இளம் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோ மற்றும் அவரது காதல் மvனைவி பாடினி வசிக்கும் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே சமயம், அந்த வீட்டில் இருந்த நிஷாந்த் ரூசோ அவரது மனைவி பாடினி குமார் மாயமாகி விட… அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார் ட்டிஸ்க்கும் மாயமாகி விட… கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜ், மாயமான தம்பதியை கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். விசாரணையில் நிஷாந்த் ரூசோ பற்றி பல அதிர்ச்சிகரமான தகவல்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜுக்கு தெரிய வருகிறது. அதை வைத்து விசாரணையில் அவர் முன்னோக்கி செல்லும் போது மாயமான நிஷாந்த் ரூசோ மட்டும் மீண்டும் தனது வீட்டுக்கு வருகிறார். அவருடன் இருந்த அவரது மனைவி என்ன ஆனார்? என்பது குறித்து போலீஸ் அவரிடம்…
Read Moreபிரபலங்கள் வெளியிட்ட “உசுரே” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
“உசுரே” ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷனில் அறிமுக இயக்குனர் நவீன டீ கோபால் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு bilingual-களாக மற்றும் எதார்த்தமான களத்தையும் திரைக்கதையையும் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து “உசுரே” திரைப்படத்தின் First Look-க்கை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஸ்ருதி ஹாசன், இயக்குனர் நித்திலன் சாமிநாதன் மற்றும் நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் போன்ற பிரபலங்களால் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் முன்னணி நடிகர்களான டீஜய் அருணாசலம், ஜனனி, ராசி மந்த்ரா, கிரேன் மனோகர், செந்திகுமாரி, சூப்பர் குட் சுப்பிரமணி, பாவல் நவகீதன் நடித்துள்ளனர் மற்றும் ஆதித்யா கதிர் தங்கதுரை நகைச்சுவையில் அசத்தியுள்ளனர். இந்த கதை உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு-ஆந்திர எல்லையான சித்தூரில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
Read Moreபார்க்கிங்’, ‘மகாராஜா’, ‘கருடன்’ வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ‘அஸ்திரம்’ படத்தை பிப்ரவரி 21 இல் தமிழகமெங்கும் வெளியிடுகிறது பைவ்-ஸ்டார் நிறுவனம்.
பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன’சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்க, மாடலிங் துறையை சேர்ந்த நிரஞ்சனி கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக பல குறும்படங்களை இயக்கி நடித்தவர், திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் பெற்றவர். ‘அஸ்திரம்’ படத்தில் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் DSM உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இதன் கதையை எழுதியுள்ளார் கதாசிரியர் ஜெகன். இந்த படம் விறுவிறுப்பான துப்பறியும் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை பைவ்-ஸ்டார் செந்தில் கைப்பற்றியுள்ளார். இவரது நிறுவனம் கடந்த…
Read Moreகே.வி.என். புரொடக்ஷன்ஸ் & தெஸ்பியன் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம் & ஆவேஷம் ஜித்து மாதவன்
திரு. வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் திருமதி. சைலஜா தேசாய் ஃபென்-இன் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் உடன் கூட்டணி அமைப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்கள் இணைந்து மலையாள திரையுலகின் இரண்டு இளம் இயக்குநர்கள் இணையும் புதிய படத்தை உருவாக்க இருக்கின்றன. இந்தப் படத்தை மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் இயக்க, ஆவேஷம் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதுகிறார். இந்தப் படத்தில் திரைத்துறையில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள்: ஷைஜூ காலெத் ஒளிப்பதிவு, சுஷின் ஷியாம் இசை மற்றும் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கின்றனர். படம் குறித்து கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திரு. வெங்கட் கே நாராயணா பேசும் போது, “எங்கள் குறிக்கோள் எப்போதும், பல மொழிகளில் திரைப்பட அனுபவத்தை புதுப்பிப்பதாகவே இருந்துள்ளது. அந்த வகையில் இந்தப் படம்…
Read Moreமீண்டும் கம் பேக் கொடுக்கும் ‘ஆரண்ய காண்டம் ‘ புகழ் யாஸ்மின் பொன்னப்பா!!
ஆரண்ய காண்டம்’ படத்தின் மூலம் மக்களிடையே கவனம் ஈர்த்த நடிகை யாஸ்மின் பொன்னப்பா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையுலகுக்கு திரும்ப உள்ளார். மனோதத்துவத்தில் மேற்படிப்பை முடித்து திரும்பி இருக்கிறார். நடிகராகவும் தன்னை மேம்படுத்த பல பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டு தற்போது திரைத்துறையில் மீண்டும் தன்னை பிசியாக மாற்றிக்கொள்ள இருக்கிறார். கேமரா முன் நின்று நடித்த அந்த மேஜிக் தருணங்களை நான் மிகவும் மிஸ் செய்தேன். வித்தியாசமான கதைக்கலங்களுக்குள்ளும் மற்றும் ஏராளமான கதாபாத்திரங்களிலும் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டு நடிப்பில் இன்னும் பண்பட்ட நிலையை அடைய விரும்புகிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் சினிமா இன்னும் ஆச்சரியமான கலங்களில் பயணிக்க துவங்கியிருக்கிறது. இதில் என் பங்களிப்பையும் இணைத்துக் கொண்டு என்னையும் மெருகேற்ற விரும்புகிறேன். பல அற்புதமான படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றவும் விரும்புகிறேன்” என்கிறார் கண்களில் கனவுகள் மின்ன. தன்னுடைய…
Read More7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!
தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி’ . செல்வராகவன் இயக்கமும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் இணைந்து இப்போது வரை இப்படத்தில் பாடல்களும் படமும் நீங்கா இடத்தை தமிழ் சினிமாவில் பெற்று இருக்கிறது. இப்படம் வெளியாகி 20 வருடங்களை கடந்து வட்ட நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி வருகிறார். தன் தனித்துவமான சினிமாவியல் மற்றும் உணர்ச்சி நிறைந்த கதைசொல்லலால் ரசிகர்களை மீண்டும் கவர இருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் மற்றும் ஸ்ரீ சூர்யா மூவிஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா, இப்படத்திலும் தனது மைல்கல்லான கதாபாத்திரத்தில் மீண்டும் நடுக்க இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அவருக்கு ஜோடியாக அன்னஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன்…
Read Moreபோதைக்கு அடிமையாகும் இளைய தலைமுறையினரை காப்பாற்றும் ஒரு படம் ‘கலன்…’ – எச்.ராஜா பாராட்டு
ராஜலெக்ஷ்மி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜேஷ்வரி சந்திரசேகரன் தயாரிப்பில், ’கிடுகு’ பட புகழ் இயக்குநர் வீரமுருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கலன்’. தீபா, அப்புக்குட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் காயத்ரி, சம்பத் ராம், சேரன் ராஜ், யாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். வரும் ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்வு டிசம்பர் 31 ஆம் தேதி சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், பத்திரிகையாளர்களுடன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா மற்றும் பத்திரிகையாளர், நடிகர், திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டார்கள். படம் பார்த்த பிறகு பத்திரிகையாளர்களிடம் படம் குறித்து பேசிய எச்.ராஜா, “இன்றைய தினம் தமிழகத்தின் அவலமான நிலையை படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் வீரமுருகன். இதற்கு முன்பு…
Read More’கலன்’ திரைப்பட விமர்சனம்
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வெட்டுடையார் காளி, கணவனை இழந்தாலும் கஷ்ட்டப்பட்டு தனது ஒரே மகனான வேங்கையை படிக்க வைத்து ஆளாக்குகிறார். அவருக்கு அவரது தம்பி அப்புக்குட்டி துணையாக நிற்கிறார். வேங்கையின் நண்பனின் தங்கைக்கு கஞ்சா விற்கும் கூட்டத்தால் பிரச்சனை வருகிறது. அவர்களிடம் இருந்து நண்பனின் தங்கையை காப்பாற்றும் வேங்கை, அவர்களது போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தை அழிக்க முடிவு செய்கிறார். வேங்கை உயிருடன் இருந்தால் தங்களது கஞ்சா வியாபாரத்திற்கு சிக்கலாகிவிடும் என்பதால், அவரது நண்பன் மூலமாகவே அவரை கஞ்சா கூட்டம் கொலை செய்துவிடுகிறது. அநியாயத்தை எதிர்த்து நின்றதால் கொலை செய்யப்பட்ட தனது மகன் வேங்கையின் மரணத்திற்கு பழி தீர்ப்பதோடு, கஞ்சா போதைப் பொருளால் இளைஞர்களை சீரழித்து, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கூட்டத்தை வேறோடு அழிக்க வேங்கையின் தாய் வெட்டுடையார் காளியும், அவரது தம்பி அப்புக்குட்டியும் களம் இறங்க,…
Read More‘எமகாதகி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
தமிழ் சினிமாவில் வந்து குவியும், பல வகையான ஹாரர் த்ரில்லர் படங்களுக்கு மத்தியில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. “எமகாதகி” திகில் படமா? அல்லது அம்மன் படமா? என்று இப்போஸ்டரை வைத்து நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், “எமகாதகி” மற்ற திகில் படங்களிலிருந்து மாறுபட்ட தனித்துவமான படைப்பாக இருக்கும் என்பதை, உணர்த்துமென தயாரிப்பாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள “எமகாதகி” திரைப்படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம் முழுவதும் வெளியிடுகிறது. உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ் ரூபா கொடவாயூர் முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கியுள்ளார். “எமகாதகி” கிராமப் பின்னணியில் அமானுஷ்ய மர்ம…
Read Moreபரபரப்பான இறுதிக்கட்ட பணிகளில், Sky wanders Entertainment நிறுவனத்தின் முதல் திரைப்படம் !!
இறுதிக்கட்ட தயாரிப்பிலுள்ள இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. திரைத்துறை மீதான தீராக்காதலிலும், ஆர்வத்திலும், 63 வயதில் தனது முதல் படமாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி. இது அவரது முதல் திரைப்படம் என்றாலும் திரைத்துறைக்கு பழமையானவர். மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில் ஒரு மென்மையான, முக்கோண காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வருகிறார் நாயகி லியா. மீனவ இளைஞனான லிங்கேஷ் மீது அவருக்கு காதல் வருகிறது. ஆனால் லிங்கேஷுக்கு அவரது மாமன் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தடைகளைத் தாண்டி அவர்கள் காதல் நிறைவேறியதா?, காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது தான் இப்படத்தின் கதை. கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களிலும், “காலேஜ் ரோட்” படத்தில் நாயகனாகவும் நடித்த லிங்கேஷ், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த பிரிடிஷ் நடிகை…
Read More