“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியீட்டு விழா சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், ஊடகத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கௌர், நடிகர் விஜய் சேதுபதி, உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று ஊடகங்களையும் ரசிகர்களையும் சந்தித்தனர். டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள “ஸ்லம் டாக்” திரைப்படம் குறித்து நிகழ்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர்…

Read More

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

ஆதி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ‘பார்ட்னர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் – தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival) . இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மிலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கிறார். ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது. கதையின் நாயகியாக ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார். ‘ஆண்மை தவறேல்’ துருவா, கர்நாடகாவைச் சேர்ந்த அத்விதி ஷெட்டி, வங்காள நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர்…

Read More

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் :  பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு 

நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘டாக்ஸிக்’ படக் குழுவினர் ஒரு பிரத்யேக படப்பிடிப்பு தள காணொலியை பகிர்ந்துள்ளனர். இது அந்த திரைப்பட இயக்குநரின் படைப்பு சார்ந்த செயலாக்கத்தையும்… ஆளுமை மிக்க அவரது இருப்பையும்… காண்பதற்கு பார்வையாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த பிறந்த நாளுக்கான சிறப்பு காணொலியில் கீது மோகன்தாஸ் – தனது இயல்பான பாணியில் செயலாற்றுவதை காட்சிப்படுத்துகிறது. காட்சிகளை தீர்மானிப்பது – பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைப்பது – நடிப்பை வழி நடத்துவது மற்றும் ஒரு மிகப்பெரிய படக்குழுவினை நம்பிக்கையுடனும் துல்லிய தன்மையுடனும் வழிநடத்துவது- என பல விசயங்களையும் காணலாம் . ”வித்தியாசமாகத் தாக்கிய ஒவ்வொரு காட்சியின் பின்னாலும்.. வசனங்களை விட.. உரையாடலை விட அதிகமாகப் பேசிய ஒவ்வொரு மௌனத்திலும், அவர் இருந்தார்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீது மோகன்தாஸ்”…

Read More

எம் .எஸ். பாஸ்கர் நெகிழ்ந்து பாராட்டிய படம் ‘ப்ராமிஸ்’

‘எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனைதான் . சத்தியம் பரிசோதனை செய்யப்பட்ட விதத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் எனது ‘சத்திய சோதனை’ என்கிற சுயசரிதையைப் படியுங்கள்’ என்றார் மகாத்மா காந்தி.ஆமாம் அவர் எழுதிய சத்திய சோதனை நூலைப் படிப்பதன் மூலம் அவரது வாழ்க்கையில் சத்தியம், ,உண்மை, அறம் போன்றவை சோதிக்கப்பட்ட விதத்தை அறிந்து கொள்ளலாம்.அவருக்கே இந்தப் பாதையில் வழிகாட்டியது, அரிச்சந்திரன் சத்தியத்திற்காகப் போராடிய கதை என்று கூறலாம். இவ்வகையில் சத்தியம் என்பது நமது பாரம்பரியத்தோடு கலாச்சாரத்தோடு பண்பாட்டோடு கலந்த ஒன்றாக இருக்கிறது.அப்படிப்பட்ட சத்தியம் வாழ்க்கையில் விளையாடும் விதத்தைப் பேசுகிற திரைப்படம் தான் ‘ப்ராமிஸ்’. அந்த சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்துதான் இந்த ‘ப்ராமிஸ்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார் .வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் . சரவண தீபன் இசையமைத்துள்ளார்.பாடல்களைப்…

Read More

பண்டைய சோழப் பேரரசில் நிகழும் கற்பனை ஆக்‌ஷன்-அட்வென்ச்சர் விளையாட்டான Son of Thanjai, Xbox Series X|S மற்றும் PS5-இல் வெளிவர உள்ளது!

இந்த ஆட்டத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை @madhankarky எழுதுகிறார். எந்திரன், பாகுபலி உட்பட 400 திரைப்படங்களுக்கும் மேலாக ஆயிரம் பாடல்களுக்கு மேலா பணியாற்றிய மதன்கார்க்கிக்கு இது முதல் கேமிங் முயற்சி. உண்மையான தென்னிந்திய தற்காப்புக் கலை மரபில் வேரூன்றிய, கேமிங்கில் இதுவரை காணப்படாத, நெகிழ்வுத்தன்மை கொண்ட சுருள் வாள் (Surul Vaal) இவ்விளையாட்டில் இடம்பெறுகிறது. சண்டைக் காட்சிகள் உலகின் மிகப் பழமையான தற்காப்புக் கலைகளுள் ஒன்றான களரிப்பயற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டை உருவாக்கியவர்கள் சென்னையை மையமாகக் கொண்ட 30 பேர் கொண்ட @AyeletStudio குழு. இது தமிழ் மொழியில் ஆங்கில சப்டைட்டிலுடன் உலகெங்கும் வெளியாகிறது. உலகெங்கிலும் உள்ள விளையாட்டாளர்களுக்குத் தமிழ் மண், மொழி, பண்பாடு ஆகியவற்றை அறிமுகப்படுத்தும். Xbox Series X|S மற்றும் PS5-இல் விரைவில். கேம்பிளே ரிவீல் டிரெய்லரைப் பாருங்கள்: https://www.youtube.com/watch?v=CuR16jMhdkQ…

