கமர்ஷியலாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்படும் தரமான படங்களைத் தயாரித்து வரும் பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் தற்போது ‘ரெளடி & கோ’ திரைப்படம் உருவாகியுள்ளது. மனம் விட்டு சிரிக்கும்படியான அட்டகாசமான டைட்டில் லுக் இன்று வெளியாகியுள்ளது. முன்பு சித்தார்த் நடித்த ஆக்ஷன் கதையான ‘டக்கர்’ படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக்- சித்தார்த் ஜோடி இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தமுறை ரொமாண்டிக் காமெடி கதையுடன் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். உணவு டெலிவரி சர்வீஸ் போல மக்களின் பிரச்சினைகளை கையாளும் கார்பரேட் ரெளடி உலகத்திற்கு ரசிகர்களை ‘ரெளடி & கோ’ அழைத்து செல்ல இருக்கிறது. சென்னையில் படமாக்கப்பட்ட இந்தக் கதை சிக்கலான சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை என இரண்டிற்கும்…
Read More“வேக் அப் டு லைவ் – சரியாக தூங்கு, சரியாக சாப்பிடு, பிரகாசமாக வாழ்” பொது உறவு நிகழ்ச்சி
வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஆவடி, சென்னை வளாகத்தில், ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புலம் சார்பில் “வேக் அப் டு லைவ் – சரியாக தூங்கு, சரியாக சாப்பிடு, பிரகாசமாக வாழ்” என்ற தலைப்பில் பொது உறவு நிகழ்ச்சி 05.11.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக டாக்டர் பிரபாகர் ராஜ், ஃபங்ஷனல் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் My Health School நிறுவனர் கலந்து கொண்டு, “ஆரோக்கியமான மனநிலைக்கான ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற தலைப்பில் ஊக்கமூட்டும் உரையாற்றினார். இந்நிகழ்ச்சி பேராசிரியர் டாக்டர் எம். சரவணன் அவர்களின் வழிகாட்டுதலில், இறுதி ஆண்டு பி.எஸ்.சி. விசுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் — பாரத் குமார், பாலமுருகன், ரஃபிக் பகி, மகேஷ் கேஷப், சித்திக் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்ட…
Read Moreதரமான படைப்புகளை வழங்குவோம் – A TELEFACTORY நிறுவனம் உறுதி;
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான A TELEFACTORY, தனது சமீபத்திய வலைத் தொடரான “Heartbeat Season 2” மூலம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் புதிய சாதனைகளை படைத்துள்ளது. பார்வையாளர்களும் விமர்சகர்களும் வழங்கிய பாராட்டுகளால், இந்த இரண்டாம் சீசன் கதையின் ஆழம், உணர்ச்சி பூர்வ வெளிப்பாடு, மற்றும் காட்சித் தரத்தில் முதல் சீசனை விட மேலும் உயர்ந்த அனுபவத்தை வழங்குகிறது. இத்தொடர் வெளியானதிலிருந்து “Heartbeat Season 2” பல்வேறு தளங்களில் டிரெண்டாகி வருகிறது. நவீன உறவுகளின் உண்மையான பிரதிபலிப்பு, திறமையான நடிப்பு, மற்றும் உன்னதமான தயாரிப்பு தரத்திற்காக பெரிதும் பாராட்டப்படுகிறது. இதன் மூலம் A TELEFACTORY, இந்தியாவின் நம்பகமான மற்றும் படைப்பாற்றல்மிக்க நிறுவனங்களில் ஒன்றாக தன் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. A TELEFACTORY நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர் திரு. ராஜ வேலு கூறியதாவது, “‘Heartbeat’க்கு…
Read Moreதளபதி விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் நவம்பர் 21 அன்று அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகிறது
தளபதி விஜய் நடித்த ‘கில்லி’, ‘சச்சின்’, ‘குஷி’ உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் விஜய்யும் சூர்யாவும் இணைந்து நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது. ‘மிருகா’, ‘மாயப்புத்தகம்’, ஜீவா, மிர்ச்சி சிவா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘கோல்மால்’ உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளரும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் எண்ணற்ற படங்களை விநியோகம் செய்தவருமான பி. வினோத் ஜெயின், ஜாகுவார் ஸ்டுடியோஸ் சார்பில் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தை அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நவம்பர் 21ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறார். இது குறித்து பேசிய அவர், “கடந்த 2001ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. தளபதி விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளம், வைகைப்புயல் வடிவேலுவின் என்றென்றும் நெஞ்சில் நிற்கும் நகைச்சுவை, இசைஞானி…
Read Moreபேஷன் ஸ்டுடியோஸ் & கோல்ட்மைன்ஸ் வழங்கும் ஓடிடியில் பெரும் வரவேற்பு பெற்ற ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படம் இயக்கிய இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கத்தில், அருள்நிதி- மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‘மை டியர் சிஸ்டர்’ அறிவிப்பும் ஃபன்னான விஷூவல் புரோமோவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது!
