”நள்ளிரவு பேய்களின் ஆட்டத்தினைப் பற்றிய ‘ஜண்ட மட்டான்’ பாடல்

மனிதனின் தீரா ஆசைகளை இசை மற்றும் நடனத்தின் மூலம் வெளிப்படுத்தும் ஆல்பம், இயக்குநர் சிம்புதேவன், பாடகர் மனோ, தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட விழாவில் சரிகம இசை நிறுவனத்தால் வெளியிடப்பட்டது சென்னையின் பிரபல இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவரும் (சர்ஜிக்கல் கேஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட்) ரோபாட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் யு.பி. சீனிவாசன் ‘ஜண்ட மட்டான்’ எனும் இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆல்பத்தை பார்த்து பாராட்டி அதன் உரிமையை முன்னணி இசை நிறுவனமான சரிகம வாங்கி உள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் சிம்புதேவன், பாடகர் மனோ, தயாரிப்பாளர் பி எல் தேனப்பன், இயக்குநர் மந்திரமூர்த்தி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடன இயக்குநர்கள் ஸ்ரீதர் மற்றும் கந்தாஸ், நடிகர் மகேந்திரன் மற்றும் கே பி ஒய் சரத் உள்ளிட்டோர் விருந்தினர்களாக…

Read More

ஆதார் மலையாள ரீமேக்கில் திலீஷ் போத்தன்

பல சர்வதேச விருதுகளை வென்று, ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்ற, வெண்ணிலா கிரியேஷன்ஸ் பி. சசிகுமார் தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில், கருணாஸ் நடிப்பில் வெளியாகி, 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த ஊடகத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய ‘ஆதார்’ திரைப்படம் மலையாளத்தில் உருவாகிறது. இப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். தமிழில் உருவான ‘ஆதார்’ திரைப்படத்தில் அருண்பாண்டியன் நடித்த அழுத்தமான ரைட்டர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான திலீஷ் போத்தன் நடிக்கவிருக்கிறார். கருணாஸ் நடிப்பில் வெளியான ‘திண்டுக்கல் சாரதி’ எனும் வெற்றி பெற்ற படத்திற்கு திரைக்கதை & வசனம் எழுதியவர். ஜீவா- நயன்தாரா நடிப்பில் வெளியான ‘திருநாள்’, கருணாஸ் நடிப்பில் வெளியான ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ மற்றும் ‘ஆதார்’ ஆகிய திரைப்படத்தை இயக்கியவர் ராம்நாத் பழனிகுமார். இவரது திரைப்படங்களில்…

Read More

உப்பு புளி காரம் தொடர்பாக டிஸ்னி ஹாட் ஸ்டாரின் அடுத்த அதிரடி அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் ‘உப்பு புளி காரம்’  சீரிஸை வரும் மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொண்டாடும் கலகலப்பான மற்றும் துடிப்பான ‘குடும்பப் பாட்டு’ எனும் அழகான தீம் பாடலுடன் இந்த சீரிஸ் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வண்ணமயமான காட்சிகள் மற்றும் நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், ஒரு மகிழ்ச்சியான மற்றும் இளமை நிறைந்த குடும்ப பொழுதுபோக்கை இந்த சீரிஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அற்புதமான பாடல் இப்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் சீரிஸ்கள் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது போல, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸான ‘உப்பு புளி காரம்’ சீரிஸானது, காதல், காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட்…

Read More

இந்தியன் 2 தொடர்பான இரட்டை அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்தியா முழுக்க எதிர்பார்ப்பைக் குவித்து, கோடிக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருந்த நேற்றைய சிஎஸ்கே Vs ஆர்சிபி போட்டியின் ஆரம்ப கட்ட புரமோசன் நிகழ்ச்சியில், உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டு ‘இந்தியன் 2’ குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர். உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ‘இந்தியன் 2.’ ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரன் & ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ இணைந்து தயாரிக்க, பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் Intro வீடியோ வெளியிடப்பட்டு வரவேற்பைக் குவித்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது எனவும் மேலும் இப்படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது என்பதையும் உறுதி செய்தனர். இந்தியன் 2 படம் குறித்த இந்த அடுத்தடுத்த…

Read More

”போகுமிடம் வெகு தூரமில்லை” விமலுக்கும் ரகுநந்தனுக்கும் மிகப்பெரிய உயரத்தை தரும் – கவிஞர் சினேகன்

Shark 9 pictures சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு,  படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் சிவா கில்லாரி பேசியதாவது.. நான் தெலுங்குக்காரன் ஆனால் உங்கள் முன் தமிழில் தான் பேசப்போகிறேன், எங்கள் அழைப்பை ஏற்று வந்த திரைப்பிரபலங்களுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தின் பாடல், டிரெய்லர் எல்லாம் பார்த்தீர்கள், இந்தப்படத்திற்கு முன் வேறொரு படம் செய்வதாக இருந்தேன், அப்போது தான் இந்தக்கதை வந்தது. இன்னும் பல கதைகள் கேட்டு முடிவு பண்ணலாம்…

Read More

”மிராய்” உலகில் கருப்பு வாள் வீரனாக ரீ-எண்ட்ரி கொடுக்கும் ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு

