ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சித்தார்த் சந்திரசேகர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பலே பாண்டியா’. விஷ்ணு விஷால் மற்றும் பியா பாஜ்பாய் முதன்மை வேடங்களில் நடித்த இப்படத்திற்கு தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருந்தார். ‘பலே பாண்டியா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஹேப்பி’ பாடல் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகி 10 லட்சம் பார்வைகளை கடந்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. கவிஞர் வாலி எழுதிய இப்பாடலை 20 பிரபல பாடகர்கள் பாடியதோடு திரையிலும் தோன்றி இருந்தனர். ஹரிசரண், தேவன் ஏகாம்பரம், நரேஷ் ஐயர், நவீன் மாதவ், பரவை முனியம்மா, மலேசியா வாசுதேவன், ரஞ்சித், ஆலாப் ராஜு, ரகீப் ஆலம், அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீனிவாஸ், வேல்முருகன், மாணிக்க விநாயகம், முகேஷ், மால்குடி சுபா, திவ்யா, அனிதா, சுசித்ரா, விஜய் யேசுதாஸ்,…
Read More‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் ‘பெத்தி'( Peddi) படத்திற்காக மாற்றியமைத்து கொண்ட உடலமைப்பு தோற்ற புகைப்படம் வெளியீடு!!
”குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடித்து வரும் ‘பெத்தி’ ( Peddi) படத்திற்காக நாளை முதல் தொடங்கும் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நம்ப முடியாத வகையில் அவரது தோற்றமும், ஒப்பனையும் மாற்றி அமைத்துக் கொண்டு தோன்றும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘குளோபல் ஸ்டார் ‘ராம்சரண் தற்போது நடித்து வரும் இலட்சிய படமான ‘பெத்தி’ ( Peddi) திரைப்படத்திற்காக ஒப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த திரைப்படம்- இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் வீடியோ கிளிம்ப்ஸ் நாடு…
Read Moreஅதிரடி மாற்றங்களுடன் கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !!
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வந்துவிட்டது. இந்த முறை அதிபயங்கர டிவிஸ்ட், வேற லெவல் சர்ப்ரைஸ், என பல புதுமைகளுடன் அசத்த வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் 11. தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து, அவர்கள் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியிருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர். பல இளம் திறமையாளர்களின் வாழ்வின் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, இந்த முறையும் பல அதிரடி புதுமைகளுடன் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர். சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்…
Read Moreதிரு.கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ இசை ஆல்பம் !!
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ இசை ஆல்பம் பாடலை திரு. கமல்ஹாசன் பாராட்டியதுடன் அக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இன்றைய இளம் தலைமுறையினரிடையே இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்கள் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. சமீபத்தில் தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார் இசையில், இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் எழுத்தில் வெளியான, ‘ச்சீ ப்பா தூ…’ பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்பாடலின் வீடியோ ஆல்பத்தை பார்த்த திரு. கமல்ஹாசன் பாடலினால் கவரப்பட்டு, அக்குழுவினரை அழைத்து பாராட்டியதுடன், அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். திரு. கமல்ஹாசனின் பாராட்டினால் இக்குழுவினர் பெரும்…
Read Moreபத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் மதிப்புக்குரிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது
பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவையில் அளித்த அபூர்வமான பங்களிப்புகளுக்காக, “பேட்மேன்” என அனைவரும் அன்புடன் அழைக்கும் பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. மாநிலங்களின் புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதாரத்தை மாற்றியமைத்த அவர், உலகளவில் பெண்களின் நலனுக்காக போராடும் இயக்கங்களுக்கு தூண்டுதல் அளித்துள்ளார். உலகிலேயே மிகவும் தாக்கம் செலுத்தும் 100 பேரில் ஒருவராக, Time பத்திரிகை அவரை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. அவருடைய வாழ்க்கை கதை அடிப்படையாக கொண்டு, தேசிய விருதுபெற்ற ஹிந்தி திரைப்படமான “Padman” உருவானது. அக் கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடித்தார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் மாதவிடாய் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும், ஆஸ்கார் விருது வென்ற “Period. End of Sentence.” ஆவணப்படம்…
Read Moreசென்னை ஃபைல்ஸ் – முதல்பக்கம் படத்தின் இசை வெளியீட்டு விழா!!
அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கிறார். சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பாளராக இருக்கும் இந்த திரைப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. ஆகஸ்ட் 1ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான மகேஸ்வரன் தேவதாஸ், இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன், இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப், நாயகன் வெற்றி, நாயகி ஷில்பா மஞ்சுநாத், நடிகைகள் நயனா…
Read Moreஈழத்தில் உருவாகியிருக்கும் “அந்தோனி” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்.!!