வெவ்வேறு ஜானர்களில் பார்வையாளர்களுக்கு நெருக்கமான தரமான கதைகளை தொடர்ந்து தயாரித்து வருகிறது பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம். குடும்ப பார்வையாளர்களுக்குப் பிடித்த வகையில் விறுவிறுப்பான, எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த மற்றும் உணர்வுப்பூர்வமாக தொடர்புபடுத்திக் கொள்ளும் பல கதைகளையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘பாசமலர்’ படத்தில் ஆரம்பித்து 1990-களில் வெளியான ‘கிழக்கு சீமையிலே’, பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘வேதாளம்’ எனப் பல படங்கள் அண்ணன்- தங்கை பாசத்தை பல தலைமுறைகளாக பேசி வருகிறது. அந்த வகையில், ‘மை டியர் சிஸ்டர்’ என்ற உணர்வுப்பூர்வமான கதையை வழங்குகிறது பேஷன் ஸ்டுடியோஸ். கோல்ட்மைன்ஸ் டெலிஃபிலிம்ஸ், மனிஷ் ஷாவுடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற தன் அறிமுக படத்திலேயே விமர்சன ரீதியாக பாராட்டுகள் பெற்ற பிரபு ஜெயராம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கதை…
Read MoreBehindwoods புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்டமாக தயாரிக்கும், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்
Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணையும் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை தென்னிந்தியாவின் சிறந்த மற்றும் வரலாற்று புகழ் பெற்ற இசை நிறுவனமான ‘லஹரி மியூசிக்’ அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது. Behindwoods Founder & CEO மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கும் மூன்வாக், இசை, நடனம் மற்றும் குடும்ப பொழுதுபோக்கின் கொண்டாட்டமாக உருவாகி வருகிறது. ஆஸ்கர் விருது பெற்ற இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இதயத்தை வருடும் இசையுடன் வெளியாகும் இந்தப் படம், ரசிகர்கள் மற்றும் திரைத் துறையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த இணைப்பைப் பற்றி பேசும் போது, *லஹரி மியூசிக் நிறுவனர் திரு. மனோஹரன் நாயுடு* கூறுகையில்: “இது எங்களின் 50வது ஆண்டு; ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை பெற்று…
Read Moreதாவூத் – திரை விமர்சனம்
தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு இடம் பெயர்ந்த தாவூத், அங்கே போதைப்பொருள் கடத்தலை செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டிலும் தனது போதை பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துகிறார். தமிழ்நாட்டில் இருந்து கடத்த இருக்கும் அவரது போதைப் பொருளை கைப்பற்றும் முயற்சியில் அர்ஜெய் தலைமையிலான காவல்துறை ஈடுபடுகிறது. அதே சமயம், தாவூத்தின் கடத்தல் பணிகளை 20 வருடங்களாக செய்து வந்த தீனாவும் அந்த சரக்கை கைப்பற்ற திட்டம் போடுகிறார். தாவூத்தின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கும் மற்றொரு தரப்பும் காவல்துறை உதவி ஆணையர் ஒருவரை கைக்குள் போட்டுக் கொண்டு அந்த சரக்கை கைப்பற்ற திட்டம் போடுகிறது. இந்த நிலையில், தாவுத்தின் சரக்கை சரியான இடத்தில் சேர்க்கும் பொறுப்பில் இருக்கும் அபிஷேக், வழக்கமான ஆட்கள் மூலம் செய்தால் இந்த தொழிலில் கரை கண்ட எதிரிகள் ஆட்டையை போட்டு விடுவார்கள் என்பதால்,…
Read Moreபழங்குடியினர் சமூகத்திற்கு 50 லட்சம் செலவில் எந்திரங்கள், உபகரணங்கள் உதவி செய்த :சீக் பவுண்டேஷன்’ !
