வெற்றிமாறன் மற்றும் ஐசரி கணேஷ் இணைந்து கொடுக்கவிருக்கும் இலவச திரைக்கல்வி

வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பன்னாட்டு திரை பண்பாட்டு மையம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக மூன்றாண்டுத் திரைப்படக் கல்வியைவழங்குகிறது சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி B.Sc Film Studies (3 Years) , M.Sc. Film and culture studies (2 years), PG Diploma in Media skills (1 year) ஆகிய பாடப்பிரிவுகளின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ஏட்டுக்கல்வியுடன் செயல்முறைக்கல்வியும் சிறந்த முறையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தரும் திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ், பன்னாட்டு திரை பண்பாட்டு மையத்தின் நிறுவனத்தலைவர் இயக்குநர் திரு.வெற்றிமாறன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இன்று (03.05.2024) கையெழுத்தானது. பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையம் : தமிழகம்…

Read More

”’இங்க நான் தான் கிங்கு’ குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும்” – தம்பி ராமையா

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.   இந்நிகழ்வினில்…. எழுத்தாளர் எழிச்சூர் அரவிந்தன் பேசியதாவது… கோபுரம் பிலிம்ஸ் தயாரித்த முதல் படமான ‘வெள்ளக்கார துரை’ எழுத்தாளரும் நான் தான். 10 வருடம் கழித்து அடுத்த வெற்றிப்படமான ‘இங்க நான் தான் கிங்கு’ படத்திற்கு எழுதியுள்ளேன். அன்புசெழியன் சாரிடம் கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது, உடனே எல்லாம் ஆரம்பித்துவிட்டது. என்னுடன் இக்கதைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. மாதா, பிதா, குரு, தெய்வம்…

Read More

”டார்லிங்” படத்திற்குப் பின் நான் நடிக்கும் த்ரில்லர் “13” – ஜி.வி.பிரகாஷ்குமார்

இசையைப் போலவே தனது தேர்ந்த கதைத் தேர்வின் மூலமும் சிறந்த நடிகராக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அவரது சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அடுத்தப் படத்திற்கான டப்பிங் பணியைத் தொடங்கி இருக்கிறார் ஜிவி பிரகாஷ். மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே. விவேக் இயக்கியுள்ள திரைப்படம் ’13’. இதன் படப்பிடிப்பு 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் தொடங்கியது. இன்று (4.5.2024) 13:13 மணியளவில் ஜிவி பிரகாஷ் டப்பிங் பேசி தொடங்கி வைத்தார். படம் குறித்து இயக்குநர் விவேக் கூறியிருப்பதாவது, “‘ராட்சசன்’, ‘போர் தொழில்’ படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய…

Read More

”உண்மை சம்பவங்களைப் படமாக்குவது சவால் நிறைந்தது” – தண்டுபாளையம் இயக்குநர் டைகர் வெங்கட்

வெங்கட் மூவிஸ் சார்பில் டைகர் வெங்கட் தயாரித்து இயக்கியிருக்கும் ‘தண்டுபாளையம்’ படத்தில் வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் முதன்மை கதாபாத்திரங்களில்  நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘தண்டுபாளையம்’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் அரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ அமங்கை அரிராஜன், ஆர்.அரவிந்தராஜ், பட அதிபா்கள் என்.விஜயமுரளி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பழனிகுமார், பத்திரிகையாளர்கள் க்ரைம் செல்வராஜ், வி.எஸ்.ராமன், பாடலாசிரியர் சொற்கோ இரா.கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான டைகர் வெங்கட் பேசியதாவது ———————————————– “’தண்டுபாளையம்’ படத்தை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஏற்கனவே எடுத்திருக்கிறேன், அங்கு மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. காதல்,…

