டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அக்டோபர் 31 முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘லப்பர் பந்து’ படத்தினை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !! ப்ளாக்பஸ்டர் “லப்பர் பந்து” அக்டோபர் 31 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது சந்தாதாரர்களுக்குத் தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தினை அக்டோபர் 31 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவ தர்ஷினி, ஜென்சன் திவாகர் மற்றும் டிஎஸ்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஒரு சிறு கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் விளையாடும்…
Read Moreஒற்றை பனைமரம் – திரை விமர்சனம்
இறுதிப் போருக்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த வீரர்கள் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அதில் ஒருவரான நாயகி நவயுகாவை காப்பாற்றி, அடைக்கலம் கொடுக்கும் நாயகன் புதியவன் ராசையா, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் அனாதையாக இருந்த சிறுமிக்கும் அடைக்கலம் கொடுத்து தனது மகளாக வளர்க்கிறார். அவரோ கர்ப்பிணி மனைவியை ராணுவத்தின்குண்டு வீச்சுக்கு பறி கொடுத்தவர். ஆனால் போருக்குப் பிறகான வாழ்க்கை, அவர்கள் நினைத்ததைப் போல் இல்லை. “சயனைட் குப்பியைக் கடித்துச் செத்திருக்க வேண்டியதுதானே” என முன்னாள் போராளிகளை சக மனிதர்கள் சிலர் கேட்கும் அளவுக்கு அங்கே விரக்தி கொட்டிக் கிடக்கிறது. போரில் அனைத்தையும் இழந்து வறுமையிலும் வெறுமையிலும் உழலும் அப்பாவி கைம்பெண்கள் சிலரை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தி பணிய வைக்கின்றனர். ஆண் போராளிகளில் சிலரோ வயிற்றுப்பாட்டுக்காக, அடிதடியை தொழிலாக செய்யத்…
Read More‘கடைசி உலகப் போர் -ஸ்வாக் – லைக் எ டிராகன்: யாகுசா ஆகிய மூன்று படைப்புகளையும் பிரைம் வீடியோவில் ஆஃபருடன் காணத்தவறாதீர்கள்
இந்த வார இறுதியில் பிரைம் வீடியோவின் சமீபத்திய ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!. பரபரப்பான டிஸ்டோபியன் தமிழ் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘கடைசி உலகப் போர் ‘ – தெலுங்கு மொழியில் வெளியான நகைச்சுவை நாடகமான ‘ஸ்வாக்’ மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜப்பானிய மொழியில் வெளியான கிரைம் ஆக்சன் தொடரான ‘லைக் எ டிராகன்: யாகுசா’. இந்த மூன்று புதிய வெளியீடுகளை தவற விடாதீர்கள்! கடைசி உலகப் போர் : 2028 ஆம் ஆண்டில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்ட ஒரு டிஸ்டோபியன் அறிவியல் புனைவு கதை மற்றும் தமிழ் அதிரடி திரில்லர் திரைப்படமாகும். கதை- அரசியல் மோதல், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் டிஸ்டோபியன் எதிர்காலத்தில் சுதந்திரத்திற்கான போராட்டம் ஆகியவற்றை கருப்பொருளாக ஆராய்கிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில் அனகா எல். கே., நாசர், நடராஜன் சுப்பிரமணியம், அழகம்பெருமாள்…
Read Moreதிருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, “சார்” பட வெற்றியைக் கொண்டாடிய படக்குழு !!
SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக வெளிவந்துள்ள “சார்” திரைப்படத்திற்கு, கிடைத்து வரும் வரவேற்பை, ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடும் வகையில், திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, சார் பட வெற்றியைக் கொண்டாடியுள்ளது படக்குழு. கடந்த வாரம் வெளியான “சார்” திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கல்வி எனும் ஆயுதம் நம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தையும், கிராமப்புற ஆசிரியர்களின் வலிமிகுந்த தியாகத்தையும், அழுத்தமாக பேசியுள்ள இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்திற்கு தமிழகமெங்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் மக்களின் பேராதரவில், பெரும் வரவேற்பைப் பெற்ற, “சார்” படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், இயக்குநர் போஸ் வெங்கட்,…
Read More’செல்லமே’, ‘ஆனந்ததாண்டவம்’ படங்களின் இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் அடுத்தப் படைப்பு ‘பிரேக் பாஸ்ட்’!
