நாக சைதன்யா -சந்து மொண்டேட்டி- அல்லு அரவிந்த் – பன்னி வாஸ்- கீதா ஆர்ட்ஸ் ..கூட்டணியில் தயாராகும் ‘தண்டேல்’ படக்குழுவினர்- நாயகியான சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர். நாக சைதன்யா- சாய் பல்லவி ஜோடி ‘லவ் ஸ்டோரி’ எனும் படத்தில் திரையில் தோன்றி ரசிகர்களை மயக்கியது. மேலும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் தயாராகும் ‘தண்டேல்’ திரைப்படத்தில் மீண்டும் நாக சைதன்யா- சாய் பல்லவி இணைந்திருப்பதால்.. அவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி மற்றும் திரை தோன்றல் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரும் இணைந்து திரையில் தோன்றி ரசிகர்களை வசீகரிக்கவிருக்கிறார்கள். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் அல்லு அரவிந்த் வழங்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் பன்னி வாஸ் தயாரிக்கிறார். இன்று சாய் பல்லவியின் பிறந்தநாள். இதற்காக படக்குழுவினர் நேற்று ஒரு அற்புதமான…
Read Moreபுராணக் கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா, ராகுல் சங்கிரித்யன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய பான் இந்தியா படம் அறிவிக்கப்பட்டுள்ளது தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக VD14 என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் குறித்த அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒரு போர்வீரரின் சிலையின் பின்னணியில் “சபிக்கப்பட்ட நிலத்தின் புராணக்கதை” என்ற தலைப்புடன் கூடிய போஸ்டர் பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது. 1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையை இப்படம் விவரிக்கிறது. பான் இந்தியன் திட்டம் 19 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மையான வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உணர்ச்சிப்பூர்வமான ஒரு சினிமாவாக, பிரம்மாண்டமான பான் இந்திய படைப்பாக இப்படம் உருவாகிறது.…
Read Moreவிஜய் தேவரகொண்டா – ரவி கிரண் கோலா இணையும் புதிய பான் இந்திய திரைப்படம்
‘ராஜா வாரு ராணி காரு’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவுடன் மீண்டும் விஜய் தேவரகொண்டா இணைகிறார். எஸ் வி சி புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் 59ஆவது திரைப்படம் இது. விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளான நேற்று இந்தப் படம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக போஸ்டரில் விஜய் தேவரகொண்டா கத்தியை கையில் வைத்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. அதிரடியாக படம் உருவாகிறது எனலாம். மேலும் போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் டயலாக் படம் மாஸாக இருக்கும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. இந்தத் திரைப்படம் கிராமிய பின்னணியில் மிக பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்படுவதாகவும், இது பான் இந்திய அளவிலான கவன ஈர்ப்பை கொண்டிருக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். விஜய் தேவரகொண்டா முழுக்க…
Read Moreவிஜய் குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘சேத்துமான்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் மேற்கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம்…
Read Moreஇயக்குநர் சாந்தகுமார் தன் சேஃப் ஜானரை உடைத்து ‘ரசவாதி’ படத்தை எடுத்திருக்கிறார். – நடிகர் சுஜித்
டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் ‘ரசவாதி’. மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது. எடிட்டர் சாபு ஜோசப், ” இயக்குநர் சாந்தகுமார் முதல்முறையாக ஒரு காதல் படம் செய்துள்ளார். இவ்வளவு நாட்கள் வில்லனாக பார்த்து வந்த அர்ஜூன் தாஸ் சாக்லேட் பாயாக நடித்திருக்கிறார். சுஜித் வில்லனாக மிரட்டியிருக்கிறார். லவ், ஆக்ஷன் என படம் சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் ரெஸ்பான்ஸூக்காகக் காத்திருக்கிறேன்” என்றார். நடிகர் அருள்ஜோதி, “‘மெளன குரு’ தான் எனக்கு முதல் படம். ‘மகாமுனி’ படத்தில் சாந்தகுமார் சார் கூப்பிட்டபோது எனக்கு அந்த கதாபாத்திரம் செட் ஆகவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து இந்தப் படத்தில் வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். அவருக்கு…
