காயல் – திரை விமர்சனம்

காயல் என்பது கடல் சார்ந்த இடம். கடலையும் ஒரு கதாபாத்திரமாக்கி ஒரு காதல் கதைக்கு வடிவம் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் தமயந்தி. கடல் சார்ந்த ஆராய்ச்சியில் இருக்கும் நாயகன் லிங்கேஷ் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவருக்கும் உயர்சாதி நாயகி காயத்ரிக்கும் காதல். காதலன் பெற்றோரை இழந்தவன் என்பதால் அவன் பக்கம் ரூட் கிளியர். ஆனால் காதலி தரப்பிலோ தந்தை சம்மதம் தர, தாய் மட்டும் பிடிவாதம் காட்டுகிறார். தாயை கன்வின்ஸ் பண்ண மகள் எவ்வளவோ முயன்றும் பலன் இல்லாமல் போக, வேறு வழியின்றி மகள் தற்கொலை முடிவை எடுத்து விடுகிறாள். இதன்பின்பு எதிர்ப்பு தெரிவித்த அந்தத் தாயின் நிலை என்ன? போலீஸ் உயர் அதிகாரியான தந்தையின் நிலை என்ன? அந்தக் காதலன், தனது காதலியின் மரணத்தை எப்படி எடுத்துக் கொண்டான் என்பதை உளவியல் ரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும்…

Read More

ஈழத்தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் ஓசை பிலிம்ஸ் வழங்கும் “அந்தோனி” முழுநீளத் திரைப்படம்.

ஓசை பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில், நாயகனாக கயல் வின்சன்ட் மற்றும் நாயகியாக காதலிக்க நேரமில்லை TJ.பானு ஆகியோருடன் பெரும்பான்மையான ஈழத்திரைக் கலைஞர்களும் பிரபல இந்தியக் கலைஞர்களும் இணைந்து நடிக்கும் “அந்தோனி” என்கின்ற புதிய திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார் Maestro “ இசைஞானி” இளையராஜா அவர்கள். அந்தோனி திரைப்படமானது இலங்கை – யாழ்ப்பாணத்தில் கடந்த 05.03.2025 ல் பூசையுடன் ஆரம்பிக்கப்பட்டு, 45 நாட்களுக்கு மேலாக இரவு பகல் பாராது படப்பிடிப்புகள் நடைபெற்று 30.04.2025 ல் நிறைவுபெற்றிருந்தது. திரைப்படத்தின் Post Production பணிகள் சித்திரைமாதம் படத்தொகுப்புடன் (எடிற்றிங்) வேலைகள் ஆரம்பிக்கப் பட்டுப் பின்னர் குரல்ப்பதிவுகள் (டப்பிங்) நிறைவுசெய்யப்பட்டு 10.08.2025ல் இசையமைப்புக்குத் தாயாராகியது. எமது ஈழத்தமிழ் சினிமாவுக்கு ஒரு உலகறிந்த இசையமைப்பாளரை ஒழுங்கு செய்வதே சிறந்ததாக இருக்கும் எனும் எண்ணம் படத்தயாரிப்புக் காலங்களிலேயே கலந்துரையாடப்பட்டதால் இசைஞானி இளையராஜாவே அவர்கள் இத்திரைப்படத்திற்கு தகுந்த…

Read More

வித்தியாசமான  ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது!

~ T. ராஜா வேல் இயக்கத்தில், S. விஜயபிரகாஷ் தயாரிப்பில் SK Productions சார்பில்  உருவான ஹவுஸ் மேட்ஸ்  திரைப்படத்தில், தர்ஷன் – ஆர்ஷா சாந்தினி பைஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 19 முதல் ZEE5 தமிழ் ஓடிடியில் ஸ்ட்ரீமாகிறது ~ இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி வெளியீடாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “ஹவுஸ் மேட்” தமிழ் திரைப்படத்தை வெளியிடவுள்ளது. ஹாரர், ஃபாண்டஸி மற்றும் காமெடி ஆகிய மூன்று ஜானர்களையும் கலந்த இந்தப் படம், இயக்குநராக T. ராஜா வேலின் அறிமுக படமாகும். S. விஜயபிரகாஷ் தயாரிப்பில், ல் SK Productions சார்பாக உருவாகியுள்ளது. தர்ஷன் – ஆர்ஷா சாந்தினி பைஜு ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், தீனா, அப்தூல் லீ…

