாத நாயகி ஜெனிலியா. அவ்வப்போது அவரை அன்பால் ஆகர்ஷித்து காதலை அவர் வாயாலே சொல்ல வைக்க முயல்பவர் நாயகன் விஜய்.கல்லூரியில் படிக்கும் இந்த இருவருக்குள்ளும் காதல் அவ்வப்போது கண்ணாமூச்சி காட்டிக் கொண்டே இருக்க… கடைசியோ கடைசியாக இன்னும் ஒரு மாதத்துக்குள் நீயாக என்னிடம் காதல் சொல்ல வேண்டும். அப்படி சொல்லவில்லை என்றால் அதன் பின் நீ யாரோ நான் யாரோ… என்கிறார் விஜய். 30 நாட்களில் ஜெனிலியா விஜய் யிடம் காதலை சொன்னாரா என்பது சொட்ட சொட்ட இதயம் நனைக்கும் காதல் கதை.2005 ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடிய இப்படத்தில் விஜய்யை ஸ்டைலிஷாக ரசிக்க முடிகிறது. படம் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் துறுதுறு விஜய் ரொம்பவே ரசிக்க வைக்கிறார். ஜெனிலியா மட்டுமென்ன… அவர் சிரித்தாலும் அழகு கோபத்தில் உம் மென்றிருந்தாலும்…
Read Moreநடிகர் வசந்த் ரவி அவர்களின் நன்றி அறிவிப்பு
சில சிறப்பான தருணங்கள் அன்பும் சிந்தூரமும் ஒளிவிடும் நினைவுகளாக மாறுகின்றன. நேற்று என் பிறந்த நாளாக இருந்தது மட்டுமல்ல, நீங்கள் எல்லாரும் காட்டிய அன்பும் ஆசிகளும் என்னை நெகிழவைத்ததாலேயே, அது என்றென்றும் எனது மனதில் நிறைந்திருக்கும் ஒரு இனிய நினைவாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, எனது பிரியமான சினிமா துறை நண்பர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கும், என்னை ஆதரித்து அன்பு செலுத்தும் என் ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஒவ்வொரு வாழ்த்தும் என் இதயத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றது. உங்கள் அன்பும் அக்கறையும் எனக்குள் ஒரு புதிய உற்சாகத்தையும், எல்லைகளைத் தாண்டி சிறப்பாக வெற்றி காணும் முனைப்பையும் உருவாக்குகின்றன. நீங்கள் எனக்கு தந்த அந்த புன்னகையை மறக்க முடியாது. மீண்டும் ஒருமுறை, உங்களுக்குத் தனிப்பட்ட நன்றியினை தெரிவிக்கிறேன். விரைவில் உங்கள் அனைவரையும்…
Read Moreமக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ்’ (ACE) திரைப்படம்,மே மாதம் 23 ஆம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஏஸ் ‘( ACE) எனும் திரைபடம் எதிர்வரும் மே மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏஸ் ‘ ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும், இந்த திரைப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் . இசையமைப்பாளர் சாம் சி எஸ் பின்னணி இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்பை ஏ.கே . முத்து கவனித்திருக்கிறார். கமர்சியல் ஆக்ஷன் என்டர்டெய்னராக…
Read Moreபோஸ்ட் அபோகலிப்டிக் சைக்காலஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “கலியுகம்” திரைப்படம், மே 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது
முன்னணி நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் நடிப்பில், போஸ்ட் அபோகலிப்டிக் களத்தில், புதுவிதமான சைக்கலாஜிகல் திரில்லராக, அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “கலியுகம்”. மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல் & பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு படக்குழுவைச் சந்தித்து,படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டார். ஒரு கற்பனையான டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பேரழிவு நிகழ்வுகளால் சூறையாடப்பட்ட உலகில், உயிர்வாழ்வதே மிக சிக்கலாக இருக்கிறது, ஒழுக்கம் மற்றும் அன்பு எல்லாம் உடைந்து போன உலகில், மனிதர்கள் வாழ…
Read Moreஅம்..ஆ..! – திரை விமர்சனம்
