Grammy விருது பெற்ற Nine Inch Nails இசைக்குழுவின் புதிய பாடலுடன் ட்ரெய்லர் அறிமுகமாகிறது

டிஸ்னியின் புரட்சி செய்த TRON திரைப்படத் தொடர்களின் மூன்றாவது பகுதியாக உருவாகியுள்ள மிகுந்த எதிர்பார்ப்பை பெற்ற ‘TRON: ஏரிஸ்’ படத்தின் புதிய மொழி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படம், 1982ஆம் ஆண்டு வெளியான டிஸ்னியின் வழிகாட்டி விஞ்ஞானத் திரைப்படமான TRON மற்றும் 2010ஆம் ஆண்டு வெளியான அதன் தொடர்ச்சியான TRON: Legacy ஆகியவற்றுக்குப் பிந்தையதாகும். இந்தப் படம் 2025 அக்டோபர் 10 அன்று ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தியாவில் வெளியிடப்படுகிறது. TRON: ஏரிஸ் திரைப்படம், ஏரிஸ் எனப்படும் ஒரு உயர் நுட்பம் கொண்ட நிரல்நிரலைப் பற்றியது. அவர் டிஜிட்டல் உலகத்திலிருந்து உண்மையான உலகிற்குள் ஒரு அபாயகரமான பணிக்காக அனுப்பப்படுகிறார். இதன் மூலம், மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு உயிரினங்களுக்கும் இடையே முதல் முறை நேரடி தொடர்பு உருவாகிறது. இந்த புதிய ட்ரெய்லரில், Grammy விருது…

Read More

“இன்றைய சூழலில் ஒவ்வொரு படத்துக்கும் விமர்சனம் தேவை., அது ஆரோக்கியமான விமர்சனமாக இருக்கட்டும்” ‘அக்யூஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் உதயா வேண்டுகோள்

நடிகர்கள் உதயா – அஜ்மல் – யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன்-ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் – சச்சின் சினிமாஸ்- ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் உதயா – ‘தயா’ என். பன்னீர்செல்வம் – எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில்…

Read More

பிளாக்மெயில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஆர் வி உதயகுமார் புகழாரம்

M/s. JDS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் அமல்ராஜ் பேசியதாவது. “இந்தப் படத்தின் ஹீரோ ஜி.வி. பிரகாஷ் சாருக்கு நன்றி. படப்பிடிப்பு முடிய கடைசி 8 நாட்கள் மட்டும் பாக்கி இருந்தது. அதற்கு பக்கபலமாக இருந்து உதவி செய்தவர் ஜி.வி. பிரகாஷ். படத்திற்காக அவர் பாதி சம்பளம்தான் வாங்கி இருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் டப்பிங் முடித்து ஆடியோ லான்ச் வரை வந்திருக்கிறார். அவருக்கு என்றுமே கடமைப் பட்டிருக்கிறேன்”.    இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்: “30 வருடங்களுக்கு முன்பு ‘பிளாக்மெயில்’ என்ற இந்திப் படம்…

Read More

மான் விழி… பாவ்யா த்ரிகா!

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா, தமிழ் சினிமாவில் நிதானமான நடிப்பும், அழகான தோற்றத்தையும் கொண்ட நடிகையாக மெருகேறி வருகிறார். 1.65 மீ (5 அடி 5 அங்குலம்) உயரமும், சுமார் 55 கிலோ எடையும் கொண்ட பவ்யாவின் நேர்த்தியான உருவம் மற்றும் அழகு ஊடகங்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்படுகிறது.    சென்னையின் M.O.P. வைஷ்ணவக் கல்லூரியில் ஊடகக் கல்வி முடித்த பவ்யா, 2022-ல் தினேஷ் பாலனிவேல் இயக்கிய ‘கதிர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், 2023-ல் ரியோ ராஜ் ஜோடியாக நடித்த ‘ஜோ’ படத்தில் “ஸ்ருதி” என்ற கதாபாத்திரம் மூலம் அவர் பரவலான கவனம் பெற்றார். 17 முதல் 27 வயதுக்குட்பட்ட கேரளா–தமிழ்நாடு எல்லைக் கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த காதல் படம் 2023 நவம்பர் 24…

Read More

ஜென்ம நட்சத்திரம் – திரை விமர்சனம்

  சினிமாவில் இயக்குனராகும் கனவில் இருக்கும் தமன், அதற்காக தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி வருகிறார். காதல் மனைவி மால்வி மல்ஹோத்ரா தற்போது கர்ப்பமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி தனது நண்பன் இல்லத்தில் தங்க வைத்து கதை சொல்லப் போகிறார். கர்ப்பமாக இருக்கும் மால்விக்கு அடிக்கடி கெட்ட கனவு வருகிறது. கனவில் சில ஆவிகள் வந்து பயமுறுத்திப் போகிறது. அரசியல்வாதி வேல. ராமமூர்த்தியின் கார் டிரைவராக, பணியாற்றி வருகிறார் காளி வெங்கட். இவரது மகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு 40 லட்சம் பணம் தேவைப்பட, தான் வேலை பார்க்கும் அரசியல்வாதியிடம் கேட்கிறார். பணம் தர மறுத்து விடும் அந்த அரசியல்வாதி அவரை வார்த்தைகளால் காயப்படுத்தி அனுப்பி வைக்கிறார். இதனால் தேர்தலுக்காக வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுத்து பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் பதுக்கி வைக்கிறார் காளி வெங்கட் . இது…