ஓசை பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில், கயல் வின்சன்ட் மற்றும் TJ.பானு இணைந்து நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் பூஜையுடன் ஆரம்பமாகி இலங்கை – யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது டப்பிங் பணிகள் ஆரம்பித்திருப்பதாக படக்குழுவினர் அறியத்தருகின்றனர். அந்தோனி திரைப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு இளம் கலைஞர்கள் இணைந்து இயக்குகின்றனர். ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் கலைவளரி சக ரமணா மற்றும் சுகந்தினி ரமணதாஸ் அவர்கள் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர். திரு.இரமணன் அவர்கள் இத்திரைப்படத்தில் இணை இயக்குனராகவும் பணிபுரிகின்றார். மற்றும் இணை தயாரிப்பாளர்களாக விஜயன் பாலசிங்கம் (விஜய் பிலிம்ஸ்) , சிறீஸ்கந்தராஜா (ட்ரிம்லைன் புரடக்ஷன்ஸ்) ஆகியோர் இணைந்து கொண்டிருக்கின்றார்கள். கயல் திரைப்பட நடிகர் “கயல் வின்சன்ட்” அவர்களும், சினிமா உலகில் தனக்கென தனி…
Read Moreமாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் மலேசிய விநியோக உரிமைகளைப் பெற்றுள்ளது
டத்தோ அப்துல் மாலிக் அவர்களின் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, பிளாக்பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், பிரபலமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான கூலியின் மலேசிய திரையரங்க விநியோக உரிமைகளைப் பெற்றுள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்தத் திரைப்படத்தின் இசையை சென்சேஷனல் அனிருத் இசையமைத்துள்ளார், இது இந்த சக்திவாய்ந்த கூட்டணிக்கு மேலும் உற்சாகமான அம்சத்தை சேர்க்கிறது. தங்களின் தைரியமான மற்றும் தாக்கமுள்ள வெளியீடுகளுக்குப் பெயர் பெற்ற மாலிக் ஸ்ட்ரீம்ஸ், மலேசியாவில் கூலி திரைப்படத்திற்காக இதுவரை இல்லாத புதிய விளம்பர பிரச்சாரத்தை திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை உறுதிப்படுத்தும் வகையில் புதுமையான உத்திகள் மற்றும் உயர் தீவிரமான சந்தைப்படுத்தல் முயற்சிகளை நிறுவனம் வெளியிடத் தயாராக உள்ளது. இந்த கூட்டணி மாலிக் ஸ்ட்ரீம்ஸிற்கு மற்றொரு மைல்கல்லாக…
Read MoreGrammy விருது பெற்ற Nine Inch Nails இசைக்குழுவின் புதிய பாடலுடன் ட்ரெய்லர் அறிமுகமாகிறது
டிஸ்னியின் புரட்சி செய்த TRON திரைப்படத் தொடர்களின் மூன்றாவது பகுதியாக உருவாகியுள்ள மிகுந்த எதிர்பார்ப்பை பெற்ற ‘TRON: ஏரிஸ்’ படத்தின் புதிய மொழி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படம், 1982ஆம் ஆண்டு வெளியான டிஸ்னியின் வழிகாட்டி விஞ்ஞானத் திரைப்படமான TRON மற்றும் 2010ஆம் ஆண்டு வெளியான அதன் தொடர்ச்சியான TRON: Legacy ஆகியவற்றுக்குப் பிந்தையதாகும். இந்தப் படம் 2025 அக்டோபர் 10 அன்று ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தியாவில் வெளியிடப்படுகிறது. TRON: ஏரிஸ் திரைப்படம், ஏரிஸ் எனப்படும் ஒரு உயர் நுட்பம் கொண்ட நிரல்நிரலைப் பற்றியது. அவர் டிஜிட்டல் உலகத்திலிருந்து உண்மையான உலகிற்குள் ஒரு அபாயகரமான பணிக்காக அனுப்பப்படுகிறார். இதன் மூலம், மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு உயிரினங்களுக்கும் இடையே முதல் முறை நேரடி தொடர்பு உருவாகிறது. இந்த புதிய ட்ரெய்லரில், Grammy விருது…
Read More“இன்றைய சூழலில் ஒவ்வொரு படத்துக்கும் விமர்சனம் தேவை., அது ஆரோக்கியமான விமர்சனமாக இருக்கட்டும்” ‘அக்யூஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் உதயா வேண்டுகோள்
நடிகர்கள் உதயா – அஜ்மல் – யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன்-ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் – சச்சின் சினிமாஸ்- ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் உதயா – ‘தயா’ என். பன்னீர்செல்வம் – எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில்…
Read More