Read More

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

‘சிங் கீதம்’ நான் தயாரிக்க விரும்பிய படம்! * சிங்கிதம் சார் இப்போதும் ஜென் -ஜி (GenZ) விட முன்னணியில் இருக்கிறார் ஜென் -ஜி – உலகநாயகன் கமல்ஹாசன் “சிங் கீதம் மூலம் எனது 40 வருடக் கனவு நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் முழுப் பெருமையும் நாக் அஸ்வினையே சாரும். வைஜயந்தி மூவிஸும் நாக் அஸ்வினும் என் மீது மிகுந்த அன்பையும் பாசத்தையும் காட்டியுள்ளனர்” – பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ் சிங்கீதம் அவர்களின் பாராட்டு ஒரு ஆஸ்கர் விருது பெற்றது போல் உணர்கிறேன் – தேவி ஸ்ரீ பிரசாத் பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ் தனது மிகவும் லட்சிய படைப்பான ‘சிங் கீதம்’ படத்துடன் ரசிகர்கள் முன் வருகிறார். நாக் அஸ்வின், வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா இப்படத்தை தயாரித்தார். அயன்,…

Read More

ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் விமர்சனம்

மேட்டல் எனும் பொம்மை செய்யும் கம்பெனிக்காக வரையப்பட்ட சாகச நாயகனான ஹீ-மேன், அனிமேஷன் டி.வி. தொடராக அறிமுகமான பின் மிகவும் பிரபலமானார். டால்ஃப் லண்ட்க்ரென், ஹீ-மேனாக நடித்து 1987 இல் வெளியான படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மீண்டும் 2009 இல், ஹீ-மேன் படத்தை எடுக்க, அமிரெக்கன் ஸ்டுடியோவான எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸுடன் இணைந்து சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் முயற்சி செய்தது. பல தடங்கல்களையும் தாமதங்களையும் கடந்து, அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் 2025 இல் தான் ஹீ-மேன் படத்தைத் தொடங்கியது. எட்டர்னியாவில் இருந்து சிறுவன் ஆடம் க்ளென், ‘சக்தி வாள் (Sword of Power)’ உடன் பூமிக்கு அனுப்பப்படுகிறான். வரும் வழியில் அவ்வாளை ஆடம் தவறவிட்டுவிட, வாலிபனான பின்னும் தேடிக் கொண்டே இருக்கிறான். அந்த வாள் இருக்குமிடம் தெரிய வர, அதை மீட்கும் முயற்சியில், பீஸ்ட் மேனைப் பூமிக்கு…

Read More

ராம் சரண் நடித்த பெத்தி – விமர்சனம்.

கதை.. பெரும்பாலும் ஒரு படத்தில் ஒரு கதையில் ஒரு விளையாட்டு போட்டி இருக்கும்.. ஆனால் இதில் மூன்று கதைகளை அமைத்திருக்கிறார்.. மூன்று விளையாட்டுகளிலும் ராம்சரண் ஆட்டநாயகன் மலைவாழ் மக்களில் ஒருவன் ராம்சரண் இவரது அம்மா குயிலி.. அந்த பகுதி நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்… பெத்தி என்றால் கிரிக்கெட்டில் பயங்கர ஃபேமஸ்… எனவே இவரை வைத்து பலரும் கூலி ஆட்டக்காரனாகபந்தயம் கட்டி வருகின்றனர்.. இவரும் பல சாதனைகள் படை த்து வருகிறார்.. ஆனால் இவருக்கும் இவரது இன மக்களுக்கு என்று எந்த அடையாளமும் இல்லை.. இவரது ஊரில் ஒரு ரயில்வே நிலையம் கூட கிடையாது.. இதனால் ஒருநாள் முழுக்க இவர்கள் ஊருக்கு நடந்து வருகின்றனர்.. இப்படியான சூழ்நிலையில் தனக்காகவும் தன் மக்களுக்காகவும் ஓர் அடையாளத்தை உருவாக்க நினைக்கிறார் ராம்சரண்.. எனவே அடுத்த கட்டத்திற்கு குஸ்தி பயிற்சியை மேற்கொள்கிறார்.. சிவராஜ்குமார்…

Read More

“அட்டாக்கர்” – தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் மையப்படுத்தப்பட்ட திரைப்படம்

பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் சார்பில் தினேஷ் ராஜ் தயாரித்துள்ளார். Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக “அட்டாக்கர்” உருவாகியுள்ளது. வித்தியாசமான மற்றும் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களை உருவாக்கும் தனது பயணத்தை இந்நிறுவனம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம் எழுதி இயக்கியுள்ளார். இவர் முன்னதாக இயக்குநர் பா. இரஞ்சித் திடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். வாலிபால் விளையாட்டையும் அதனுடன் தொடர்புடைய கலாச்சார அடையாளத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள “அட்டாக்கர்”, தமிழ் சினிமாவில் வாலிபாலை பிரதான கருவாகக் கொண்டு உருவாகும் முதல் திரைப்படமாக தனித்துவம் பெறுகிறது. முழுக்க முழுக்க வாலிபாலை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை, அந்த…

Read More

மத்திய அமைச்சர் திரு. எல். முருகனுடன் கவிஞரும் இயக்குநருமான சீனு ராமசாமி சந்திப்பு, தான் எழுதிய – ‘சினிமாவின் ஆன்மா’ நூலை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு ஆதரவு! 

கவிஞரும் பிரபல திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி அவர்கள், இன்று மதியம் மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, தான் எழுதிய ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ நூலின் சமகால சமூகத் தேவை குறித்து அமைச்சருடன் அவர் விரிவாகவும் ஆழமாகவும் விவாதித்தார். உலகக் குழந்தைகளின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் இந்தியாவில் எடுக்கப்பட்ட நேர்த்தியான, உலக சினிமா தரத்திலான மிகச் சிறந்த சிறார் திரைப்படங்களைத் தொகுத்து, சிறார்களின் சினிமா ரசனையை ஒரு முறையான வாழ்வியல் கல்வியாக மாற்றுவதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும். இச்சந்திப்பின் போது இக்கல்வியின் கட்டாயத் தேவை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி விளக்கிக் கூறுகையில்: “ஒரு குழந்தை 8 வயது வருவதற்குள்…

Read More