Read Moreஅதர்வா-வின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘டி.என்.ஏ’ பட பர்ஸ்ட் லுக்
‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார் தயாரிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘ஃபர்ஹானா’ படப்புகழ் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்கிறார். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘சித்தா’ படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்ற நிமிஷா சஜயன், கதாநாயகியாக நடிக்கிறார். அதர்வா முரளியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் அதர்வா முரளியின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்தான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. இயக்குநர் நெல்சன் தனது வெவ்வேறு ஜானர்களைத் தனது முந்தையப் படங்களில் முயற்சி செய்து வெற்றியும் கண்டவர். இவருடன் ‘டிஎன்ஏ’ படத்தில் திறமையான நடிகர்கள்…
Read Moreஅப்புக்குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பர்ஸ்ட் லுக் வெளியிட்ட விஜய் சேதுபதி
நடிகர் அப்புக்குட்டியின் பிறந்தநாளான இன்று, அவர் கதையின் நாயகனாக ராஜூ சந்ரா இயக்கத்தில் நடித்துள்ள “பிறந்தநாள் வாழ்த்துகள்” படத்தின் First Look போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி கையால் வெளியிட்டுள்ளனர்! ராஜு சந்ரா எழுதி இயக்கி, பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்ரா இருவரும் தயாரித்துள்ளனர். மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது. மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜி மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கிராமத்து எதார்த்தத்தை, காதலுடன் காமெடி கலந்து, ஜனரஞ்சகமாக கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ளார் ராஜூ சந்ரா. இசையை நவநீத் அமைக்க, கலையை வினோத் குமார் கையாண்டுள்ளார். விரைவில் திரைக்கு வருகிறது “பிறந்தநாள் வாழ்த்துகள்”!
Read Moreமிகுந்த எதிர்பார்ப்பைப் ஏற்படுத்தி இருக்கும் “போகுமிடம் வெகுதூரமில்லை” பர்ஸ்ட் லுக்
Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார். நடிகர் விமல் மற்றும் கருணாஸ் கதாபாத்திரங்களின் பின்னணியில் ஒரு காரும் இடம்பெற்றிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்தவுடனே உணர்வுப் பூர்வமான கதைக்களத்தில் அற்புதமான அனுபவம் தரும் திரைப்படமாக இருக்குமென்பதை உறுதி செய்வதாக இருந்தது. மிக வித்தியாசமானதாக அமைந்துள்ள ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும், மார்ச்சுவரி வேன் ஓட்டும் நாயகன் விமல், தனது அவசரப் பணத்தேவைக்காக,…
Read More”நீதி உயிரோடு இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது” – பாடலாசிரியர் சினேகன்
எஸ்ஏஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் யோகராஜ் செபாஸ்டியன் தயாரிப்பில் இயக்குனர் சித்திக் எழுதி இயக்கி நடிக்கும் நாளைய இயக்குநர் படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் பாடலாசிரியருமான சிநேகன் , இமான் அண்ணாச்சி, சேலம் ஆர் ஆர் தமிழ்ச் செல்வன், கூல் சுரேஷ், நடன இயக்குனர் தீனா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி மேடையில் பேசிய பாடலாசிரியர் சினேகன், நாளைய இயக்குநர் – இந்த படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. சினிமாவில் ஒரு இடத்துக்கு வர வேண்டும் என்று போராட்டத்துக்கு பிறகு இயக்குனராக வந்த சித்திக்கு வாழ்த்து தெரிவித்தவர், இந்த படம், முழுக்க சினிமாக்காரர்களை பற்றிய படம் இது போன்ற படங்கள் மிக குறைவான படங்களே வருகிறது. இது போன்ற சினிமா சம்பந்த பட்ட கதைகள் அதிகம் வெளி வரவேண்டும் இளையராஜா – வைரமுத்து…
Read Moreஃபிகினி சமையல், ஃபெமினிஸ்ட் என கவரும் “ஓடிடி-ப்ளஸ்” புதிய ஓடிடி தளம்.
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல நல்ல படைப்புகள் ரசிகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகின்றன. இதற்கு ஒரு தீர்வாக வந்தவை தான் ஓடிடி தளங்கள். இவற்றின் மூலம் தங்கள் மொழி மட்டுமல்லாது வேறு மொழிகளிலும் ஒருவரது படைப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் தற்போது முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும் சிக்கல் துவங்கியுள்ளது. இதற்கு ஒரு புதிய தீர்வாக உருவாக்கப்பட்டுள்ளது தான் ‘ஓடிடி பிளஸ்’ என்கிற புதிய ஓடிடி தளம். அதே சமயம் இதன்…
Read More