செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளார். கதையில் களத்தையும் கதாப்பாத்திரங்களையும் பிரதிபலிக்கும் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக…
Read Moreஎட்டு தோட்டாக்கள், ஜீவி புகழ் நடிகர் வெற்றியின் “பிளாக் கோல்டு” திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது..!!
MM ஸ்டுடியோஸ் சார்பில் M.மூர்த்தி வழங்கும், “தீர்ப்புகள் விற்கப்படும்” புகழ் தீரன் அருண்குமார் இயக்கத்தில், நடிகர் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, A.வெங்கடேஷ், அருள் D சங்கர், விஜய் டிவி ராமர் உள்ளிட்டோர் நடிக்க, பரபரப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் First லுக் வெளியானது. First லுக்கில் ஒரு படித்த யதார்த்த இளைஞன் போல இருக்கும் நடிகர் வெற்றி, ஆக்ரோசமாக, ரத்தம் தெறிக்க ஒரு எதிரியை வாட்டர் பம்ப் பிளேயர் ரிங்கால் அடித்து வீழ்த்துவதுபோல் உள்ளது. நடிகர் வெற்றியின் ஆக்ரோசமான முகமும், பின்னணியில் கதவு திறந்த நிலையில் இருக்கும் சரக்கு கண்டைனரும் காட்சியின் வீரியத்தை காட்டுகிறது. இந்த First லுக் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. ஒரு படித்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன்…
Read More“கேப்டன் பிரபாகரன் எனக்கு கொடுத்த வெற்றியால் அடுத்த பத்து வருடத்திற்கு எனக்கு வாய்ப்புகள் குவிந்தன” ; ரம்யா கிருஷ்ணன் ஓபன் டாக்
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது இந்த படம். ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார் இந்தப்படம் வெளியாவதை முன்னிட்டு நேற்று மாலை இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வசனகர்த்தா…
Read More“தி பாரடைஸ்” படத்திலிருந்து நேச்சுரல் ஸ்டார் நானியின் ஜடால் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது
‘தி பாரடைஸ்’ படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நானி வித்தியாசமான தோற்றத்தில், இதுவரை தோன்றாத மாறுபட்ட ஒரு வேடத்தில் நடிக்கிறார். அடர்த்தியான மீசை மற்றும் தாடியுடன், இரண்டு ஜடை முடிகள் தொங்க அவரின் தோற்றம் மிரட்டலாக உள்ளது. இந்தக் கதாபாத்திரத்தின் பெயர் ‘ஜடால்’ – தனித்துவமான தோற்றம் கொண்ட ஒரு தனித்துவமான பெயராக அமைந்துள்ளது. இந்த தோற்றத்தை அறிமுகப்படுத்தி, தயாரிப்பாளர்கள் ‘மாறுபட்ட சிகையலங்காரமாகத் துவங்கி ஒரு புரட்சிகரமான லுக்காக முடிந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். தசரா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு திறமை மிகு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கியிருக்கும் #TheParadise, இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். ‘ரா ஸ்டேட்மென்ட்’ க்ளிம்ப்ஸ் வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நானியின் ஃபர்ஸ்ட்…
Read Moreகாத்து வாக்குல ஒரு காதல் -திரை விமர்சனம்
காதல் படம். அதை வெட்டு குத்து கத்தி வகையறாக்களுடன் சொல்லி இருக்கிறார்கள். மாஸ் ரவியும், நாயகி லட்சுமி பிரியாவும் உருகி உருகி காதலிக்கிறார்கள். இந்நிலையில், நாயகன் மாஸ் ரவி திடீரென்று காணாமல் போய் விடுகிறார். அவரைத் தேடி அலைகிறார் நாயகி. மாஸ் ரவியை மீண்டும் லட்சுமி பிரியா பார்க்கும்போது அவர் ஒரு மாஸ் ரவுடியாக இருக்கிறார். காதலியைத் தெரியாதவர் போல் கடந்து போகிறார். நாயகனின் இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னணி என்ன? நாயகியின் காதல் என்னவானது? கேள்விகளுக்கான விடை, எதிர்பாராத கிளைமாக்ஸ். நாயகனாக நடித்திருக்கும் மாஸ் ரவி, உருகி வழியும் காதலன், அடிதடிக்கு அஞ்சாத காதகன் என இரண்டு மாறுபட்ட நிலைகளிலும் நடிப்பில் தனித்தனி கொடியேற்றி இருக்கிறார். படத்தை இயக்கியவரும் இவர் தான். இயக்கத்தில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. ஆனால் நடிப்பில் தேர்ந்த அனுபவம் தெரிகிறது.…
Read Moreரியல் ஸ்டார்” உபேந்திராவின் (Real Star Upendra’s) பான்-இந்தியா திரைப்படம் “நெக்ஸ்ட் லெவல்” (Next Level) – பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது!!
