பைசன்: தீப்பொறியாக பிறந்து, எரிமலையாக எழுந்த படம்! -நந்தா பெரியசாமி

“எந்த நாடெல்லாம் தோற்றுப் போகிறதோ அவை எல்லாம் என் தாய் நாடு” “எங்கெல்லாம் மானுடம் காயம்படுகிறதோ அவர் எல்லாம் நம் தோழமை” என்கிறார் மகாகவி தாந்தே . காளமாடன் திரைப்படத்தை பார்க்கும் பொழுது நினைவுக்கு வந்தது தாந்தே வரிகள் ஒரு திரைப்படம் எழுதும் போதே வெற்றி அடைய வேண்டும். ஆன்மா மண்டியிட வேண்டும்.பைசன் திரைப்படம் அதை வலியோடு செய்திருக்கிறது சகப் போட்டியாளர்களை வெல்வது அவன் நோக்கம் அல்ல .பல நூற்றாண்டு பகையை அவன் வென்று இருக்கிறான் பைசன் ஒரு தீப்பொறி .ஆனால் பெரும் எரிமலையின் வெப்பம் கொண்டிருக்கிறது. “பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் “என பாடிய மகாகவி பாரதியின் வரிகளுக்கு தன்னை ஒப்படைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் போராளியாக தன் படைப்புகளை தந்து கொண்டிருக்கும் அவருக்கு நம் வாழ்த்துக்கள் அன்புடன் நந்தா பெரியசாமி…

Read More

ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், கும்கி அஸ்வின் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படப்பிடிப்பு நிறைவுற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன

‘காதல் மட்டும் வேணா’ திரைப்படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கானின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தை தயாரித்து இயக்குவதோடு சமீர் அலி கான் நாயகனாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்படும் கலகலப்பான காதல் கதையான ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதை அறிவிக்கும் விதமாக படத்தின் இரண்டாம் பார்வையை (செகண்ட் லுக் போஸ்டர்) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தின் கதையை பிரதிபலிக்கும் வகையிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையிலும் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ செகண்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு…

Read More

மர்மம் மற்றும் திகில் நிறைந்த “கிஷ்கிந்தாபுரி”, அக்டோபர் 24 முதல் ZEE5-இல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது

இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை அக்டோபர் 24 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியிட உள்ளது. கௌசிக் பெகல்லபாட்டி இயக்கத்தில், சைன்ஸ்கிரீன்ஸ் சார்பில் சாகு கருப்பதி தயாரித்த இந்த படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், அனுபமா பரமேஸ்வரன், மகரந்த் தேஷ்பாண்டே மற்றும் தனிக்கெல்லா பரணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு மொழியில் அக்டோபர் 17 அன்று ZEE5-இல் வெளியானது, மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, இப்போது திரைப்படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது. இந்த கதை, ஆமானுஷ்ய சுற்றுலாவுக்காக ஒரு பழமையான வானொலி நிலையத்திற்கு சென்ற குழுவைத் தொடர்ந்து உருவாகிறது. அவர்கள் தெரியாமலே ஒரு நின்றுபோன ஆவியை எழுப்பிவிடுகிறார்கள். ஆர்வத்துடன் தொடங்கிய பயணம், விரைவில் ஒரு பயங்கரமான அனுபவமாக மாறுகிறது. குழுவினர் அங்கு சிக்கிக்கொண்டு வெளியேற முடியாத…

Read More

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும், “ஆர்யன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் சிங்கிள் பாடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் படம் குறித்த பல தகவல்களை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில், எழுத்தாளர் இயக்குநர் மனு ஆனந்த் பேசியதாவது: எனக்கு எப்படி எஃப்.ஐ.ஆர் எவ்வளவு முக்கியமான படமோ, அதே போல் ஆர்யன் முக்கியமான படம். பிரவீன் என் நண்பர்…

Read More

இந்த தீபாவளியில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்காக இந்தியா ஒளிர்கிறது!

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இந்த வருடம் மிகப்பெரிய சினிமா திருவிழாவாக வெளிவர இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பண்டோரா உலகம் அதிகாரப்பூர்வமாக இந்திய திரையரங்குகளில் நுழைந்ததை அடுத்து, இந்த தீபாவளி இன்னும் கொண்டாட்டமாக மாறியது. இந்திய மக்களின் உணர்வுகள் மற்றும் பண்டிகை கால கொண்டாட்டத்தை எதிரொலிக்கும் ‘அவதார்’ திரைப்படம் நீண்ட காலமாக இந்திய ரசிகர்களின் இதயங்களில் தனியிடம் பிடித்துள்ளது. முதல் இரண்டு பாகங்கள் இந்திய பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்ததை அடுத்து, அடுத்த பாகமும் நிச்சயம் வெற்றி அடையும். இந்த பண்டிகைக் காலத்தில் பண்டோராவின் வருகையைக் கொண்டாடும் வகையில், அவதாரை குறிக்கும் ‘A’ என்ற எழுத்து வடிவில் நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றியும் பண்டோராவின் துடிப்பான உலகத்தைக் குறிக்கும் வகையில் வண்ணமயமான ரங்கோலி கோலங்களுடனும் ரசிகர்கள் கொண்டாடினர். கதைசொல்லல்…

Read More

பைசன் படம் பார்த்து மாரிசெல்வராஜ், பா.இரஞ்சித்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பைசன் படம் வெளியாகி பெறும் வெற்றிபெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பலரது பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்று பெரும் வெற்றிபடமாக திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ், மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது பதிவில் இது பற்றி குறிப்பிட்டு பதிவுசெய்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். “சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்” ‘ -சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும்…

Read More

இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டிய ‘மெல்லிசை’ திரைப்படத்தின் முதல் பார்வை!

