பெண் வாக்காளர்களை முறியடித்த திருப்பூர் ஆண் வாக்காளர்கள்

மாவட்டத்தில், பெண் வாக்காளர்கள் அதிகம் இருந்தாலும், நேற்று முன்தினம் நடந்த ஓட்டுப்பதிவில், பெண்களை காட்டிலும், 9,543 ஆண் வாக்காளர் அதிகம் ஓட்டளித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், ஆண்களை காட்டிலும் பெண் வாக்காளர் அதிகம். மொத்தம் உள்ள, 23 லட்சத்து, 59 ஆயிரத்து, 804 வாக்காளரில், 11 லட்சத்து, 93 ஆயிரத்து, 104 பெண் வாக்காளர்; ஆண் வாக்காளர், 11 லட்சத்து, 66 ஆயிரத்து, 417 பேரும், திருநங்கையர், 283 பேரும் உள்ளனர்.சட்டசபை தேர்தலில், பெண்களை காட்டிலும், ஆண் வாக்காளரே அதிக அளவு ஓட்டளித்துள்ளனனர். அதாவது, எட்டு லட்சத்து, 26 ஆயிரத்து, 798 ஆண் வாக்காளர் ஓட்டளித்துள்ளனர்; பெண்களில், எட்டு லட்சத்து, 17 ஆயிரத்து, 255 பேர் ஒட்டளித்துள்ளனர்.திருநங்கையர்மாவட்டத்தில் உள்ள, 283 திருநங்கையரில், 32 பேர் மட்டும் ஓட்டளித்துள்ளனர். அதாவது, திருப்பூர் வடக்கில், 14, காங்கயம், பல்லடத்தில் தலா ஆறு; திருப்பூர்…

Read More

மதுரை மாவட்டத்தில் வாக்குபதிவு குறைய காரணம் என்ன?

மதுரை மாவட்டத்தில் கரோனா பரவல் அச்சம் மற்றும் பூத் சிலிப் வழங்கப்படாதது ஆகிய காரணங்களால், வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததாகத் தகவல் வெளி யாகி உள்ளது. மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் 2016-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 71.09 சதவீத வாக்குகள் பதிவாகின. நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் 10 தொகுதிகளிலும் 70.33 சதவீத வாக்குகளே பதிவாகின. இந்தத் தேர்தலில் கரோனா அச்சத்தால் பலர் வாக்களிக்க வராத நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் முறையாக பூத் சிலிப் வழங்கப்பாடத்தும் வாக்குப்பதிவு சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கும் பாகம் எண், வரிசை எண் மற்றும் வாக்களிக்க வேண் டிய இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு பூத் சிலிப் வழங்கப்படுவது வழக்கம்.முன்பு பூத்சிலிப்புகளை அரசியல் கட்சியினரே வழங்கி வந்தனர். அந்த நேரத்தில்,…

Read More