IDAA PRODUCTIONS தயாரிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், நடிகர் ஹரீஷ் கல்யாணின் 15 வது படமாக உருவாகும் #HK15 படத்தின், அதிராகப்பூர்வ அறிவிப்பு போஸ்டர், தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகியுள்ளது. வித்தியாசமான களங்களில் தனித்துவமான கதாப்பத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரீஷ் கல்யாண், லப்பர் பந்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். வடசென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஹைப்பர் கான்செப்டில், வித்தியாசமான ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. லிஃப்ட் படம் மூலம் கவனம் ஈர்த்த, இயக்குநர் வினீத் வரபிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். IDAA PRODUCTIONS பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு, இன்னும்…
Read Moreபுதிய சங்கத்தின் மூலம் உதவி இயக்குனர்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் – சங்கத்தின் தலைவர் முஜீப்
தமிழ்நாடு திரைப்பட உதவி இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சென்னை சாலிகிராமத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர்கள் சற்குணம், ரா வெங்கட், சரவண சக்தி ஆகியோர் கலந்துகொண்டு, உதவி இயக்குநர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்கள். இந்நிகழ்வினில்.. செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் முஜீப்…. இந்த சங்கத்தில் 400க்கும் மேற்பட்டோர், உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சினிமா தொடங்கி நூற்றாண்டுகள் கடந்தும் திரைப்படத்துறையில் உதவி இயக்குனர்களின் அடையாளமும், அங்கீகாரமும், உரிமையும் முழுமையாக கிடைக்காமல் உள்ளது.இந்த சங்கத்தின் மூலம் உதவி இயக்குனர்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்படும். தொழிலாளர் சம்மேளத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பது எங்களின் நோக்கம் என்றார்.
Read Moreபிரபுதேவா நடிப்பில் சீனாவில் படமாக்கப்பட்ட ” எங் மங் சங்
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கி வருகிறது. ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பல திறமையான இயக்குனர்களையும், நடிகர், நடிகைகளையும் அறிமுகப்படுத்திய நிறுவனமாக விளங்கிவருகிறது. ஆர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் “ நான் கடவுள் ”, ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் “ பாஸ் என்கிற பாஸ்கரன் ”, ஜெயம் ரவி நடித்த “நிமிர்ந்து நில் ” போன்ற சூப்பர் ஹிட் படங்கள் உட்பட 50 க்கு மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் நடன புயல் பிரபுதேவாவின் வித்தியாசமான நடிப்பில், “ எங் மங் சங் ” என்ற படத்தை தயாரித்துள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது.17ஆம் நூற்றாண்டில் நடப்பது போன்ற ஒரு கதை அமைப்பில் தொடங்கி, 1980 இல் நடக்கும் கதை, அப்போது…
Read Moreநேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் சைலேஷ் கொலானு – வால் போஸ்டர் சினிமா – யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் – கூட்டணியில் உருவான ‘ ஹிட் : தி தேர்ட் கேஸ் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் மே மாதம் முதல் தேதியன்று வெளியாகும் திரைப்படமான ‘ஹிட் : தி தேர்ட் கேஸ்’ படத்தில் மிகவும் தீவிரமான மற்றும் ஆக்ரோஷமான அவதாரத்தை வெளியிட உள்ளார். இந்த திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நானி ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் பட வரிசையில் வேகமாக பயணிப்பதால் மட்டுமல்ல.. கிளிம்ப்ஸ், டீசர், பாடல்கள் மற்றும் விளம்பரப்படுத்தும் ஸ்டைலுக்கு கூட பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்த் திபிர்னேனி, நானியின் சொந்தப் பட நிறுவனமான யுனானிமஸ் புரொடக்ஷனுடன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. நானி ஏற்றிருக்கும் கதாபாத்திரமான அர்ஜுன் சர்க்காருக்கு கடுமையான தொனியை அமைக்கும் வகையில், ஒரு இறுக்கமான காட்சியுடன் முன்னோட்டம் தொடங்குகிறது. அவர், ‘ஒரு…
Read Moreநடிகர் சூரியின் “மாமன்” திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகிறது !!
Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சூரி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, Lark Studios தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த்…
Read Moreஅறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில், யோகிபாபு நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!