பல மொழிகளில் ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கும், ரியல் ஸ்டார் உபேந்திரா, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பான்-இந்தியா திரைப்படமான “நெக்ஸ்ட் லெவல்” மூலம், வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார். சுவாரஸ்யமான கதை சொல்லல் மற்றும் அதிநவீன விஷுவல் (VFX) ஆகியவற்றுடன், தனித்துவமான திரை அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் நாயகியாக, பல மொழிகளில் சிறப்பாக நடித்துப் புகழ்பெற்ற நடிகை மலாஶ்ரீயின் (Malashree) மகள் ஆராதனா (Aradhana) நடிக்கிறார். பன்முக திறமையாளர் தர்ஷன் (Darshan) உடன் கடேரா ( Kaatera ) படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் இதயங்களை வென்ற ஆராதனா, தற்போது தன் இரண்டாவது படத்தில், இன்னொரு கன்னட சூப்பர் ஸ்டாரான உபேந்திராவுடன் திரையை பகிர இருக்கிறார். தருண் ஸ்டுடியோஸ் (Tarun Studios ) நிறுவனத்தின் சார்பில் தருண் சிவப்பா (Tarun Shivappa) தயாரிக்கும் இப்படத்தை, பிரபல இயக்குநர் அரவிந்த் கௌஷிக்…
Read Moreஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் நடிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ‘புல்லட்’ அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் விறுவிறு டீசரை விஷால், எஸ் ஜே சூர்யா, பிருத்விராஜ், ஜி வி பிரகாஷ் வெளியிட்டனர்
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன், அருள்நிதி நடித்த ‘டைரி’ வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்குநர் இன்னாசி பாண்டியன் உடன் மீண்டும் இணைந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘புல்லட்’ படத்தை தயாரித்துள்ளார். விறுவிறுப்பான அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் இத்திரைப்படம் தயாராகி உள்ளது. ‘புல்லட்’ படத்தின் தமிழ் டீசரை நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா, பிருத்விராஜ் மற்றும் ஜி வி பிரகாஷ் குமார் இன்று வெளியிட்டனர், தெலுங்கு டீசரை நாக சைதன்யா வெளியிட்டார். படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் டீசர் உருவாகியுள்ளதாக படக்குழுவினரை அவர்கள் பாராட்டினர். எண்பதுகள் மற்றும் 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக விளங்கிய டிஸ்கோ சாந்தி…
Read Moreகாந்தாரா திரைப்படத்திலிருந்து ருக்மணி வசந்தின் ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக்கை ஹோம்பாலே பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது !!
வரமஹாலக்ஷ்மி திருவிழாவின் இந்த புண்ணிய நாளில், ஹோம்பாலே பிலிம்ஸ், ருக்மிணி வசந்தை ‘கனகவதி’ (Kanakavathi) எனும் கதாபாத்திரமாக, காந்தாரா அத்தியாயம் 1 படத்திலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 2 அக்டோபர் 2025 அன்று வெளியாகிறது. இந்திய கலாச்சாரத்தில் புனிதமும் பண்பாட்டு முக்கியத்துவமும் கொண்ட வரமஹாலக்ஷ்மி திருநாளில், வரவிருக்கும் மாபெரும் திரைப்படமான “காந்தாரா அத்தியாயம் 1” இன் நாயகியாக நடிக்கும் நடிகை ருக்மிணி வசந்தின் ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, ஹோம்பாலே பிலிம்ஸ் பெருமையுடன் வெளியிட்டுள்ளது. இப்படத்தை எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. நம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கதைக்களத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி, மக்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த “காந்தாரா” படத்தின் முன்கதையைச் சொல்லும் (Prequel) படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இவ்வருடத்தின் தொடக்கத்தில், நாயகன் ரிஷப் ஷெட்டியின் கதாப்பாத்திர ஃபர்ஸ்ட்…
Read Moreஉதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ வெற்றி நடை போடுவதை முன்னிட்டு காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ கடந்த வாரம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதல் நேர்மறை விமர்சனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாராட்டு, மற்றும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் ‘அக்யூஸ்ட்’, திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இதன் காரணமாக, காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தயாரிப்பாளர்கள் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம் மற்றும் எம். தங்கவேல் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா மற்றும் கர்நாடகாவிலும் ‘அக்யூஸ்ட்’ வசூல் சிறப்பாக அமைந்துள்ளதால்…
Read Moreஇயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது
விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் இருந்து ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. தந்தை-மகன் உறவை அடிப்படையாக வைத்து மியூசிக்கல் காமெடியாக உருவான இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் ஜூலை 4 அன்று வெளியானது. மிர்ச்சி சிவா முன்னணி கதாநாயகனாக நடித்திருக்க அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, குழந்தை நட்சத்திரம் மிதுல் ரயான், பாலாஜி சக்திவேல், விஜய் யேசுதாஸ், அஜூ வர்கீஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். ‘பறந்து போ’ படத்தை இயக்குநர் ராம் எழுதி இயக்கி இருக்க, என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். வி.எஸ். மதி படத்தொகுப்பு செய்திருக்க, படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை சந்தோஷ் தயாநிதி கவனித்தார். தந்தை மகன் உறவை அடிப்படையாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தை ‘வாழ்வின் சிறு, சிறு தருணங்களில்தான் எதிர்பாராத…
Read More