கிச்சா சுதீப் நடித்த MARK படத்தின் படப்பிடிப்பு மிக பிரமாண்டமாக நிறைவு!

கிச்சா சுதீப் நடித்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் MARK திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இறுதி கட்டத்தில், 200 அடி நீளமுடைய மாபெரும் கப்பல் செட் அமைக்கப்பட்டு, அதில் நடைபெற்ற பாடல் படப்பிடிப்பில் 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் 300 ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் கலந்து கொண்டனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சும் அளவிற்கு பிரமாண்டமாக படத்தை உருவாக்க தயாரிப்பு குழு முழு மனதுடன் செயல்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்களான நவீன் சந்திரா, யோகி பாபு, குரு சோமசுந்தரம், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இதன் மூலம் MARK திரைப்படம் தனது படப்பிடிப்பை நிறைவு செய்து, தற்போது வெளியீட்டுக்காக பிந்தைய பணிகளில் இறங்கியுள்ளது.

Read More

செலிப்ரிட்டி பிரிமியர் காட்சியில் 30 ஆசிரம குழந்தைகளோடு பிரபலங்கள் பங்கேற்பு

திறமைவாய்ந்த இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இயங்கி வரும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் நிறுவனம் ‘புர்கா’ மற்றும் ‘லைன்மேன்’ உள்ளிட்ட பாராட்டுகளை பெற்ற படங்களைத் தொடர்ந்து ‘கிணறு’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. சூர்யா நாராயணன் மற்றும் வினோத் சேகர் தயாரிப்பில் ஹரிகுமரன் இயக்கியுள்ள ‘கிணறு’ குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகி ஆறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இப்படம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற செலிப்ரிட்டி பிரிமியர் காட்சியில் 30 ஆசிரம குழந்தைகளோடு திரைப்பிரபலங்கள் பங்கேற்று படத்தைக் கண்டு மகிழ்ந்து வாழ்த்து தெரிவித்தனர். பெகாசஸ் திரைப்பட விழா 2024, அக்கலேட் உலகளாவிய திரைப்படப் போட்டி, இண்டிஃபெஸ்ட் திரைப்பட விருதுகள் உள்ளிட்ட விழாக்களில் சிறந்த படம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்திற்கான விருதுகளை பெற்ற ‘கிணறு’, சென்னை சர்வதேச திரைப்பட விழா 2024ல் உலக…

Read More

“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா !! 

MISHRI ENTERPRISES சார்பில்Mமறைந்த ஸ்ரீ எஸ். செயின்ராஜ் ஜெயின் நல்லாசியுடன், ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரஜினி கேங்”. சமீபத்தில் இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்.., தயாரிப்பாளர் H முரளி பேசியதாவது.., இது எங்கள் குடும்ப விழா. எனக்கு செயின்ராஜ் சார் குடும்பத்தை 40 வருடமாகத் தெரியும். இந்தப்பட டிரெய்லர் பார்க்கும் போது அவர் இல்லை என வருத்தமாக இருக்கிறது. கிஷன் ஒரு ஹீரோவாக வேண்டும் என அவர் அதிகம் ஆசைப்பட்டார். அவரது…

Read More

மகளிர் உலக கோப்பையின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின், முதன் முறையாக சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை தந்த, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் !!

இந்திய நாடே போற்றிய மாபெரும் உலகக் கோப்பை வெற்றிக்கு பின், முதன்முறையாக, சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை புரிந்துள்ள, இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (Harmanpreet Kaur) பிரம்மாண்ட பிக்கில் பால் (Pickle Ball) நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார். சமீபத்தில் உலகின் பலமான 8 அணிகள் கலந்துகொண்ட உலககோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில், அசத்தலாக விளையாடியதுடன், அணியை வழிநடத்தி, இந்தியா மகளிர் அணிக்கு முதல் உலககோப்பையை பெற்றுத் தந்து, இந்தியாவிற்கே பெருமை சேர்த்தவர் இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர். இந்தியாவெங்கும் மகளிருக்கு முன்னுதாரண முகமாக மாறியுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர், உலகக் கோப்பையின் வெற்றிக்குப் பிறகு, முதன்முறையாக சென்னை வருகை புரிந்துள்ள நிலையில், சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சென்று பல்கலைக்கழகத்தின் வேந்தர் Dr. மரியாசீனா ஜான்சன் மற்றும்…

Read More

“மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival)–யில் மே 2025-இல் சிறப்பாக பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் World Film Festival–இல் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற Official Selection–இல் Best Social Justice Film (சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்) என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இதற்கான வெற்றி அறிவிப்பு வரும் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது. அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற Othismos Film Festival–இல் Culture, Heritage and Local Identity (கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம்) என்ற பிரிவில் விருதைப்…

Read More

டீசரில் ஒரு சாதனை படைத்த பான் இந்தியா திரைப்படம் ‘கரிகாடன்’.

