தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தில் புதிய பொறுப்பு: ரக்பி வளர்ச்சிக்கு திரு செந்தில் தியாகராஜனின் தொடரும் அர்ப்பணிப்பு

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் திரு செந்தில் தியாகராஜன் அவர்கள் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சீனியர் Vice President ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் இந்திய ரக்பி சங்கத்தின் பொதுச் செயலராக பணியாற்றி வருகிறார் மற்றும் இந்தியாவில் ரக்பி மற்றும் கபடி விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு முக்கிய வழிகாட்டியாக இருக்கிறார். ரக்பி பிரீமியர் லீக்கை தொடங்குவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார், அதன் முதல் சீசனில் சென்னை புல்ஸ் அணி கலந்து கொண்டது. அந்த அணியில் மூன்று ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற வீரர்கள் இருந்தனர். மேலும், சுஹைல் சந்தோக் உடன் இணைந்து தமிழ்நாடு கபடி லீக்கை துவக்குவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். சர்வதேச அளவில் ரக்பி செவன்ஸ் லீக்கை மேம்படுத்துவதிலும், இந்த விளையாட்டுகளின் தரத்தை  உலகளவில் உயர்த்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றி வருகிறார்.

Read More

“‘டியூட்’ படத்தில் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். அதை பிரதீப் ரங்கநாதன் சிறப்பாக செய்திருக்கிறார் “- இயக்குநர் கீர்த்தீஸ்வரன்

இந்த தீபாவளி பண்டிகைக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ‘டியூட்’ உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்க இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் கீர்த்தீஸ்வரன் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் அணுகியுள்ளார். மிகப்பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ‘டியூட்’ திரைப்படம் அக்டோபர் 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு இயக்குநர் படத்தை உருவாக்குவது மட்டுமல்லாது அந்தப் படத்தை சுற்றிலும் எந்தளவுக்கு எதிர்பார்ப்பை உருவாக்குகிறோம் என்பதிலும் படத்தின் வெற்றி அடங்கும். அந்த வகையில், படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான ‘ஊரும் பிளட்டும்…’ முதல் டிரெய்லர் வரை படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மிகச்சரியாக கொண்டு சேர்த்துள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். படம் வெளியாவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் நல்ல…

Read More

இந்தியாவின் பெருமை – Perplexity உலக AI மரபை தலைகீழாக மாற்றியுள்ளது !

இந்தியாவின் பெருமை – Perplexity ஆப், உலக AI இயக்கத்தை தலைகீழாக மாற்றியுள்ளது ! AI சார்ந்து உலகமே மாறி வரும் இந்த வரலாற்று தருணத்தில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட Perplexity ஆப் பயன்பாடு வரலாற்றிலேயே முதன்மையான மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. Google Play Store மற்றும் Apple App Store ஆகிய இரண்டிலும் முதல் இடத்தைப் பிடித்து, ChatGPT, Gemini போன்ற உலகப் பிரமாண்டங்களைப் பின்னுக்கு தள்ளி, இந்தியர்களின் விருப்பமான #1 AI பயன்பாடாக Perplexity உயர்ந்துள்ளது. இந்தியாவைச் சார்ந்த புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு AI, வெற்றியின் பெருமையான தருணம் இது. நாட்டின் தொழில்நுட்ப பயணத்தில் இது ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது. உலக தரத்தில் போட்டியிடும் திறன் கொண்ட உள்ளூர் வளர்ச்சியின் அடையாளத்தில், இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். உலகளவில் மாறி வரும் AI…

Read More

“உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு ‘டீசல்’ படம் புதிய அனுபவமாக இருக்கும். கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும்”- நடிகர் ஹரிஷ் கல்யாண்!

வித்தியாசமான மற்றும் நடிப்புக்குத் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘டீசல்’ படம் மூலம் ஆக்‌ஷன் ஜானரிலும் அடியெடுத்து வைக்கிறார் ஹரிஷ் கல்யாண். அவரது கரியரில் மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘டீசல்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் நிலையில் அக்டோபர் 17 அன்று திரையரங்குகளில் படம் வெளியாகிறது. படம் குறித்து ஹரிஷ் கல்யாண் பகிர்ந்து கொண்டதாவது, “தங்கத்தை விடவும் பெட்ரோல் -டீசல் மக்களுடைய அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடையது. குறிப்பாக, பிளாக் கோல்ட் எனப்படும் கச்சா எண்ணெய் அதிகம் உபயோகப்படுத்தப்படும் வளம். நாம் அடிக்கடி பெட்ரோல் பங்க் செல்வோம். ஆனால்,…

