இளையராஜா இசையில் சுசீந்திரன் இயக்கிய ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் முதல் முதலாக கதையின் நாயகனாக நடித்த அப்புக்குட்டி, ‘தேசிய விருது’ பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்புகுட்டி கூறுகையில்… நான் பெற்ற தேசிய விருதுக்கு இளையராஜா அவர்கள் மிக முக்கிய காரணம். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் ஒரு கேரக்டர் செய்திருந்த என்னை, கதையின் நாயகனாக ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் மூலம் மாற்றியவர் சுசீந்திரன் அவர்கள். அந்தப் படத்தில் ‘குதிக்கிற குதிக்கிற குதிரை குட்டி என் மனச காட்டுதே… என்ற பாடலை இளையராஜா அவர்கள் எனக்காக இசையமைத்து, பாடிய அந்தப் பாடலை, படத்தில் வாய் அசைத்து நடித்த எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. மேலும் அந்தப் படத்தின் எமோஷனலான காட்சிகளில் நான் நடிக்கும் போது, அதற்கு இளையராஜா அவர்கள் அமைத்திருந்த பின்னணி இசை டெல்லி வரை கேட்டு, ‘எனக்கு தேசிய…
Read Moreபிளாக் மெயில் – திரைப்பட விமர்சனம்
ஒரு குழந்தை கடத்தல் தான் கதையின் கரு. அதை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தந்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த்-பிந்து மாதவி தம்பதிகளின் பெண் குழந்தை கடத்தப் பட்டதிலிருந்து படத்தை தொடங்குகிறார்கள். இன்னொரு புறம் கொரியர் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் நாயகன் ஜி.வி.பிரகாஷ் தனது பாஸ் கொடுத்த பார்சல் ஒன்றை உரியவரிடம் சேர்க்கப் போகும் இடத்தில் திருடர்களிடம் பார்சலோடு சேர்த்து வேனையும் பறி கொடுக்கிறார். அந்த பார்சலில் விலையுயர்ந்த போதைப்பொருள் இருந்ததை ஜிவி தான் திருடியிருக்க வேண்டும் என சந்தேகப்படும் உரிமையாளர், ஜிவியின் காதலியை கடத்துகிறார். பார்சலை கொடுத்துவிட்டு காதலியை மீட்டுப் போ என்கிறார். அந்தக் குழந்தையைக் கடத்தியது யார்? கடத்தப்பட்ட குழந்தை ஜிவியுடன் எந்த விதத்தில் சம்பந்தப்படுகிறது? ஜிவி தன் காதலியை மீட்டாரா? கேள்விகளுக்கு விடை அதிரடி திருப்பங்களுடன் கூடிய சஸ்பென்ஸ் கதை. இரவுக்கு ஆயிரம் கண்கள்,…
Read Moreஉருட்டு உருட்டு – திரை விமர்சனம்
நாயகன் கஜேஷ் நாகேஷ் வேலை வெட்டி இல்லாமல் இருப்பவர். அவரையும் ஒரு பெண் விரும்புகிறாள். காதல் கிடைத்த பிறகு காதல் போதை தானே வரவேண்டும் ஆனால் நாயகனுக்கு மது போதை தான் முன்நிற்கிறது. காதல் நாயகி ரித்விகா ஸ்ரேயாவுக்கு காதலரின் குடிப் பழக்கம் கவலை தர, காதலனை திருத்த முயற்சி எடுக்கிறார். ஆனால், நாயகனோ குடிபோதையில் இன்னும் தீவிரமாகிறார். போதை இறங்குவதற்குள் மறுபடியும் குடித்துக் குடித்து காதலியை எரிச்சல் படுத்துகிறார். இதற்கிடையில் தன் அழகால் நாயகனை வசீகரிக்க நாயகி பல முயற்சிகள் செய்தாலும், மாது போதையை மது போதை வென்று விட… அதை தனக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானமாக கருதுகிறார் நாயகி. இந்நிலையில் காதலனை வெளியூரில் உள்ள தன் மாமா வீட்டுக்கு அழைத்து செல் கிறார். அங்கும் காதலன் குடியை விடுவதாக இல்லை. இதனால் காதலனை மதுவிடம்…
Read Moreபிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் – தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் “காட்ஸ்ஜில்லா” திரைப்படம்; புதுவிதமான கற்பனையுடன் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு “ரோம்-காம்” வகை. இப்படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில் ‘சரண்டர்’ என்ற படம் மூலம் புகழ் பெற்ற தர்ஷன், மற்றும் பலர் நடிக்கின்றனர்இயக்குனர் மோகன் குரு செல்வா இயக்கத்தில் பூஜையுடன் தொடங்கிய “காட்ஸ்ஜில்லா” திரைப்படம்;சமீபத்தில் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டை பெற்ற “பிளாக் மெயில்” படத்தின் வெற்றியை தொடர்ந்து வித்யாசமான “ரோம் காம்” படமான “காட்ஸ் ஜில்லா” படத்தை தயாரிக்கும் சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஜி. தனஞ்ஜெயன் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ். பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில் வெளியான ‘சரண்டர்’ படத்திற்காக நல்ல பாராட்டுகளைப் பெற்ற தர்ஷன்…
Read Moreநெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள ‘Unaccustomed Earth’ என்ற உலகளாவிய தொடரில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!
