பணக்காரர்களும் மிகப்பெரும் வசதி படைத்தவர்களும் வாழும் இந்த உலகில் அதிகம் பேசப்படாத இந்தியாவின் மிடில் கிளாஸ் ஹீரோக்களைப் பற்றி பேசவருகிறது புதிய திரைப்படம். மாதத்தவணை, தள்ளுபடி, 1BHK சுற்றி இருக்கும் கனவு என நகைச்சுவை, எமோஷன்ஸ் என பல விஷயங்களை கொண்டது மிடில் கிளாஸ் வாழ்க்கை. இந்தப் படம் வெறும் கதை மட்டுமல்லாது, ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு பார்த்து, சின்ன சின்ன விஷயங்களில் சந்தோஷப்பட்டு, வீட்டுக்கடனை விட அதிக சுமையாய் இருக்கும் மாதத்தவணை என மிடில் கிளாஸ் வாழ்க்கையின் யதார்த்தம் பற்றி பேசுகிறது. பார்வையாளர்கள் பலரின் வாழ்வையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் படம் உருவாகியுள்ளது. மிடில் கிளாஸ் தம்பதிகளாக முனீஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய…
Read More“‘தணல்’ படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி “- நடிகை லாவண்யா திரிபாதி!
தனது வசீகரத்தாலும் திறமையான நடிப்பாலும் தென்னிந்திய பார்வையாளர்களை வசீகரித்துள்ளார் நடிகை லாவண்யா திரிபாதி. பத்து வருடங்களுக்கும் மேலாக தனித்துவமான கதைகள் மற்றும் கதாநாயகி அல்லாது முக்கிய கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறார் லாவண்யா. செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் அதர்வாவின் ‘தணல்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக திரையிடப்பட்டு பாரட்டுகள் பெற்ற ‘தணல்’ படக்காட்சியில் இவரது நடிப்பு பலரையும் ஈர்த்துள்ளது. படம் குறித்து லாவண்யா திரிபாதி பேசியதாவது, ” ரசிகர்களும் பத்திரிக்கையாளர்களும் எனது நடிப்பைப் பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் முதல் பாதியில் ரொமாண்டிக் தருணங்களுடன் இயல்பாகவும் இரண்டாம் பாதியில் தீவிரமான எமோஷனல் தருணங்களுடனும் என் கதாபாத்திரம் அமைந்திருக்கும். வழக்கமான கதாநாயகி அல்லாது படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுத்த…
Read More“வெளியாகும் 200 படங்களில் 190 படங்கள் தோல்வியடையக் காரணம் இதுதான்” – கவிஞர் வைரமுத்து ஆதங்கம்
இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி , ‘தலைவாசல்’ விஜய், சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த ‘காடுவெட்டி’ குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து…
Read Moreஇயக்குநர் விக்ரமன் பெருமிதம்: மகன் விஜய் கனிஷ்காவின் ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படம் மூன்று விருதுகள் வென்று சாதனை!
சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் விக்ரமன், தனது மகன் விஜய் கனிஷ்கா நடிப்பில் வெளியான ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படம் வணிக ரீதியில் போதிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அவரது நடிப்புக்காக மூன்று விருதுகளைப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற SIIMA விருது வழங்கும் விழாவில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த புதுமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, விஜய் கனிஷ்கா விருது பெற்றதை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளார். திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் இயக்குநர் விக்ரமன் தனது பதிவில், “துபாயில் நடந்த SIIMA விருது வழங்கும் விழாவில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த புதுமுகமாக என் மகன் விஜய் கனிஷ்கா தேர்வு செய்யப்பட்டு விருது பெற்ற போது..வாக்கு அளித்து support பண்ணிய அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்தார். மேலும், வணிக ரீதியில் படம் எதிர்பார்த்த…
Read More“நிறைய ஆக்ஷன் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உணர்வுப்பூர்வமான கதையாக ‘தணல்’ இருக்கும்” – இயக்குநர் ரவீந்திர மாதவா!
நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதை பார்க்கிறோம். இந்த வரிசையில் நடிகர் அதர்வாவின் ‘தணல்’ படமும் இணைய இருக்கிறது. அன்னை ஃபிலில் புரொடக்சன் தயாரிப்பில் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில் ரவீந்திர மாதவா இயக்கி இருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 12 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தியேட்டர் மற்றும் ஓடிடி தளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான நடிகர் அதர்வா முரளியின் ‘DNA’ படத்திற்குப் பிறகு அவரது ‘தணல்’ படம் மீதான எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறியிருப்பதாவது, “நிறைய ஆக்ஷன் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உணர்வுப்பூர்வமான கதையாக ‘தணல்’ இருக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாத இரண்டு நபர்களைப் பற்றிய கதை இது. வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டு, பழிவாங்கும் கோபத்தில் இருக்கும்…
Read Moreகோல்டன் கேட் ஸ்டுடியோஸ் வழங்கும், ப்ரீத்தி கரிகாலன் இயக்கத்தில் பிக் பாஸ் விக்ரமன் – சுப்ரிதா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!
உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மிகப்பிடித்த ஜானர்களில் ஒன்று ரொமாண்டிக் காமெடி. அழகான தருணங்கள், மனதை வருடும் இசை, கண்கவரும் காட்சிகள் என கலர்ஃபுல் எண்டர்டெயினரான ரொமாண்டிக் காமெடி ஜானரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது கோல்டன் கேட் ஸ்டுடியோஸ். சமீபத்தில், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிய பூஜையுடன் படம் தொடங்கியது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தில் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சுப்ரிதா நடிக்கிறார். இவர்களுடன் ஜென்சன் திவாகரும் நடிக்கிறார். படம் குறித்து இயக்குநர் ப்ரீத்தி கரிகாலன் பகிர்ந்து கொண்டதாவது, “எல்லோரும் தங்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்ளும்படியான தோற்றம் விக்ரமனிடம் உள்ளதாலேயே அவரை இந்தக் கதைக்கு தேர்ந்தெடுத்தேன். இந்தக் கதாபாத்திரத்தின் ஆழத்தையும் நேர்மையையும் விக்ரமன் நிச்சயம் திரையில் சரியாக பிரதிபலிப்பார்” என்றார். படத்தின் கதை குறித்து கேட்டபோது, “இன்றைய பார்வையாளர்களுக்கு…
Read Moreகலையுலக முன்னணியினர் மற்றும் பல்துறை பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்றது
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் (2025-2028) அறிமுக விழா சென்னை மதுரவாயிலில் உள்ள பாக்கியலட்சுமி கல்யாண மண்டபத்தில் இன்று (செப்டம்பர் 7) நடைபெற்றது. கலையுலக முன்னணியினர் மற்றும் பல்துறை பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரத்,செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நவிந்தர், பொருளாளரக தேர்ந்தெடுக்கப்பட்ட கற்பகவல்லி மற்றும் இதர நிர்வாகிகளான வசந்த், சிவக்கவிதா, ஆதித்யா, தேவானந்த், பிரேமி, ஈஸ்வர் ரகுநாதன், ரஞ்சன், உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். வெற்றி பெற்றவர்கள் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும், துணை முதலமைச்சர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களையும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன் அவர்களையும்…
Read Moreநடிகர் தனுஷ் வெளியிட்ட வ்யோம் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு எண் 1 – படத்திற்கான தலைப்பு: மனிதன் தெய்வமாகலாம்
தமிழ் திரைப்பட ரசிகர்களுக்காக தயாராகி வரும் வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை இன்று நடிகர் தனுஷ் அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், திருமதி விஜயா சதீஷ் அவர்கள் தயாரிக்கும் இந்தப்படம் *”மனிதன் தெய்வமாகலாம்”* எனப் பெயரிடப்பட்டுள்ளது. தலைப்பு வெளியீடு படக்குழுவிற்கும், நண்பர்களிற்கும் கொண்டாட்ட தருணமாக அமைந்துள்ளது. இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது. இதுவே படத்திற்கான அற்புதமான தலைப்பை உருவாக்கியது. இந்தப்படத்தில் புகழ்பெற்ற இயக்குநர்-நடிகர் செல்வராகவன் முன்னணியில் நடிக்கிறார். அவருக்கு இணையாக குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன்…
Read Moreஒரு படப்பிடிப்பில் கதாநாயகனை படத்தில் நடித்துக் கொண்டிருந்த காளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு கிராமத்து வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் ‘வட மஞ்சுவிரட்டு’. இதில் முக்கியமாக மஞ்சுவிரட்டு சார்ந்த காட்சிகள் அதிகம் இருக்கின்றன. கிராமத்து மண்,மக்கள், கலாச்சாரம், மஞ்சுவிரட்டு போன்றவை கொண்ட கலந்த கதையாகவும் காதல், பாசம், வீரம் போன்றவற்றை வெளிப்படுத்தும் கலையாகவும் உருவாகி வரும் படம் இந்த ‘வட மஞ்சுவிரட்டு’. இப்படத்தின் நாயகனாக ‘முருகா’ அஷோக் நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ‘முருகா’, ‘பிடிச்சிருக்கு’, ‘கோழி கூவுது’ போன்ற படங்களில்லிருந்து ஆரம்பித்து, தொடர்ந்து ‘காங்ஸ் ஆப் மெட்ராஸ்’ , ‘மாயத்திரை’ , ‘ஆர் யூ ஓகே பேபி?’ , ‘பெஸ்டி’, ‘மாயப்புத்தகம்’, ‘லாரா’ , இப்படி 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளவர். தனக்கென தனி இடத்தை பிடித்த நாயகன். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் சங்கிலி.CPA. அழகர் பிக்சர்ஸ் சார்பில் புதுகை ஏ.பழனிச்சாமி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். நிர்வாக…
Read Moreபேட் கேர்ள் – திரை விமர்சனம்
பிளஸ்- 1 படிக்கும் பள்ளி மாணவி அஞ்சலிக்கு உடன்படிக்கும் சக மாணவன் மீது ஈர்ப்பு, கண்மூடித்தனமான காதல் என்றும் சொல்லலாம். ஒரு கட்டத்தில் இது பள்ளி மூலமாக பெற்றோருக்கு தெரிய வர, கண்டிக்கிறார்கள். மகளோ பெற்றோரின் கண்டிப்புக்கு அடங்குவதாக இல்லை. நிலைமை கைமீறிப் போவது தெரிந்தவுடன் வேறு பள்ளிக்கு மாற்றுகிறார்கள். இதனால் பெற்றோர் மீது கோபமடையும் அஞ்சலி, வேண்டுமென்றே அத்துமீறுகிறார். அதுவும் எப்படி? ”நீங்கள் சொல்வதை எல்லாம் இந்த பள்ளி வரை தான் கேட்பேன், அதன் பிறகு , என் இஷ்டப்படி தான் வாழ்வேன் ” என்கிறார். அவர் சொன்னது போலவே கல்லூரிக் காலத்தில் வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் தங்கிப் படிக்கிறார். அங்கே சீனியர் மாணவருடன் காதல், உறவு என்று போகிறார்.அதன் மூலம் இந்த சமூகத்தைப் பழிவாங்குவதாகவும் நினைக்கிறார். ஒருகட்டத்தில் இந்த வாழ்க்கை போலி. காதல்…
Read More