Read More

பாம் – திரை விமர்சனம்

மலையோரத்தில் இயற்கையின் கொடையாய் காளக்கம்மாய்ப்பட்டி கிராமம். ஒரு காலத்தில் அங்கே மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். மலை யுச்சியில் மயில் அகவும் ஓசையும் அதைத்தொடர்ந்து வானில் தெரியும் ஜோதியும் அவர்கள் தெய்வ நம்பிக்கையாக இருந்தது. இந்த அடையாளங்களுக்கு பிறகு தான் தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு திருவிழா நடத்துவார்கள். ஆனால் சோதனையாக இந்த அறிகுறிகள் ஒரு காலத்தில் வராமல் போகவே, தங்களின் யார் தெய்வ குற்றம் செய்திருப்பார்கள் என்று அவர்களுக்குள் இரு பிரிவாக பிரிந்து அடித்துக் கொள்கிறார்கள். இதற்கிடையே இயற்கைச் சீரழிவால் மலையில் இருந்து உருண்டு விழுந்த பெரிய கல் இரண்டாக உடைந்து கிடக்க… பெரிய கல்லை ஒரு கூட்டமும் சிறிய கல்லை இன்னொரு கூட்டமும் எடுத்துக் கொண்டு தெய்வமாக வழிபடத் தொடங்குகிறது.இதன் பிறகு காளக்கம்மாய்ப்பட்டி என்ற அந்த ஊர் காளப்பட்டியாகவும் கம்மாய்ப் பட்டியாகவும் இரண்டாக பிரிகிறது. ஒரு பிரிவினரிடம்…

Read More

சிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 (Kantara Chapter 1 ) இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு  பாடல் பாடியுள்ளார் !!

தேசிய விருது பெற்ற நடிகர்-பாடகர் தில்ஜித் தோசாஞ், (Diljit Dosanjh) இயக்குநர்–நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக கைகோர்த்துள்ளார். இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிமிகு பதிவொன்றை பகிர்ந்த தில்ஜித், காந்தாரா திரைப்படம் தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ளார் : “காந்தாரா என்ற அற்புத படைப்பை உருவாக்கிய என் சகோதரர் @rishabshettyofficial க்கு  பெரு வணக்கம். இந்த படத்துடன் எனக்கு ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது, அதை  இப்போது சொல்ல முடியாது. ஆனால் திரையரங்குகளில் வராஹ ரூபம் பாடல் ஒலித்தபோது, பேரானந்தத்தில் கண்ணீர் விட்டேன்.” மேலும் வரவிருக்கும் ப்ரீக்வல் குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய தில்ஜித்.., இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத்திற்கு (B. Ajaneesh Loknath) நன்றி தெரிவித்தார். “ஒரே நாளில் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்,” என்று குறிப்பிட்டார். தில்ஜித் தோசாஞ் –…

Read More

100 பிரபலங்கள் வெளியிடும் ‘அடியே வெள்ளழகி’ ஆல்பம் பாடல்!

கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜீவிதா நடிப்பில் உருவான “அடியே வெள்ளழகி” பாடலின் முதல் பார்வையை 100க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள் .இதுவரை கலையுலகம் காணாத பிரம்மாண்ட புதுமை இது. வருகிற 12-ஆம் தேதி கட்டெறும்பு சேனலில் இந்தப்பாடல் வெளிவருகிறது .இந்த ஆல்பம் பாடலைக் கட்டெறும்பு ஸ்டாலின் தயாரித்துள்ளார் . அனைவரும் கண்டு மகிழும்படி உருவாக்கப்பட்டுள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் காதல் என்கிற மெல்லுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கியுள்ளது. இந்தப் பாடலில் நாயகனாக மிதுன் சக்கரவர்த்தி நடித்துள்ளார். இவர்,பில்லாபாண்டி, தேவராட்டம், புலிக்குத்திபாண்டி அங்காரகன், கருப்பு பெட்டி போன்ற பல படங்களில் தோன்றி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அறியப்பட்ட நடிகரான கே.சி.பிரபாத்தின் மகன். மிதுன் சக்கரவர்த்தி,இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவான கொடி வீரன் படத்தில் சிறுவனாக அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ந்து பில்லாபாண்டி, கருப்புபெட்டி போன்ற படங்களில்…

Read More

தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட ‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