சென்னை சீக் பவுண்டேஷன் (Seek Foundation)கோத்தகிரி மற்றும் கூடலூர் பழங்குடியினர் சமூகத்துக்கு 50 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள ஆம்புலன்ஸ், சரக்கு வாகனம் மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கியுள்ளனர்.இது பற்றிய விவரம் வருமாறு: பழங்குடியினர் சமூகங்களின் நிலையான முன்னேற்றத்தையும் நலனையும் மேம்படுத்தும் நோக்கில், ‘சீக் பவுண்டேஷன்’ என்கிற நிறுவனம், அதன் நிறுவனர் டாக்டர் விமலா பிரிட்டோ அவர்களின் தலைமையில், ஒரு ஆம்புலன்ஸ், ஒரு சரக்கு வாகனம் மற்றும் பல தையல் இயந்திரங்களை கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதிகளின் பழங்குடியினர் மக்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த விழா சென்னை செயின்ட் பிரிட்டோஸ் அகாடமி (SBA)யில் நடைபெற்றது. இதில் நீலகிரி வாழ் பழங்குடியினர் நலச் சங்கத்தின் (NAWA) செயலாளர் திரு. ஆல்வாஸ் மற்றும் ‘Seek Foundation’ தலைமை நிர்வாக அதிகாரி, திரு. தாமஸ் பொன்ராஜ், செயிண்ட் பிரிட்டோஸ் அகாடமியின் முதல்வர் திருமதி…
Read Moreகிச்சா சுதீப் நடித்த MARK படத்தின் படப்பிடிப்பு மிக பிரமாண்டமாக நிறைவு!
கிச்சா சுதீப் நடித்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் MARK திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இறுதி கட்டத்தில், 200 அடி நீளமுடைய மாபெரும் கப்பல் செட் அமைக்கப்பட்டு, அதில் நடைபெற்ற பாடல் படப்பிடிப்பில் 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் 300 ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் கலந்து கொண்டனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சும் அளவிற்கு பிரமாண்டமாக படத்தை உருவாக்க தயாரிப்பு குழு முழு மனதுடன் செயல்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்களான நவீன் சந்திரா, யோகி பாபு, குரு சோமசுந்தரம், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இதன் மூலம் MARK திரைப்படம் தனது படப்பிடிப்பை நிறைவு செய்து, தற்போது வெளியீட்டுக்காக பிந்தைய பணிகளில் இறங்கியுள்ளது.
Read Moreசெலிப்ரிட்டி பிரிமியர் காட்சியில் 30 ஆசிரம குழந்தைகளோடு பிரபலங்கள் பங்கேற்பு
திறமைவாய்ந்த இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இயங்கி வரும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் நிறுவனம் ‘புர்கா’ மற்றும் ‘லைன்மேன்’ உள்ளிட்ட பாராட்டுகளை பெற்ற படங்களைத் தொடர்ந்து ‘கிணறு’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. சூர்யா நாராயணன் மற்றும் வினோத் சேகர் தயாரிப்பில் ஹரிகுமரன் இயக்கியுள்ள ‘கிணறு’ குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகி ஆறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இப்படம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற செலிப்ரிட்டி பிரிமியர் காட்சியில் 30 ஆசிரம குழந்தைகளோடு திரைப்பிரபலங்கள் பங்கேற்று படத்தைக் கண்டு மகிழ்ந்து வாழ்த்து தெரிவித்தனர். பெகாசஸ் திரைப்பட விழா 2024, அக்கலேட் உலகளாவிய திரைப்படப் போட்டி, இண்டிஃபெஸ்ட் திரைப்பட விருதுகள் உள்ளிட்ட விழாக்களில் சிறந்த படம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்திற்கான விருதுகளை பெற்ற ‘கிணறு’, சென்னை சர்வதேச திரைப்பட விழா 2024ல் உலக…
Read More