தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆவது எப்படி ? : ஜி.பி. முத்து சித்தார்த்துக்கு தரும் செம்மையான ஐடியா !

பிரைம் வீடியோவிலிருந்து வெளியான தலைவெட்டியான் பாளையம் சீரிஸின் அருமையான டிரெய்லரைத் தொடர்ந்து, இந்த சீரிஸ் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஜி.பி. முத்துவும் அபிஷேக் குமாரும், இந்த சீரிஸில் நடிக்கும் கதாப்பாத்திரங்களை ஒட்டி ஒரு அட்டகாசமான புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஜி.பி. முத்து, அபிஷேக்குமாருக்கு தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங்காக மாற ஐந்து அருமையான ஐடியாக்களைத் தருகிறார். ஜி.பி. முத்துவுக்கும் அபிஷேக்குமாருக்கும் இடையிலான உரையாடலில் அவர் தரும் ஐந்து ஐடியாக்கள் இதோ ! 1. எப்போதும் ஸ்ட்றெஸ் ஆகக்கூடாது 2. சம்பிரதாயமாக நடந்து கொள்ளக் கூடாது ஏனெனில் இந்த கிராமத்தில் யாரும் புதியவரில்லை 3. இயல்பாக பழக வேண்டும் அதே நேரம் புத்திக் கூர்மையுடன் இருக்க வேண்டும். 4. பிரச்சனைகளிலிருந்து எப்போதும் ஒதுங்கி இரு 5. முக்கியமாக பேய் மரத்தை விட்டு எப்போதும் ஒதுங்கியே இரு…

Read More

வாழை பட 25 வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா !!

Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, “வாழை”திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது. இப்படத்தைத் தமிழகமெங்கும் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது. 4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியினை படக்குழுவினர் கோலாகலமாகக் கொண்டாடினர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வினில், படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த ரெட்ஜெயன்ட் மூவிஸ் செண்பக மூர்த்தி, அர்ஜூன் துரை ஆகியோருக்கு வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சார்பில் விழாவில் கலந்துகொண்ட பிரதீப் அவர்களுக்கு  வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டது. ரெட்ஜெயன்ட் மூவிஸ் சார்பில் அர்ஜூன் துரை பேசியதாவது……

Read More

ஜூனியர் என்.டி.ஆர் எனக்கு அண்ணா.-அனிருத் நெகிழ்ச்சி!

கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘தேவரா’ படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரில் பேசியதாவது, “இந்தப் படத்தில் பணிபுரிந்ததது மகிழ்ச்சியான அனுபவம். நீங்கள் எதிர்பார்த்தபடி நிச்சயம் பிரம்மாண்டமாக இருக்கும். நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் எல்லோரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கும் நன்றி”. ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, “’ரோபோ’, ‘லிங்கா’ படங்களுக்குப் பிறகு மீண்டும் ‘தேவரா’ மூலம் தமிழுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஜூனியர் என்.டி.ஆர். சிறப்பாக நடித்திருக்கிறார். தண்ணீருக்கு மேலும், கீழும் இவ்வளவு நீண்ட படம் வந்திருக்குமா என்பது சந்தேகம். அவ்வளவு சிறப்பான கதையை சிவா கொடுத்திருக்கிறார்.…

Read More

திரைப்படத்திற்கு கதாநாயகனையும் இயக்குநரையும் தயாரிப்பாளரையும் விட முக்கியமான ஒன்று தேவை பாக்யராஜ் !

திரைப்படத்திற்கு கதாநாயகனையும் இயக்குநரையும் தயாரிப்பாளரையும் விட முக்கியமான ஒன்று தேவையாக உள்ளது என்று இயக்குநர் கே .பாக்யராஜ் ஒரு திரைப்பட விழாவில் கூறினார். இது பற்றிய விவரம் வருமாறு: சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சேவகர்’.இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் பத்திரிகையாளர்கள் ஊடகத்தினர் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள நடைபெற்றது. இப்படத்தை திரையரங்குகளில் ஆக்சன் ரியாக்ஷன் விநியோக நிறுவனத்தின் சார்பில் வெளியிடும் விநியோகஸ்தர் ஜெனிஷ் விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். அவர் பேசும்போது, ” இந்தப் படத்தின் அறிமுக விழாவைப் பெரிதாக நடத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் ஆசைப்பட்டார். அதன்படி இன்று அரங்கு முழுதும் நிறைந்த பார்வையாளர்களோடு இந்த விழா நடைபெறுகிறது. இந்தப் படத்தின் கதை…

Read More

நிதிக்குற்றத்தை சொல்லும் பான் இந்திய ஃபைனான்ஸியல் திரில்லர் திரைப்படம் “ஜீப்ரா” !!

ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜீப்ரா”. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் 2024 அக்டோபர் 31 ஆம் தேதி பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகிறது. தமிழில் முதல் ஓடிடி திரைப்படமான பெண்குயின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான திரில்லர் திரைப்படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். ZEE தமிழ் தொலைக்காட்சியில், பெரும் வெற்றிபெற்ற “செம்பருத்தி” சீரியலின் தயாரிப்பாளர்கள், தங்களது முதல் திரைப்படமாக இப்படத்தினை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். அரசின் அதிகாரமிக்க உலகில் நிகழும், நிதிக்குற்றங்களை ஆராயும் இப்படத்தின் கதைக்களம், ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்.…

Read More

அட்டகாசமான ஹாரர் அனுபவத்திற்குத் தயாராகுங்கள் !,  திரையரங்குகளில் வெற்றி பெற்ற,  ‘டிமான்ட்டி காலனி 2’   ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது !

~ விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தமிழ் திகில் ஹாரர் கிளாசிக்கின்  இரண்டாம் பாகமான  ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம்,  வரும் செப்டம்பர் 27 அன்று வெற்றிகரமாக ZEE5 இல் பிரத்தியேகமாகத் தொடர்ந்து ஸ்ட்ரீமாகவுள்ளது ~ ~ பி.டி.ஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ், பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில், ஆர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி 2’. இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான, ZEE5 தென்னிந்தியாவில் உள்ள பார்வையாளர்களைக் கவரும் வகையில், தொடர்ச்சியாகப் பல அற்புதமான படைப்புகளை வழங்கி வருகிறது.  சமீபத்திய வெளியீடுகளான ‘ரகுதாத்தா’, ‘நுனக்குழி’ உள்ளிட்ட அசத்தலான படைப்புகளை அடுத்து,  இந்த ஆண்டின் அதி பயங்கரமான ஹாரர் பிளாக்பஸ்டர் “டிமான்ட்டி…

Read More

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் – நயன்தாரா கூட்டணியின் ‘மூக்குத்தி அம்மன் 2’ வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி ‘

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ எனும் திரைப்படத்தை நட்சத்திர இயக்குநர் சுந்தர். சி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அரண்மனை 4’ படத்தைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் உருவாகிறது. தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா முதன்மையான வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ரசிகர்களுக்கு திரையரங்குகளில் புதுவிதமான அனுபவத்தை வழங்குவதற்காக படக்குழுவினர் தெளிவாக திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள். டிவைன் ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி…

Read More

“ஹிட்லர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ராஜா பேசியதாவது.., செந்தூர் பிலிம்ஸின் 7 வது திரைப்படம் இது, கோடியில் ஒருவன் படம் நல்ல வரவேற்பைக் குவித்தது. விஜய் ஆண்டனி நடிப்பில் இந்தப்படமும் கண்டிப்பாக நல்ல வரவேற்பைப் பெறும். இசையமைப்பாளர்கள் விவேக் மெர்வின் அற்புதமான இசையைத் தந்துள்ளார்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடினமான உழைப்பைத் தந்துள்ளனர். இப்படத்தை முன்பே வெளியிடுவதாகத் திட்டமிட்டிருந்தோம், ஆனால், விஜய் ஆண்டனி சாருக்கு எதிர்பாரா விதமாக விபத்து நடைபெற்றது. யாராயிருந்தாலும் ஒரு வருடம் வரமாட்டார்கள், அதைத்தாண்டியும்…

Read More

திருநெறிய செந்தமிழ் ஆகம திருக்குட முழக்கு நன்னீராட்டுப் பெருவிழாவில் இயக்குனர் திரு. கே. பாக்யராஜ்

நேற்று, கோவை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பெரியநாயகி உடனுறை கங்கை கொண்ட சோழீஸ்வரர் திருநெறிய செந்தமிழ் ஆகம திருக்குட முழக்கு நன்னீராட்டுப் பெருவிழாவில் இயக்குனர் திரு. கே. பாக்யராஜ் அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டு இறைவனின் அருளினை பெற்றதில் எண்ணற்ற மகிழ்ச்சி. பின்னர் அன்னதான நிகழ்வை துவைக்கி வைத்து வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினோம். இந்த திருக்கோவிலினை மிகச் சிறப்பாக நிறுவிய கவிஞர், நடிகர் மற்றும் இயக்குனர் திரு. பா. விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டேன்.

Read More

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம்

ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்க, ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார் பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த முதல் திரைப்படமான ‘தி லெஜெண்ட்’ திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தனது இரண்டாவது படத்தை அவர் தொடங்கினார். தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘காக்கி சட்டை’, ‘கொடி’, உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘கருடன்’ திரைப்படத்தின் இயக்குநருமான ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார். புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல…

Read More