‘தணல்’ படத்தின் ஆழமான உணர்வுகள், நடிகர்களின் திறமையான நடிப்பு மற்றும் வலுவான கதைசொல்லல் ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நேர்மறையான பாராட்டுகள் கிடைத்து வருகிறது. இந்தப் பாராட்டுகள் மூலம் திரையரங்குகளில் ‘தணல்’ படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் திரையரங்குகளில் அதிகரித்துள்ளது. ‘தணல்’ குறித்து முன்னணி எக்ஸ்பிட்டர் பகிர்ந்து கொண்டதாவது, “‘தணல்’ படம் திரையிடப்பட்ட நாள் முதலே பார்வையாளர்கள் எண்ணிக்கை திரையரங்குகளில் அதிகமாகத் தொடங்கியது. விறுவிறுப்பாகவும் அதேசமயம் மனதைத் தொடும் கதையாகவும் இருப்பதாக படம் பார்த்த பார்வையாளர்கள் சொல்கின்றனர். கூட்டம் அதிகரித்து வருவதால் அதற்கேற்றாற் போல கூடுதல் காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளோம்” என்றார். ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தயாரிப்பு அணியில் இருந்து செய்தி தொடர்பாளர் பேசியதாவது, “‘தணல்’ படத்திற்கு நிறைய அன்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின்…

Read More

-அர்ஜுன் தாசின் மாறுபட்ட நடிப்பில் ,’பாம்’ -எப்படி இருக்கிறது?,

கைதி படத்தில் வில்லனாக அறிமுகமான அர்ஜுன் தாஸ் அது முதல் தமிழ் திரையலகின் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார். தொடர்ந்து அநீதி உள்ளிட்ட படங்களில் நாயகன் ஆனாலும், கதை என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்ப தன்னை நடிப்பில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் இப்போது அவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் பாம் படத்தில் கிராமத்து நாயகனாக முற்றிலும் புதுவித நடிப்பை தந்து இருக்கிறார். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படப் புகழ் விஷால் வெங்கட் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். வேற்றுமையால் இரண்டாக பிரிந்த ஊரை ஒன்றாக்க விரும்பும் நண்பனுக்கு தோள் கொடுக்கிறார். எதிர்பாராத விதமாய் நண்பன் இறந்து போக, நண்பனின் பிணத்தை வைத்தே ஊரை ஒன்று சேர்க்கிறார். அது எப்படி என்பது சுவாரசிய கதைக்களம். கதையின் நாயகன் மணி முத்துவாக அர்ஜுன் தாஸ். கிராமத்து கதைக் கேற்ப மண் மணம்…

Read More

உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள  “சரீரம்” செப்டம்பர் 26  திரைக்கு வருகிறது !!

G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சரீரம்”. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. கடவுள் ஒவ்வொருவருக்கும் தந்த தனிக் கொடை தான் சரீரம். அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை, தன் சரீரத்தை மாற்றிக்கொள்ளும் உரிமை எவருக்குமில்லை, இந்த கருத்தை ஆழமாக பேசும் படைப்பாகவும் இளமை துள்ளும் காதல் படைப்பாகவும் இப்படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள். ஒரு காதல் ஜோடி, அவர்களின் காதலுக்கு குடும்பமே  எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும்  தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அந்த காதல் ஜோடியை இந்த…

Read More

திரைக்கதை எழுத்தாளர் & நடிகை சாந்தி பாலச்சந்திரனின் எழுத்து லோகா Chapter 1 – சந்திராவை வரலாற்றில் பதித்தது

உலகளாவிய வசூலில் அதிர்வலை ஏற்படுத்தி வரும் லோகா: Chapter 1 – சந்திரா, இந்திய திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், மலையாளத் திரையுலகிலிருந்து எழுந்து வந்த எதிர்பாராத சூப்பர் ஹிட் எனப் போற்றப்படுகிறது. துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும், டொமினிக் அருண் இயக்கியுள்ள இப்படம் தற்போது பெருமையுடன் ₹200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. மேலும், இந்த தொடரின் அடுத்த பாகங்கள் தயாரிப்பில் உள்ளன என துல்கர் அறிவித்திருப்பது சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. மிகுந்த பாராட்டைப் பெற்ற நடிப்புகள், செழுமையான தயாரிப்பு மதிப்புகள், தொழில்நுட்பத் திறமைகள் ஆகியவை இதனை உயர்த்திக் கொண்டிருந்தாலும், இந்த படைப்பின் ஆழத்தை அதிகரித்த முக்கிய அம்சமாகும் – நடிகையுமான சாந்தி பாலச்சந்திரன் இணை எழுத்தாளராக பங்களித்திருப்பது. தமிழ் ரசிகர்கள்…

Read More