மாவட்டத்தில், பெண் வாக்காளர்கள் அதிகம் இருந்தாலும், நேற்று முன்தினம் நடந்த ஓட்டுப்பதிவில், பெண்களை காட்டிலும், 9,543 ஆண் வாக்காளர் அதிகம் ஓட்டளித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், ஆண்களை காட்டிலும் பெண் வாக்காளர் அதிகம். மொத்தம் உள்ள, 23 லட்சத்து, 59 ஆயிரத்து, 804 வாக்காளரில், 11 லட்சத்து, 93 ஆயிரத்து, 104 பெண் வாக்காளர்; ஆண் வாக்காளர், 11 லட்சத்து, 66 ஆயிரத்து, 417 பேரும், திருநங்கையர், 283 பேரும் உள்ளனர்.சட்டசபை தேர்தலில், பெண்களை காட்டிலும், ஆண் வாக்காளரே அதிக அளவு ஓட்டளித்துள்ளனனர். அதாவது, எட்டு லட்சத்து, 26 ஆயிரத்து, 798 ஆண் வாக்காளர் ஓட்டளித்துள்ளனர்; பெண்களில், எட்டு லட்சத்து, 17 ஆயிரத்து, 255 பேர் ஒட்டளித்துள்ளனர்.திருநங்கையர் மாவட்டத்தில் உள்ள, 283 திருநங்கையரில், 32 பேர் மட்டும் ஓட்டளித்துள்ளனர்.
அதாவது, திருப்பூர் வடக்கில், 14, காங்கயம், பல்லடத்தில் தலா ஆறு; திருப்பூர் தெற்கில், மூன்று; மடத்துக்குளம், தாராபுரம் அவிநாசியில், தலா ஒருவர் மட்டும் ஓட்டளித்துள்ளனர். உடுமலையில், திருநங்கையர் யாரும் ஓட்டளிக்கவில்லை.திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகள் நீங்கலாக மற்ற, ஆறு தொகுதிகளிலும், ஆண் வாக்காளர் குறைவு; பெண்கள் அதிகம். இருப்பினும், தேர்தலில், தாராபுரம், காங்கயம், அவிநாசி, மடத்துக்குளம், உடுமலை தொகுதிகளில், ஆண்களைவிட, பெண் வாக்காளர் அதிகம் ஓட்டளித்துள்ளனர்.திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் தொகுதிகளில், ஆண் வாக்காளர் அதிகம்ஓட்டளித்துள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளில், பெண் வாக்காளர் அதிகம் இருந்தாலும், ஆண்களே அதிகம் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். அதாவது, மொத்தம் ஓட்டுப்பதிவு செய்த பெண் வாக்காளரை காட்டிலும், 9,543 ஆண் வாக்காளர் அதிகமாக ஓட்டளித்துள்ளனர்.கடைசியில் ‘வடக்கு’எட்டு தொகுதிகளில், எந்த தேர்தலாக இருந்தாலும், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கில், ஓட்டுப்பதிவு குறைவாகவே இருக்கும். வாக்காளர் அதிகம் இருந்தாலும், ஓட்டுப்பதிவு குறைவாகவே நடக்கிறது. திருப்பூர் வடக்கு தொகுதியில், 2016 தேர்தலில், 66.44சதவீதம்ஓட்டுப்பதிவாகியிரு ந்தது; திருப்பூர் தெற்கில், 66.07 சதவீதம் மட்டுமே பதிவாகியிருந்தது. நேற்று முன்தினம், திருப்பூர் தெற்கு தொகுதி (62.70)ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது; திருப்பூர் வடக்கு, (62.44) எட்டாவது இடத்துக்கு சென்றுள்ளது.