காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தொடர்ந்து அடங்காத ப்ளாக்பஸ்டர் வெற்றிப்பாய்ச்சலுடன், மீண்டும் பாக்ஸ்ஆஃபிஸை அதிரவைக்க தயாராக உள்ளார். ‘வீரசிம்ஹாரெட்டி’ மூலம் வசூல் சாதனைகளை புரட்டி போட்ட பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி கூட்டணி, இப்போது இன்னும் பிரம்மாண்டமான வரலாற்று களத்தில் மீண்டும் இணைகிறது. இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். அழகு நாயகி நயன்தாரா, பாலகிருஷ்ணாவின் ஜோடியாக இப்படத்தில் இணைந்துள்ளார். சிம்ஹா, ஜெய் சிம்ஹ , ‘ஸ்ரீ ராம ராஜ்யம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு பாலகிருஷ்ணா – நயன்தாரா இணையும் நான்காவது படம் இதுவாகும். ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் பூஜை விழாவினைத் தொடர்ந்து, இப்படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. ஆந்திர பிரதேச அமைச்சர்கள் அனகனி சத்ய பிரசாத் மற்றும் கோட்டிப்பட்டி ரவி குமார்…
Read Moreசினிமா மேஸ்ட்ரோ ஜேம்ஸ் கேமரூன் புதுமை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் சினிமா உருவாக்கத்தை மறுவரையறை செய்திருக்கிறார்!
ஒவ்வொரு சில வருடங்களுக்கும் உலகளவில் ஒரு திரைப்படம் அதன் வெளியீட்டு தேதியை மட்டும் குறிக்காமல் திரைப்பட உருவாக்கத்திலும் புதிய மாற்றத்தைக் குறிக்கிறது. இந்தமுறை புதிய மாற்றத்தை காண டிசம்பர் 19 ஆம் தேதி தயாராகுங்கள். இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் வெளியாவது உலகளாவிய தொழில்நுட்ப நிகழ்விற்கான கவுண்ட்டவுன் போல ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ஒரு புதிய படத்துடன் வரும்போதெல்லாம் பிரம்மாண்டமான கதை சொல்லல், புதிய தொழில்நுட்பம் என சினிமா மொழியையே மாற்றி அமைக்கிறார். மற்றவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது, ஜேம்ஸ் கேமரூன் அதைக் கண்டுபிடித்தார். ’தி டெர்மினேட்டர்’ மற்றும் ’ஏலியன்ஸி’ன் ஆரம்ப நாட்களிலிருந்தே, ஜேம்ஸ் கேமரூனுக்கு அறிவியலில் அதீத ஆர்வம் இருந்தது. புதிய உலகங்களை கற்பனை செய்வதில் அவர் திருப்தியடையவில்லை, அவற்றை உருவாக்கும் இயந்திரங்களை அவர் விரும்பினார்.…
Read Moreஉளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ படத்தின் புதிய டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிலிக்ஸ்!
மும்பை, 26 நவம்பர், 2025:நிஜ உலகின் யதார்த்தம் பெரும்பாலும் புனைகதைகளை விட அந்நியமாக இருக்கும். அந்தவகையில், குற்ற உணர்வு மற்றும் அப்பாவித்தனம் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைக்கும் அனைத்தையும் ஸ்டீபன் கேள்வி கேட்கத் துணிகிறார். வெளியாக இருக்கும் தமிழ் உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் இன்று வெளியிட்டது. ஒரு மனிதன் ஒரு காவல் நிலையத்திற்குள் நுழைந்து கொலை செய்ததாக ஒப்புக்கொள்வதில் இருந்து டிரைய்லர் தொடங்குகிறது. நீங்கள் எதை யூகிக்கிறீர்களோ நிச்சயம் அது கதையில் பிரதிபலிக்காது. கதையின் தீவிரத்தை இசை மேலும் அதிகமாக்கும். அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கத்தில், கோமதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்டீபன்’ கதை குற்ற உணர்வு, ஒழுக்கம், சரி மற்றும் தவறுக்கு இடையிலான மெல்லிய இடைவெளியை ஆராயும் த்ரில்லர் கதை. இந்த ஆண்டு நெட்ஃபிலிக்ஸின் துணிச்சலான,…
Read Moreஆக்காட்டி – IFFI 2025 இல் ‘சிறந்த திரைப்பட அடையாள விருது’ வென்ற தமிழ் படம்
56வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில் WAVES Film Bazaar பிரிவின் கீழ் “சிறந்த திரைப்பட அடையாள விருதை ஆக்காட்டி திரைப்படம் பெற்றுள்ளது.” படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குநர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்றனர். தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சமூதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்கிறது. ஆக்காட்டி முதல் படமான இயக்குநர் ஜெய் லட்சுமி, நாளைய இயக்குனர் – சீசன் 6 போட்டியில் பங்கேற்று, அதில் அடாப்ட் செய்யப்பட்ட குறும்பட திரைக்கதைக்கான இறுதிப்போட்டி விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு தொடர்ச்சி மலையில் நடிப்பின்…
Read More‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங்கில் புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கின்றனர்!
இந்த ஆண்டில் உலக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங்கில் புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர்! இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் புகழ்பெற்ற அறிவியல் புனைகதை சீரிஸின் மூன்றாவது பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பட வெளியீட்டிற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான (1.2 + மில்லியன் ) இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர். புக் மை ஷோவில் இந்த டிக்கெட் முன்பதிவு ஆர்வம் ‘அவதார்’ படத்தின் மீது இந்தியர்களின் எதிர்பார்ப்பை இன்னும் வலுவாக்கியுள்ளது.…
Read Moreஇயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நெல்சன் இருவரும் பாரத்தின் ‘நிஞ்சா’ பட டைட்டிலை வெளியிட்டனர்!
நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ். இவர் தயாரித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் உலக பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்றதோடு தேசிய விருதும் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘சூப்பர்ஹீரோ’ மற்றும் ‘நிஞ்சா’ ஆகிய படங்கள் தயாரிப்பில் பிஸியாக உள்ளார். நடிகர்கள், படக்குழுவினர், நலன் விரும்பிகள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் இன்று காலை (24 நவம்பர், 2025) படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர்கள் நெல்சன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் ‘சூப்பர்ஹீரோ’ பட டைட்டிலையும், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் ’நிஞ்சா’ பட டைட்டிலையும் வெளியிட்டனர். ’சூப்பர்ஹீரோ’ படத்தில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் தேஜு அஸ்வினி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க,…
Read Moreசினிமா பேக்டரி மாணவியின் ‘தி லாஸ்ட் பேக்கப்’ – AI Film Festival Award சாதனை
சினிமா பேக்டரி அகாடமியில் படிக்கும் மாணவி ஸ்ரீ ரிதன்யா இயக்கிய ஏஐ குறும்படம் ‘தி லாஸ்ட் பேக்கப்’ கோவா சர்வதேச திரைப்பட விழாவில் உலகளாவிய பிரிவில் தேர்வாகி, மேலும் வரலாற்றுச் சாதனையாக முதல் AI Film Festival Award–ஐ வென்று பெருமை சேர்த்துள்ளது. இந்த சிறப்பு விருதை ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் சேகர் கபூர் நேரடியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உருவான ஏஐ குறும்படம் ஒரு சர்வதேச மேடையில் இப்படியாக அங்கீகாரம் பெறுவது அரிதான சாதனை. சினிமா பேக்டரி அகாடமி சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் ‘தி லாஸ்ட் பேக்கப் முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவி ஸ்ரீ ரிதன்யா படம் இயக்கி உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படம் 3030ஆம் ஆண்டின் எதிர்கால சென்னை நகரத்தை மையமாகக் கொண்ட…
Read Moreகோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட அனுபமா பரமேஸ்வரனின் ‘லாக்டவுன் ‘ திரைப்படத்திற்கு குவியும் வாழ்த்துகள்
லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஷ்கரன் தயாரிப்பில், ஜி கே எம் தமிழ்குமரன் தலைமையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாக் டவுன்’ திரைப்படம் – கோவாவில் நடைபெறும் 56 வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு சர்வதேச திரை ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தென்னிந்திய சினிமாவில் கோலோச்சும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் “லாக்டவுன்” திரைப்படத்தை தயாரித்து வழங்கவுள்ளது. அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாக் டவுன்’ திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பாளராக சாபு ஜோசப், இசையமைப்பாளராக…
Read Moreவிஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் இணையும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணையும், பூரி கனெக்ட்ஸ் (Puri Connects), JB Motion Pictures தயாரிப்பில் உருவாகும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!! பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள #PuriSethupathi படத்தின் முழு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது. அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம், தனது இறுதி நாள் படப்பிடிப்பை எட்டிய நிலையில், பூரி ஜெகன்னாத் – விஜய் சேதுபதி – சார்மி கௌர் ஆகியோர் பகிர்ந்த, மகிழ்ச்சியும், உணர்ச்சியும் நிறைந்த வீடியோவை வெளியிட்டு, இந்த சிறப்பு தருணத்தை படக்குழு கொண்டாடியுள்ளனர். வீடியோவில் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத்…
Read Moreஆஸ்கர் விருது பெற்ற இசையமைபாளர் மரகதமணி, ஹிந்தி நடிகர் அனுபம் கேர் , இ.வி.கணேஷ்பாபு வின் ஆநிரை குறும்படத்தைப்பார்த்து கோவா திரைப்பட விழாவில் பாராட்டு
இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்தியன் பனோரமா பிரிவில் அதிகாரபூர்வமாக (Official) தேர்வுசெய்யப்பட்டு முதல் நாள் திரையிடலாக இ.வி.கணேஷ்பாபு இயக்கிய *ஆநிரை* குறும்படம் கோவாவில் அரங்கம் நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது. முன்னதாக இ.வி.கணேஷ்பாபுக்குசிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபற்றி இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது. ஒவ்வொரு சினிமா கலைஞனும் வாழ்வில் ஒருமுறையாவது. இந்திய சர்வதேச திரைப்பட விழா.கோவாவில் பங்கேற்க வேண்டும். அரிதான பல படைப்புகளும், தரவுகளும், சர்வதேச சினிமா வியாபாரத்துக்கான வாய்ப்புகளும், பொக்கிஷங்களாக கொட்டிக்கிடக்கிறது இங்கே. அப்படிப்பட்ட இடத்தில் எனது படம் தேர்வு செய்யப்பட்ட இந்த தருணம் என் வாழ்வில் அற்புதமான தருணம். இரவு பகலாக உழைத்த எனது பட்குழுவுக்கு நன்றி. ஹிந்தி திரைப்பட இயக்குனரும், நடிகருமான அனுபம் கேர் அவர்கள் முதல் வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்து, படத்தின் பலகாட்சிகளிலும் கைதட்டி உற்சாகப்படுத்தினார். இந்திய சினிமாவின் ஆன்மாவை…
Read More