கிராமிய தமிழ்நாட்டின் அரசியல் சூழலை மையமாகக் கொண்ட இந்த crime thriller தொடரில், பிரபுதேவா தன் வழக்கமான கவர்ச்சியை விட்டு விலகி, பலத்த கம்பீரத்துடன், அரசியலுடன் பின்னிப்பிணைந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவலராக நடிக்கிறார். ஆற்றல், அடையாளம், நீதிக்கான போராட்டம் ஆகியவை மையமாகும். இந்தக் கதையில், பிரபுதேவாவின் நடிப்புப் பரிமாற்றம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். தனது கதாபாத்திரம் குறித்து பிரபுதேவா கூறியது: சேதுராஜன் IPS ஒரு காவலர் மட்டும் அல்ல, கடமை, அடையாளம், அரசியல் ஆகிய புயலில் சிக்கிக்கொள்ளும் மனிதர். இந்தக் கதாபாத்திரம் எனக்கு முந்தைய அனுபவங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, மிகவும் சவாலாக இருந்தது. இந்தக் கதை இன்றைய காலகட்டத்திற்கு தேவையானது என நம்புகிறேன். வேரூன்றிய தைரியமான கதைகளை முன்வைக்கும் Sony LIV, இந்தத் தொடரையும் அதே உறுதிப்பாட்டுடன் வழங்குகிறது.” ரஃபிக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகும்…
Read Moreமஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக, ஷீலா கதாநாயகியாக நடிக்க படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. வேம்பு திரைப்படம் பெண்ணியம் பேசும் படம். பெண்களுக்கு அனைத்து விஷயங்களிலும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. நம் மொத்த சமூக கட்டுப்பாடுகளும் பெண் மீதுதான் கட்டமைக்கபட்டிருக்கிறது. இச்சமூகம் பெண் என்ன உடை உடுத்த வேண்டும் என்ன உடை உடுத்தக் கூடாது என்பதைப் பற்றி பேசுகிறது. பெண்ணானவள் எப்போது வீட்டிற்கு திரும்ப வேண்டும் யார் நல்லவள் யார் கெட்டவள் என்பதைப் பற்றி பேசுகிறது. எத்தனை மணிக்கு உறங்க வேண்டும் எத்தனை மணிக்கு எழ வேண்டும் என்பதைப் பேசுகிறது. விதிவிலக்கு இல்லாமல் எல்லா மதமும் இதைத்தான் பேசுகிறது, வயசுக்கு வந்தவுடன் தீட்டு என்று ஒதுக்கி வைப்பது கணவனை இழந்த பெண் எந்த ஒரு காரியத்திற்கும் முன்…
Read Moreஆரோமலே – தமிழ் சினிமாவில் புதிய ரொமான்ஸ் அலை! இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் வெளியீடு!
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரொமான்டிக் காமெடி படம் ‘ஆரோமலே’ மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்திலிருந்து இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகி உள்ளது. இது காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளால் நிரம்பிய உலகத்துக்குள் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது. முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் இதயம் தொடும் ரொமான்ஸை இணைத்து உருவாக்கப்பட்ட ‘ஆரோமலே’, தமிழ் சினிமாவில் பெரும் இடைவெளிக்குப் பிறகு ரொமான்டிக் காமெடி வகை படமாக வெளியாக உள்ளது. பழம்பெரும் நடிகர் தியாகுவின் மகனான சரங் தியாகு இந்த படத்தை இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோ எனும் தனது தனியார் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் எஸ். வினோத் குமார் தயாரித்துள்ளார். சித்து குமார் இசை ரசிகர்களை கவர்ந்து பாடல்கள் ஹிட் அடிக்கும் நிலையில், பின்னணி இசையும் படத்தின் உணர்ச்சியை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. கிஷன் தாஸ் –…
Read Moreபெண்கோடு படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை ஜித்தன் ரமேஷ் வெளியிட்டார்
