“கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

“மார்கோ” எனும் ஆக்சன், திரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகம்மது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் புதிய திரைப்படமான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படத்தில், பிபி (ஆண்டனி வர்கீஸ்) முதன்மைப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு தீவிரமான திரில்லராக, ஆக்சன் அதிரடிப் படமாக இருக்கும் என்பதைக் குறிக்கின்றது. போஸ்டரில், நடு காட்டுக்குள் பலர் செத்து விழுந்து கிடக்க, நடுவில் கொளுந்து விட்டு எரியும் நெருப்புக்கு மத்தியில், பிபி கையில் கோடாளியுடன் மிரட்டலாக தோற்றமளிக்கிறார். இப்படத்தை இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்குகிறார். “மார்கோ” படம் போலவே இந்த “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், படு மிரட்டலாக, மிக உயர்ந்த தரத்துடன்…

Read More

ZEE5 தளம் மற்றும் ZEE தெலுங்கு தொலைக்காட்சியில், பிரம்மாண்டமான காமெடி டிராமா “சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படம், மார்ச் 1, 2025 அன்று ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது!

~ “சங்கராந்திகி வஸ்துனம்” அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவான இப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் வெங்கடேஷ் ட‌குபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்திரி, மற்றும் உபெந்திரா லிமாயே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் ~ ~ இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வரவேற்பை குவித்த பிறகு ZEE5 இல் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளுடன் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. அதே நேரத்தில், ZEE தெலுங்கு தொலைக்காட்சியில் மார்ச் 1, 2025 அன்று மாலை 6 மணிக்கு முதன்முதலில் பிரத்தியேகமாக ஒளிபரப்பப்பட்டது ~ இந்தியா, 1 மார்ச் 2025: ZEE5 மற்றும் ZEE தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான “சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை…

Read More

கிரியா லாவின் ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ நிகழ்வின் தொடக்க நிகழ்வு!

கிரியா லா மார்ச் 1, 2025 அன்று ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ என்ற தலைப்பில் அரை நாள் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. வரவிருக்கும் வருடாந்திர கூட்டத்திற்கு முன்னோடியாக இந்த நிகழ்வு சர்வதேச டிரேட்மார்க் சங்கத்தால் நடத்தப்பட்டது. இது மே 17 முதல் மே 21, 2025 வரை கலிபோர்னியாவின் சான் டியாகோவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இசைத் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டனர். டர்ன்கே மியூசிக் மற்றும் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் அதுல் சுரமணி மற்றும் சரிகம இந்தியா லிமிடெட் முன்னாள் துணைத் தலைவர் சஞ்சய் வாத்வா, ஏபி இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் ஜெ, தென்னிந்திய இசைக் கம்பெனிகள் சங்கத்தின் (SIMCA) செயலாளர் சுவாமிநாதன், தேசிய விருது பெற்ற கிளாசிக்கல் பியானோ…

Read More

அகத்தியா – திரை விமர்சனம்

சித்த மருத்துவத்தின் சிறப்பை ஒரு திகில் கதை வழியே நம்முள் கடத்திருக்கிறார்கள். கதை சொன்ன விதத்தில் படம் ரசிகனுக்கு புதிய அனுபவம் ஆகி விடுகிறது. அதாவது இனிய அனுபவம். சினிமாவில் ஆர்ட் டைரக்டராக இருக்கும் ஜீவா, புதிய படத்தின் படப்பிடிப்புக்காக ரூ.6 லட்சம் செலவழித்து அரண்மனை செட் போடுகிறார். செட் வேலை முடிந்த நிலையில் அந்தப் படம் ட்ராப் ஆகிவிட, செட்டுக்காக போட்ட பணத்தை திரும்ப எடுக்க அந்த செட்டை திகில் பங்களா வடிவில் மாற்றியமைத்து அதில் பார்வையாளர்கள் மூலம் வசூல் செய்கிறார்கள். கூடவே பிரச்சனையும் வந்து சேர்கிறது. அந்த அரண்மனை செட்டிற்குள் உள்ளே சென்ற காதல் ஜோடி ஒன்றில் காதலன் மாயமாகி விட, செட்டை இழுத்து மூடுகிறது அரசாங்கம்.ஏற்கனவே குணப்படுத்த முடியாத நோயால் படுத்த படுக்கையாக இருக்கும் தனது தாயை நினைத்து கவலையாக இருக்கும் ஜீவா…