எட்டு வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தெலுங்கு சினிமாவின் கவர்ச்சிமிகு, இளம் நட்சத்திர நடிகர், ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு வெள்ளித் திரைக்கு மீண்டும் திரும்புகிறார். சூப்பர் ஹீரோவின் பிரபஞ்சமான மிராய் உலகில் ‘தி பிளாக் வாள்’ எனும் வாள் வீரனாக அவதாரமெடுக்கிறார். இப்படத்தில் சூப்பர் யோதாவாக தேஜா சஜ்ஜா நடிக்கிறார். பிரபல படைப்பாளி கார்த்திக் கட்டமனேனி இப்படத்தை இயக்குகிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டிஜி விஸ்வ பிரசாத் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இணையற்ற உற்சாகம் நிறைந்த இந்த சூப்பர் ஹீரோ பிரபஞ்சத்தில், மனோஜ் அறிமுகமாகிறார். மனோஜ் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர்கள் மஞ்சு மனோஜின் “தி பிளாக் வாள்” கதாப்பாத்திரத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் மனோஜ் மஞ்சு இதுவரை திரையில் கண்டிராத தீவிரமான மற்றும் சக்திவாய்ந்த அவதாரத்தில், ஒரு…

Read More

ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா-வில் இருந்து வெளியான முதல் சிங்கிள் FEAR SONG

மாஸ் நாயகன் என்டிஆரின் ‘தேவரா’ திரைப்படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் ‘ஃபியர் சாங்’ (fear song) தற்போது வெளியாகியுள்ளது! மாஸ் நாயகன் என்டிஆர் நடித்த ‘தேவரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்து வருகிறது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் உலக அளவில் பார்வையாளர்களைக் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. பாலிவுட் அழகி ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். மற்றொரு பாலிவுட் நட்சத்திரமான சைஃப் அலிகான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் நடிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகமான ‘தேவரா பார்ட் 1’ தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. என்டிஆர் பிறந்தநாள் கொண்டாட்டமாக படத்தில் இருந்து ‘ஃபியர் சாங்’ எனத்…

Read More

அண்ணா சாலையில் பிரம்மாண்டமாக துவங்கிய கீதம் வெஜ்ஜின் 11வது கிளை

இந்திய பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் விதமாக நாங்கள், ‘கீதம் வெஜ்’ சிறந்த தரத்தில் நமது இந்திய உணவுகளை வழங்குகிறோம். பாரம்பரிய இந்திய உணவு வகைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு மற்றும் உள்நாட்டு சமையல் பொருட்களைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களைத் தயார் செய்கிறோம். சமையல் மற்றும் விருந்தோம்பல் துறையில் பத்து வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டிருக்கிறோம். உலக அளவில் இந்திய உணவின் சுவையை கீதம் மூலம் கொண்டு சென்று வெற்றி பெற செய்த, எங்கள் பார்ட்னர்ஸூக்கும் நன்றி. சென்னையை தளமாகக் கொண்ட ‘கீதம் வெஜ்’ அதன் உயர்தர, தூய்மையான சைவ தென்னிந்திய உணவு வகைகளுக்கு மிகவும் பிரபலமானது. நாங்கள் இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பிற பகுதிகளான இந்தோ- சைனீஸ், சாட், வட இந்திய உணவு வகைகள் மற்றும் துருக்கிய இனிப்புகள் என பல்வேறு வகையான உணவுகளை வழங்குகிறோம். உணவகங்களைத்…

Read More

கேன்ஸ் விழாவில் போட்டியிடும் ஹிருது ஹாரூனின் “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”

பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” ( all we imagine as light ) திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கேன்ஸ் திரை விழாவில் முதன்மைப் போட்டிப் பிரிவில், cannes palme d or 2024 விருதுக்காக போட்டியிடும் முதல் இந்தியத் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. உலகளவில் பிரபலமான பெரும் படைப்பாளிகளான பிரான்ஸ் ஃபோர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் ஆகியோரின் படைப்புகளுடன் இப்படம் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் என விருது பெற்ற நடிகர்களுடன் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்னதாக, பிருந்தா மாஸ்டரின் தமிழ் படமான தக்ஸ் திரைப்படத்தில், ஹிருது ஹாருன் நாயகனாக…

Read More

கல்கி 2898 கிபியில் பைரவாவின் நண்பன் புஜ்ஜி யார்..? விடை மே 22ல்

கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. 5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நம்பகமான நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார் !! கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உட்சகட்டத்தை எட்டியுள்ளது. கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரான புஜ்ஜியின் அறிமுகம் மே 22, 2024 அன்று வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது ‘From Skratch EP4: Building A Superstar’ என்ற தலைப்பிலான கண்கவர் திரைக்குப் பின்னால் நம்மை ஒரு அசாத்தியமான காட்சி அனுபவத்திற்குள் கூட்டிச் செல்கிறார் இயக்குனர் நாக் அஷ்வின். 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த பயணம் நம்மை வியக்க வைக்கிறது. “சூப்பர் ஹீரோ”, “பைரவாவின் சிறந்த…

Read More