இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசை அமைத்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்த இயக்குனர் வீர அன்பரசு, இரண்டாவது கதாநாயகன் ஆகாஷ் முத்துவுடன் சென்று, பின்னணி இசை அமைக்க கேட்டுக் கொண்டார். கார்த்திக் ராஜா பின்னணி இசை அமைக்க உடனே ஒப்புக் கொண்டார்! நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரரின் காதல் கதை தான் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” கதையின் நாயகனாக வீர அன்பரசு நடிக்கிறார். ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். இவர்களுடன் ஆகாஷ் முத்து, ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா, பாய்ஸ் ராஜன், இயக்குனர் அரவிந்தராஜ், ஒஏகே சுந்தர், சுஷ்மிதா, நிஷா, துரைப்பாண்டியன், ஸ்ரீதேவி, சக்தி, சிரஞ்சீவி ஆகியோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு. ஒளிப்பதிவு…
Read More‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் நடிக்கும் ‘பெடி ( PEDDI) ‘படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் – ஜான்வி கபூர் – புச்சிபாபு சனா – ஏ. ஆர். ரஹ்மான்- வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் – சுகுமார் ரைட்டிங்ஸ் – ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘ பெடி ( PEDDI) ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற ‘உப்பென்னா ‘ படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடிக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரணின் 16 வது படமாக தயாராகும் இந்த திரைப்படத்தில் இணைந்திருக்கும் இந்த கூட்டணி, வெள்ளித்திரையில் புயலை கிளப்ப தயாராக உள்ளனர். இந்த பான் இந்திய திரைப்படத்தை பான் இந்திய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய…
Read Moreதிரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்!
ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் பலரும் தாங்களும் தெய்வீக தன்மையை உணர்ந்ததாகத் தெரிவித்தனர். கற்பூரம் ஏற்றி வைத்து பண்டிகை சூழலில் அந்த இடமே பக்தி சூழலில் அமைந்தது அங்கிருந்தவர்களுக்கும் சிலிர்ப்பான அனுபவம் கொடுத்தது. வெப் சீரிஸில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் கொண்டாடப்படுகிறது. இதில் சீமா பிஸ்வாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘பண்டிட் குயின்’ படத்தில் கதாடி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சீமா. ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சவால்களையும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “படப்பிடிப்பு நடந்த குலசேகரபட்டினம் மற்றும் சம்பல் பள்ளத்தாக்கின் நிலப்பரப்புகள் கரடுமுரடானது. ஆனால், அதற்கு நேர்மாறாக அங்கிருந்த மக்கள் அதீத அன்புடன் இருந்தனர். நான் மிகுந்த…
Read Moreமார்ச் 28 ஆம் தேதி முதல் ராஜ் டிஜிட்டல் டிவி ஓடிடி தளத்தில் உலகம் முழுவதும் ஸ்ட்ரீம் ஆகும் ‘செம்பியன் மாதேவி’ திரைப்படம்!
8 ஸ்டுடியோஸ் பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பத்மநாபன் லோகநாதன் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்த படம் ‘செம்பியன் மாதேவி’. சமூகத்தில் நடக்கும் சாதி பாகுபாட்டினை மையப்படுத்தி உருவான இப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் வியாபார ரீதியாக எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. காரணம், இப்படம் வெளியான போது மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முன்னணி இயக்குநர் ஒருவரது படத்தால் போதிய திரையரங்குகள் கிடைகாமல் போனது. இருந்தாலும், இப்படத்தின் கதைக்களம் மற்றும் சொல்லப்பட்ட கருத்து ஆகியவற்றை பத்திரிகையாளர்கள் மட்டும் இன்றி படம் பார்த்தவர்களும் வெகுவாக பாராட்டினார்கள். இந்த நிலையில், முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான ராஜ் தொலைக்காட்சியின் ஓடிடி நிறுவனமான ராஜ் டிஜிட்டல்…
Read Moreமைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிக்கும் #PR04 படம் பிரம்மாண்டமாக தொடங்கியது!
பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கி, நடித்த ‘லவ் டுடே’ படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படமும் தமிழ் தெலுங்கில் பெரும் வெற்றியடைந்தது. அடுத்தடுத்த வெற்றி படங்களின் மூலம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் தனக்கான இடத்தை பிரதீப் ரங்கநாதன் பிடித்திருக்கிறார். இப்பொழுது பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை அறிவித்திருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தின் மூலம் கீர்த்தீஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு பல பெரிய படங்களில் அவர் உதவி இயக்குநராக பணிபுரிந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று #PR04 திரைப்படம் பிரம்மாண்டமான பூஜையுடன் தொடங்கியது. படத்தின் முதல் காட்சி பிரதீப் ரங்கநாதன் இடம் பெறும்படி…
Read More“சம்பலில் இருந்து குலசேகரபட்டினம் வரை நீண்ட தூரம் பயணித்திருந்தேன்” நடிகை சீமா பிஸ்வாஸ்!
‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் பலரும் தாங்களும் தெய்வீக தன்மையை உணர்ந்ததாகத் தெரிவித்தனர். கற்பூரம் ஏற்றி வைத்து பண்டிகை சூழலில் அந்த இடமே பக்தி சூழலில் அமைந்தது அங்கிருந்தவர்களுக்கும் சிலிர்ப்பான அனுபவம் கொடுத்தது. வெப் சீரிஸில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் கொண்டாடப்படுகிறது. இதில் சீமா பிஸ்வாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘பண்டிட் குயின்’ படத்தில் கதாடி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சீமா. ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சவால்களையும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “படப்பிடிப்பு நடந்த குலசேகரபட்டினம் மற்றும் சம்பல் பள்ளத்தாக்கின் நிலப்பரப்புகள் கரடுமுரடானது. ஆனால், அதற்கு நேர்மாறாக அங்கிருந்த மக்கள் அதீத அன்புடன் இருந்தனர். நான் மிகுந்த…
Read Moreசீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ மதுரை – திருச்சி ப்ரமோஷன்
HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு மதுரை மற்றும் திருச்சியில் நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வீர தீர சூரன் – பார்ட் 2’ வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை ரசிகர்களிடம் சென்றடைய செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஹைதராபாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் – மதுரை – திருச்சி – கோயம்புத்தூர் – உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள். சென்னை, ஹைதராபாத், பெங்களூரூ, திருவனந்தபுரத்தை தொடர்ந்து நேற்று மதுரை மற்றும்…
Read Moreடெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!
எஸ். சஷிகாந்த் இயக்கத்தில், YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் வைஸ் பிரெசிடெண்ட் மோனிகா ஷெர்கில், “தமிழ் சினிமாவில் திறமையான கதைகள் பல வெளியாகி இருக்கிறது. இதில் ‘டெஸ்ட்’ திரைப்படமும் ஒன்று. இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா கதை குடும்பம், முக்கிய கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பேசும். இயக்குநர் சஷிகாந்த் அதைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார். ஆர். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் என திறமையான நடிகர்கள் அனைவரும் முதல் முறையாக இந்த படத்திற்காக ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர். இந்த வருடம் எங்களுடைய முதல் ஒரிஜினல் தமிழ் திரைப்படம் ‘டெஸ்ட்’. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்” என்றார். நடிகர்…
Read Moreஆளுநர் சந்திப்பு- நடிகர் பார்த்திபன் அறிக்கை
நேற்றைய ஆளுனர் சந்திப்பை (நான் எதைச் சொல்ல விரும்பினேனோ அதற்கு) சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். முதலில் தமிழில் சட்டை உடுத்திக் கொண்டேன். உ வே சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ புத்தகத்தை நீட்டினேன். பேச்சின் முதல் வரியாக “தமிழின் ஆளுமை சுப்ரமணிய பாரதிக்கு என் முதல் வணக்கம்” என்று துவங்கி “தமிழக ஆளுனருக்கு மரியாதை” எனத் தொடர்ந்தேன். தமிழின் பெருமையும் தமிழக பண்பாடும் காக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே எல்லா சொற்களையும் பயன்படுத்தினேன். “பையன் ரொம்ப நல்லா படிக்கிறான் போல” என்று சொல்லும் போது ஒருவேளை அப்பையன் சரியாக படிக்காதவனாயிருந்தால் உள்ளுக்குள்ள உறுத்தும்!அப்படித்தான் தமிழ் பண்பாட்டை கவர்னர் நன்றாக பாதுகாக்கிறார் என்ற வாக்கியத்தில் உள்ள உள்குத்தையும் கவனிக்க வேண்டும்! இப்படிபட்ட தொனியில் நான் பேசுவதை கேட்ட நீதியரசர் சந்துரு ஒருமுறை “இது ஒரு வகையான positive politics “…
Read Moreரெட் ஃப்ளவர் படத்தில் வரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ன் சக்திவாய்ந்த காட்சிகள், படம் பார்ப்போரின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும்
தமிழ் அதிரடித் ஆக்ஷன் திரைப்படமான ரெட் ஃப்ளவர், கி.பி 2047 இல் இந்தியாவை ஒரு உலகளாவிய வல்லரசாகக் காட்சிப்படுத்துகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸுன் தியாகத்திற்கும், தேசத்திற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்கும் மரியாதை செலுத்தும் வகையில், சக்திவாய்ந்த காட்சிகளை இந்தப் படம் கொண்டுள்ளது என்று இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகிறார். ரெட் ஃப்ளவர் என்ற தலைப்பு அவரது மரபுடன் ஆழமாக இணைக் கப்பட்டுள்ளது, இது இந்தியாவின் சுதந்திரத்தை வடிவமைத்த இரத்தம், துணிச்சல் மற்றும் மீள்தன்மையைக் குறிக்கிறது. நேதாஜியை கௌரவிக்கும் காட்சிகள் படத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான உச்சக்கட்டமாக இருக்கும், பார்வையாளர்களிடையே தேசபக்தி பெருமையின் அலையைத் தூண்டும் என்று மேலும் அவர் கூறினார். ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே. மாணிக்கம் பிரமாண்டமாக தயாரித்த, ரெட் ஃப்ளவர் படத்தில்…
Read More