‘ரீட் கிதாப்’ (Read Kitaab) கம்யூனிட்டியில் கிட்டத்தட்ட 23,000-க்கும் அதிகமான வாசகர்கள் உள்ளனர். இதன் இணை நிறுவனர் ஏக்தா பந்தாரியுடன் வாசகர்கள் முன்னிலையில் எழுத்தாளர் அமிஷ் உரையாடல் நிகழ்த்தினார். அதில் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமிஷ் கூறிய பதிலாவது, “1300 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த கதையில் தோல்வியை பற்றி மட்டும் அல்லாது பல வெற்றிக்கதைகளையும் சொல்லி இருக்கிறோம். நம் முன்னோர்கள் ஒருபோதும் சரண் அடைந்தது இல்லை. தொடர்ந்து போரிட்டிருக்கிறார்கள். அதுவே நம் கதை, நம் வரலாறு!” என்றார். 2020 ஆம் ஆண்டு விற்பனையில் சாதனை படைத்து, வாசகர்களிடம் அதிக பாராட்டுகள் பெற்ற புத்தகமான ‘லெஜண்ட் ஆஃப் சுஹெல்தேவ்’ புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகத்தை அடிப்படையாகக் கொண்டு ‘தி சோழா டைகர்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. ஹார்பர்காலின்ஸ் இந்தியாவால் வெளியிடப்பட்ட இந்த சிலிர்ப்பூட்டும் வரலாற்றுக் கதை, எதிர்ப்பு, மரியாதை மற்றும்…
Read Moreதேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் கோப்பை 2025, குழந்தைகள் பிரிவில் தமிழ்நாடு ஒட்டுமொத்த கோப்பையை வென்றது!
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் – குழந்தைகள் மற்றும் கேடட்கள் 2025 இல், குழந்தைகள் பிரிவில் மாநில அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. இதுமட்டுமல்லாது, கேடட் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் தமிழ்நாட்டு விளையாட்டு துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது. நாடு முழுவதிலுமிருந்து இளம் திறமையாளர்களை இந்த சாம்பியன்ஷிப் ஒன்றிணைத்துள்ளது. இதன் மூலம், கிக் பாக்ஸிங்கில் தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் தனது ஆதிக்கத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது. மாண்புமிகு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலினின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் விளையாட்டு துறையை மேம்படுத்தி, இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வளர்ப்பதில் நம் மாநிலம் கவனம் செலுத்தி வருகிறது. நிறைவு விழாவில் திரு. ஜே. மேகநாத ரெட்டி, ஐஏஎஸ், மெம்பர் செக்ரட்ரி ஆஃப் எஸ்டிஏடி கலந்து கொண்டு நிகழ்வுக்கு மேலும்…
Read Moreசர்வதேச தரத்தில் மிராய் படம் உருவாகியுள்ளது – தேஜா சஜ்ஜா
தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், தேஜா சஜ்ஜா பேசியபோது, “அனைவருக்கும் வணக்கம், இங்கு நான் வருகை தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிராய் திரைப்படம் இம்மாதம் 12ம் தேதி வெளியாகிறது. நீங்கள் அனைவரும் இதுவரை இப்படத்திற்காக கொடுத்த ஒத்துழைப்பை மேலும் தருவீர்கள் என்று நம்புகிறேன். ஆக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, எமோஷன் மற்றும் டிவோஷன் நிறைந்த படம் தான் மிராய். ஒரு வருடத்தில் சில படங்களே திரையரங்கில் பார்க்கும் படியாக வெளியாகின்றன; அந்த வரிசையில் மிராய் படமும் இருக்கும். 3 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இப்படத்தை…
Read Moreலோகா அத்தியாயம் 1 சந்திரா – திரை விமர்சனம்