நல்ல திரைக்கதை அம்சம் கொண்ட படங்களைப் பாராட்டி தனது ஆதரவைக் கொடுக்க இயக்குநர் வெற்றிமாறன் எப்போதும் தவறுவதில்லை! ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் தயாரிப்பில், திரவ் இயக்கத்தில் கவிதையாக உருவாகியுள்ள குடும்பக் கதையான ‘மெல்லிசை’ திரைப்படத்தின் முதல் பார்வையை பார்த்த வெற்றிமாறன் படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். போஸ்டரின் ஆழத்தையும் தெளிவையும் பாராட்டி வெற்றிமாறன் தெரிவித்ததாவது, “முதல் பார்வை போஸ்டரில் கிஷோர் இன்னும் இளைமையாக இருக்கிறார். ‘அன்பு மட்டும் அண்டம் தேடும் ‘   என்ற டேக்லைன் படத்தின் கருவை சரியாக பிரதிபலிக்கிறது. ‘மெல்லிசை’ படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார். வெற்றிமாறனின் அன்பார்ந்த வாழ்த்துக்கு ‘மெல்லிசை’ படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. அப்பா- மகள் இடையேயான அழகான உறவை திரையில் பிரதிபலிக்கும் இந்தக் கதையில் கிஷோர் குமார் மற்றும் புதுவரவு தனன்யா நடிக்கின்றனர். கிஷோருக்கு ஜோடியாக சுபத்ரா ராபர்ட்…

Read More

நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளன்று ‘திரெளபதி2’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

சென்னை, தமிழ்நாடு:*நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளை முன்னிட்டு மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் வரலாற்று ஆக்‌ஷன் கதையான ‘திரெளபதி 2’ படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி அரசன் வீர சிம்ஹா கடவராயனாக நடித்திருக்கிறார். நேதாஜி புரொடக்ஷன்ஸ், சோழ சக்ரவர்த்தி மற்றும் ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரித்திருக்க, மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் வெளியாகிறது. இந்தக் கதை தென்னிந்திய வரலாற்று சூழலில் சக்தி, மரபு மற்றும் நீதி பற்றி பேசுகிறது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் படத்தின் வெளியீடு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் ரிச்சர்ட் ரிஷி அரச கலையுடனும் தீவிரமாகவும் இருப்பது ரசிகர்கள் மத்தியில்…

Read More

‘பரிசு’ திரைப்படம் கல்லூரி மாணவிகளுக்காக சிறப்பு திரையீடு!

பொதுவாகப் புதிய திரைப்படங்கள் உருவாகி அதன் பிரதியைப் பிரபலங்களுக்குத் திரையிட்டுக் காட்டுவார்கள்.அது ‘செலிபிரிட்டி ஷோ ‘என்று அழைக்கப்படும். திரையீட்டுக்குப் பிறகு படத்தைப் பார்த்த பிரபலங்கள் சொல்கிற கருத்தை விளம்பரங்களுக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் ஒரு திரைப்படம் என்பது சாமான்ய பார்வையாளர்களை எந்த அளவிற்குப் போய்ச் சேர்கிறது, எந்த அளவுக்கு ரசிக்கப்படுகிறது என்பதை யாரும் கவனிப்பதில்லை. வெகுஜன மக்களின் மன நிலை என்ன என்பதை யாரும் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட நிலையில் ‘பரிசு’ திரைப்படத்தைக் கல்லூரி மாணவிகளுக்குத் திரையிட்டுக்காட்டியுள்ளனர். சமூகத்தின் அனைத்து இடையூறுகளையும் தடைகளையும் புறக்கணிப்புகளையும் நிராகரிப்புகளையும் கடந்து ஒரு பெண் நினைத்தால் சாதிக்க முடியும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும் என்று சொல்கிற கதை இது.சின்னச் சின்ன சலனங்களுக்கும் பருவக்கவர்ச்சிகளுக்கும் இடம் தராமல் லட்சியத்தை நோக்கிச் சென்று அடையும் ஒரு பெண்ணின் கதை இது. படத்தின் கதை…

Read More

கேம் ஆப் லோன்ஸ் – திரை விமர்சனம்

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, அதன் மூலம் ஆன்லைன் ஆஃப் ஒன்றில் கடன் வாங்குகிறான் நாயகன். அந்த கடனால் அவன் எதிர்கொள்ளும் நெருக்கடியை கதை யாக்கி இருக்கிறார்கள்.   கடன் கொடுத்த வங்கியில் இருந்து தேடி வந்த இருவர் லட்சங்களில் இருக்கும் கடனை கட்ட முடியாவிட்டால் தற்கொலை ஒன்றே அதற்கு தீர்வு என்று மெதுமெதுவாக நாயகன் மனதை மாற்ற முயல் கிறார்கள். மனைவிக்ku தெரியாமல் வாங்கிய கடன் என்பதால் தற்கொலை செய்து கொண்டால் கூட அந்த கடனை மனைவி கட்ட வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அழுத்தம் தருகிறார்கள். விடாப்பிடியான அவர்களின் வார்த்தை ஜாலத்தில் குழப்ப மனநிலைக்கு போன நாயகன், அவர்கள் தந்த அழுத்தத்தின் பேரில் தற்கொலை செய்து கொண்டானா? என்பது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதை.   ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, கடனாளியானவர்…

Read More