ரஜினிகாந்த் சாருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. ‘கூலி’ மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்: ஹைதராபாத்தில் நடந்த ப்ரீ-ரிலீஸ் விழாவில் கிங் நாகார்ஜுனா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள மாபெரும் பான் இந்தியா ஆக்சன் திரைப்படம் ‘கூலி’. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். கிங் நாகார்ஜுனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அமீர் கான், சத்யராஜ், சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. இந்த திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் ஆகஸ்ட் 14 அன்று டி. சுரேஷ் பாபு, தில் ராஜு, சுனில் நரங், பாரத் நரங் ஆகியோருக்கு சொந்தமான ஏசியன் மல்டிபிளெக்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி, படக்குழுவினர் பிரம்மாண்டமான ப்ரீ-ரிலீஸ் விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். **கிங் நாகார்ஜுனா:** “‘நின்னேபெல்லாடத்தா’ படத்திற்குப் பிறகு, ‘அன்னமய்யா’…

Read More

பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகரின் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, ஃபேண்டஸி, ஃபேமிலி எண்டர்டெயினர் ஜானரில், எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கில் சார்லி சாப்ளின் மேக்கப்பில் கோபி அமர்ந்திருக்க, அருகே வாய் கட்டப்பட்ட நிலையில் இன்னொரு சார்லி சாப்ளினாக நியாய தராசு ஏந்தி நிற்கிறார் சுதாகர். தராசில் ஒரு புறம் காந்தியின் புகழ் பெற்ற மேற்கோளை பிரதிபலிக்கும், கண்களை மூடிய குரங்கு பொம்மையும், காதை மூடிய குரங்கு பொம்மையும் இருக்க, இன்னொரு புறம் வாயை மூடிய குரங்கு உள்ளது. கோபியின் கையில், அரிச்சந்திரன் எழுதிய பொய் சொல்வது எப்படி என்கிற புத்தகம் உள்ளது. பல நுணுக்கமான விசயங்களுடன், பார்த்தவுடன் ஆச்சரியப்பட வைக்கும், யோசிக்க வைக்கும், புதுமையான இந்த…

Read More

மீஷா – திரை விமர்சனம்

சாதிய பாகுபாடு மூலம் மக்களை பிளவுபடுத்தி அரசியல் கட்சிகள் எப்படி ஆதாயம் தேடிக் கொள்கிறது என்பதை இரண்டு நண்பர்களை மையமாக கொண்டு சொல்லி இருக்கிறார்கள். வெவ்வேறு சாதியை சேர்ந்த கதிர் மற்றும் ஹக்கிம் ஷா பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்கள். கல்லூரி பருவத்தில் அரசியல் கட்சி ஒன்றில் தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த கட்சியோ மக்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகளை தடுத்து, அதன் மூலம் ஆதாயம் தேடுவதை அறிந்து கொள்ளும் கதிர், கட்சியை எதிர்த்து மக்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார். இது கட்சிக்கு பொறுக்குமா? கதிரை வீழ்த்த கட்சி விரிக்கும் சதி வலையில், அவனது இரண்டு நண்பர்கள் சிக்கிக்கொள்ள, அதன் மூலம் நண்பர்கள் வாழ்க்கை என்னவானது? கதிர் என்னவாகிறான்? என்பதை இதயம் தடதடக்கும் வகையில் சொல்லி இருக்கிறார்கள். கதிருக்கு மலையாள சினிமாவில் இது…