சூப்பர்மேன் டைப் திரைப்படங்கள் எப்போதாவது வந்து திரையை பரபரப்பாக்கும்.அப்படி ஒரு சூப்பர் மேன் கதை இது. சின்ன திருத்தம் சூப்பர் உமன் கதை. நாயகி சந்திராவின் சிறுவயது பாதிப்பு, அதன் மூலம் அவர் அதீத சக்தி படைத்த பெண்ணாக உருவெடுப்பது என தொடக்கம் முதலே வேகமெடுத்து விடுகிறது கதைக்களம். பெங்களூர் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தங்கி இருக்கும் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருப்பவர் தான் நாயகன் நஸ்லென். அடுத்தடுத்த தொடர் சந்திப்புகள் கல்யாணி மீது நஸ்லெனுக்குள் காதலை கொண்டு வருகிறது. கல்யாணியோ நஸ்லெனின் காதலை ஏற்கவும் இல்லை. மறுக் க்கவுமில்லை. கண்டும் காணாதது போல் இருக்கிறார். இப்படி அவர் பின் தொடரும் ஒரு நாளில் ஒரு சட்ட விரோத கும்பலால் கல்யாணி கடத்தப்படுகிறார். நஸ்லென் அவரை காப்பாற்ற விரைகிறார். ஆனால்…
Read Moreவாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’ தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கார்மேனி செல்வம்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியாவும் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த கலகலப்பான குடும்ப திரைப்படமாக ‘கார் மேனி செல்வம்’ உருவாகிறது. திரைப்படம் குறித்து பேசிய இயக்குனர் ராம் சக்ரி, “அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய படமாக ‘கார் மேனி செல்வம்’ உருவாகி வருகிறது. அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் செல்வத்திற்கு (சமுத்திரக்கனி) திடீரென்று பணத்தாசை ஏற்படுகிறது. அதை நோக்கி ஓட ஆரம்பிக்கும் போது அவரது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக நகைச்சுவை ததும்ப அமைத்துள்ளோம்,” என்றார். ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் கிரியேட்டிவ்…
Read Moreநேச்சுரல் ஸ்டார் நானி – இதுவரை தோன்றியிராத அதிரடி அவதாரத்தில்! ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ் – ஸ்ரீகாந்த் ஒடேலா, சுதாகர் சேருகூரி, எஸ்.எல்.வி. சினிமாஸ் – இணையும் “தி பாரடைஸ்” படம், ஹாலிவுட் குழுவுடன் இணைகிறது !!
நேச்சுரல் ஸ்டார் நானி, தனது மிகப்பெரிய கனவு முயற்சியான “தி பாரடைஸ்” படத்திற்காக முழு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறார். தசரா புகழ் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க, சுதாகர் சேருகூரி தயாரிப்பில், எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் இந்த ஆக்சன் டிராமாவை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படத்தின் இரண்டு அதிரடியான பர்ஸ்ட்-லுக் போஸ்டர்கள், அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ் என்கிற பட உருவாக்க காட்சிகள், படத்துக்கான எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு வெளியான முதல் கிளிம்ப்ஸே காட்சியிலேயே, தி பாரடைஸ் படக்குழு இப்படம் உலகளாவிய ரசிகர்களுக்கானது என்பதை வெளிப்படையாகக் காட்டிவிட்டது. பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியீடு செய்வது முதல், துணிச்சலான புரமோஷன் வரை – ஒவ்வொரு நடவடிக்கையும், இந்த படம் இந்தியாவுக்கு மட்டும் அல்ல, உலகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை வலியுறுத்துகிறது. அந்த முயற்சியை மேலும் ஒரு…
Read Moreஉண்ணாவிரதம் இருக்கும் சசிகாந்த் செந்தில் எம்.பி’க்கு, மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான தக்ஷன் விஜய் ஆதரவு!
தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசை எதிர்த்து 3வது நாளாக தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் இருக்கும் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை எடுத்து வருவதால், விரைவில் நலம் பெறவும் வேண்டுகிறேன்! இப்படிக்கு, நடிகர் தக்ஷன் விஜய், மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவர்.