Read More

‘டீசல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டீசல்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட், “‘கட்டா குஸ்தி’ படத்திற்கு பின்பு ஒப்பந்தமான படம் இது. படம் எல்லாம் முடிந்து ரீலீஸ் ஆக பல நாட்கள் ஆகிவிட்டது. என்னுடைய முதல் படமான ‘அங்காடித்தெரு’, ‘மதகஜராஜா’ எல்லாம் படப்பிடிப்பு முடிந்தும் பல வருடங்கள் காத்திருந்து வெளியாகி ஹிட்டான படங்கள். அதனால், நான் வேலை பார்த்த படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆனாலும் அது ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி”. எடிட்டர் சான் லோகேஷ், ” இந்த தீபாவளிக்கு…

Read More

“‘மேட் இன் கொரியா’ கதைக்கும் என் கதாபாத்திரத்திற்கும் தனிப்பட்ட தொடர்பு உண்டு”- நடிகை பிரியங்கா மோகன்!

தனது காதலனுடன் கொரியாவுக்குச் செல்லும் ஷென்பாவின் கனவு துரோகத்தில் சிதையும்போது, அவள் சியோலில் தனிமையை உணர்கிறாள். அந்தத் தனிமையுடனும் புதிய இடத்தில் உள்ள கலாச்சார சவால்களுடன் போராடுகிறாள். வாழ்வின் சவால்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் ஷென்பா மெல்ல தன்னை மீட்டெட்டுக்கும்போது, புதிய நண்பர்களுடன் வாழ்க்கைக்கான பிணைப்பை உருவாக்குகிறாள். நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் கதையாக உருவாகி இருக்கிறது ‘மேட் இன் கொரியா’. பிரியங்கா மோகன், பார்க் ஹை-ஜின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தக் கதையை கார்த்திக் இயக்கியுள்ளார். இது குறித்து இயக்குநர் ஆர். ஏ. கார்த்திக் பகிர்ந்து கொண்டதாவது, “கொரிய கலாச்சாரம் கடந்த பத்தாண்டுகளில் இந்திய கலாச்சாரத்தை கணிசமாக பாதித்துள்ளது. ‘மேட் இன் கொரியா’ கதையில் பணிபுரியத் தொடங்கும் வரை நான் கே-டிராமாவை பார்த்ததும் இல்லை, கே-பாப் இசையை கேட்டதும் இல்லை. இந்தக் கதைக்காக சில விஷயங்கள் ரிசர்ச் செய்தபோது,…

Read More

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜின் “சம்பராலா ஏடிகட்டு (Sambarala Yetigattu) (SYG)” படத்தின் ஒரு புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், “அசுர ஆகமனா ” (Asura Aagamana) சிறு முன்னோட்டம் !

பான் இந்திய அளவில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படமான “சம்பராலா ஏடிகட்டு (SYG)” படத்தின் “அசுர ஆகமனா” (Asura Aagamana)எனும் சிறப்பு முன்னோட்டம், மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜின் பிறந்தநாளை (புதன்கிழமை, அக்டோபர் 15) முன்னிட்டு வெளியிடப்பட்டது. சாய் துர்கா தேஜின் நடிப்பில், இதுவரை உருவாகியுள்ள திரைப்படங்களில் மிக உயர்ந்ததாக ₹125 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இத்திரைப்படம், அதிரடியும் ஆழமும் நிறைந்த ஒரு மாபெரும் உலகத்தை பார்வையாளர்களுக்குக் காட்டுகிறது. இந்த “அசுர ஆகமனா” முன்னோட்டம், இருள், ரகசியங்கள் மற்றும் மாபெரும் பிரம்மாண்ட காட்சிகளால் நிரம்பிய ஒரு புதிய சினிமா பிரபஞ்சத்தின் கதவுகளைத் திறக்கிறது. அதில் சாய் துர்கா தேஜ் கடுமையான, வீர உணர்வுடன் நிறைந்த போர்வீரராக களமிறங்குகிறார். போருக்கான தயாரிப்பில் இருக்கும் அசுரர்கள், எழுச்சியையும் புரட்சியையும் ஏற்படுத்தும் அதிர்ச்சியான தருணங்களை இந்த காட்சி வெளிப்படுத்துகிறது. இயக்குநர்…