Read More

சுழல்-2 இணையத்தொடர் விமர்சனம்

முதல் பாகத்தின் தொடர்ச்சி தான் இரண்டாம் பாகம் என்றாலும், முதல் பாகத்தை விட இதில் காட்சி அமைப்புகள் இன்னும் மிரட்டலாக அமைந்திருப்பது சிறப்பு. முதல் பாகத்தில் சொந்த சித்தப்பாவாலேயே பாலியல் பலவந்தம் பண்ணப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ், துப்பாக்கியால் சுட்டு சித்தப்பாவை சாகடிக்கிறார். அதற்காக கைதாகி ஜெயிலில் இருக்கும் ஐஸ்வர்யாவுக்காக வாதாடுகிறார், பிரபல வழக்கறிஞர் லால். கிட்டத்தட்ட வழக்கு வெற்றி பெறும் நிலையில் நான் அவரது கடற்கரை பங்களாவில் பிணமாக கிடக்கிறார், அதுவும் தலையை தோட்டா துளைத்த நிலையில். வழக்கை சப்-இன்ஸ்பெக்டர் கதிரிடம் ஒப்படைக்கும் டி.ஐ.ஜி. அந்த ஏரியா காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுடன் இணைந்து செயல்பட உத்தரவிடுகிறார். ஆய்வாளர் சரவணன் அது தற்கொலை தான் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் அது கொலை என்பதற்கு ஆதாரமாக லால் கொலை செய்யப்பட்ட வீட்டில், வெளியே தாழிடப்பட்ட மர அலமாரிக்குள் கையில்…

Read More

செகண்ட் சான்ஸ் ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா !!

*கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்‌ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது செகண்ட் சான்ஸ்…* மகேஷ் சுப்பிரமணியம், அம்மு அபிராமி நடித்துள்ள இப்பாடல் இன்று படக்குழுவினர் கலந்துக்கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. இளம் நட்சத்திரங்களான ரியோ, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சௌந்தர் இவ்விழாவில் கலந்துகொண்டு பாடலை வெளியிட்டு, படக்குழுவை பாரட்டினர். இந்நிகழ்வினில் *நடிகர் ரியோ கூறியதாவது..* இந்த பாடலில் மகேஷ் மற்றும் அபிராமி இருவரின் பர்ஃபாமன்ஸ் மிகப்பிரமாதமாக இருக்கிறது. நானும் மகேஷும் ஜோடி ரியாலிட்டி ஷோவில் ஒன்றாக பங்கேற்றோம். ஜிவி பிரகாஷ் மற்றும் நரேஷ்…

Read More

Y S R பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ரியோ ராஜின் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ‘ஸ்வீட்ஹார்ட் ‘ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார்.…

Read More

பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது :நடிகர் மாதவன் ஆதங்கம்!

Parent Geenee : குழந்தைகளின் செல்போனுக்கு ஒரு கண்காணிப்பு கேமரா! இப்போதெல்லாம் பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது என்று நடிகர் மாதவன் ஆதங்கத்துடன் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு: நடிகர் மாதவனைப் பங்குதாரராகக் கொண்டு வந்துள்ள ‘பேரண்ட் Army (Parent Geenee )என்கிற செயலியின் அறிமுக விழா சென்னையில் ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடந்தது. இந்தச் செயலி பெற்றோருக்கு அடங்காமல் தறி கெட்டு தாராள சுதந்திரங்களுடன் இயங்கும் குழந்தைகளின் சமூக ஊடகம் மற்றும் இணைய உலகின் ஈடுபாட்டையும் செயல்பாட்டையும் கண்காணிக்கிறது. உடனிருந்து பெற்றோர்கள் கவனிக்க முடியாத சூழலில் இந்தச் செயலி கண்காணித்து அவர்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் குழந்தைகளைக் கண்காணிக்கவும் நல்வழிப்படுத்தவும் வாய்ப்பாக அமைகிறது. இதன் அறிமுக விழா சென்னையில் நடந்தது.செயலியை அறிமுகப்படுத்தி வைத்து நடிகர் மாதவன் பேசும்போது, “ஒரு பெற்றோராக இன்று…

Read More

மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அக்‌ஷய் குமார் வெளியிட்ட ‘கண்ணப்பா’ டீசர்!

கண்ணப்பாவின் புகழ்பெற்ற கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு காவிய திரைப்படமான ‘கண்ணப்பா’-வுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டீஸர் மும்பையில் நடைபெற்ற சிறப்பு ஊடக நிகழ்வில் வெளியிடப்பட்டது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமார், முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சு, இயக்குநர் முகேஷ் குமார் சிங் மற்றும் படக்குழுவினர் இதில் பங்கேற்றனர். படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான வினய் மகேஸ்வரி, வரவேற்புரை நிகழ்த்திய இந்த நிகழ்ச்சியில், திரையிடப்பட்ட கண்ணப்பா பட டீசர், பத்திரிகையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, பக்தி, தியாகம் மற்றும் பிரமாண்டமான வரலாற்று விவரிப்பைப் பற்றிய ஒரு பார்வையை வழங்கும் விதத்தில் இருந்தது. முகேஷ் குமார் சிங் இயக்கிய மற்றும் எம். மோகன் பாபு தயாரித்த இப்படம், பார்வையாளர்களை பக்தி மற்றும் உணர்ச்சிபூர்வமான பயணத்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை டீசர் பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. இப்படத்தில் சிவபெருமான்…

Read More

“ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன்- சுதா கொங்காரா- பா. ரஞ்சித் – அஸ்வத் மாரிமுத்து – ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கிங்ஸ்டன் ‘ எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார்…

Read More