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரேம் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் வெங்கடேஷ்வரா கார்மெண்ட் நிறுவனம் முதன் முறையாக திரைப்படத்துறையில் தடம் பதிக்கிறது. ’நிலாகாலம்’, ‘செல்லமே’, ‘ஆனந்ததாண்டவம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் காந்தி கிருஷ்ணா ’பிரேக் பாஸ்ட்’ என்ற புதிய படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு கவி பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்க, படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களுக்கும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தத் தலைமுறையினரை கவரும் வகையில் உருவாகியுள்ள இந்தப் பாடல்கள் வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. ராணவ், ரோஸிமின், கிருத்திக் மோகன் மற்றும் அமித்தா போன்ற திறமைமிக்க புதுமுகங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இரண்டு முறை ஊர்வசி பட்டம் வாங்கிய அர்ச்சனா, சம்பத்ராஜ், கஸ்தூரி, மதன் பாப், ரவி மரியா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், மேஹாஶ்ரீ, இயக்குநர்…
Read Moreதளபதி விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி சர்பிரைஸ் கொடுக்கப் போகும் ’தீபாவளி போனஸ்’ திரைப்படம்!
ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ இயக்கத்தில், விக்ராந்த் நாயகனாகவும், ரித்விகா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தீபாவளி போனஸ்’. எளிய மக்களின் வாழ்க்கை போராட்டங்களை குறிப்பாக தீபாவளி போன்ற பெரும் பண்டிகை காலங்களை கொண்டாடுவதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை எதார்த்தமான வாழ்வியலாகவும், குடும்பத்தோடு பார்க்கும் கமர்ஷியல் படமாகவும் உருவாகியிருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் பல தரமான சிறு முதலீட்டு படங்களை வெளியிட்டு வரும் ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதோடு, படத்தின் வியாபாரம் மற்றும் விளம்பர பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவரது முயற்சியின் மூலம் ‘தீபாவளி போனஸ்’ சுமார் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின்…
Read Moreஅமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்த “போகுமிடம் வெகு தூரமில்லை” திரைப்படம் !!
Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாகத் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற “போகும் இடம் வெகு தூரம் இல்லை” திரைப்படம், தற்போது ப்ரைம் ஓடிடி தளத்தில் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. படத்தைப் பார்வையிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படக்குழுவை பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன், அழகான படைப்பாக, 2024 ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்கள் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் கடந்த இப்படம் அக்டோபர் 8 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. அமேசான்…
Read Moreஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நிரஞ்சன் சுதீந்திரா நடிக்கும் சீதா பயணம் !!
ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்குகிறார். மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும் இப்படத்திற்கு ‘சீதா பயணம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சீதை எனும் பாத்திரத்தில் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழுக்கு அறிமுகமாகிறார். சீதா மிகப் புதுமையான ஆற்றல் மிகு பாத்திரம், உணர்வுரீதியாக மிக அழுத்தமான தைரியமான பாத்திரம், இப்பாத்திரத்தில் தன் தனித்துவமான நடிப்பின், முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா அர்ஜுன். அவரது பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ஒரு நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தும். ஐஸ்வர்யாவின்…
Read More‘லக்கி பாஸ்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024 அன்று பிரம்மாண்டமாக தீபாவளிக்கு இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராம்கி, “’லக்கி பாஸ்கர்’ படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சினிமாத் துறையில் மிகப்பெரிய கம்பெனி. இந்தப் படத்தை தமிழுக்கு ஏற்றது போலவும் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது. லக் என்றால் அதிர்ஷ்டம். நாம் ஒரு விஷயத்திற்கு தயாராக இருக்கும்போது வரும் வாய்ப்புதான் அதிர்ஷ்டம் என்போம். துல்கர் திறமையான நடிகர். அப்பா சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நம்மிடம் எளிமையாகப் பழகுவார். பழைய பாம்பேவை நம் கண் முன்னே செட் போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். வெங்கி அட்லூரி…
Read Moreபிரபாஸின் பிறந்தநாளில் ‘தி ராஜா சாப்’ மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது !!
ஹாரர் காமெடி ஜானரில் கலக்கும் பிரபாஸ், ‘தி ராஜா சாப்’ மோஷன் போஸ்டர் வெளியானது !! மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் பான்-இந்தியா திரைப்படமான ‘தி ராஜா சாப்’ படத்தின் மீதான உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது, தயாரிப்பாளர்கள் படத்தின் முன்னணி சூப்பர்ஸ்டாரான பிரபாஸின் பிறந்தநாளில், அவர் இடம்பெறும் அசத்தலான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ரசிகர்களுக்கு விருந்தாக பகிரப்பட்ட இந்த மோஷன் போஸ்டர், தற்போது இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. முதல் முறையாக ஹாரர் காமெடி ஜானரில் பிரபாஸ் களமிறங்குகிறார். இது படத்தின் மீதான ஆவலை உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. 2 நிமிட மோஷன் போஸ்டர் காட்டின் நடுவில் பியானோவில் ஒலிக்கும் “ஹேப்பி பர்த்டே” ட்யூனுடன் துவங்குகிறது. பின்னர், ஒரு மர்ம உருவம் காடுகளில் சுற்றித் திரிவதைப் பிந்தொடர்ந்து, பார்வையாளர்களை விண்டேஜ் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறது, அங்கு இறுதியாக…
Read More
