நெய்யர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரிஷ் நெய்யர் தயாரிப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்திருக்கும் புதிய படம் “விருந்து”. கதாநாயகியின் அம்மா, அப்பா மர்ம மரணத்தில் இருக்கும் ரகசியம், கதாநாயகியை துரத்தும் கொலையாளிகள் என அட்வென்ச்சர் கலந்து விறுவிறுப்பான திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் கண்ணன் தாமர கண்ணன். அர்ஜூன் உடன் கிரீஷ் நெய்யர், நிக்கி கல்ராணி, ஹரீஷ் பெரடி, சோனா நாயர் மற்றும் அஜூ வர்கீஸ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் எழுத்தாளர் தினேஷ் பள்ளத், இசையமைப்பு பணிகளை ரதீஷ் வெகா மற்றும் சனந்த் ஜார்ஜ் கிரேஸ் ஆகியோர் மேற்கொள்கின்றனர். படத்தொகுப்பு பணிகளை வி.டி. ஸ்ரீஜித் மேற்கொள்கிறார். கலை இயக்க பணிகளை சஹாஸ் பாலா, பாடல்களை மோகன் ராஜன் எழுதியுள்ளார். முழுக்க முழுக்க ஆக்சன், ஃபேமிலி சென்டிமென்ட், திரில்லர் சாயலில்…
Read Moreமுதல்முறையாக கோயம்புத்தூரில், Return Of The Dragon ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert !!
கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இளைஞர்களின் யூத் Icon ஆக கொண்டாடப்படும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “Return Of The Dragon” இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. Torque Entertainment மற்றும் Raj melodies நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் மிகபெரிய கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. தமிழக Independent Music துறையில் ராப் பாடகராக அறிமுகமாகி, தமிழ் திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், நாயகனாகவும் உயர்ந்து, இன்றைய இளைஞர்களின் யூத் Icon ஆக மாறியுள்ளவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக்கச்சேரிக்கு உலகம் முழுதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. “Return Of The Dragon” எனும் பெயரில் லண்டன், மலேசியா என உலக நாடுகளில் வெற்றிகரமாக இசைக்கச்சேரி முடிந்த நிலையில் தற்போது தன் சொந்த ஊரான கோயம்புத்தூரில் Music…
Read Moreநடிகர் ரஞ்சித், மெகாலி மீனாட்சி விட்டல் ராவ் நடித்துள்ள இறுதி முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது..!!
வரம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இறுதி முயற்சி திரைப்படத்தினை இயக்குனர் நடிகர் திரு ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் உதவியாளர் வெங்கட் ஜனா எழுதி இயக்கி உள்ளார்.. இறுதி முயற்சி திரைப்படம் இனிதே நிறைவு பெற்றதை கொண்டாட படக்குழுவினர் மனநலம் குன்றிய சிறுவர்கள் பள்ளிக்கூடத்திற்க்கு சென்று அங்கு படிக்கும் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி அவர்களை சந்தோஷ படுத்தி அந்த மனநலம் குன்றிய சிறுவர்களின் அன்பையும் ஆசியையும் பெற்று வந்தனர்… இந்த இறுதி முயற்சி திரைப்படம் சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில் வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்களும் சந்திக்கும் ஒரு பிரச்சினையை நெஞ்சத்தை பதை பதைக்க வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இறுதி…
Read Moreவிடுதலையின் கருத்தை மறுவரையறை செய்யும் விடுதலைப் பாடல்:
விடுதலையைப் புறவெளியில் தேடியலையும் மனிதன் நாள்தோறும் தன்னைத்தானே சிறைப்படுத்திக்கொள்ளும் அகவிடுதலையைப் பற்றி சிந்திக்க வேண்டுமென்ற கருப்பொருளோடு வெளியாகியுள்ளது ‘விடுதலைப் பாடல்’. ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைப்பில், மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலைத் தீபக் புளூ பாடியுள்ளார். தேர்வுகளின் தடைகளில் இருந்து அறிவு தேடும் விடுதலை, தோல் நிறத்தின் மதிப்பீடுகளிலிருந்து மெய்யழகு வேண்டும் விடுதலை, பொய்களின் சுமையிலிருந்து விடுபட விரும்பும் உண்மை, தொடுதிரையிலிருந்து விரல்கள் கோரும் விடுதலை என அன்றாடம் நம்மை நாமே சிறைப்படுத்திக்கொண்டு வாழ்வதைத் தகர்த்தெறிய இப்பாடல் வலியுறுத்துகிறது. இதோடு நம் நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த வீரர்களையும் போற்றுகிறது. விடுதலையின் பொருளை நாம் மறுமதிப்பீடு செய்துகொள்ள வேண்டுமென்ற ஆழமான கண்ணோட்டத்தை வலியுறுத்தும் இந்தப்பாடலை அபிநாத் சந்திரன் தயாரிக்க மதுரை குயின் மிரா பள்ளி வெளியிட்டுள்ளது. இளைஞர்களின் துள்ளளான நடன அசைவுகளோடு உருவாகியுள்ள விடுதலைப்பாடலின் ஒளி வடிவம் பா…
Read Moreஎஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயம் விருது வழங்கும் விழா!!