Read More

சென்னை பைல்ஸ் முதல் பக்கம் – திரை விமர்சனம்

நகரத்தில் ஒரே ஸ்டைலில் நடக்கும் தொடர் கொலைகள் பொதுமக்களை அதிர்ச்சிக் குள்ளாக்குகிறது. இந்த கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் பொறுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவுக்கு வந்து சேர்கிறது. இது விஷயத்தில் அவருக்கு துப்பறிய உதவுகிறார் வெற்றி. இவர் யாரென்றால் காலஞ்சென்ற பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ஒருவரின் மகன். இவரது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை பிரசுரிக்க விரும்பிய ஒரு பத்திரிகை, இவரை சென்னையில் உள்ள தனது பத்திரிகை அலுவலகத்திற்கு அழைக்க… வந்த வேலை முடிந்து கிளம்பும்போது, இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த தொடர் கொலை விஷயத்தில் தம்பி ராமையாவுக்கு வெற்றி சில ஆலோசனைகளை சொல்லப் போக… அத்தனையும் சரியாக இருப்ப தோடு கொலைகாரனை நெருங்கவும் உதவுகிறது. கொலையாளியை கண்டு பிடித்தார்களா? தொடர் கொலைகளுக்கான நோக்கம் என்ன? என்பது மீதிக் கதை. நாயகனாக…

Read More

அக்யூஸ்ட் – திரை விமர்சனம்

சென்னை புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்துக்கு கொலை வழக்கில் கைதான கணக்கு (உதயா) என்கிற கைதியை போலீஸ் வேனில் அழைத்துப் போகிறார்கள். அவனை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் போலீசாரில் வேந்தனும் ஒருவன். இந்த பயணத்தில் கணக்கை கொல்ல ஒரு ரவுடி கூட்டம் துரத்துகிறது. இன்னொரு பக்கம் உயர் போலீஸ் அதிகாரி தரப்பிலும் சேலம் போவதற்குள் கணக்கின் கணக்கை முடிக்க உத்தரவிடுகிறார். இருதரப்பு கொலை முயற்சியில் இருந்தும் கணக்கு தப்பினானா…யார் இந்த கணக்கு? என்ற கேள்விக்கு பரபரப்பும் விறுவிறுப்பும் இணைந்த திரைக்கதை பதில் தருகிறது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட விசாரணைக் கைதியின் கடந்த காலத்தை, அவ்வப்போது பிளாஷ்பேக் மூலம் சொல்லும் திரைக்கதை உத்தியே அடுத்தடுத்த காட்சிகளை சுவாரசியமாக்கி விடுகிறது. கணக்கு என்கிற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் உதயா, கலகலப்பும் துறுதுறுப்புமாக படம் முழுக்க வருகிறார். காதல் காட்சிகளில் ஒரு வெள்ளந்தியான…

Read More

படைப்பு கருவாவது முதல் உருவாவது வரையும் அதை தாண்டியும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் உரிமைதாரர்களின் நலனை காப்பதே ஐபி கிளைம்ப் சேவையின் நோக்கம்

அதி நவீன தொழில்நுட்பம் மூலம் திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் பெரும் மாற்றத்தையும் வருவாய் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்ட ஃபிப்செயின் டெக்னாலஜி (Fipchain Technology) நிறுவனம், தனது புரொடியூசர் பஜார் (ProducerBazaar.com) சேவையின் மூலம் இந்திய திரையுலகில் உள்ளடக்க வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து தனது சேவைகளை விரிவுப்படுத்தும் ஃபிப்செயின் டெக்னாலஜி, ஐபி கிளைம்ப் (IP Climb) எனும் புதிய சேவையை தொடங்கி உள்ளது. படைப்புகள் மற்றும் உள்ளடக்கத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ள இன்றைய காலகட்டத்தில் இதில் உள்ள இடைவெளியை நிரப்பும் நோக்கில் ஐபி கிளைம்ப் தொடங்கப்பட்டுள்ளது. திரைப்பட மற்றும் ஊடக அறிவுசார் சொத்துகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து வகை சட்ட உதவிகளையும் வழங்கும் ஐபி கிளைம்ப், படைப்பு கருவாவது முதல் உருவாவது வரையும் அதை தாண்டியும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் உரிமைதாரர்களின் நலனை…