Read More

என் வானம் நீயே பாடல் தாய்களுக்கான அர்ப்பணிப்பு

“என் வானம் நீயே” பாடல் ஒரு தாயின் அன்பின் ஆழத்தையும், சொலப்படாத உணர்ச்சிகளையும் கொண்டாடும் ஒரு பாடல். இது வெறும் ஒரு இசை அல்ல, ஒரு உணர்ச்சி. ஒவ்வொரு தாயும் நம் வாழ்க்கையில் ஊற்றும் அந்த அமைதியான ஆசீர்வாதங்களின் பிரதிபலிப்பு “என் வானம் நீயே”. பாடலின் கரு பற்றி, “என் வானம் நீயே என்பது ஒரு தாய் நமக்குக் கொடுக்கும் பேராசீர்வாதங்களில் ஒரு சிறிய துளி. தாய்மார்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல அழகான பாடல்கள் இதுவரை வந்துள்ளன, அவற்றில் நாங்களும் ஒரு துளி சேர்க்க விரும்பினோம்.” இந்தப் பாடல் ஒவ்வொரு தாய்க்கும் அர்ப்பணிப்பு, “அம்மா, இது உனக்காக ♥” மனதை நெகிழவைக்கும் இசை படைப்பின் சிறப்பு அம்சமாக, நடிகர் ரவி மோகன் முதன்முறையாக பாடலாசிரியராக அறிமுகமாகிறார். திரையில் தனது உணர்வூட்டும் நடிப்புகளால் அறியப்பட்ட அவர், இப்போது சொற்களின் உலகில்…

Read More

திருப்பங்களும் கொண்டாட்ட மகிழ்ச்சியும் சந்திக்கும் Bharat Binge Festival – புதிய கதைகள், பன்மொழி வெளியீடுகள் மற்றும் சிறப்பு தீபாவளி சலுகைகள் ~

இந்தியா, அக்டோபர் 13, 2025:
இந்த தீபாவளி, ZEE5 உங்கள் திரைகளை வியப்பூட்டும் கதைகளால் ஒளியூட்ட அழைக்கிறது – அதன் புதிய பண்டிகை பிரச்சாரம் “இந்த தீபாவளி, சிர்ஃப் ZEE5 பர் ப்ளாட் பதலேகா… ரெடியாக வாங்க!” மூலம். இந்த பிரச்சாரத்துடன் தொடங்குகிறது Bharat Binge Festival, இது கதைகளாலும் கலாட்டாவாலும் நிறைந்த பண்டிகையாக இந்த சீசனை மாற்றுகிறது. இந்த பிரச்சாரம் இந்திய பார்வையாளர்களின் ஆர்வத்தை உணர்ந்துள்ளதின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது – அதாவது, மக்கள் தற்போது அதிக ஈடுபாட்டையும் வேகத்தையும் கொண்ட, வகைப்படுத்தப்பட்ட கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். குடும்ப நாடகங்களும் காதல் கதைகளும் எப்போதும் பரவலாகப் பார்க்கப்படும் நிலையில், திரில்லர்கள், மர்மங்கள் மற்றும் குற்றத் துப்பறியும் கதைகள் தற்போது பல்வேறு மொழி பகுதிகளிலும் பெரிதும் விருப்பம் பெற்றுள்ளன. Bharat Binge Festival இதை கருத்தில் கொண்டு, பார்வையாளர்களின்…

Read More

“ஒரு நடிகனாக ‘லெகஸி’ என்னை குஷிப்படுத்தியது”- நடிகர் மாதவன்

வலுவான குற்றப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த வயதான ஒரு பெரியவர், தனது வலிமைமிக்க சாம்ராஜ்யத்தை தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையில் இருந்து பாதுகாக்க ஒரு வாரிசை நியமிக்கப் போராடுகிறார். அவர் குடும்பத்தையும், தனது சாம்ராஜ்யத்தையும், மிக முக்கியமாக தனது பாரம்பரியத்தையும் காப்பாற்ற போராடுகிறார். நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல்ஸாக குடும்ப கேங்ஸ்டர் மற்றும் வாரிசுரிமையை மையமாகக் கொண்டு நகரும் தமிழ் சீரிஸ் ‘லெகஸி’. ஆர். மாதவன், நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தத் தொடரை சாருகேஷ் சேகர் இயக்கி இருக்கிறார். இது குறித்து இயக்குநர் சாருகேஷ் சேகர் பகிர்ந்து கொண்டதாவது, “‘லெகஸி’ எனக்கு மிகவும் பர்சனல். நான் நினைத்ததை கொண்டு வர படைப்பு சுதந்திரம் கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனத்திற்கு நன்றி. மனித உறவுகளின் சிக்கல் மற்றும் உணர்ச்சிகள் குறித்தான கதை எப்போதும்…

Read More