ரோபோவை மையமாக வைத்து உருவாகியிருக்கும் குறும்படம் மெட்டா பியூட்டி

  சமீப காலமாக தமிழ் சினிமாவில் சைன்ஸ் பிக்சன் கதைகள் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது அதில் பல படங்கள் வெற்றியடைந்துள்ளது.அந்தவகையில் விரைவில் வெளியாக இருக்கும் ஒரு குறும்படம் மெட்டா பியூட்டி இந்த படத்தின் இயக்குனர் ராஜா எம் முத்தையா. படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ஒரு ரோபர்ட் ஆக திவ்யலெட்சுமி என்ற நடிகையும், அதை உருவாக்கும் விஞ்ஞானியாக அர்ச்சனா உன்னிகிருஷ்ணன் அவர்களும் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயராஜ், இளங்கோ சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.குறிப்பாக இந்த ரோபர்ட்யை மையமாக வைத்து தான் இந்த கதை உருவாகியுள்ளது. அடுத்த நூற்றாண்டில் இவ்வுலகை கலக்க இருக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு அங்கமான ரோபோட்டை கதை மூலமாக வைத்து உருவாகி இருக்கும், ஒரு பெண்ணியம் சார்ந்த (பாலியல் வன்புணர்வுக்கு எதிரான) ஒரு விழிப்புணர்வு பைலட் படமான #Meta_Beauty குறும்படத்தின் #firstlook மற்றும் #lyrical_anthem…

Read More

புளூ ஸ்டார் வெற்றியை தொடர்ந்து லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில்   இரண்டாவது படம் மலை செப்டம்பர் மாதம் வெளியாகிறது.

லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்திருக்கும் படம் மலை.யோகிபாபு , லக்‌ஷ்மி மேனன் , காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்திநடித்திருக்கும் படம் செப்டம்பரில் வெளியாகிறது. அறிமுக இயக்குனர் IP முருகேஷ் இயக்கியிருக்கிறார். மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது , மனிதர்களை போல விலங்குகளும், தாவரங்களும் மலைகளும் , ஆறுகளும் நீர் நிலைகளும் இந்த பூமியில் அதிமுக்கியமானதாக இருக்கிறது. அதீத மனித ஆசையால் இயற்கையை மெல்ல மெல்ல மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக அழித்து வந்துள்ளார்கள். மனிதன் முதலில் தன் சுய நலத்துக்காக சுரண்ட ஆரம்பித்தது சக மனிதனிடமிருந்துதான். அப்படி இரக்கமில்லாமல் சுரண்ட ஆரம்பிக்கும் மனிதன் மெல்ல மெல்ல இயற்கை வளங்களை சுரண்ட ஆரம்பிக்கிறான். இதிலிருந்து தப்பிக்க அதிகாரம், அரசியல், மதம், சாதி , இனம் என்று இதற்கு பின்னால்…

Read More

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, யுவி கிரியேஷன்ஸ் இணையும் விஸ்வம்பரா படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது !!

ப்ரீ-லுக் போஸ்டர் பெரும் வரவேற்பைக் குவித்த நிலையில், மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் கிரேஸி சோஷியோ-ஃபேண்டஸி என்டர்டெய்னர் “விஸ்வம்பரா” படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் மாய புராணகதைகளை ஞாபகப்படுத்தும் பின்னணியில், சிறப்பு சக்திகள் மிகுந்த திரிசூலத்தினை ஏந்தியபடி காட்சியளிக்கிறார் சிரஞ்சீவி. இடி மின்னல் பரவ, தெய்வீக கதிரலை சுற்றிலும் பாய்கிறது. சிரஞ்சீவி மிக இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் லேசான தாடியுடன் தோற்றமளிக்கிறார், திரிசூலத்தினை கையில் பிடித்தபடி, மிரட்டலான லுக்கில் அசத்துகிறார். இந்த கண்கவர் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிளாக்பஸ்டர் “பிம்பிசாரா” திரைப்படத்தை வழங்கிய இயக்குநர் வசிஷ்டா, தனது அபிமான நட்சத்திரமான சிரஞ்சீவியுடன் இணைந்து, “விஸ்வம்பரா” திரைப்படத்தை பிரம்மாண்ட படைப்பாக உருவாக்குகிறார். சிறந்த விஎஃப்எக்ஸ், அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் மனதைத்…

Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் “1000 பேபிஸ்” ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

 ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “1000 பேபிஸ்” சீரிஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸாகும். 1000 பேபிஸ் சீரிஸ் அடையாளத்தின் மீதான சிக்கல்கள் மற்றும் விதியின் விளையாட்டை, பல எதிர்பாரா திருப்பங்களுடன் சொல்கிறது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. “1000 பேபிஸ்” சீரிஸில் நீனா குப்தா மற்றும் ரகுமான் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் நஜீம் கோயா இயக்கியுள்ளார், நஜீம் கோயா , அரூஸ் இர்பான் இணைந்து வசனம் எழுதியுள்ளார்கள். ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் சார்பில், ஷாஜி நடேசன் மற்றும் ஆர்யா ஆகியோர் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளனர். நீனா குப்தா மற்றும் ரகுமானுடன் இணைந்து, சஞ்சு சிவராம், ஜாய் மேத்யூ, ராதிகா ராதாகிருஷ்ணன், அஷ்வின் குமார், இர்ஷாத் அலி, ஷாஜு ஸ்ரீதர், காலேஷ் ராமானந்த், ஸ்ரீகாந்த் முரளி மற்றும் ஜேம்ஸ் ஆலியா…

Read More

கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் பரபரப்பு பேட்டி!!

 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வர் ஆவார் என கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் மற்றும் கொடி பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை, பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராக மக்களால் அறியப்படும் நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் கட்சியின் கொடி. கொடி பாடல் அறிமுக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. நடிகர் விஜய் அவர்களுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துள்ளேன். மிகவும்…

Read More

வாழை விமர்சனம் 4.25/5.. வாழை இலை விருந்து

கதை… 1990-களில் நடந்த காலகட்ட கதை இது. பொன்வேல் மற்றும் ராகுல் இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் நெருங்கிய தோழர்கள்.. இதில் பொன்வேல் ரஜினி ரசிகன். ராகுல் கமல் ரசிகன்.. இவர்கள் படிக்கும் பள்ளியில் டீச்சராக பணிபுரியும் நிகிலா மீது பொன்வேலுக்கு இனம் புரியாத நேசம் ஏற்படுகிறது.. பள்ளி இல்லாத நாட்களில் பொன்வேல் மற்றும் ராகுல் இருவரும் வாழைத்தார்களை சுமக்கும் வேலைக்கு சென்று வருகின்றனர். வாழைத்தார்களை சுமப்பது கடினமாக இருப்பதால் ஒரு நாள் காலில் முள் குத்தி விட்டதாக பொய் சொல்லிவிட்டு மாடு மேய்க்க செல்கிறான் பொன்வேல். அப்போது பொன்வேலின் அம்மா மற்றும் அக்கா இருவரும் வாழைத்தாரை சுமக்கும் பணிக்கு செல்கின்றனர். பொன்வேல் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக செல்லும் டீச்சர் நிகிலாவுடன் மாவு அரைக்க செல்கிறான்.. மாலையில் பொன்வேல் வந்து திரும்பி…