மலையாளத்தில் இப்போது புதிய போக்கில் மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவை பெரிய நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமலேயே கதையின் அடர்த்தியை நம்பி உருவாக்கப்பட்டு ஒரு வணிக பரப்பை எட்டி உள்ளன.அந்த வகையிலான வரிசையில் உருவாகியுள்ள படம் தான் ‘பெண்கோடு’. ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை;இரண்டும் தனித்தனியானவை. என்கிறார் தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி. ஆண் இரண்டு கண்களால் பார்ப்பதைப் பெண் ஓர் இதயத்தால் பார்க்கிறாள்.ஆண் அழகை குணமாகப் பார்க்கிறான். பெண்ணோ குணத்தை அழகாகப் பார்க்கிறாள்.இப்படி ஆண், பெண் இடையே பார்வையில் எண்ணங்களில் வேறுபாடு உண்டு. இப்படி பெண்களுக்கு என்று பிரத்தியேகமான சில எண்ணங்கள் உள்ளன.அவர்களுக்கு என்று குறியீடுகள், சங்கேதங்கள், சமிக்ஞைகள் உள்ளன. அவற்றை அவர்களின் உலகத்தில் உள்ளே நுழைந்து பார்த்தால்தான் அறிந்து கொள்ள முடியும். அவற்றின் அடிப்படையில் உருவாகி இருப்பது தான் இந்த ‘பெண்கோடு’…
Read Moreகாட்சி முதல் வெற்றி வரை: சக்தி ஃபிலிம் பேக்டரியுடன் ‘காந்தி கண்ணாடி’ வெற்றிக்கொண்டாட்டம்
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’. செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியான இந்த படம், சுவாரஸ்யமான உள்ளடக்கம், இயல்பான நடிப்பு மற்றும் ஆழமான உணர்வுகளுக்காக பாராட்டுகளையும் பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த வெற்றியை நினைவுகூரும் வகையில், படத்தின் விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி பி.சக்திவேலன் அவர்கள், தனது அலுவலகத்தில் ‘காந்தி கண்ணாடி’ படக்குழுவினரை அழைத்து சிறப்பு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தார். அந்நிகழ்வு, நன்றியும் மகிழ்ச்சியும் நிரம்பிய நினைவுகூரும் விழாவாக அமைந்தது. தயாரிப்பாளர் ஜெய் கிரண் கூறுகையில்: “காந்தி கண்ணாடி தயாரித்த அனுபவம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இப்போது மக்களிடம் இருந்து இவ்வளவு…
Read Moreஎன் சினிமா கரியரில் எப்போது வெளியாகும் என நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படங்களில் ஒன்று ‘தணல்'”- நடிகர் அஸ்வின் காகுமனு!
நடிகர் அதர்வா முரளியின் ‘தணல்’ படத்தில் நடிகர் அஸ்வின் காகுமனு வில்லனாக நடித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. செப்டம்பர் 12, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது ‘தணல்’ திரைப்படம். படம் வெளியாவதற்கு முன்பே பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட ஷோவில் படம் பாராட்டுகளை குவித்தது. படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பவர்ஃபுல் நடிப்பில் மிரட்டிய அஸ்வின் நடிப்பும் பாராட்டுகள் பெறத் தவறவில்லை. படம் குறித்து நடிகர் அஸ்வின் காகுமனு பகிந்திருப்பதாவது, “என்னை இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்த இயக்குநர் ரவீந்திர மாதவா சாருக்கே அனைத்து பாராட்டும் தகும்” என்றார். இதுவரை மென்மையான, ரொமாண்டிக் ஹீரோ கதாபாத்திரத்தில் அஸ்வினை பார்த்த ரசிகர்களுக்கு ‘தணல்’ படத்தில் அவரது வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும். தனது கதாபாத்திரம் பற்றி அஸ்வின் பேசியதாவது, “இயக்குநர் ரவீந்திர மாதவா படத்தின் கதையை என்னிடம்…
Read More“என் சினிமா கரியரில் எப்போது வெளியாகும் என நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படங்களில் ஒன்று ‘தணல்'”- நடிகர் அஸ்வின் காகுமனு!
