இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய ஜெபி சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ’BP 180’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி வில்லன் கதாபாத்திரத்திலும், நடிகை தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். முதல் பார்வை போஸ்டர் மற்றும் புரோமோஷனல் அறிவிப்புகள் படம் குறித்த எதிர்பார்ப்பை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் டேனியல் பாலாஜியின் கடைசி திரைப்படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் டேனியல் பாலாஜியை திரையில் காண உணர்ச்சி பெருக்குடன் காத்திருக்கின்றனர். நவம்பர் 28 ஆம் தேதியில் வெளியாகும் இந்தப் படம் குறித்து இயக்குநர் ஜெபி பகிர்ந்து கொண்டதாவது, “’BP 180’ என்பது ஆபத்தான மருத்துவ மற்றும் உளவியல் நிலையைக் குறிக்கிறது. இதில் போதைப்பொருட்கள் புழக்கத்தால் தனிநபர்கள் இரத்த அழுத்தம் அதிகமாகிறது. இந்த கட்டத்தில் அவர்களின் ஆறாவது அறிவு தடுமாறி விலங்குகளைப்…
Read Moreஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ படக்குழு
டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் -மாளவிகா மனோஜ் -ஆர் ஜே விக்னேஷ் காந்த்- ஷீலா- ஜென்சன் திவாகர் -ஆகியோரின் நடிப்பில் தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிட்ட ‘ஆண்பாவம் பொல்லாதது’ எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் டி. கே. டி. நந்தகுமார் மற்றும் எம். எஸ். கே. ஆனந்த் ஆகியோரின் இணை தயாரிப்பில் பிளாக் ஷீப் ஃபைண்ட்ஸ் ( Black Sheep Finds) நிறுவனத்தின் படைப்பு பங்களிப்புடன் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பதினைந்து கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வரும் நிலையில் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு காரணமாக அமைந்த ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில்…
Read Moreகும்கி-2 – திரை விமர்சனம்
மலைப்பகுதியில் வாழும் மதிக்கு தந்தை இல்லை. தாய் இன்னொருவருடன் வாழ்கிறாள். அவர்கள் ‘குடி’யும் கும்மாளமுமாக பெரும்பாலும் மதி மயங்கிய நிலையிலேயே இருக்க, இவர்களால் சிறுவன் மதி பாதிக்கப்படுகிறான். பள்ளியிலும் அவனுக்கென்று நண்பர்கள் யாரும் இல்லாமல் தாழ்வுணர்ச்சியில் இருக்கிறான். இந்நிலையில் பள்ளி ஆசிரியர் அவனை அரவணைக்கிறார். அன்பு காட்டுகிறார். மனிதன் நேசிக்கா விட்டால் என்ன… இயற்கையை நேசி. அது உன்னை நேசிக்கும் என்கிறார். இந்த சந்தர்ப்பத்தில் பக்கத்துக் காட்டில் ஒரு யானைக் குட்டி பள்ளத்தில் தவறி விழுந்து விட, அதை பள்ளத்திலிருந்து மீட்கிறான். அது முதல் மதியும் யானைக் குட்டியும் இணை பிரியாத நண்பர்கள் ஆகிறார்கள். இதனை அறிந்து கொண்ட அவனது தாய் அந்த யானையை பெரிய விலைக்கு விற்க ஏற்பாடு செய்கிறாள். மதிக்குத் தெரியாமல் ஒரு நாள் விற்றும் விடுகிறாள். இது தெரியாமல் மதி யானையைத் தேடி…
Read More‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தில் இருந்து மைலி சைரஸின் ‘ட்ரீம் ஆஸ் ஒன்…’ அசல் பாடல் வெளியாகியுள்ளது!
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி ஆறு இந்திய மொழிகளில் வெளியாகிறது. வரும் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரீம் ஆஸ் ஒன் பாடலை மைலி சைரஸ் வெளியிட்டார். மனதை வருடும் இந்தப் பாடலின் கிளிம்ப்ஸை தனது சமூக ஊடக தளங்களில் மைலி சைரஸ் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து மைலி பகிர்ந்திருப்பதாவது, “இந்தப் பாடலை மார்க் ரான்சன் மற்றும் ஆண்ட்ரூ வயட் ஆகியோருடன் இணைந்து உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு பாடல் வரியும் நாம் எங்கிருந்தோம் என்பதையும், நாம் எங்கிருக்கிறோம் என்பதையும் பிரதிபலிக்கிறது. நம் அனைவருக்கும் எதிர்காலத்தில் என்ன இருக்கிறது என்பதற்கான நம்பிக்கையை இந்தப் பாடல் வைத்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள மக்களுடன் மிகவும் உணர்வுப்பூர்வமாக இணைந்த ஒரு…
Read Moreதெலுங்கு மற்றும் மலையாளத் திரைத்துறையின் சென்சேஷனல் முன்னணி நடிகைகளுடன் நடிகர் ஏகன் இணைகிறார்!
புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்துவின் விஷன் சினிமா ஹவுஸ், தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. நம்பகத்தன்மை, உணர்வுப்பூர்வமான கதைகள் மற்றும் புதிய திறமையாளர்களை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக விஷன் சினிமா ஹவுஸ் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இடத்தைப் பிடித்துள்ளது. டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இருவரும் இளம் திறமையாளர்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கி தருவதற்கு பெயர் பெற்றவர்கள். ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்ற ‘ஜோ’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தது விஷன் சினிமா ஹவுஸ். தரமான கதை மற்றும் சிறந்த நடிப்பிற்காக பாராட்டப்பட்ட அந்தப் படம் திரையரங்குகளில் 52 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து…
Read Moreஅகண்டா 2: தாண்டவம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது !
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு நான்காவது முறையாக இணைய, மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான பக்தி-ஆக்ஷன் திரைப்படம் “அகண்டா 2: தாண்டவம்”. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா , ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார். எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் ‘தி தாண்டவம்’ ப்ரோமோவுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது.நேற்று முழு பாடலும் மும்பை ஜூஹுவிலுள்ள PVR மாலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் எஸ். தமன், நந்தமூரி பாலகிருஷ்ணாவிற்கு பிரத்தியேகமான அதிரடி மாஸ் பி.ஜி.எம் கள் வழங்குவதில் புகழ்பெற்றவர், இப்போது மீண்டும் வலிமையான பக்தி மணக்கும் அதிரடிப் பாடலைத் தந்துள்ளார். ஆரண்ய அகோரா அவதாரத்தில் பாலகிருஷ்ணா, பெரிய கோவில் அரங்கில்…
Read Moreஇயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் வெளியிட்ட ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!
தலைமுறைகள் கடந்தும் ஃபீல் குட் திரைப்படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் எப்போதும் தனியிடம் பிடித்துள்ளது. அந்த வகையில், ரசிகர்களை மகிழ்விக்க ஃபீல் குட் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம். மாபோகோஸ் கம்பெனி, பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா செளத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். படம் குறித்து இயக்குநர் பிரவீன் சரவணன் பகிர்ந்து கொண்டதாவது, “நண்பர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நகைச்சுவை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘முஸ்தபா முஸ்தபா’. ஒரு எளிய பொய்…
Read Moreகாந்தா – திரைவிமர்சனம்
திரைத்துறையில் நடக்கும் நிகழ்வுகளைக் கதையாக்கி பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் ‘இதுதான் படம்’ என்று சொல்லும் அளவுக்கு ஆழமும் அகலமும் ஆன ஒரு படைப்பு இந்த காந்தா. 1950 களில் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாகத் கொடி கட்டி பறப்பவர் டி.கே.மகாதேவன். (துல்கர் சல்மான்).அவரை தனது படம் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஏ.பி.கோதண்டராமன்.(சமுத்திரக்கனி). முதல் படமே வெற்றி என்பதால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் தேடி வர, அதுவரை அவர் நடித்த 10 படங்கள் தொடர் வெற்றியில் இணைகின்றன. இப்போது பல ஆண்டுகளுக்குப் பின் குரு சிஷ்யன் இருவரும் பிரபல படநிறுவனம் தயாரிக்கும் படத்தில் இணைகிறார்கள். அறிமுகப்படுத்திய நேரத்தில் இருந்தது போலவே துல்கர் சல்மான் இருப்பார் என்று எதிர்பார்த்த சமுத்திரக்கனிக்கு பெரும் ஏமாற்றம். முன் போல் இல்லை அவர். தனது இன்றைய இமேஜ்க்கு தக்கபடி கதையில் சில…
Read Moreதனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிக்கும் தேரே இஷ்க் மே படத்தின் டிரைலர் வெளியானது!
பூஷன் குமார் தயாரிப்பில், ஆனந்த் L ராய்-ன் கைவண்ணத்தில் உருவாகும் ‘தேரே இஷ்க் மே’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த காதல் கதையான ‘தேரே இஷ்க் மே’ ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்து உள்ளது. ‘தேரே இஷ்க் மே’ இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் நவம்பர் 28 அன்று வெளியாக உள்ளது. காதல் ஒரு காவியமாக உயர்கிறது. ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. டீஸர் மற்றும் மனதை வருடும் இசையின் வலுவான வரவேற்புக்கு பிறகு, ‘தேரே இஷ்க் மே’ படத்தின் இயக்குனர் ஆனந்த் L ராய் மற்றும் தயாரிப்பாளர் பூஷன் குமார், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில், இந்த டிரெய்லர் சங்கர்…
Read More1980 களில் பின்னணியில் உருவாகியுள்ள காமெடி திரைப்படம் “ராபின்ஹுட்” பட டிரெய்லர் வெளியானது !!
LUMIERES STUDIOS நிறுவனம் சார்பில், ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, 1980 களின் கிராமப்புற பின்னணியில், கலக்கலான காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராபின்ஹீட்”. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் H வினோத் இப்பட டிரெய்லரை வெளியிட்டு, படக்குழுவை பாராட்டியுள்ளார். படத்தின் டிரெய்லரைப் பார்த்த இயக்குநர் H.வினோத் , படத்தின் பின்னணி, விஷுவல்கள் பிரம்மாதமாக உள்ளது. காமெடி அருமையாக உள்ளது. இசை படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. டிரெய்லர் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார். 1980 களில், கிராமத்தில் ஒரு லாட்டரி சீட்டில் பெரிய பரிசு விழ, அந்த பரிசுக்காக இருவருக்கு இடையே நிகழும் போட்டியும், பிரச்சனைகளும் தான் இப்படத்தின்…
Read More