வைரலாகும் ” அழகுத்தளிரே ” (லிரிக்கல் வீடியோ) பாடல்

வைரலாகும் ” அழகுத்தளிரே ” (லிரிக்கல் வீடியோ) பாடல்..       ஆன்லைனில் வைரலாகும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் “அழகுத்தளிரே” (லிரிக்கல் வீடியோ) பாடல் புத்தாண்டு தினமான நேற்று சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் முதல் பாடலான அழகுத்தளிரே நடிகை தன்ஷிகா அவர்களால் வெளியிடப்பட்டது, தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை அழகியலோடு உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது இப்பாடல் இந்நிலையில் நேற்று மாலை ஆறு மணியளவில் வெளியிடப்பட்டது. வெளிவந்த சற்று நேரத்தில், சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. ஆனந்த யாழை, கண்ணான கண்ணே வரிசையில் இப்பாடலும் தந்தை மகள் பாசத்தை உணர்த்தும் வகையில் வெளிவந்துள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Read More

PROக்கள் மரக்கன்று நடப்பட்டன

PROக்கள் மரக்கன்று நடப்பட்டன.   புத்தாண்டையொட்டி PROக்கள் பிரசாத் லேப் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டன   புத்தாண்டையொட்டி PROக்கள் V4 Team டைமண்ட் பாபு, ரியாஸ் அகமது, சிங்கார வேலு ஆகியோருக்கு ‘ராயல்’ பிரபாகர் மரக்கன்று நட்டு வாழ்த்த, கன்றுகள் பிரசாத் லேப் வளாகத்தில் நடப்பட்டன!

Read More

” ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் தயாரிப்பாளர் “

” ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் தயாரிப்பாளர் ”   ” ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் தயாரிப்பாளர் ” ராக் போர்ட் முருகானந்தத்தின் அடுத்தடுத்த அதிரடி படைப்புகள் ” கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் “சினிமா” துறை பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது… ஊரடங்கு முடிந்து வரும் நிலையில் படபிடிப்புகளும், நின்று போன படங்களும் துவங்கப்பட்டுள்ளன.. இந்நிலையில் “ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் ” திரு. முருகானந்தம், 2021-2022 சினிமா துறைக்கு சிறந்த ஆண்டாக அமையும். என புதுப் படங்களுடன் புத்தாண்டை வரவேற்க களமிறங்கியுள்ளார். மேலும் தற்போது ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் கைவசம் “குருதியாட்டம்” படத்தை தயாராக வைத்துள்ளது, அதோடு “பிளாக் ஷீப்” ல் ஒரு படம் தயாராகி வருகிறது, அது மட்டுமின்றி இயக்குனர் மிஷ்கின் அவர்களின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக பிசாசு2 தயாராகி வருகிறது. ஏப்ரல் அல்லது மே ல் இது…

Read More

‘ பேய் இருக்க பயமேன் ‘ சினிமா விமர்சனம்

‘பேய் இருக்க பயமேன்’ சினிமா விமர்சனம். அந்த இளம் ஜோடி தங்களுக்குத் திருமணம் முடிந்ததும், ஒரு பெரிய பங்களாவுக்குள் குடியேறுகிறார்கள். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை. அதனால் சின்னச் சின்ன சண்டை. தனித்தனி அறைகளில் தங்குகிறார்கள். அந்த பங்களாவுக்குள் நுழைந்ததில் இருந்தே பேய்களின் அட்டகாசம்; பயப்படுகிறார்கள். பேய்களால் இவர்களுடைய நிம்மதி பறிபோகிறது. பேய் ஓட்டுகிற சிலரைக் கூட்டிவர, பேய்கள் அவர்களைத் தெறிக்கவிடுகிறது. வெறுத்துப் போன அந்த இளம் ஜோடி, தாங்களே பேய்களை விரட்டும் முயற்சியில் இறங்குகிறார்கள். அவர்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கிறது. அந்த முயற்சிகள் கலகலப்புக்கு கேரண்டி தருகின்றன. பேய்ப் படங்களுக்கே உரிய அரதப் பழசான காட்சிகளால் படத்தின் முன்பாதி நிறைந்திருந்தாலும், பின்பாதியில் கதையோட்டத்தை சற்றே வித்தியாசமான கோணத்தில் நகர்த்தியிருப்பதற்காக இயக்குநர் கார்த்தீஸ்வரனுக்கு அழுத்தமான கை குலுக்கல்! இயக்குநரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அவரது அப்பாவித் தோற்றமும்…

Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்”

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்! பிரபல பத்திரிகையாளரும், பசும்பொன் தேவர் வரலாறு ஆவணபட இயக்குனருமான கோடங்கி ஆபிரகாம் குறும்படம் ஒன்றை எழுதி இயக்கி இருந்தார். இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினமான இன்று வெளியிடப்பட்டது. பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் “மலர்” டைட்டிலையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட புதுமுக நடிகர் சந்தோஷ் பிரபாகர், இயக்குனர் கோடங்கி ஆபிரகாம், பத்திரிகையாளர் ஒற்றன் துரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சமூகத்தால் தவறான பாதையில் தள்ளப்பட்ட ஒரு பெண் அதே சமூகத்தை போராடி எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மலர் குறும்படத்தின் கதை. கயல்விழி என்ற புதுமுக நடிகை மலர் குறும்பட நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களோடு “திடீர் தளபதி” சதீஷ்முத்து, ஜோயல்,ஹிதயத்துல்லா , ஒற்றன் துரை ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனீஷ் ஒளிப்பதிவில்…

Read More

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை!