நடிகர் அதர்வா முரளியின் ‘தணல்’ படத்தில் நடிகர் அஸ்வின் காகுமனு வில்லனாக நடித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. செப்டம்பர் 12, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது ‘தணல்’ திரைப்படம். படம் வெளியாவதற்கு முன்பே பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட ஷோவில் படம் பாராட்டுகளை குவித்தது. படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பவர்ஃபுல் நடிப்பில் மிரட்டிய அஸ்வின் நடிப்பும் பாராட்டுகள் பெறத் தவறவில்லை. படம் குறித்து நடிகர் அஸ்வின் காகுமனு பகிந்திருப்பதாவது, “என்னை இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்த இயக்குநர் ரவீந்திர மாதவா சாருக்கே அனைத்து பாராட்டும் தகும்” என்றார். இதுவரை மென்மையான, ரொமாண்டிக் ஹீரோ கதாபாத்திரத்தில் அஸ்வினை பார்த்த ரசிகர்களுக்கு ‘தணல்’ படத்தில் அவரது வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும். தனது கதாபாத்திரம் பற்றி அஸ்வின் பேசியதாவது, “இயக்குநர் ரவீந்திர மாதவா படத்தின் கதையை என்னிடம்…
Read Moreடிஸ்னியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘டிரான்: ஏரெஸ்’ வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ளது!
டிரான்ஸ் பிரான்சிஸிஸ் உலகில் இருந்து வெளியாகும் அதிக எதிர்பார்ப்பில் உள்ள புதிய படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. ‘டிரான்: ஏரெஸ்’ டிஸ்னியின் 1982 ஆம் ஆண்டு வெளியான அறிவியல் புனைக்கதை படம். ‘டிரான்’ மற்றும் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘டிரான்: லெகசி’ ஆகியவற்றின் தொடர்ச்சியாகும். இந்த படம் அக்டோபர் 10, 2025 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ‘டிரான்: ஏரெஸ்’ டிஜிட்டல் உலகில் இருந்து நிஜ உலகிற்கு, மனிதகுலம் ஏஐ மனிதர்களுடனான முதல் சந்திப்பை நிகழ்த்தும் ஆபத்தான பணிக்காக அனுப்பப்படுகிறார். இந்தப் படத்தில் கிராமி விருது வென்ற நைன் இன்ச் நெயில்ஸ் இசைக்குழுவின் ‘As Alive As You Need Me To Be’ என்ற புதிய பாடலும் இடம்பெற்றுள்ளது. ஜோச்சிம் ரோனிங் இயக்கியுள்ள…
Read Moreநடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் ‘An Ordinary Man’ படத்தின் ப்ரோமோ வெளியீடு;
நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதற்கு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று பெயரிடப்பட்டு அதன் துவக்க விழா சென்ற மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்பு வெளியானது. அதில் ரவி மோகன், “நான் இயக்குனராகி விட்டேன்” என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர் யோகி பாபுவை நாயகனாக வைத்து முதன்முறையாக இயக்கவிருக்கும் படம் தான் “An Ordinary Man”. அவர் படம் இயக்குவது குறித்து அவருடைய அண்ணன் மோகன் ராஜா நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல், அந்த விழாவிற்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் கார்த்தி, நடிகர் டாக்டர் சிவராஜ் குமார், நடிகை ஜெனிலியா மற்றும் அனைத்து பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள். யோகிபாபு பேசும்போது, கோமாளி படத்தில் பணியாற்றும்போது…
Read Moreஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் 2022ம் ஆண்டு வெளியாகி பாராட்டுகளை குவித்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது
ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்த திரைப்படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் தற்போது திரையரங்க மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. முன்னணி திரைக் குழுமமான பிவிஆர் சினிமாஸ் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தை வரும் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறது. மனதைத் தொடும், மக்களின் மொழியை பேசும் திரைப்படமான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மறு வெளியிட்டின் போதும்…
Read More