மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் “பெத்தி” (peddi) பட பாடல் படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம்!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கிராமிய அதிரடி திரைப்படமான “பெத்தி” படத்தின் தயாரிப்பு பணிகள் வெகு வேகமாக நடந்து வருகின்றது. இயக்குநர் புச்சி பாபு சானா (Buchi Babu Sana) இயக்கும் இப்படத்தில், நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கின்றார். விருத்தி சினிமாஸ் (Vriddhi Cinemas) சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு ( Venkata Satish Kilaru) தயாரிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பெருமையுடன் வழங்கும் இப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ராம் சரண், இயக்குநர் புச்சி பாபு சானா மற்றும் குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றுள்ளனர். அங்கு நாளை முதல் ஆரம்பமாகும் படப்பிடிப்பில், இலங்கை தீவின் பல அற்புதமான இடங்களில், ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர்…

Read More

“காக்கும் வடிவேல்” ஒரு புதிய இசை மைல்கல்லைப் பதிவு செய்கிறது.

இடம்பெறுபவர்கள்: வாஹீசன் ராசையா (குரல்)8, அஜய் எஸ். காஷ்யப் (குரல்) மற்றும் இசையமைப்பாளர் தரண் குமார். வழங்குபவர்: டாக்டர் ஜே பி லீலாராம், நி“காக்கும் வடிவேல்” ஒரு புதிய இசை மைல்கல்லைப் பதிவு செய்கிறது.றுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மென்ட்(Brand Blitz Entertainment) & இயக்குநர்: கிருபாகர்ஜெய் ஜே. 22 அக்டோபர் 2025 – புதிதாக வெளியான தமிழ்த் தனிப்பாடலான ‘காக்கும் வடிவேல்’ ஏற்கனவே சுயாதீன இசை ஆல்பங்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மென்ட் வெளியிட்ட இந்தப் பாடல், வெறும் நான்கு நாட்களில் அரை மில்லியன் பார்வைகளை நெருங்குகிறது. இது அதன் விரைவான, உலகளாவிய ஈர்ப்பு மற்றும் ஏராளமான கேட்போர் வரவேற்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு வலிமையான கூட்டணி இந்த #MuruganVibeSong வாஹீசன் ராசையா மற்றும் அஜய் எஸ். காஷ்யப்…

Read More

இயக்குனர் பா. ரஞ்சித் வழங்கும் “மயிலா”, 2026 ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் முதல்முறையாக திரையிடப்படுகிறது.

நடிகை -எழுத்தாளர்-இயக்குனர் செம்மலர் அன்னம் அவர்களின் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான “மயிலா” திரைப்படத்தை, நியூட்டன் சினிமா கம்பெனி தயாரிப்பில் பிரபல திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் வழங்குகிறார். நியூட்டன் சினிமா தயாரித்த இப்படம், 55வது ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR)-வில் நடைபெறும் “பிரைட் ஃப்யூச்சர்” (Bright Future) பிரிவில் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8, 2026 வரை திரையிடப்படும் அனைத்து மொழித் திரைப்படங்களில் ஒன்றாக மயிலா படமும் திரையிடப்பட உள்ளது. தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தை பின்னணியாகக் கொண்ட “மயிலா” திரைப்படம், தனது சுதந்திரத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடும் பெண்ணான பூங்கொடியின் கதையைச் சொல்கிறது. அவளது மகளான சுடர் என்பவளின் பார்வையில், தன் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அன்பும் வேதனையும் தாங்கியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பேசப்படாத தைரியத்தை இப்படம் மூலம் பிரதிபலிக்கிறது. “…

Read More

கவிஞர் வாலி பிறந்தநாள் விழா

இந்தியாவிலேயே அதிகமான திரைப்பட பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும் ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடைய ஒரே திரைப்பட பாடல் ஆசிரியர் பத்மஸ்ரீ வாலி அரசியல் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கலைஞர் எம்ஜி ஆர் என்ற இரு பெரும் தலைவர்களாலும் நேசிக்கப்பட்டவர் வாலி பதிப்பகம் சார்பில்காவிய க் கவிஞர் வாலியின் 94 வது பிறந்தநாள் விழா 1.11.2025 சனிக்கிழமை மாலை இறைச்செல்வர் சிவாலயம் மோகன் அவர்கள் தலைமையில் பண்பாளர் நெல்லை பாலசுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் சென்னை தியாகராயநகர் கவியரசு கண்ணதாசன் சிலை அருகில் உள்ள பிடி தியாகராயர் அரங்கில் நடைபெற உள்ளது. வருடம் தோறும் 50,000 பொற்கிழியுடன் வழங்கப்படும் வாலி விருது இந்த ஆண்டு எழுத்தாளர் மாலன் அவர்களுக்கும் கவிஞர் கங்கை அமரன் அவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது விருதுகளை திரைப்பட இயக்குனர் கே. பாக்யராஜ்…

Read More

கவின்–ஆண்ட்ரியா ஜெரெமையா இணைந்து நடித்திருக்கும் மாஸ்க் – நவம்பர் 21 வெளியீடு

அதிக எதிர்பார்ப்பில் இருக்கும், கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் டார்க் காமெடி த்ரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’, வரும் நவம்பர் 21, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மத்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் இயக்கியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, படக்குழு வண்ணமயமான புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், படத்தின் OTT உரிமையை Zee5 பெற்றுள்ளதாகவும், ஆடியோ உரிமையை T-Series பெற்றுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனது முந்தைய படங்களில் சிறப்பாக நடித்த கவின், இம்முறை தனது பல்திறனை வெளிப்படுத்தி, பல்துறை திறமையாளர் ஆண்ட்ரியா ஜெரெமையாவுடன் திரையை பகிர்ந்து கொள்ள உள்ளார். முதன்முறையாக, ருஹானி ஷர்மா கவினின் ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் சார்லி, ரமேஷ்…

Read More

துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இருவருக்கும் மன்சூர் அலிகான் பெரும் பாராட்டு!