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை!.   தியேட்டர்களில் 100% மக்களை அனுமதிக்க வேண்டும்! -‘தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை! தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் 28.12.2020 இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சருக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் கையெழுத்திட்ட கடிதத்தை வெளியிட்டனர். ‘தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சமர்ப்பிக்கும் கோரிக்கை விண்ணப்பம்’ என்ற தலைப்பில் விடுக்கப் பட்டிருக்கும் அந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் இதோ:- எங்களது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தங்களின் பொன்னான ஆட்சியில் தமிழ்த் திரையுலகம் நல்ல வளர்ச்சி நிலைமைக்கு வரும் என்பதில் ஐயமில்லை. தற்போதுள்ள தற்போதுள்ள சூழ்நிலையில் திரையரங்குகளை நடத்துவதே மிகவும் சிரமமாக…

Read More

படப்பிடிப்பில் ஆர்யாவுக்கு விழுந்த பலத்த அடி

படப்பிடிப்பில் ஆர்யாவுக்கு விழுந்த பலத்த அடி.   எனிமி படப்பிடிப்பின் சண்டைக்காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் ! விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகும் எனிமி படத்தின் .படப்பிடிப்பு தற்போது EVP பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைப்புகளுடன் நடைபெற்றுவருகிறது . விஷாலுக்கும் ஆர்யாவுக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சிகள் டூப் இல்லாமலால் எடுக்கப்பட்டு வந்த நிலையில் படப்பிடிப்பின்போது ஆர்யாவிற்கு கையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பெற்று மீண்டும் இன்று படப்பிடிப்பில் ஆர்யா கலந்துகொண்டார் . அரிமா நம்பி’, இருமுகன்’, நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .தமன் இசையமைக்க RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .சண்டைக்காட்சிகள் – ரவிவர்மா .

Read More

நடிகர் மன்சூரலிகானின் இசை ஆல்பம் “ டிப் டாப் தமிழா “

நடிகர் மன்சூரலிகானின் இசை ஆல்பம் “ டிப் டாப் தமிழா “. நடிகர் மன்சூரலிகானின் இசை ஆல்பம் “ டிப் டாப் தமிழா “ அவரே பாடல்வரிகளை எழுதி, இசையமைத்து, பாடி, நடித்துள்ளார் தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தி வந்த மன்சூர் அலிகான் தற்போது பிஸியான காமெடியனாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். நடிகர் மன்சூரலிகான் 1994 ஆம் ஆண்டே சில்க் சிமிதாவை வைத்து “ சிக்குச்சான் சிக்குச்சான் சிக்குசிக்குச்சான் “ என்ற இசை ஆல்பத்தை ஏழு தெம்மாங்கு பாடல்களை கொண்டு தயாரித்து வெளியிட்டிருந்தார் அந்த பாடல்கள் அப்போதே மக்கள் மத்தியில் பிரபலமானது. அதுமட்டுமல்லாது அவர் நடித்த “ ராஜாதிராஜ ராஜகுலோத்துங்க ராஜ மார்த்தாண்ட…

Read More

New Year Wishes from Music Director Vishal Chandrasekar

New Year 2021 Wishes from Music Director Vishal Chandrasekar.   தன்னுடைய தனித்திறமையால் அடுக்கடுக்கான வெற்றிகளை குவித்து வரும் இளம் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்… கொரோனா காலம் வெகுவாக பாதித்த துறைகளில் சினிமாவும் ஒன்று, ஆனால் திறமை வெளிக்கொணர ஊரடங்கு ஒரு தடை அல்ல என நிரூபித்துள்ளார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் திரையரங்குகள் திறக்காததால் ஆன்லைன் தளங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு ஆன்லைனில் வெளிவந்த தமிழ் வெப் சீரிஸில் , சாரு கே சேகர் இயக்கத்தில் ஜெய் , வாணிபோஜன் நடிப்பில் வெளியான “ட்ரிப்பிள்ஸ்” இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, மேலும் மறைந்த நடிகர் “கிரேஸி மோகனுக்கு” மரியாதை செலுத்தும் விதமாக இம்மாதம் இந்த வெப் சீரிஸ் வெளியானது, முழு…

Read More

Letter from Director Perrasu to Super Star Rajinikanth.

Letter from Director Perrasu ” Mim Minni Poochighal ” to Super Star Rajinikanth.     சூப்பர் ஸ்டாருக்கு மின்மினிப் பூச்சியின் கடிதம்! நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டோம்! இன்று அந்த ஆசையை ஆலோசிக்கிறோம்! நீங்கள் ஆன்மீக அரசியல் என்கிறீர்கள்! தமிழ்நாட்டில் அரசியல் அஸ்திவாரமே இறை இழிவுதான்! எளிமையான நேர்மையான அரசியல் காமராஜரோடு சமாதியாகிவிட்டது! நீங்கள் தமிழக விசுவாசத்தில் சேவை செய்ய ஆசைப்படுகிறீர்கள் இங்கு தமிழ்மொழி வேஷந்தான் போற்றப்படுகிறது! நீங்கள் யார்மனதும் புண்படாமல் பேசுபவர்! ஆனால் இங்கே விமர்சனம் என்ற பெயரில் உங்கள் மனசு குத்திக் கிழிக்கிப்படுகிறது! நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைத்தோம்! அரசியலுக்கு வந்து நல்லவர் அசிங்கப்படக்கூடாது என்று இன்று நினைக்கிறோம்! ஒருசில கட்சிக்கு சில கட்சிகளே எதிர்ப்பாய் இருக்கும், இங்கு உங்களுக்கு ஒட்டுமொத்த கட்சிகளும் எதிரியாக கிளம்பிவிட்டது!…

Read More