“இதுவரை 74 புதிய இயக்குனர்கள் படங்களில் நடித்து விட்டேன்… இன்றைய இளைய இயக்குனர்களின் திறமை வியக்க வைக்கிறது…”

கிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே. எம் .சபி தயாரிக்க, இளைய திலகம் பிரபுவும் வெற்றியும் தந்தை மகனாக நடிக்க, நாயகியாக கிருஷ்ண பிரியா நடிக்க . கோமல் குமார், மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, ஆர். வி .உதயகுமார் உடன் நடிப்பில் இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ள படம் ராஜ புத்திரன் .ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ளார் . மவுஃபுல் ராஜா இசையமைத்ததுள்ளார். பாடல்களை வைரமுத்து, மோகன் ராஜன் எழுதியுள்ளனர். மே மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.விழாவில் படக்குழுவினருடன் திரையுலகப் பிரமுகர்கள் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் -விநியோகஸ்தர் கே .ராஜன், இயக்குநர் எஸ். . சந்திரசேகரன், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர்கள் வசந்த், பாண்டியராஜன், பேரரசு, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அருள்பதி,…

Read More

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் திரைப்படத்தில் விஜய் ஆண்டனியும் அவரது தங்கை மகன் அஜய் திஷானும் நாயகர்களாக நடிக்கிறார்கள்

மாபெரும் வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைகிறது. இரட்டை நாயகர்கள் கொண்ட கதையாக உருவாகவுள்ள இந்த புதிய திரைப்படத்தில் விஜய் ஆண்டனி அவரது தங்கை மகன் அஜய் திஷான் உடன் நடிக்கிறார். சசி இயக்கிய மற்றுமொரு வெற்றிப் படமான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தை தயாரித்த இரமேஷ் P. பிள்ளை, அபிஷேக் ஃபிலிம்ஸ் பேனரில் இந்த புதிய திரைப்படத்தையும் தயாரிக்கிறார். ‘லப்பர் பந்து’ மற்றும் ‘மாமன்’ புகழ் சுவாசிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ்நாட்டின் வட மாவட்டத்தில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. சசி இயக்கத்தில் தனது தங்கை மகன் அஜய் திஷான் அறிமுகமாவது குறித்து விஜய் ஆண்டனி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு பாலாஜி ஶ்ரீராம் இசையமைக்கிறார்,…

Read More

மிஸஸ் & மிஸ்டர் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி. ராஜபாண்டி – விஷ்ணு ராமகிருஷ்ணன் – டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். பாலகுரு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். ஜூனில் வெளியாகும் இந்த…

Read More

பாடலாசிரியர் திரு. நா.முத்துக்குமார் அவர்களின் 50வது பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு நடைபெற இருக்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி !

அன்புக்குரிய தமிழ் திரையுலக நண்பர்கள், பத்திரிக்கை, ஊடகங்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் வணக்கங்கள். தமிழ் சினிமா பாடல்களை தனது எழுத்துக்களால் இலக்கியமாக்கிய பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் 50வது பிறந்தநாளினில், அவர் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் திரையிசைப் பாடல்களுக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக நடக்கவிருக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். தனது எழுத்தால் ஒரு தலைமுறைக்கே காதலையும், ஆறுதல்களையும், நம்பிக்கைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கும், அழியா புகழ் கொண்ட இந்த மாபெரும் கவிஞனுக்கு மரியாதை செய்யும் விதமாக, நா.முத்துக்குமாரின் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களும் பின்னணி பாடகர்களும் பங்கேற்கும் ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக இது அமைய இருக்கிறது. வீசும் காற்று முழுக்க, தன் கவிதைகளை பாடல்களாக கலந்திட வைத்திருக்கும் இந்த கலைஞனோடு தங்களுக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத நிகழ்வுகளையும், பணியாற்றிய நினைவுகளையும் ரசிகர்களிடம்…

Read More

இயக்குனர் ராமின் “பறந்து போ” படத்தின் முதல் பாடல் வெளியீடு

வணக்கம். நான் இயக்குநர் ராம். எங்களுடைய “பறந்து போ” திரைப்படம் வரும் ஜூலை 4-ஆம் தேதி வெளிவர இருக்கிறது. அதனுடைய முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. அதற்கு ‘Sunflower – not a single not a teaser’ என்று பெயரிட்டு இருக்கிறோம். பாடலோடு சில காட்சித் துண்டுகளும் இடம் பெறுவதால் இவ்வாறு பெயரிட்டு இருக்கிறோம். எல்லோரையும் போல் எனக்கும் சூரியகாந்தியை மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல சூரியோதயத்தில் சூரியகாந்தி தோட்டத்தில் படம் பிடிக்கிற ஒரு அரும் வாய்ப்பு என்னுடைய முதல் படத்தில் எனக்குக் கிடைத்தது. கற்றது தமிழின் இன்னும் ஓர் இரவு பாடலை ஆந்திர மாநிலத்து கடப்பாவின் சூரியகாந்தி தோட்டத்தில் படம் பிடித்தோம். தங்கமீன்களின், ஆனந்த யாழைப் பாடலை சூரியகாந்தி தோட்டத்தில் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்காததால் கேரளாவில்…

Read More

சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்கும் கலகலப்பான காதல் கதை ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’