Dev cinemas Pvt Ltd தயாரிப்பில், யோகிபாபு நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் பின்னணியில், ஒரு அழகான காதல் கதையுடன் புதிய படம் உருவாகிறது. தமிழ் புத்தாண்டையொட்டி, இப்படத்தின் படப்பிடிப்பு, அருள் முருகன் கோவிலில் எளிமையான பூஜையுடன், இனிதே துவங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலை பட இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா.ராஜ்மோகன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சென்னையில் இரும்புக்கடை தொழிலாளியான நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும், அவனது காதலுமாக இப்படம் உருவாகிறது. ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவம் தரும் வகையில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் கமர்சியல் படமாக இப்படம் உருவாகிறது. நகைச்சுவை நாயகன் யோகிபாபு, காதல் நாயகனாகவும், எமோஷனலாகவும் புதுமையான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் யோகிபாபு முதன்மைப் பாத்திரத்தில்…
Read Moreபள்ளி மாணவிகளின் முன்னிலையில் ‘சாணி’ திரைப்படத்தின் பூஜை!!
14 ஏப்ரல் 2025, டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக அமைந்த நிகழ்வு ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் நடைபெற்றது. மருது புரொடக்ஷன் தயாரிப்பில், சி. மோகன்ராஜ் எழுதி இயக்கும் மற்றும் மருது பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் “சாணி” என்ற திரைப்படத்தின் பூஜை, அந்த கிராமத்தில் அமைந்துள்ள CSI பெண்கள் தொடக்கப் பள்ளியில் கல்வித் தலைவர்களாகிய டாக்டர்.அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர்.முத்துலட்சுமி, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் A.P.J.அப்துல்கலாம் இவர்களின் புகைப்படங்களை முன்னணியாக வைத்து மிகுந்த மரியாதையுடன் படத்துவக்கவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் நேரில் கலந்துகொண்டனர். மேலும், அனைத்து மாணவிகளுக்கும் இனிப்புகள், நோட்டு புத்தகம், பேனா மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டு, சமூகக் கட்டுப்பாட்டுடன் கல்விக்கும் கலைக்கும் இடையே பாலம்…
Read Moreயோகிபாபு, விமல் நடிக்கும் “கரம் மசாலா” பர்ஸ்ட் லுக் வெளியீடு
நடிகர் விமல், யோகிபாபு நடிப்பில், இயக்குனர் மஜீத் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி திருவிழாவாக உருவாகியுள்ள கரம் மசாலா படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நவீன உலகத்தில் எல்லாமே புரோக்கர் வழியாக என்றாகிவிட்டது. பல வகையான புரோக்கர்களின் வழியாகவே நம் அன்றாட வாழ்க்கை நடக்கிறது. உதாராணமாக வீடு , திருமணம்,தொழில் அனைத்தும் அவர்களின் பங்கு உள்ளது…அந்த புரோக்கர்களால் நிகழும் நல்லதும் கெட்டதும் கலந்த சம்பவங்களை, முழுக்க முழுக்க சிரித்து மகிழும் அருமையான திரைக்கதையாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் தமிழன் படப்புகழ் இயக்குநர் அப்துல் மஜீத். இப்படத்தில் முன்னணி நடிகர் விமல் நாயகனாக நடித்துள்ளார், சாம்பிகா டயானா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ்,…
Read Moreஇந்திய சினிமாவின் மைல்கல், மூன்றாவது ஆண்டை நிறைவு செய்த கேஜிஎஃப் சேப்டர் 2!!
இன்று கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு நாள். இந்த திரைப்படம் வெளியான போது, மிகப்பெரிய சாதனை புரிந்தது மட்டுமல்லாமல், இந்திய ஆக்ஷன் சினிமாவின் வரலாற்றைவே மாற்றியது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடித்த ராக்கி பாய் கதாபாத்திரம் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்க, மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்தார். மிக அழுத்தமான கதையுடன், உலகத் தரமான ஆக்ஷன் காட்சிகள், கண்ணுக்கு விருந்து படைக்கும் காட்சி அமைப்புகள் என — கேஜிஎஃப் சேப்டர் 2 இந்திய சினிமாவில் ஒரு கலாச்சார வெற்றியாக மாறியது. ரவி பஸ்ரூர் இசையமைத்த பின்னணி இசை மற்றும் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்து வருகின்றன. சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பிரகாஷ்…
Read More“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் டைட்டில் ப்ரொமோ வெளியீடு !!
Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறை கதையை, கலக்கலான் காமெடி எண்டர்டெய்ன்மெண்ட் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரொமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், ரியோ ராஜ், ரோபோ சங்கர், ரக்ஷன், நிதின் சத்யா, மா க ப ஆனந்த், KPY புகழ், KPY தீனா, KPY பாலா, பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன், இசையமைப்பாளர் ஜிப்ரான், தீபக், தயாரிப்பாளர் சி வி குமார், லிப்ரா ரவிச்சந்திரன், மற்றும் நடிகை செளந்தர்யா ஆகியோர் தங்கள் சமூக வலைத்தள பக்கம் வழியே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரொமோவை வெளியிட்டுள்ளனர். இன்றைய தலைமுறையின் முக்கிய…
Read More