இந்திய சினிமாவின் பல்வேறு துறைகளிலும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தனது திறமையை நிரூபித்து ஜொலித்து வருகிறார் நடிகர் சித்தார்த். தமிழ், தெலுங்கு சினிமா மட்டுமல்லாது பாலிவுட் ரசிகர்களின் மனதிலும் இட்ம பிடித்துள்ளார் சித்தார்த். பெரிய திரையிலும் டிஜிட்டல் தளத்திலும் தொடர்ந்து வலுவான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சித்தார்த் தற்போது, ஜும்பா லஹிரியின் விருது பெற்ற சிறுகதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்ட நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான ‘Unaccustomed Earth’-ல் நடிக்கவுள்ளார். நடிகர் சித்தார்த் சமீபத்தில் நடித்த ‘சித்தா’ மற்றும் ‘3BHK’ ஆகிய படங்கள் உணர்வுப்பூர்வமான கதை சொல்லலுக்காக உலகளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அமெரிக்க கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட லஹரியின் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றான ‘Unaccustomed Earth’ தொடரில் நடிப்பதன் மூலம் சர்வதேச பார்வையாளர்கள் மத்தியிலும் சித்தார்த் இன்னும் நெருக்கமாகவுள்ளார்.…
Read Moreஇயக்குநர் மணி ரத்னமிடம் இருந்து பாராட்டு பெற்ற ’18 மைல்ஸ்’ படக்குழுவினர்!
உணர்வுப்பூர்வமான காதல் கதையாக உருவாகியுள்ள ’18 மைல்ஸ்’ கடந்த சில வாரங்களாகவே பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ள ’18 மைல்ஸ்’-ல் இருந்து 14 நிமிடங்கள் கொண்ட புரோலாகை சமீபத்தில் திங்க் மியூசிக் வழங்கியது. இது ’18 மைல்ஸ்’ மீதான எதிர்பார்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இயக்குநர் மணி ரத்னம் ’18 மைல்ஸ்’ பார்த்துவிட்டு ஒட்டுமொத்த குழுவினருக்கும் தன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பகிர்ந்து கொண்டதாவது, “இயக்குநர் மணி ரத்னம் சார் கொடுத்த பாராட்ட எங்கள் அணியில் உள்ள அனைவருக்குமே மறக்க முடியாதது. மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் புரோலாக் திரையிட்டு காட்டும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. மிக நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததாக மணி சார் பாராட்டினார்.…
Read Moreதர்ஷன் நடிக்கும் “காட்ஜில்லா” படத்தின் பூஜை
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் – தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் “காட்ஸ்ஜில்லா” திரைப்படம் புதுவிதமான கற்பனையுடன் உருவாகும் ஒரு “ரோம்-காம்” வகை. இப்படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில் ‘சரண்டர்’ என்ற படம் மூலம் புகழ் பெற்ற தர்ஷன், மற்றும் பலர் நடிக்கின்றனர். இயக்குனர் மோகன் குரு செல்வா இயக்கத்தில் பூஜையுடன் தொடங்கிய “காட்ஸ்ஜில்லா” திரைப்படம், சமீபத்தில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டை பெற்ற “பிளாக் மெயில்” படத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகிறது. வித்யாசமான “ரோம் காம்” படமான “காட்ஸ் ஜில்லா” படத்தை தயாரிக்கும் சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஜி. தனஞ்ஜெயன் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ். பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில்…
Read MoreSIIMA விருது விழாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மகுடம் சூடியுள்ளார் நடிகை சான்யா ஐயர்!
