நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 BHK’ திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதயத்தைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டப் பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் ராம், “ஜூலை 4 எனக்கும், சித்தார்த், அருண் மூவருக்கும் முக்கியமான நாள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா எனது அசிஸ்டெண்ட்டாக இருந்தார். ‘தங்க மீன்கள்’ படம் நான் எடுத்த…
Read Moreடெரரான கெட்டப்பில் ராஷ்மிகா : மைசா படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது!!
நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அட்டகாசமான ஆக்ஷன் அவதாரத்தை வெளிக்காட்டிய போஸ்டர், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. தற்போது இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு“மைசா” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராக பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். Unformula Films நிறுவனம் இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத் தயாரிப்பாளராக சாய் கோபா பணியாற்றுகிறார். நேற்றைய அட்டகாசமான அறிவிப்பு போஸ்டரைத் தொடர்ந்து, இந்த திரைப்படத்தின் தலைப்பும், ராஷ்மிகாவின் மிரட்டலான லுக்குடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்டுள்ளனர். தெலுங்கில்: இயக்குநர் ஹனு ராகவபுடி தமிழில்: “குபேரா” படத்தில் நடித்த சக நடிகர் தனுஷ் இந்தியில்: “சாவா” பட நாயகன் விக்கி…
Read More“ சின்னதா ஒரு படம் ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.
நான்கு உண்மைச் சம்பவங்களை தழுவி இயக்கப்பட்ட நான்கு கதைகளின் தொகுப்பே ‘சின்னதா ஒரு படம்’. நான்கும் வேறுபட்ட கதைகளங்களையும், சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்களையும் கொண்டவை. ஜானி டிசோசா.எஸ் இயக்கத்தில் உருவாகும் “சின்னதா ஒரு படம்” ஆந்தாலஜி எனப்படும், நான்கு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு திரைப்படமாகும். புதிய கதை சொல்லும் முறைகளுடன் பல்வேறு மனித நிலைமைகளை மையப்படுத்தும் சுவாரஸ்மான கதைகளையும் இத்திரைப்படம் வழங்குகிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான ஒரு முயற்சியாக இத்திரைப்படம் பேசப்படும் என்று நம்பிக்கையளிக்கக்கூடியதாக இருக்கிறது. இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் APV மாறன் மற்றும் கணேஷ் K பாபு (டாடா படத்தின் இயக்குநர்) எம்ஜி ஸ்டுடியோஸின் கீழ் வெளியிடுகின்றனர். தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசு M.D. திருச்சித்திரம் தயாரிப்பின் கீழ் தயாரித்துள்ளார். அஞ்சாமை படத்திற்கு பிறகு தயாரிப்பாளராக இது இவரது இரண்டாவது படமாகும். *படத்தின் நடிகர்கள்:* விதார்த், பூஜா தேவரையா,…
Read Moreயஷ் ராஜ் பிலிம்ஸின் வார்-2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது . 50 நாட்களில் வெளியாகவுள்ள வார் 2 படத்திற்காக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்!*
யஷ் ராஜ் நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்சில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதிரடி ஆக்சன் படம் வார் 2 திரைப்படம் வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் போன்ற முக்கிய சர்வதேச மார்கெட்டைல் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் பிரத்தியேகமாக திரையிடப்படுகிறது .மேலும் இந்தியாவில் உள்ள ஐமேக்ஸ் திரை களிலும் இப்படம் வெளியாகவுள்ளது . மும்பை, இந்தியா: இந்தியாவின் முதன்மையான திரைப்பட ஸ்டுடியோ மற்றும் நாட்டின் மிகப்பெரிய சினிமா உரிமையாளர்களின் தாயகமான யஷ் ராஜ் பிலிம்ஸ், வார் 2 படத்தை பிரத்யேகமாக உலகளவில் ஐமேக்ஸ் திரைகளில் வெளியிடுவதை பெருமையுடன் அறிவித்துள்ளனர் . பிரமாண்டமான ஆக்சன் காட்சிகளுடன் ஸ்பை த்ரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படம் வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா…
Read Moreகுட் டே – திரை விமர்சனம்
பணிப்பெண்ணை சீண்டிய அலுவலக மேலாளரை தட்டிக் கேட்டபோது உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்துகிறது நிர்வாகம். அம்மாவின் மருந்து செலவுக்கு பணம் அனுப்பினால் கோபத்தில் எரிந்து விழும் மனைவி, வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவனிடம் முறை வாசலுக்கும் சேர்த்து பணம் கேட்கும் உரிமையாளரிடம் ஆத்திரம்.. உடல்நிலை சரியில்லாத பெண் குழந்தை, 1000 ரூபாய் கடன் கேட்டால், அவமானப்படுத்தும் அறை நண்பன்… இப்படி ஒரு நாள் முழுவதும் பல அவமானங்களை கடந்து செல்லும் நாயகன், அத்தனைக்கும் ஒரே தீர்வு மது தான் என்று எண்ணி அன்றைய இரவு மதுவில் குளிக் கிறார். இதற்கிடையே காணாமல் போன குழந்தையை கண்டு பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் காவல்துறையும், நாயகனால் பாதிக்கப்பட, குழந்தையை தேடும் காவல்துறை தங்களை டென்ஷன் ஆக்கிய நாயகனையும் சேர்த்து தேடுகிறது. நாயகன் போலீசில் சிக்கினாரா… கடத்தப்பட்ட குழந்தையை காவல்துறை…
Read Moreமார்வெலின் முதல் சூப்பர் ஹீரோக்கள் குடும்பத்திற்கும் மிகவும் ஆபத்தான வில்லன் கேலக்டஸுக்கும் இடையிலான மோதலை காண இன்னும் ஒரு மாதமே உள்ளது!
’தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அதிரடி டிரெய்லரை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அதிரடி ஆக்ஷன் சினிமா அனுபவத்தை ரசிகர்கள் பெற இன்னும் ஒரு மாதமே உள்ளது. மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோ குடும்பம் vs பூமியை விழுங்கும் கேலக்டஸ் மோதல் ஜூலை 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 1960களின் ரெட்ரோ-ஃப்யூச்சரிஸ்டிக் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தப் படம், புதிய MCU Lineup-ஐ அறிமுகப்படுத்துகிறது. ரீட் ரிச்சர்ட்ஸ்/ மிஸ்டர் ஃபென்டாஸ்டிக் ஆக பெட்ரோ பாஸ்கல், சூ ஸ்டார்ம்/ இன்விசிபிள் வுமனாக வனேசா கிர்பி, ஜானி ஸ்டார்ம்/ ஹ்யூமன் டார்ச்சாக ஜோசப் க்வின் மற்றும் பென் கிரிம்/ தி திங் ஆக எபோன் மோஸ்-பக்ராச் ஆகியோர் நடித்துள்ளார். சரி, இவர்களின் நோக்கம் என்ன? பூமியை விழுங்கத் துடிக்கும் வலுவான சக்தியான கேலக்டஸ்…
Read More2025 ஆம் ஆண்டின் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர், மாமன் ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது!!
~ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்ப உறவுகளின் மேன்மையை, மனதைக் கவரும் ஃபேமிலி எண்டர்டெயினராக சொன்ன, பிளாக்பஸ்டர் மாமன் திரைப்படத்தை, ZEE5 தளம் விரைவில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. ~ இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சி, விரைவில் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் திரைப்படமான “மாமன்” திரைப்படத்தை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. ஃபேமிலி எண்டர்டெயினரான மாமன் படம், குடும்ப உறவுகளின் உணர்வுகளை அழகாகப் பேசியுள்ளது. இந்தப் படத்தில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஸ்வாசிகா என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் லட்டுவாக குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவன் கலக்கியுள்ளார். மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது ZEE5 மற்றும் ZEE தமிழ்…
Read Moreஏழு திரைப்படம் – ஒரு பிரபஞ்சம் – எல்லையற்ற புராணக் கதைகள் – கொண்ட ‘மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படைப்பான ‘ மகாவதார் நரசிம்மா’ 2025 ஜூலை 25ஆம் தேதியன்று வெளியாகிறது
ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும் க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிமேஷன் படைப்பான மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தத் தொடர் 2025 ஆம் ஆண்டு மகாவதார் நரசிம்மாவுடன் தொடங்கி, 2037 ஆம் ஆண்டின் மகாவதார் கல்கி பார்ட் 2 உடன் நிறைவடைகிறது. மகாவிஷ்ணுவின் பத்து தெய்வீக அவதாரங்களை விவரிக்கும் வகையில் இந்த படைப்புகள் தயாராகி இருக்கின்றன. இந்த திரைப்படங்களின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் * மகாவதார் நரசிம்மா (2025 ) * மகாவதார் பரசுராம் (2027 ) * மகாவதார் ரகுநந்தன் (2029 ) * மகாவதார் துவாரகாதீஷ் (2031 ) * மகாவதார் கோகுல நந்தா (2033 ) * மகாவதார் கல்கி பார்ட் ஒன் (2035 ) * மகாவதார் கல்கி பார்ட் 2…
Read Moreசூரஜ் பார்தி: கடந்த 2016 முதல் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கலைப்படைப்பை (Everday) உருவாக்கி வரும் சென்னையைச் சேர்ந்த நியூயார்க் கலைஞர்!
சென்னை:வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத அசல் கலைப்படைப்பை கடந்த 3,000+ நாட்களாக சூரஜ் பார்தி உருவாக்கியுள்ளார். தொடர்ச்சியாக இதை செய்ததன் மூலம் ஒழுக்கம், ஆர்வம், பாரம்பரியம் மற்றும் பரிசோதனை ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் சாத்தியமாக்கியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் ஆரம்பித்த இந்த விஷயம் ஒரு தசாப்தம் கடந்து இப்போது அவரது கலை, தத்துவம் மற்றும் உலகளாவிய அங்கீகாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது. “இது அவுட்புட் சார்ந்தது மட்டுமல்ல! நம் இருப்பை நிலைநாட்டுவதும், மன ஒருமைப்பாடும் சேர்த்ததுதான்” என்றார். தலைசிறந்த புடவை வடிவமைப்பாளர்களின் குடும்பத்தில் பிறந்தவர் சூரஜ். நெசவாளர் சேவை மையத்தின் முன்னாள் இயக்குநராக இருந்தவர் அவரது தாத்தா என். வீரப்பன். சில நொடிகளிலேயே கடினமான ஓவியங்களையும் எளிதில் வரையக் கூடியவர். ராணி எலிசபெத், இந்திரா காந்தி மற்றும் ஜாக்குலின் கென்னடி…
Read More*’Dude’ படத்தில் நடிகை மமிதா பைஜூவின் பெயர் ‘குறள்’!!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘Dude’. இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. நடிகை மமிதா பைஜூவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் அவரது கதாபாத்திரப் பெயர் ‘குறள்’ என்பதை படக்குழு வெளியிட்டுள்ளது. யங் சென்சேஷன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த பிறகு ‘புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ போன்ற பல பிரம்மாண்டமான வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் பான் இந்தியன் படமான ‘Dude’-ல் இணைந்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். ‘பிரேமலு’ படப்புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, சீனியர் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் நடித்திருப்பது பற்றி நடிகை…
Read More