கேரளாவின் மலை கிராமம் ஒன்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள். அதில் ஒரு குடிசையில் வசிக்கும் தேவதர்ஷினி, பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். குழந்தை மீது உயிரையே வைத்திருக்கிறார். பேச்சுத் திறனற்ற அந்த குழந்தையை யாரிடமும் நெருங்க விடாமல் மிக மிக கவனமாக பார்த்துக் கொள்கிறார். இதற்கிடையே, அந்த மலைக் கிராமத்திற்கு சாலை பணிக்கு வந்ததாக கூறும் திலீஷ் போத்தன், வந்த வேலையை விட்டுவிட்டு தேவதர்ஷினி, அவரிடம் இருக்கும் பெண் குழந்தை பற்றி விசாரிக்க தொடங்குகிறார். திலீஷ் போத்தனின் நடவடிக்கை மீது அந்த ஏரியா மக்களால் ஆசான் என்று அழைக்கப்படும் முதியவருக்கு சந்தேகம். ஊருக்குள் வந்திருக்கும் புதிய நபர் பற்றி விசாரிக்க தொடங்குகிறார். அப்போது தங்கள் மலை கிராமத்துக்கு வந்திருக்கும் அந்த புதியவர் சாலையை செப்பனிட வரவில்லை என்பதை தெரிந்து கொள்கிறார். இதற்கிடையே அந்த புதிய மனிதனின் பார்வையில்…
Read Moreசூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்…
Read Moreடென் அவர்ஸ் – திரை விமர்சனம்
கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் தர… புகாரின் பேரில் விசாரணையை தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி ராஜுக்கு அந்தப் பெண் திட்டம் போட்டு கடத்தப் பட்டது தெரிய வர… சபரிமலைக்கு மாலை போட்டு இருந்த சிபி மறுநாள் சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். இந்த கடத்தல் கேஸை கையில் எடுத்தவருக்கு இடையில் இருப்பது பத்து மணி நேரம் மட்டுமே. அந்த 10 மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட பெண்ணை மீட்க வியூகம் அமைத்தவருக்கு கூடுதலாக இன்னொரு கேசும் சவாலாக அமைகிறது. சென்னையில் இருந்து கோவை நோக்கி செல்லும் ஆம்னி பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் தாக்கப்படுவதாக போனில் தகவல் வர, அந்த பெண்ணையும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் நேர்கிறது. இதனால், அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் போது, புகார்…
Read Moreபுருஸ்லீ ராஜேஷ் நடித்துள்ள “ஒரே பேச்சு, ஒரே முடிவு ” அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் வரவேற்பை பெற்றுள்ளது!
கல்யாணம் ஆனவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய கான்செப்ட் தான் கதை… https://app.primevideo.com/detail?gti=amzn1.dv.gti.102f647d-11e5-4a64-8b9b-4e7409191bdf&ref_=atv_lp_share_mv&r=web புருஸ்லீ ராஜேஷ், ஸ்ரிதா சுஜிதரன், தலைவாசல் விஜய், சம்பத் ராம், மீசை ராஜேந்திரன், ஐ.எம்.விஜயன், கராத்தே ராஜா ஆகியோர் நடித்துள்ளார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் வி.ஆர்.எழுதச்சன். ஒளிப்பதிவு ஆதர்ஷ் பி.அனில், இசை யூ.எஸ்.டீக்ஸ், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். தயாரிப்பு ஸ்கிரீன் லைட் பிலிம்ஸ். @GovindarajPro
Read Moreதயாரிப்பாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பட்டு, சினிமா டிவி அவுட்டோர் யூனிட் நிர்வாகிகள் புதிய முடிவு!
சவுத் இந்தியன் சினி & டிவி அவுட்டோர் யூனிட் ஓனர் அசோசியேஷன். தொழில் ஒத்துழைப்பு சம்பந்தமான அறிக்கை எவ்வித காரணமுமின்றி எங்கள் அசோசியேஷனின் யூனிட் முதலாளிகளான மூன்று உறுப்பினர்கள் மீது 07/04/2025 முதல், லைட் மேன் யூனியன் நிர்வாகிகள், முன் அறிவிப்பு இல்லாமல் தொழில் முடக்கத்தை அறிவித்ததன் அடிப்படையிலும், அப்பிரச்சினை தொடர்ந்து நீடிப்பதாலும், அதற்கு தீர்வு காண வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தோடு, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் 15/04/25 அன்று சின்னத்திரை, பெரிய திரை சம்பந்தமான அனைத்து விதமான படப்பிடிப்புகளுக்கும், எங்களது அவுட்டோர் யூனிட் உபகரணங்களை அனுப்புவதில்லை எனும் முக்கிய முடிவை அறிவித்திருந்தோம். அதை செயல்படுத்த எங்களது அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அன்று மாலை வரை பிரச்சனையை துவங்கியவர்கள் அதை முடித்து வைக்க முன் வராததால் நாங்கள் நடைமுறைப்படுத்திய முடிவை அடுத்த நாட்களிலும் தொடர்ந்து…
Read More