Read More

போகி – திரை விமர்சனம்

போகி பண்டிகையின் போது தேவையில்லாத வற்றை கொளுத்துவார்கள். இந்த போகி எதை கொளுத்துகிறது என்று பார்க்கலாமா… இந்தியாவை உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மறைத்து வைக்கப்படும் கேமராவின் மூலமாக பெண்களின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்து ஆபாச தளங்களில் வெளியிட்டு கோடிகளில் சம்பாதிக்கிறது மலேஷியாவை சேர்ந்த ஒரு கூட்டம். இன்னும் சிலர் மர்மான முறையில் கொல்லப்படுகின்றனர். இந்த இரண்டு வழக்குகளையும் தீவிரமாகக் கண்காணிக்கிறது காவல்துறை. இந்தப் பிரச்சனையில் நாயகன் நபி நந்தி எப்படி உள்ளே வருகிறார் என்பது சுவாரசியத்துக்கு குறைவில்லாத திரைக் களம். படத்தின் நாயகி லப்பர் பந்து ஸ்வாசிகா இரண்டாம் பாதியில் தான் வருகிறார். ப்ளஸ்-2 வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றவர் மருத்துவக் கல்லூரியில் நடக்கும் அக்கிரமத்தை தட்டிக் கேட்கும் வரை ‘நாங்கல்லாம் அப்பவே இப்படித்தான்’ என்று சொல்லும்…

Read More

சரண்டர் – திரை விமர்சனம்

  தேர்தல் போன்ற முக்கியமான காலகட்டங்களில் துப்பாக்கி வைத்திருப்போர் தங்கள் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் சரண்டர் செய்ய வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் ஒரு காவல் நிலையத்தில் தனது துப்பாக்கியை சரண்டர் செய்கிறார். அந்த துப்பாக்கி காணாமல் போகிறது. தேர்தல் முடிந்ததும் அந்த துப்பாக்கியை மன்சூர் அலிகானிடம் ஒப்படைக்க வேண்டும். அதனால் அதற்குப் பொறுப்பாக இருந்த தலைமைக் காவலர் லால் சிக்கலில் மாட்டுகிறார். அதேநேரம், தேர்தல் பட்டு வாடாவிற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த ஒரு அரசியல்வாதியின் பத்து கோடி ரூபாய் காணாமல் போகிறது. அதிலும் காவல்துறை சம்பந்தப்பட்டிருக்கிறது. துப்பாக்கியைத் தொலைத்த லால் நிலை என்ன? தொலைந்த 10 கோடி ரூபாய் பணத்தின் நிலை என்ன? இரண்டு கேள்விகளுக்கும் பரபரப்பான திரைக்கதை விடை தருகிறது. நாயகனாக பயிற்சி உதவி ஆய்வாளர் வேடத்தில்…

Read More

உசுரே – திரை விமர்சனம்

உசுரே -திரை விமர்சனம் காதலை புதிய கோணத்தில் சொல்லி இருக்கும் படம். எதிர் வீட்டில் புதிதாக குடி வரும் ஜனனி மீது காதலாகிறார் டிஜே அருணாசலம். ஜனனியோ இந்த காதலை கண்டு கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் டிஜேவின் இந்த ஒரு தலைக் காதல் ஜனனி அம்மாவிடமிருந்து செருப்படியும் வாங்கித் தருகிறது. உண்மைக் காதலுக்கு செருப்படி கூட வெகுமானம் தான் என்று எண்ணும் வரிசையில் நமது காதலனும் இருக்க… தொடர்ந்து தனது காதல் முயற்சியை தொடர்கிறார். ஒரு கட்டத்தில் நாயகனின் இந்த விடாப்பிடியான காதலுக்கு ஓகே சொல்கிறார் ஜனனி. ஆனால் நாயகனை சந்திக்கும் போது , நான் சிறுவயதாக இருக்கும் போது அப்பா எங்களை விட்டு போய்விட்டார். அம்மா தான் என்னை கஷ்டப்பட்டு வளர்த்தார். அம்மாவுக்கு பணம் தான் எல்லாமே.ஒரு பத்து லட்ச ரூபாய் ரெடி பண்ணி அம்மா…

Read More

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்’ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) படக் குழுவினர் வாழ்த்து தெரிவித்து, அப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ‘ கிராண்ட் ஃபாதர்’ ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து…

Read More