கன்னடத் திரையுலகில் இருந்து புதிய இளைஞர்கள் படைப்பாளிகளாக வந்து இப்போது கவனிக்க வைக்கிறார்கள்.அப்படி அவர்களால் உருவாக்கப்பட்ட ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா ‘ படங்கள் பெரிய வெற்றி பெற்றுக் கவனம் ஈர்த்தன. அந்தப் படங்கள் பெற்ற வரவேற்பைப் போலவே கன்னடக் கலைஞர்கள் கூட்டணியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘கரிகாடன்’ படத்தின் டீசரும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. டீசர் வெளியான குறுகிய காலத்திலேயே இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.படத்தின் டீசர் பார்வையாளர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கவனிக்க வைக்கிறது. மாறுபட்ட வகைமையில் ஆக்ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைப்படமாக ‘கரிகாடன் ‘ உருவாகியுள்ளது. இப்படத்தில் காடா நடராஜ்,நிரிக்ஷா ஷெட்டி,குழந்தை ரித்தி, மஞ்சு சுவாமி,யாஷ் ஷெட்டி, கோவிந்த கவுடா,திவாகர், கிலாடி சூர்யா, டி.ராகேஷ் பூஜாரி,விஜய்…

Read More

சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!

தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, தான் நடித்த “பிறந்தநாள் வாழ்த்துகள்” படம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதில் மகிழ்கிறார்! 56’வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள இரு படங்களில் ஒன்று சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’, மற்றொன்று அப்புக்குட்டி நடித்த ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’. ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற அப்புக்குட்டிக்கு, அதன் பிறகு தற்போது நடித்துள்ள ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றார்! இந்தத் தருணத்தில் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தின் இயக்குனர் ராஜு சந்ரா, தயாரிப்பாளர் ரோஜி மேத்யூ மற்றும் தனக்கு கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா அனில் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவிக்கிறார்… அதேபோல், சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும், சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் ‘ஆநிரை’ குறும்பட…

Read More

‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி & குட் ஷோ தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. இந்த மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் படத்தின் இணைத்தயாரிப்பாளர், குட் ஷோ கே.வி.துரை பேசியதாவது, “டில்லி பாபு சார் கதைக்கேட்டு ஓகே சொன்ன படம் இது. அவர் இல்லாமல் நாங்கள் படம் ரிலீஸ் செய்கிறோம். நல்லபடியாக எடுத்து வந்திருக்கிறோம் என நம்புகிறோம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”. இயக்குநர் ரவிகுமார், “இந்த சமயத்தில் டில்லி பாபு சாரை நினைவு கூறுகிறேன். ‘மிடில் கிளாஸ்’ படம் பார்த்துவிட்டேன் என்பதால் நிச்சயம் இது வெற்றிப்படமாக அமையும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ‘நாளைய இயக்குநர்’…

Read More

நாயகன் – திரை விமர்சனம்

சில படங்கள் மட்டுமே நேற்றும் இன்றும் நாளையும் ரசிகர்களின் ரசனைப் பட்டியலில் இருக்கும்.அப்படி ஒரு படமே நாயகன். வெளி வந்து 39 ஆண்டுகளுக்கு பிறகும் அதன் மெருகு மாறாமல் அதன் உணர்வும் மாறாமல் திரைக்கு வந்து இருக்கிறது நாயகன். நடிகர் கமல்ஹாசனுக்கு நாயக பிம்பத்தை உறுதி செய்த படம் இது. மும்பையில் கோலோச்சிய வரதராஜ முதலியார் வாழ்க்கை பின்னணியை கதையாக எடுத்துக் கொண்டிருந்தார்கள்.(சினிமாவுக்காக வேலு நாயக்கர்) அதில் நாயகனாக தன்னை முழுசாக பொருத்திக்கொண்டார் கமல். மக்களால் வாழ்பவன் தலைவன் அல்ல. மக்களுக்காக வாழ்பவனே தலைவன். அப்படி வாழ்ந்த வரதராஜ முதலியார் சரித்திரத்தில் படம் முழுக்க வரதராஜ முதலியாராகவே வாழ்ந்து நடிப்பு சரித்திரம் படைத்திருந்தார் கமல். சரி கதைக்கு வருவோம். ஒரு மனிதனை சூழ்நிலை எப்படி குற்றவாளியாக மாற் றுகிறது?அதே மனிதன் மக்களின் இதயத்தில் எப்படி தெய்வமாக உயர்கிறான்…

Read More

ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் பெருமைமிகு தருணம்!!

நவம்பர் 6, 2025 அன்று டைரக்டர்ஸ் நிறுவனம் (IOD இந்தியா) ஏற்பாடு செய்த 2025 லண்டன் உலகளாவிய பெருநிறுவன ஆளுகை மற்றும் நிலைத்தன்மை மாநாட்டில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நமது வேந்தர் டாக்டர் ரெஜீனா ஜேப்பியார் முரளி சிறப்பு விருந்தினராகவும் பேச்சாளராகவும் கலந்து கொண்டார். உலகம் முழுவதிலுமிருந்து வந்த புகழ்பெற்ற கல்வி மற்றும் வணிக தலைவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். புதுமை, நிலைத்தன்மை மற்றும் கல்வியில் தலைமைத்துவம் குறித்த தனது ஊக்கமளிக்கும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். உலக அரங்கில் ஜேப்பியார் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கல்வித்துறைக்கு இது பெருமைமிகு மைல்கல் தருணமாக அமைந்தது.

Read More