குடும்ப பின்னணியில் விவசாயத்துக்கு பெருமை சேர்க்கும் படம்.அந்த கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த போஸ் வெங்கட் தனது தாத்தா, அப்பாவை போல அல்லாமல் மகன் கதிரை பட்டணத்தில் மேற்படிப்பு படிப்பு படிக்க வைக்கிறார். அதற்காக தனது விவசாய நிலத்தில் ஒரு பகுதியை விற்கிறார். படித்து முடித்ததும் அரசாங்க வேலை. அதைத் தொடர்ந்து பணக்கார குடும்பத்தில் மணப்பெண் என்று அமைய, போஸ் வெங்கட்டின் சந்தோசம் கூடிப் போகிறது. இதன் பிறகு தான் பிரச்சனை. பங்களா வீட்டில் பிறந்து வளர்ந்த பெண்ணுக்கு கணவன் இருக்கும் பட்டணத்து வீடு சின்னதாய் தெரிய, பெரிய வீடு வாங்கினால் தான் கணவருடன் இருப்பேன் என்று கண்டிஷன் போடுகிறாள். இது தெரிந்த போஸ் வெங்கட், மகனின் சந்தோஷத்துக்காக மேலும் சில வயல் களை விற்று பணம் அனுப்புகிறார். இப்பொழுது புது வீடு அமைந்த மகிழ்ச்சியில் பேரனும்…
Read Moreஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ திரைப்படம் இம்மாதம் (ஜனவரி) 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!!
தனித்துவமான படைப்புகள் தந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான் மற்றும் லாஸ்லியா நடிப்பில், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ வரும் ஜனவரி 24 ஆம் தேதி, இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என். இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி பேசியதாவது…, இயக்குநர் அருண் இந்தக்கதையைப் பலமுறை எங்களிடம் சொல்லி, இறுதியாக முடிவு செய்து தயாரித்துள்ளோம். இப்படத்தை உருவாக்கும்போதே இந்தக்கால டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு இருப்பதுடன், குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். ஹரி பாஸ்கர், லாஸ்லியா, ரயான்…
Read More“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !!
City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது… இது எங்கள் முதல் படம். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார். மகிழ்ச்சி. சுசி சார் அவரில்லாமல் இந்தப்படம் இல்லை, மிக அட்டகாசமாகப் படத்தை எடுத்துள்ளார். இமான் சார் படத்தை முழுதாக தாங்கியிருக்கிறார். நண்பன் ஜெகவீர்…
Read Moreநடிகர் சங்கம் செய்த மாபெரும் உதவிக்கு நன்றி தெரிவித்த குழந்தைகள் அறக்கட்டளை!
HIV நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாத்து அவர்களுக்கு கல்வி மற்றும் அனைத்து உதவிகளையும் வழங்கி ஒப்பற்ற பணிகளை செய்து வருகிறது, சென்னை கொளத்தூரை சேர்ந்த “இந்தியா பாசிட்டிவ் நெட்ஒர்க் அறக்கட்டளை”. HIV நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்காக தேவைப்படும் கட்டிடம் கட்டும் பணிகளுக்காக, தென்னிந்திய நடிகர் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்னால் ௹10 லட்சம் நிதி வழங்கியது. அந்த கட்டிடம் கட்டி இப்பொழுது திறப்பு விழா காண இருக்கிறது. இது சார்பாக இன்று, அறக்கட்டளையின் தலைவி Dr.நூரி, நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களை சங்க அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். காப்பகம் கட்டிடம் கட்ட, முதல் நன்கொடையாக வழங்கிய தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும், அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அத்துடன் காப்பகத் திறப்பு விழாவிற்கும் அழைப்பு விடுத்தார்.
Read Moreசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய, “திரு மாணிக்கம்” திரைப்படம், ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது !
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, புத்தம் புதிய ப்ளாக்பஸ்டர், திரு மாணிக்கம், திரைப்படம் 24 ஜனவரி 2025 முதல், ஓடிடி தளத்தில் ப்ரீமியர் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. . ஐந்தாம் வேதம், ரகுதாதா மற்றும் டிமாண்டி காலனி போன்ற வெற்றிப் படைப்புகளைத் தொடர்ந்து, ZEE5 மீண்டும் ஒரு அற்புதமான ஃபேமிலி டிராமா திரைப்படத்துடன் ரசிகர்களை அசத்தவுள்ளது. 2024 ஆம் வருடத்தில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகப் பாராட்டப்பட்ட, “திரு மாணிக்கம்” திரைப்படத்தை, இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அனன்யா, பாரதிராஜா மற்றும் ஜசீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நல்லவனாக இருப்பதற்கே, பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டாலும், இறுதியில் நாயகனின் மனிதநேயம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதைக் காட்டும் இப்படம், ஜனவரி 24…
Read Moreஅடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது.
விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் கதைக்களத்தை, அதன் மையத்தை, நகைச்சுவை கலந்து சொல்லும் அருமையான பாடலாக இந்த டைட்டில் டிராக் உருவாகியுள்ளது. ‘ஆஃபீஸ் பாட்டு’. கேட்கும் அனைவரின் முகத்திலும் புன்னகையை வரவழைத்து, அவர்களைத் திருப்தி அடையச் செய்யும் பாடலாக அமைந்துள்ளது. பெப்பி ஜானரில் உருவாகியுள்ள இப்பாடலை ஃப்ளுட் நவீன் இசையில், முகேஷ் பாடியுள்ளார். நகைச்சுவையுடன் கூடிய கலகலப்பான இந்த சீரிஸை, கபீஸ் இயக்கியுள்ளார், ஜெகன்நாத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்ற சீரிஸான ‘ஹார்ட் பீட்’ இல் தங்கள் நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ள இருவர் இடம்பெற்றுள்ளனர். ‘ஹார்ட் பீட்’ சீரிஸில் நடித்த நடிகர்கள் குரு லக்ஷ்மண் மற்றும் சபரீஷ் இந்த சீரிஸில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்மேகா, கீர்த்திவேல், கெமி, பரந்தாமன், தமிழ்வாணி, சரித்திரன், சிவா ஆகியோருடன் அரவிந்த், “பிராங்க்ஸ்டர்”…
Read More“படம் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களை பொருத்திக் கொள்ளும் கதையாக ‘குடும்பஸ்தன்’ இருக்கும்” – நடிகர் மணிகண்டன்!
ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் பெயரும் நடிகரின் பெயர் முன்னிலையில் சேர்வது இயல்பான விஷயம். இது நடிகர் மணிகண்டணின் ஒவ்வொரு படத்திலும் நடிக்கிறது. ‘ஜெய் பீம்’, ‘குட்நைட்’ மற்றும் ‘லவ்வர்’ இந்தப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அவரது அடுத்த படமான ‘குடும்பஸ்தன்’ ஜனவரி 24, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் மணிகண்டன் கூறும்போது, “நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் இருந்தே நான் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமியின் ரசிகன். எண்டர்டெயின்மெண்ட்டில் அவர் புதிய அலையை உருவாக்கினார் என்பதில் சந்தேகம் இல்லை. ’குட்நைட்’ படத்தின் ரிலீசுக்கு முன்பே இந்த படத்தில் இணைந்து பணியாற்ற முடிவு செய்தோம். ராஜேஷ்வருக்கு பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் திறன் உள்ளது. ’குடும்பஸ்தன்’ படம் வெளியான பிறகு நிச்சயம் ராஜேஷ்வர் அனைவராலும் விரும்பப்படும் இயக்குநராக இருப்பார்” என்றார். ’குட்நைட்’ மற்றும் ‘லவ்வர்’ திரைப்படங்களில் தான்…
Read Moreமார்ச் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகும் சீயான் விக்ரமின் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னணி இயக்குநரான எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ் .ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, சி. எஸ். பாலச்சந்தர் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்…
Read MoreUK கிரியேஷன்ஸ் முதல் திரைப்படம் “ஃபேமிலி படம்” வெற்றிகரமாக OTT தளங்களில் ரிலீஸ்!
“UK கிரியேஷன்ஸ்” தயாரிப்பில் உருவான முதல் திரைப்படமான **“ஃபேமிலி படம்”**, கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டு வெறும் 28 நாட்களில் படப்பிடிப்பு நிறைவடைந்து, டிசம்பர் மாதத்தில் தியேட்டரில் வெற்றிகரமாக வெளியானது. திரையரங்குகளில் மக்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அளித்த அன்பும் ஆதரவினாலும், திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, **“ஃபேமிலி படம்”** கடந்த **ஜனவரி 15ஆம் தேதி, பொங்கல் நாளில்** பிரபல OTT தளங்களான **“AHA OTT”, “TENTKOTTA OTT”** மற்றும் **“SIMPLY SOUTH OTT”** தளங்களில் வெளியிடப்பட்டது. வெளியீட்டுக்குப் பிறகு தமிழக மக்கள், ஊடக நண்பர்கள் மற்றும் பத்திரிக்கை ஊடகங்களின் அன்பும் பாராட்டும் தொடர்ந்து கிடைத்து வருவதற்கு தயாரிப்பு நிறுவனம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. மேலும், குறுகிய காலத்திலும், சிறிய முதலீட்டிலும், வெற்றிகரமாக தயாரித்து வெளியிட உதவிய இயக்குநர், நடிகர்கள், டெக்னீசியன்கள் மற்றும்…
Read More’குடும்பஸ்தன்’ திரைப்படம் உங்களை சிரிக்க வைத்து, மனஅழுத்தத்தைக் குறைக்கும்” இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி!
’குட்நைட்’ மற்றும் ‘லவ்வர்’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர் மணிகண்டனின் அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘குடும்பஸ்தன்’ உள்ளது. இந்தப் படம் ஜனவரி 24, 2025 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் பற்றி இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி பகிர்ந்து கொண்டார். “’குடும்பஸ்தன்’ என்னுடைய சொந்த அனுபத்தில் இருந்து உருவான கதை. பின்னர், நானும் பிரசன்னா பாலச்சந்திரனும் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதத் தொடங்கினோம். கதையாக எழுதும்போதே எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் வரும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் பார்வையாளர்கள் தங்களுடன் நிச்சயம் பொருத்திப் பார்ப்பார்கள். குடும்ப வாழ்க்கை என்பது பொறுப்புடன் கூடிய ஆனந்தமான அனுபவம். இந்தக் கதையில் நம் கதாநாயகன் திருமணத்திற்குப் பிறகு சந்திக்கும் சம்பவங்களை நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்குடன் காட்டியிருக்கிறோம். நம் பக்கத்து வீட்டுப் பையன் போலவே…
Read More