Read Moreகுற்றம் புதிது – திரை விமர்சனம்
உயர் போலீஸ் அதிகாரியின் மகள் அலுவலகம் முடிந்து நள்ளிரவில் வீட்டுக்கு கிளம்புகிறாள் ஆனால் அவள் வீடு வந்து சேரவில்லை. கடத்தப்பட்டாளா அல்லது கடத்திக் கொல்லப்பட்டாளா என்பதை கண்டுபிடிக்க காவல்துறை சீறிப் பாய்கிறது. அதேநேரம் ஒரு இளம்பெண் உள்பட மூன்று பேரை கொலை செய்ததாகச் சொல்லி உணவு டெலிவரி இளைஞன் ஒருவன் போலீசில் சரணடைகிறான். அதைப் பற்றி விசாரித்தால் அவன் கொலை செய்ததாகச் சொன்ன மூவரில் இருவர் உயிருடன் இருக்கிறார்கள்.அப்படியானால் அந்த இளைஞன் ஏன் பொய் சொல்ல வேண்டும்? அந்தப் பெண் உயிருடன் இருக்கிறாளா, இல்லையா? கேள்விக்கான விடையே குற்றம் புதிது. கதாநாயகனாக நடித்திருக்கும் தருண் விஜய், நடிப்புக்காக தன்னை முழுதாக தயார்படுத்தி இருக்கிறார். நீதிபதியையும் போலீஸ் அதிகாரியையும் அங்கிள் என்று சொல்லி கலகலப்பு ஏற்றுகிறார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்பாக நின்று கொண்டு அந்த வழியாக வரும்…
Read More“கமல் சாருடன் ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யுங்கள்” ; நூல் வெளியீட்டு விழாவில் பகிரங்கமாகவே கோரிக்கை வைத்த இயக்குநர் லிங்குசாமி
தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குநர்களில மிக முக்கியமானவர் இயக்குநர் லிங்குசாமி. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி, தன் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். இவருக்கு இயக்குநர் என்பதையும் தாண்டி கவிஞர் என்கிற இன்னொரு முகமும் உண்டு. சொல்லப்போனால் அவருக்குள் இருந்த கவிஞர்தான் அவரை சினிமாவுக்காக சென்னைக்கு அழைத்து வந்ததே என்று சொல்லலாம். அப்படி தனக்குள் இருந்த கவிதைக்கு ஹைக்கூ வடிவம் கொடுத்து ஏற்கனவே இரண்டு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. தற்போது அவரது ஹைக்கூ கவிதைகளின் மூன்றாவது தொகுப்பாக ‘பெயரிடப்படாத ஆறுகள்’ என்கிற பெயரில் லிங்கூ-3 புத்தகத்தை தொகுத்து எழுதியுள்ளார் இயக்குநர் லிங்குசாமி. இந்த கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடைபெற்றது இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், இயக்குநர் கௌதம்…
Read Moreசொட்ட சொட்ட நனையுது – திரை விமர்சனம்
காரைக்குடியைச் சேர்ந்த வசதி படைத்த ராஜாவிற்கு ஒரே பிரச்சனை, வழுக்கை. பணக்கார குடும்பம் என்று விரும்பும் பெண் வீட்டார் கூட மாப்பிள்ளையின் சொட்டைத்தலை பார்த்ததும் ரிவர்ஸ் அடித்து விடுகிறார்கள். இதனால் நாயகனின் திருமணம் கிட்டத்தட்ட கேள்விக்குறி நிலையில் இருக்க… ஒரு கட்டத்தில் பெண் பார்க்கப் போகும் படலத்துக்கே முற்றுப்புள்ளி வைக்கிறான். இந்நிலையில் திடீர் திருப்பமாக வெளியூரிலிருந்து பாட்டி வீட்டுக்கு வரும் பிரியா, நாயகனின் வழுக்கை பற்றி கவலைப்படாமல் ராஜாவை மணக்க சம்மதிக்கிறாள். இது போதாதா? ராஜாவின் பெற்றோர் தடபுடலாக திருமண தேதி குறிக்க, விடிந்தால் திருமணம். ஆனால் ராஜா முந்தின இரவு திருமணத்தை நிறுத்தி விடுகிறான். கல்யாணத்தை ராஜா ஏன் நிறுத்தினான்? அதன் பின் வேறு எந்த பெண்ணாவது அவனை மணமகனாக ஏற்றுக் கொண்டாளா என்பது கிளைமாக்ஸ். கோடீஸ்வர ராஜாவாக நிஷாந்த் ரூசோ அந்த மொட்டை கேரக்டரில்…
Read More