Read More

கெவி – திரை விமர்சனம்

மலைவாழ் மக்களின் அன்றாட அவஸ்தை தான் கதைக்களம். கொடைக்கானல் மலை உச்சியில் உள்ள ஒரு சிறு கிராமம் தான் கெவி. இன்று வரை இங்கு வாழும் மக்களுக்கு சாலை போக்குவரத்து வசதிகளோ மருத்துவ வசதிகளோ கிடையாது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இவர்களின் 350 ஓட்டுக்காக மட்டுமே வந்து போகும் அரசியல்வாதிகளிடம் ஒரே ஒரு மருத்துவமனையாவது கட்டித் தாருங்கள் என்று இவர்கள் கெஞ்சியும் பயனில்லை.n ஓட்டுக்காக சரி சரி என்று தலையாட்டும் தலைவர்கள் தேர்தல் முடிந்த பிறகு அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை. இந்த அவல நிலை போதாதென்று, திடீர் திடீரென்று ஏற்படும் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியாத பெரும் சோகம் அவர்களுக்குள் நிரந்தர உறுத்தலாக இருந்து வருகிறது. இப்படி ஐந்து பேர் அடி யோடு புதைந்து உயிரிழந்த மறுநாள் தேர்தலுக்காக போலீஸ்…

Read More

இசையமைப்பாளர் தரண்குமார் இசையில், வாஹீசன் ராசய்யா ராப் எழுத்தில், ‘ச்சீ ப்பா தூ…’ சரிகமா ஒரிஜினல்ஸ் இசை ஆல்பம் வெளியானது !!

சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் திரை இசையைக் கடந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்டிபென்டன்ட் இசைக்கான வரவேற்பு பெருகி வருகிறது. தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார், பல புதுமையான இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார். அவரின் அடுத்த வெளியீடாக சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது. இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் திறமையால் ஈர்க்கப்பட்ட தரண் குமார், இந்த புதிய ஆல்பம் பாடலில் அவருக்கு வாய்ப்பளித்து, அவருடன்…

Read More

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

லெஜண்ட்ரி இயக்குநர் ஜோஷி அடுத்து ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தை உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் (UMF) மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா பேனரின் கீழ் இயக்க இருக்கிறார். இந்த அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தசாப்தங்களாக ஹிட் படங்களை பல ஜானரில் கொடுத்து வருபவர் இயக்குநர் ஜோஷி. தேசிய விருது வென்ற ‘மேப்படியான்’ மற்றும் ரூ. 100 கோடி வசூலித்த ஆக்‌ஷன் திரைப்படமான ‘மார்கோ’ என மலையாள சினிமாவின் வணிகத்துக்கு புதுவரையறை கொடுத்ததை அடுத்து இயக்குநர் ஜோஷியுடன் இணைவதன் மூலம் UMF தனது தரத்தை மேலும் மேம்படுத்துகிறது. ‘பொரிஞ்சு மரியம் ஜோஷ்’, ‘கிங் ஆஃப் கொத்தா’ போன்ற படங்களில் தனது வலுவான கதாபாத்திர வரையறை மற்றும் திரைக்கதைக்காக அறியப்பட்ட எழுத்தாளர்- இயக்குநர் அபிலாஷ் என். சந்திரன், இயக்குநர் ஜோஷியுடன் இந்தப் படத்தில் இணைகிறார்.…

Read More

ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் ‘சோழநாட்டான்’

செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மும்பையை சேர்ந்த தமிழ் தொழிலதிபரான மாரியப்பன் முத்தையா தயாரிக்கும் ‘சோழநாட்டான்’ திரைப்படம் திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. “பட்டுக்கோட்டை” ரஞ்சித் கண்ணா இயக்கும் ‘சோழநாட்டான்’ முழுக்க ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘உழவன் மகன்’ படத்திற்கு பிறகு ரேக்ளா ரேஸ் பின்னணியில் இப்படம் உருவாகிறது. மதுரை, திருநெல்வேலி புகழ் பாடும் எத்தனையோ படங்கள் வந்துள்ள நிலையில் சோழர்களின் தேசமான தஞ்சாவூர் மண்ணின் தனிச்சிறப்பை திரையில் பறைசாற்றும் விதமாக இந்த திரைப்படம் தயாராகிறது. ‘சோழநாட்டான்’ திரைப்படத்தில் ‘டைனோசர்ஸ்’ மற்றும் ‘ஃபேமிலி படம்’ புகழ் உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. லுத்துஃப் நாயகியாக நடிக்க, சௌந்தரராஜன் மற்றும் சுவேதா…

Read More

ட்ரெண்டிங் – திரை விமர்சனம்

கலையரசன் – பிரியாலயா தம்பதி தங்கள் பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடரும் தங்களது யூடியுப் சேனல் மூலம் கிடைக்கும் வருவாயை நம்பி கடனில் பெரிய பங்களா வீடு, கார் என வாழ்ந்து வருகிறார்கள். திடீரென்று ஒரு நாள் அவர்களது யூடியுப் சேனல் டெலிட் ஆகிவிட, வருமானம் நின்று போகிறது. கடன் கொடுத்தவர்கள் வந்து மிரட்டுகிறார்கள். இந்த வேளையில் தொலைபேசி மூலம் அவர்களை தொடர்பு கொள்ளும் மர்ம நபர், தாங்கள் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துவதாகவும், அதில் பங்கேற்று வெற்றி பெற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று கூறுகிறார். அதே சமயம், இந்த ரியாலிட்டி ஷோ பற்றி யாரிடமும் தெரிவிக்கக் கூடாது உள்ளிட்ட பல கண்டிஷன்களை போடுகிறார். ஒரு கட்டத்தில் தம்பதியரிடையே நடைபெறும் இந்த விபரீத விளையாட்டு அவர்கள்…

Read More