Read More

”லோகேஷ் கனகராஜ் என் மெண்டார்” – அர்ஜூன் தாஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு சாந்தகுமார் இயக்கத்தில், ரசவாதி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனக்கு ஆதரவாக, தனக்கு ஊக்கமளித்துவரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வினில் நடிகர் அர்ஜூன் தாஸ் பேசும்பொழுது…. என்னுடைய இந்தத் திரைப்பயணத்தில் நீங்கள் எனக்கு மிகப்பெரும் உந்துதலாக இருந்துள்ளீர்கள், என் குரலைக் குறிப்பிட்டு பாராட்டி, தனித்தனியாக நான் செய்த எல்லாப்பாத்திரங்களின் நிறை குறைகளை பகிர்ந்து, எனக்கு பெரும் ஊக்கமாக இருந்துள்ளீர்கள். என்…

Read More

”ஆளில்லா சிக்னலிலும் அத்துமீறாதவர் அமீர்” – இயக்குநர் சரவணசக்தி

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.. இந்தநிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்தநிகழ்வில் நாயகன் அமீர், நாயகி சாந்தினி, இயக்குநர் ஆதம்பாவா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு…

Read More

பைக் ரேஸ் கதையை தொடர்ந்து என்கவுண்டர் கதையை படமாக்கும் இயக்குநர் சதீஷ்

மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் N.ரங்கசாமி அவர்கள் “ரேசர்” பட இயக்குனரின் அடுத்த அதிரடி கேங்ஸ்டர் படப்பூஜையை தொடங்கி வைத்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ப.ராம்முனுசாமி மற்றும் பல NR.காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். மோட்டார் பைக்குகளை வைத்து வித்தியாசமான “ரேசர்” படத்தை இயக்கிய சதீஷ் என்கிற சாட்ஸ்ரெக்ஸ் ( satzrex) அடுத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி என்கவுன்டர் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து நடக்கும் கேங்ஸ்டர் கதையை இயக்குகிறார். உண்மை சம்பவத்துடன் கற்பனையும் சேர்த்து பக்கா அதிரடி ஆக்க்ஷன் கதையாக ஹாலிவுட் பாணியில் இத்திரைப்படம் உருவாகிறது. ரேசர் படத்தை தயாரித்த Hustlers Entertainment பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக்ஜெயாஸ் (Kartik Jayas) அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறார். புரொடக்க்ஷன் நம்பர் 2 ஆக உருவாகும் இப்படத்திற்கு விரைவில் டைட்டில் அறிவிக்கப்பட உள்ளது.…

Read More

அமோக வரவேற்பைப் பெறும் யுவனின் “மணி இன் தி பேங்க்” தனியிசைப் பாடல்

இசையுலகில் திரைப்பட பாடல்களுக்கு நிகராக தற்போது இன்டிபென்டென்ட் மியூசிக்கல் ஆர்டிஸ்ட்டால் உருவாக்கப்படும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பங்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடத்தில் மறைந்திருக்கும் இசை திறமையை வெளிக்கொணரும் வகையிலும், அவர்களுக்கு புத்துணர்வு அளித்து ஊக்கமளிக்கும் வகையிலும் தமிழ் திரையிசையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா, ‘மணி இன்‌ தி பேங்க்’ எனும் பெயரில் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘மணி இன் தி பேங்க்’ எனும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலில் யுவன் சங்கர் ராஜா நடித்திருப்பதுடன் பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார்.

Read More

”ஸ்ரீகாந்த் பொல்லாவின் கதையை கேட்டதும் வாழ்க்கையைப் பற்றிய புரிதல் மாறியது” – ஜோதிகா

பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குநர் துஷார் ஹிர நந்தானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஆலயா எஃப், சரத் கெல்கர், ஜமீல் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரதம் மேத்தா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் மிலிந்த், தனிஷ் பக்ஷி, சாஸெட் -பரம்பரா மற்றும் வேத் சர்மா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.‌ பார்வை திறன் சவாலுள்ள மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாறை…

Read More

”நடிப்பின் மீது இருக்கும் நம்பிக்கை, நடனத்தின் மீது இல்லை” – நடிகர் கவின்

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் பாபின், இணை தயாரிப்பாளர் தீபக், இயக்குநர் இளன், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், நாயகன் கவின், நடிகைகள் அதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன், நடிகர்கள் ‘ராஜா ராணி’ பாண்டியன், தீப்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் இளன் பேசுகையில், ‘ எனக்கு’ மிகவும் எமோஷனலான தருணம் இது. நம்…

Read More