மான்சி, ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், உதயதீப் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் ‘காதல் மட்டும் வேணா’ திரைப்படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கான் தற்போது ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ எனும் படத்தை தயாரித்து இயக்குவதோடு நாயகனாகவும் நடிக்கிறார். சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் உருவாகும் இத்திரைப்படம் ஒரு கலகலப்பான காதல் கதை ஆகும். அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக மிகவும் ஸ்டைலான முறையில் இப்படத்தை வடிவமைத்திருப்பதாக சமீர் அலி கான் தெரிவித்தார். மான்சி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, அலி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின், உதயதீப், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். “திருச்சூரில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்த நான் விஸ்காம் பட்டம் பெற்ற பின்பு ‘காதல் மட்டும் வேணா’ திரைப்படத்தை இயக்கி…

Read More

வேம்பு – திரை விமர்சனம்

சோதனைகளை சாதனையாக மாற்றும் பெண்ணே இந்த வேம்பு. பள்ளிப் பருவம் தொட்டே சிலம்பம் கற்று வரும் வேம்புவுக்கு மாநில அளவில் ஸ்டேட் லெவல் சாம்பியன் ஆக வேண்டும்…அதன் மூலம் அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்பது லட்சியம். அதற்காக பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் சிலம்பம் தான் அவள் உயிர் மூச்சாக இருக்கிறது. சிலம்பத்தில் சாதித்து அதன் பிறகு தன் மீது அன்பு பாராட்டும் மாமன் மகனை கரம் பற்றுவது என்பது அவள் திட்டம். ஆனால் பெண்கள் விஷயத்தில் ஊரில் நடக்கும் சில அசம்பாவிதங்கள் அவள் பெற்றோரை பயமுறுத்த, அவள் விரும்பிய அதே மாமன் மகனுக்கு உடனடியாக மணமுடித்து வைக்கின்றனர். திடீர் திருமணம் தனது சிலம்ப லட்சியத்துக்கு இடையூறாக வந்து விடுமோ என்று பயப்படும் வேம்பு தன் கணவனிடம் இது பற்றி பேசுகிறாள். அவனும்…

Read More

நடிகர் அருண் விஜய் வெளியிட்ட விக்ராந்த் நடிக்கும் ‘வில்’ பட டீஸர்

தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான விக்ராந்த்- சோனியா அகர்வால் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கும் ‘வில் ‘எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான அருண் விஜய் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் எஸ். சிவராமன் இயக்கத்தின் உருவாகியுள்ள ‘வில்’ திரைப்படத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலேக்யா, பதம் வேணு குமார், மோகன் ராமன் , ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். டி. எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நடிகை சோனியா அகர்வாலின் சகோதரரான சௌரப் அகர்வால் இசையமைத்திருக்கிறார். நீதிமன்ற பின்னணியில் நடைபெறும் இந்த திரைப்படத்தை ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு…

Read More

ஆந்தணி தாசனின் தமிழ் இண்டி சூப் பாடல் “போனாலே போனாலே” – பிரேக்-அப்புகளை நகைச்சுவையுடன் சிந்தனையூட்டும் பாடல் மே 28-ஆம் தேதி வெளியாகிறது

தன் முதல் தமிழ் இண்டி ஹிட் “காதல் ஊத்திகிச்சு” எனும் வெற்றிப் பாடலுக்குப் பிறகு, ஸ்வான் ஸ்டூடியோஸ் தனது இரண்டாவது இயல்பான சிங்கிளான “போனாலே போனாலே” மூலம் திரும்பி வந்துள்ளது — இதயம் நிறைந்த உணர்வுகளும் கூர்மையான நகைச்சுவையும் கலந்த ஒரு புதிய பிரேக்-அப் பார்வையை இந்த பாடல் முன்வைக்கிறது. இந்தப் பாடலின் மையக் கரு, காதல் முறிவுக்குப் பிறகான உணர்ச்சி அமுக்கங்களை சித்தரிக்கிறது. தனது தோழரான கலைஞரிடம் தன் இதயவலி பற்றி ஒரு பாடலாகக் கொண்டு வரக் கோரும் ஒரு இளைஞனின் பார்வையில் கூறப்படும் இந்த கதை, காதலில் முழுமையாக விழுந்து பின்னர் தனியாக விலகியவர்களுக்கெல்லாம் நெருக்கமாகத் தோன்றும். இசை ஒலிப்புத்தாக்கம் கீர்த்தன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் ஆன்மீக நிழல்கள் மற்றும் நாட்டுப்புற நடனத் தொகுப்புகளை இணைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. சந்தோஷ் எழுதிய பாடல்…

Read More

ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் கதை மாந்தர்கள் அறிமுகம்

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து எழுதி 2020ஆம் வெளிவந்த அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பு தற்போது ஒலிப்புத்தகமாக வெளியாகியிருக்கிறது. கதை ஓசை தீபிகா அருண் குரலில் ஸ்டோரி டெல், கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் பாட்காஸ்ட் போன்ற  முன்னணி ஒலித் தளங்களில் அம்பறாத்தூணி ஒலிப்புத்தகம் இன்று வெளியானது. சிறுகதைகளில் இடம் பெறும் வெவ்வேறு கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் வண்ணம், முழுக்க முழுக்க ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அறிமுகக் காணொளியைக் கபிலன்வைரமுத்து மற்றும் கதை ஓசை குழு தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். வேலூர் சிப்பாய் புரட்சி, பூலித்தேவன் ராணுவ முகாம், லியோ டால்ஸ்டாயின் உதவி பெற்ற அகதிகள் கப்பல், பப்புவா நியூ கினியா நாட்டில் நடைபெற்ற ஆழ்கடல் சுரங்கம், மஞ்சவேலம்பட்டி பாகவத சமீன்தார், முப்பத்தோராம் நூற்றாண்டு பெண் என பல்வேறு வரலாற்று மற்றும் அறிவியல் புனை கதைகளின்…

Read More