Read More

போகுமிடம் வெகு தூரமில்லை விமர்சனம் 4/5.. உத்தம கலைஞன்

 கதை… ஆடுகளம் நரேன் & பவன் இருவரும் அண்ணன் தம்பிகள்.. இருவருக்கும் ஒரே தந்தை என்றாலும் வெவ்வேறு தாய்.. மூத்த தாரத்தின் மகன் நரேன்.. இரண்டாம் தாரத்தின் மகன் பவன்.. எனவே இவர்களுக்கு எப்போது மோதல் இருந்து வருகிறத. இந்த சூழ்நிலையில் இவர்களின் தந்தை சென்னையில் மரணமடைந்து விடுகிறார்.. இதனால் தந்தைக்கு நான்தான் கொள்ளி வைப்பேன் என இருவரும் மல்லுக்கட்டி நிற்கின்றனர்.. பிணத்தை தங்கள் இடத்திற்கு கொண்டுவர வேண்டும் எனவும் வாக்குவாதம் செய்கின்றனர்.. இவர்களின் தந்தை உடலை அமரர் ஊர்தியில் திருநெல்வேலிக்கு எடுத்து வருகிறார் விமல்.. நீ இந்த உடலை ஒழுங்காக கொண்டு சேர்த்தால் நீ கேட்ட பணத்தை தருகிறேன் என முதலாளி சொல்லவே வேறு வழியின்றி மனைவியின் பிரசவத்திற்கு கூட அருகே நிற்காமல் பிணத்தை தனியாக எடுத்து செல்கிறார் விமல். செல்லும் வழியில் தெருக்கூத்து கலைஞர்…

Read More

சாலா விமர்சனம் 3.5/5.. BAR WAR

 கதை… நாயகன் – தீரன்.. நாயகி – ரேஷ்மா.. குடி குடி என்பதுதான் நாயகனின் தாரக மந்திரம்.. குடிக்காதே குடிக்காதே நன்றாக படி என்பது நாயகியின் தந்திரம்.. இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம்… 23 வருடங்களாக பூட்டிக் கிடக்கும் பார்வதி ஒயின்சுக்கு இரண்டு கோஷ்டிகள் அடித்துக் அடித்துக் கொல்கின்றனர்.. இவர்களின் சண்டையை ஓரமாக நின்று மாமூல் வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார் இன்ஸ்பெக்டர் சம்பத் ராம். குடியை ஆதரிக்கும் நாயகன்.. குடியை எதிர்க்கும் நாயகி ஒரு கட்டத்தில் நண்பர்களாகின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது.? யார் திருந்தினார்கள்? என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.. நடிகர்கள்… ஆறடி உயரம் அதிர வைக்கும் கம்பீரம் நீண்ட தலை முடி நீண்ட தாடி என வில்லன் தோற்றத்தில் நாயகனாக மிரட்டி இருக்கிறார் தீரன்.. ஒரு பார் சண்டைக் காட்சியில் 30…

Read More

கொட்டுக்காளி – திரை விமர்சனம்

மதுரையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் மீனாவுக்கு (அன்னா பென்) பேய் பிடித்திருப்பதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர். இதனால் மீனாவை அவரது வருங்கால கணவரான பாண்டியும், (சூரி) அவரது குடும்பத்தினரும் ஒரு பேய் ஓட்டும் சாமியாரிடம் அழைத்துப் போகிறார்கள். அவர்கள் செல்லும் வழியில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன? உண்மையில் நாயகி அன்னா பென்னுக்கு பேய் பிடித்திருந்ததா, இல்லையா? இதற்கான விடையே ‘கொட்டுக்காளி’. காலையில் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி மாலையில் இன்னொரு இடத்தில் போய் இறங்குவது தான் கதை. மொத்தக் கதையையும் பஸ் டிக்கட்டின் பின்புறத்தில் எழுதி விடலாம்.. அந்த சிறிய ஆட்டோ பயணத்தில் கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், அவர்களின் எண்ண ஓட்டங்கள் மற்றும் செயல் பாடுகளை இயல்பை மீறாமலும் எந்தவித சமரசமும் இல்லாமலும் அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ். கிராமங்களில்…

Read More

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் 21-வது பொதுக்குழு கூட்டம்!!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் மூத்த எழுத்தாளர் திரு.காரைக்குடி நாராயணன் அவர்களுக்கு, எழுத்தாளர் சங்கத்தில் இருநூற்றி மூன்று (203) கதைகளை பதிவு செய்து சாதனை படைத்தமைக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அச்சங்கத்தின் 21வது பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது.

Read More