இந்த பல்கலை கழகத்தில் உலக அளவிலே, இந்திய அளவிலே எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நாடு போற்றுகிற வகையில் இருக்கும். வரலாற்று சிறப்பு மிக்க உலக தமிழர்கள் ஆராய்ச்சி மாநாடு நடத்த வேண்டும். எஸ்.ஆர்.எம் நிறுவனரும், தமிழ்ப்பேராயம் நிறுவனவேந்தருமான டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் பெருமிதம். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டு வளர்ச்சி குறித்த விழிப்புணர்ச்சியை உலக முழுவதும் உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது தமிழ்ப்பேராயம். தமிழ்ப்பேராயத்தின் பணித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ்ப்பேராய விருதுகள் திட்டம். 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் பன்னிரண்டு தலைப்புகளில் சிறந்த தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள் மற்றும் சீரிய தமிழ்ப் பணியாற்றும் தமிழ் இதழ்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்கள் பயன்பெறும் விதத்தில் விருதுகள் வழங்கப்பட்டு…
Read Moreகயாக் ஃபில்ம்ஸ் ஆஷிக் ஜோயல் இயக்கத்தில், EFL குளோபல் தயாரிப்பில், ‘மீண்டும் நம்பிக்கையை கண்டறிதல்: யீன் உதான் மூலம் பயணம்’
விருது பெற்ற அரசு சாரா நிறுவனமான யீன் உதான் பற்றிய இந்த ஆவணப்படம், தமிழ்நாட்டின் பழமையான தோபிகாட், வறுமையின் சங்கிலியிலிருந்து விடுபடும் இளம் மாணவர்களின் போராட்டத்தையும் கனவுகளையும் காட்டுகிறது. இது அவர்களின் குடும்பங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் தாக்கத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கைவிடப்பட்ட குழந்தைகள், இளைஞர்கள், பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன், திருமதி வேதிகா அகர்வால் 2017 இல் யீன் உதான் நிறுவப்பட்டது. யீன் உதானின் ஆவணப்படத்தின் திரையிடல் தி-நகரில் உள்ள ஏஜிஎஸ் சினிமாஸில் நடைபெற்றது. திருமதி ஆண்டாள் அகோரம், திருமதி அர்ச்சனா கல்பாத்தி, மற்றும் செல்வி ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரால் இந்நிகழ்வு சாத்தியமாகியது. இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் திருமதி அப்சரா ரெட்டி கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் முயற்சியைப் பாராட்டினார். கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமூக ஆர்வலராக தனது…
Read Moreஇயக்குநராக மீண்டும் களம் இறங்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்!
‘கே ஜி எஃப்’ , ‘ சலார்’ போன்ற பிரம்மாண்டமான வெற்றி படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ‘வீர சந்திரஹாசா’ எனும் திரைப்படத்தினை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாகும். அத்துடன் இந்த திரைப்படம் அவரது கலையுலக பயணத்தில் முக்கிய அடையாளமாகவும் இருக்கும். இயக்குநர் ரவி பஸ்ரூரின் திரைப்படங்கள் அவற்றின் புதுமையான மற்றும் யதார்த்தமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றவை. மேலும் அவரது இயக்கத்தில் உருவாகும் ‘வீர சந்திரஹாசா’ – பாரம்பரியத்தை குறிப்பிடத்தக்க வகையில் அதன் எல்லைகளை மேலும் விரிவடைய செய்யும் என்கிறார். ‘வீர சந்திரஹாசா’வை வேறு படைப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்துவது கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய கலை வடிவமான யக்ஷகானாவின் அற்புதமான விளக்க படைப்பாகும். பன்னிரண்டு ஆண்டுகளாக ரவி பஸ்ரூர் யக்ஷகானாவை…
Read Moreபாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம் வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். 1950கள் முதல் மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித் குமார், தனுஷ் உள்ளிட்ட உச்ச…
Read Moreஇசை ரசிகர்களிடம் வரவேற்பைக் குவிக்கும் மிஸ் யூ படத்தின் “சொன்னாரு நைனா” பாடல் !
‘7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் N.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் இளமை துள்ளலுடன் துறுதுறுப்பான ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மிஸ் யூ”. இப்படத்திலிருந்து வெளியான “சொன்னாரு நைனா” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, இணையமெங்கும் வைரலாகி வருகிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், நடிகர் சித்தார்த் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இக்கூட்டணியின் வித்தியாசமான குரலில், ரோகேஷ் வரிகளில், தரை லோக்கல் கானாவாக, கேட்டவுடன் உற்சாகத்தை விதைக்கும் வகையில் அமைந்துள்ளது இப்பாடல். துள்ளலான நடனத்திற்கு ஏற்றவாறு, இன்றைய இசை ரசிகர்களையும், இணைய ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையிலான இப்பாடல் இணையமெங்கும் இப்போது வைரலாகி வருகிறது. முழுக்க முழுக்க இன்றைய இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் அழகான ரொமான்ஸ் காமெடி ஜானரில் இப்படத்தை…
Read Moreநண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் ‘கெவி’!
கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள ‘வெள்ளக்கெவி’ கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி நிஜமான சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி (ARTUPTRIANGLES FILM KAMPANY) சார்பில் தயாராகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கியுள்ளார். கதாநாயகனாக நடிகர் ஆதவன் அறிமுகமாகிறார். ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் நடிகை ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் ஃபரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியம் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளனர். சமீபத்தில் இப்படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதி இசையமைப்பாளர் தேவா பாடிய ‘மலைவாழ் மக்கள் கீதம்’ (Hill Anthem) ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ரிலீஸை…
Read More