இளைமை, சாதுர்யம் மற்றும் நடிப்புத் திறமை ஆகியவற்றை ஒருங்கே பெற்றவர் நடிகை சான்யா ஐயர். அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் திரை வசீகரத்துடன் தென்னிந்திய சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார். விடாமுயற்சி மற்றும் நடிப்பு மீதான ஆர்வத்துடன் கன்னட சினிமாவில் 15 வருடங்களுக்கும் மேலாக தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். ‘நம் அம்மா ஷாரதே’, ‘அரசி’, ‘புட்டகௌரி மதுவே’ போன்ற தொடர்களில் குழந்தை நட்சத்திரமாகவும், ‘கஜா’, ‘முகபுதா’ மற்றும் ‘விமுக்தி’ போன்ற படங்களிலும் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். கன்னட பிக் பாஸ் ஓடிடி சீசன் 1 வெற்றியாளராக அவர் பெற்ற வெற்றியும், 2024 ஆம் ஆண்டில் வெளியான இந்திரஜித் லங்கேஷின் கௌரி திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்ததும் இன்று இந்திய சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் சான்யா. இதுகுறித்து சான்யா பகிர்ந்து…
Read Moreமிராய் – திரை விமர்சனம்
மாயாஜாலக் கதைகள் எப் போதுமே ரசிகர்களின் கொண்டாட்டம் ஆகிவிடும். இந்த கொண்டாட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருப்பார்கள். இப்படியான ஒரு கதையை வரலாற்று பின்னணியும் புராணமும் இணைத்து சொன்னால் அது காவியம். அப்படி ஒரு காவியம் இந்த மிராய். கதை சமகாலத்தில் நடக்கிறது. பேரரசர் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய ரகசியத்தை 9 புத்தகங்களில் மறைத்து வைக்கிறார். தீயசக்திகள் இந்த 9 புத்தகங்களைக் கைபற்றாமல் இருக்க 9 வீரர்களையும் நியமிக்கிறார்.பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்,தற்போதைய நவீன காலகட்டத்தில், மந்திர சக்திகள் மூலம் உலகை ஆட்டிப்படைக்க நினைக்கும் மனோஜ் மஞ்சு இந்த 9 புத்தகங்களை அடைய முயல்கிறார். மிராய் என்ற அதீத சக்தி படைத்த கோள் உதவியுடன் மனோஜின் முயற்சியை முறியடிக்க நாயகன் தேஜா சஜ்ஜா புறப்படுகிறார். சர்வ சக்தியும் ஒன்றிணைந்த வில்லனை தெய்வ சக்தி துணையுடன் போரில்…
Read Moreகுமார சம்பவம் – திரை விமர்சனம்
சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நாயகனுக்கு அந்த முயற்சி கைகூடி வரும் நேரத்தில் எதிர்பாராத சோதனை. தாத்தாவின் நண்பராக அந்த வீட்டில் பல வருடம் இருந்து வந்த சமூக சேவகர் திடீர் மரணம் அடைகிறார்.அது இயற்கை மரணமா அல்லது கொலையா? என்று போலீஸ் விசாரிக்க தொடங்குகிறது. முதல் கட்டமாக காவல் துறையின் பார்வை நாயகன் பக்கம் திரும்புகிறது. போலீசின் சந்தேகப் பார்வையிலிருந்து தப்பிக்க சில தடாலடி முயற்சிகள் மேற்கொள்கிறார் நாயகன். அந்த சமூக சேவகரின் விரோதிகள் யார்? அவரால் பாதிக்கப்பட்ட யார் அவரை கொல்லும் அளவுக்கு போயிருப்பார்கள்? என்று தனது நண்பர்களுடன் சேர்ந்து துப்பறிகிறார். இந்த முயற்சியில் அவர் கொலையாளியை கண்டுபிடித்தாரா?அவர் நினைத்தபடி இயக்குநர் ஆனாரா? கேள்விகளுக்கான விடை எதிர்பாராத கிளைமாக்ஸ். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி தொடர் மூலம் புகழ் பெற்ற குமரனுக்கு சினிமாவில்…
Read More