விண்ணுக்கும், மண்ணுக்கும், காற்றுக்கும், புயலுக்கும், விளம்பரம் தேவையில்லை. துருவ் விக்ரம் ஒரு புயல்! அது நின்று, சுழன்று, திரைத்துறையை, உலக சினிமாவை சுழன்றடிக்கும். He Proves his Fathers Blood. தான்பட்ட இன்னல்களை, கழனி, வாய்க்கால், வயல், அருவி, ஓடைகள், நதி, கடலிலிருந்து வெப்பமாய், ஆவியாய், பெரு மேகக் கூட்டமாய், நன்னீராய், கருவுற்று பன்னீராய், பூமிக்கு பொழியும் தாய். விண்ணைப் போல் சாதிய கொடுமை நெருப்பில் வெந்து தப்பித்து, இடியாய்… படைப்புகளை மக்களிடம் சேர்க்கும். வேறுபாடு, சாதித்துவம் ஒழிய பாடுபடும். மாரி செல்வாஜ் இன்னும், படைக்க வேண்டியது நிறைய காலடி தடம்… பதி! பாதை உருவாக்கு…. பின்தொடர்வர்…. கோடி!… பைசன் காளமாடன்… சிறந்து, வெற்றி குவிக்கட்டும்! நடிப்புத் தொழிலாளி மன்சூர் அலிகான்

Read More

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும், “ஆர்யன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் சிங்கிள் பாடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் படம் குறித்த பல தகவல்களை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில், எழுத்தாளர் இயக்குநர் மனு ஆனந்த் பேசியதாவது: எனக்கு எப்படி எஃப்.ஐ.ஆர் எவ்வளவு முக்கியமான படமோ, அதே போல் ஆர்யன் முக்கியமான படம். பிரவீன் என் நண்பர்…

Read More

ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபுடி, பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி சீரிஸ் வழங்கும் பான் இந்தியா படம் – “ஃபௌசி”  டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியானது !

ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி  (Hanu Raghavapudi) இணையும் பான் இந்திய படத்திற்கு “ஃபௌசி”  (Fauzi) ,எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !! அதிரடியான கான்செப்ட் போஸ்டருடன் துவங்கி, பரபரப்பை ஏற்படுத்திய ப்ரீ-லுக் போஸ்டருக்குப் பிறகு, ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்க, ஹனு ராகவபுடி இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பான்-இந்தியா படத்தின் தலைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் நிறுவனத்தின் குல்ஷன் குமார் வழங்க, பிரம்மாண்டமாக  உருவாகும் இந்தப் படத்திற்கு “ஃபௌசி” (Fauzi) எனப் பெயரிடப்பட்டுள்ளது. “ஃபௌசி” (Fauzi) எனும் தலைப்பே ஒரு சிப்பாயாக பிராபாஸின் பாத்திரத்தையும், வீரத்தையும் அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது.   உறுதியான, அழகிய வடிவமைப்பில் இருக்கும் தலைப்பு டிசைன்,  வீரத்தையும், தைரியத்தையும் வெளிப்படுத்துகிறது. 1940களின் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ள இந்த படத்தின் போஸ்டரில் எரிந்து, கிழிந்த ஆங்கிலேயர்களின்…

Read More

‘டியூட்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டியூட்’. படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இதன் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் ரவி, நவீன், “‘டியூட்’ படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கீர்த்தீஸ்வரன் ரொம்ப சென்சிபிளான விஷயத்தை சரியாக சொல்லியுள்ளார். பிரதீப், மமிதா மற்றும் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது” என்றனர். எடிட்டர் பரத் விக்ரமன், “உலகம் முழுவதும் ‘டியூட்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்த தயாரிப்பாளர்கள் மற்றும்…

Read More

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிரpபாஸ்! இந்தியாவின் தடுக்க முடியாத “ரெபெல் ஸ்டார்” பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் !

இந்திய நாடு முழுக்க பரவுயிருக்கும் பெயர் — பிரபாஸ்! பிரபாஸின் திரை ஆளுமையும், திரையை புயல் போல் ஆக்கிரமிக்கும் ஆற்றலும், திரைக்குப் பின்னால் அவரின் எளிமையான பண்பும், இந்தியா முழுக்க அவரை ரசிகர்களின் மனதில் நங்கூரமாய் பதிய வைத்திருக்கிறது. தொடர் வெற்றிப் படங்களும், உலகளாவிய ரசிகர் வட்டாரமும் இணைந்து, அவருக்கு “இந்தியாவின் தடுக்க முடியாத ரெபெல் ஸ்டார்” என்ற பட்டத்தை தந்துள்ளன. ஒவ்வொரு படமும் ஒரு கொண்டாட்டமாக மாறும் அளவுக்கு, அவரின் ஒவ்வொரு தோற்றமும் ஒரு கொண்டாட்டமாக மாறிவிடுகிறது. இந்த மாதம் அவர் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மிதக்கிறார்கள். இதோ அந்த அபாரமான ரெபெல் ஸ்டாரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்! இந்தியாவின் தடுக்க முடியாத ரெபெல் ஸ்டார் பிரபாஸ் “ரெபெல் ஸ்டார்” எனப் போற்றப்படுவதற்குக் காரணம் வெற்றிப்…

Read More