ஸ்ரீ கணேஷ் இயக்கும் ‘சித்தார்த் 40’ திரைப்படத்தில் சென்சேஷனல் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இணைந்துள்ளார்!

சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரிப்பில் ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிக்கும் திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சித்தார்த் 40’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக அம்ரித் ராம்நாத் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது. நடிகர் சித்தார்த் தனது படங்களுக்கு புதிய இசையமைப்பாளர்களுடன் கைக்கோர்ப்பதில் ஆர்வமாக இருக்கிறார். இந்த முயற்சி அவரது முந்தைய படங்களுக்கும் சிறந்த இசையையும் பாடல்களையும் கொடுத்தது. இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அம்ரித் ராம்நாத் ஒப்பந்தமானது நிச்சயம் நல்ல பாடல்களை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ‘வசீகரா’, ‘ஒன்றா இரண்டா’ போன்ற பாடல்களில் தனது குரல் வளத்தால் நம்மை அலாதியான இசை அனுபவத்தில் திளைக்க வைத்தவரும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் உலகப்புகழ் பெற்ற பாடலைப் பாடியவருமான பின்னணிப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின்…

Read More

கதையின் மையப்புள்ளியாக மாறும் நாய்… உண்மைச் சம்பவத்தை உரக்கக் கூற வரும் ”அலங்கு”

DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS இணைந்து தயாரிக்கும் ஆக்ஷன் திரைப்படம் “அலங்கு” கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் முதல் பிரதியை பார்த்து ரசித்து உலகம் முழுவதும் வெளியிடும் உரிமைகளை வாங்கி இருக்கிறது Sakthi Film Factory.   தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடித்து , மாறுபட்ட கதைக்களம் கொண்ட பல திரைப்படங்கள் அவ்வபோது வெற்றிபெறுவது வழக்கம் , இவ்வருடமும் அதைபோல பல திரைப்படங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் “அலங்கு “ திரைப்படமும் இணையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் இத்திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார். தமிழக – கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த…

Read More

போட்டியாளர்களைத் திணறடித்த விஜய் சேதுபதி, பரபரப்பாக நகரும் பிக்பாஸ் சீசன் 8 !!

தமிழக மக்களின் உள்ளத்தை வென்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன்  பல அதிரடி திருப்பங்களுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி அதிரடியில் அசத்தி வருவது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன்  கோலாகலமாக ஆரம்பமாகி ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.  இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, ஆண், பெண் என இரண்டாகப் பிரிக்கப்பட்ட வீடு எனப் பல புதுமைகளுடன், முதல் எபிஸொடு முதலே  ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த முறை, ஹோஸ்டாக களமிறங்கிய நடிகர்  விஜய் சேதுபதி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டி, அனைத்து தரப்பினரும் ரசிக்கும்  வகையில் நிகழ்ச்சியை அருமையாகத் தொகுத்து வழங்கி வருகிறார். வார முடிவில் எந்த தயக்கமும் இல்லாமல் பிரச்சனைகளை நேரடியாக அணுகும், போட்டியாளர்களின்…

Read More

ராணுவப் பின்னணியில் உருவாகும் ‘பரிசு’ !

ராணுவத்தின் பின்னணியில் தேசபக்தியை முன்னெடுத்து உருவாகி இருக்கும் படம் பரிசு. இப்படத்தை ஸ்ரீ கலா கிரியேஷன்ஸ் சார்பில் கதை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் கலா அல்லூரி. திரைப்படக் கல்லூரியில் திரைப்பட தொழில்நுட்பம் கற்றுள்ள இவர் இயக்கும் முதல் படம் இது. படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ள.ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாகவும் கதைக்கு தேவையான அம்சங்களை அழகான வரிகள் மூலம் கொண்டு வந்துள்ளார்.K.ராஜேந்திரன் M.A.MBA.   பரிசு படம் பற்றி இயக்குநர் கலா அல்லூரி கூறும்போது,. “தந்தை ஓர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. தந்தை கூறுகிறார் நான் மற்றவர்கள் போல் உன்னை டாக்டர் ஆக வேண்டும் இன்ஜினியராக வேண்டும் என்று கனவு காணவில்லை . நீ நம் நாட்டிற்குச் சேவை செய்யும் ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் என் கனவு என்கிறார் . மரணம் எப்போது வேண்டுமானாலும்…

Read More

கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தின் மூலம் நடிகரான இயக்குனர் நவீன்.

நெல்லை சந்திப்பு, உத்ரா திரைப்படங்களை இயக்கியதோடு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முகப்பாண்டியன் அறிமுகமான சகாப்தம் திரைப்படத்தின் கதாசிரியருமான நவீன் தற்போது நடிகரா பத்தில் வெளியான கோழிப்பண்ணை செல்லத்துரை திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு காம்பினேஷனில் படம் முழுக்க வரும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   இவரது நடிப்பை பார்த்து இயக்குனர் சீனுராமசாமி நல்ல குணச்சித்திர நடிகராக வலம் வருவீர்கள் என வாழ்த்தியது மறக்க முடியாது என கூறினார். தொடர்ந்து இயக்குனர் எழில் இயக்கும் ஒரு புதிய திரைப்படத்திலும் மற்றும் வேல் குமரேசன் அவர்கள் இயக்கும் வசூல் மன்னன், ரிஷிராஜ் அவர்கள் இயக்கும் காட்டான் போன்ற திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் நவீன்.  

Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த ‘மொய் விருந்து’ உணவு பயணம்

சர்வதேச உணவு நாளை முன்னிட்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் ( Help On Hunger) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் பசித்தவர்களுக்கு ருசியான உணவை வழங்குவதற்காக ‘மொய் விருந்து’ எனும் உணவு வழங்கும் பயணத்தை ஒருங்கிணைத்தது. இதனை இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதுவரும், முன்னணி நட்சத்திர நடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.   சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் – நாள்தோறும் பசித்தவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடங்களை தேடி சென்று உணவு வழங்கி வருகிறது. இந்த வகையில் தினமும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு சேவையை மேற்கொண்டு வரும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் … உலக உணவு…

Read More

வெற்றிக் கொடி நாட்டும் ரஜினியின் ‘வேட்டையன்’ – திரையரங்குகளின் எண்ணிக்கை உயர்வு!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனின் சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘வேட்டையன்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில், புகழ்பெற்ற இயக்குனர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி உள்ள நிலையில், நாடு முழுவதும்  திரையரங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து அதிக கோரிக்கைகள் எழுந்ததால், இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான மாநிலங்களில் கூடுதல் திரைகள் சேர்க்கப்படுகின்றன. விறுவிறுப்பான கதை சொல்லல், திறமையான நட்சத்திரப் பட்டாளத்தின் நடிப்பு மற்றும் நேர்த்தியான இயக்கம் மூலம் லட்சக்கணக்கானவர்களின் இதயங்களை கைப்பற்றிய வேட்டையன், வெளியானதிலிருந்து அதிகம் பேசப்படும் படமாக மாறியுள்ளது. முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையிலான ரசிகர்களின் படையெடுப்பால் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் அதிக திரையரங்குகளை கோரியதால், அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகின்றன. ‘வேட்டையன்’…

Read More

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘#நானிஓடேலா2 ‘படத்தின் தொடக்க விழா

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா – தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி – எஸ் எல் வி சினிமாஸ் – கூட்டணியில் உருவாகும் ‘#நானிஓடேலா 2 ‘எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.   ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, ‘தசரா’ எனும் பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படத்தை தொடர்ந்து அதன் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா மற்றும் ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரியுடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இரண்டாவது முறையாக இணைகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘ #நானி ஓடேலா 2 ‘ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ‘இந்த திரைப்படம் ‘தசரா’ திரைப்படத்தை விட நூறு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும்’ என நானி அண்மையில் தெரிவித்திருந்தார். ‘தசரா’ திரைப்படம்…

Read More

குளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் “கேம் சேஞ்சர்” 10 ஜனவரி 2025 அன்று சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், குளோபல் ஸ்டார் ராம் சரண் கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில், தில் ராஜு தயாரிப்பில், தென்னிந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், கேம் சேஞ்சர் திரைப்படம், ஜனவரி 10, 2025 சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகிறது. பட வெளியீட்டை அறிவிக்கும் விதமாக, ஒரு அசத்தலான போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் ராம் சரண் ஸ்டைலிஷான லுக்கில் காட்சியளிக்கிறார், அவரது தோற்றம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் நேர்மைமிக்க ஐஏஎஸ் அதிகாரி ராம் நந்தன் எனும் கதாபாத்திரத்தில், இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நட்சத்திர நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார், நடிகை அஞ்சலி ஃப்ளாஷ்பேக் காட்சியில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், கேம் சேஞ்சர் ஒரு அற்புதமான காட்சி அனுபவமாக உருவாகியுள்ளது.…

Read More

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும், கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் – “விஸ்வம்பரா” டீசர் வெளியாகியுள்ளது !

மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி சாகசத் திரைப்படத்தில் நடித்து நீண்ட காலமாகிவிட்டது, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அவர், நம்மை புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், பிரம்மாண்டமான ஃபேண்டஸி சாகசத் திரைப்படமான, விஸ்வம்பரா படத்தில் நடித்து வருகிறார். பிம்பிசாராவின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, தனது ஆதர்ஷ நாயகனை இப்படத்தில் இயக்குகிறார் இயக்குநர் வசிஷ்டா. முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது, முன்னதாக ரசிகர்களுக்கு உறுதியளித்தபடி, தயாரிப்பாளர்கள் தசரா பண்டிகையை முன்னிட்டு, படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும் டீசர் ரசிகர்களைப் பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி உலகிற்கு அழைத்துச் செல்கிறது. இந்த டீசர் இது ஒரு மாய நிலப்பரப்பில் துவங்குகிறது. மீன் வடிவ பறவைகள் வானத்தில் பறக்க, கர்ஜிக்கும் காண்டாமிருகங்கள் அங்கு உலவுகிறது. ஒரு தீய சக்தி இந்த சாம்ராஜ்யத்தின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க…

Read More