டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஐவா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படத்திற்கு’ ‘ராம் in லீலா’ என பெயரிடப்பட்டிருக்கிறது. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவிற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் தயாராகும் ‘ராம் in லீலா ‘ எனும் திரைப்படத்தில் ரியோ , வர்திகா, நயனா எல்சா, மா. கா. பா. ஆனந்த், சேத்தன், முனிஸ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், சண்டை பயிற்சி இயக்குநர் சூப்பர் சுப்பராயன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைக்கிறார். சஞ்ஜெய் விஜய்ராகவன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றும்…
Read Moreதிரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன்,மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ படத்திற்கு “ஓ…!சுகுமாரி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !!
சமீபத்திய “ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show )” படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, இளம் நடிகர் திரு வீர், மற்றும் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெறர சம்கிராந்திகி வஸ்துன்னாம் ( Sankranthiki Vasthunnam ) படத்தில் அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகிய இருவரும் இணைந்து ஒரு அட்டகாசமான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தினை, அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் ( Bharat Dharshan) இயக்குகிறார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மகேஸ்வரா ரெட்டி மூலி (Maheswara Reddy Mooli) தயாரிக்கிறார். புரொடக்ஷன் நம்பர் 2 “ வாக இப்படம் உருவாகிறது. சிவம் பஜே ( Shivam Bhaje ) வெற்றிக்குப் பிறகு, இந்த நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இன்று படத்தின் தலைப்பு “ ஓ…
Read Moreஜனவரியில் வெளியாகிறது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி பெட்’
வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’. இப்படத்தினை ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் தயாரித்துள்ளார். வரும் ஜனவரியில் தமிழகமெங்கும் வெளியாக உள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா என முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தினை கோவையைச் சேர்ந்த ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் எனும் புதிய நிறுவனம் வெளியிடுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலும் தேயிலைத் தோட்டங்களிலும் இப்படத்தினை படமாக்கி உள்ளனர். இதுவரை வெளிவந்துள்ள பெரும்பாலான படங்களில் கதாநாயகனோ, கதாநாயகியோ அல்லது வேறு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் வழியாகவோ கதை சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட அம்சமாக ஊட்டியில் உள்ள ஒரு காட்டேஜில் இருக்கும் பெட்டின்…
Read More“அங்கம்மாள் கதாபாத்திரமாக மாறுவதற்கு பயமில்லாத நேர்மை தேவைப்பட்டது”- நடிகை கீதா கைலாசம்!
நஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்கும் ’அங்கம்மாள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திறமையான நடிகர்கள் கீதா கைலாசம், சரண் சக்தி மற்றும் ’நாடோடிகள்’ புகழ் பரணி ஆகியோர் இடம்பெற்றுள்ள டிரெய்லரும் படம் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று வெளியாகும் இந்தப் படத்திற்கு ரசிகர்களுடன் படக்குழுவினரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். தைரியம், கருணை மற்றும் தாய்மையின் சொல்லப்படாத நம்பிக்கைகள் ஆகியவற்றை அங்கம்மாள் கதாபாத்திரம் மூலம் தனது நடிப்பில் பிரதிபலித்திருக்கிறார் நடிகை கீதா கைலாசம். தமிழ்நாட்டு கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்தக் கதைக்களத்தில் ரவிக்கை உடுத்தாத பழக்கம் கொண்டவர் அங்கம்மாள். அவரது மகன் திருமணம் முடிந்த பின்னர் தன்னுடைய மனைவி தாயின் ரவிக்கை அணியாத பழக்கத்தை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று…
Read Moreபிரபல நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும் தனித்துவமான பொழுதுபோக்கு செயலி, (FANLY APP)ஃபேன்லி-யை நடிகர் திரு.சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மஸ்ரீ திரு.புல்லேலா கோபிசந்த், உலக செஸ் சேம்பியன் குகேஷ், காக்னிசண்ட் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் திரு. லட்சுமி நாராயணன், ஊபெர் நிறுவனத்தின் மூத்த பொறியியல் இயக்குநர் திரு. மணிகண்டன் தங்கரத்தினம், ஃபேன்லி செயலியின் இணை நிறுவனர்கள் திரு.சரவணன் கனகராஜு மற்றும் திரு.ஸ்ரீனிவாசன் பாபு உள்ளிட்டோர் பங்குபெற்று சிறப்பித்தனர். பத்மபூஷண் விருது பெற்றவரும், தன்னுடைய வசீகரமான நடிப்பால் மக்கள் மத்தில் புகழ்பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் இந்த செயலியை தொடங்கி வைத்தது பொழுது போக்கு செயலிகள் தளத்தில் புதிய உற்சாகத்தை வழங்கியுள்ளது. ஃபேன்லி(FANLY APP) என்பது இதுவரை இல்லாத அளவில் நட்சத்திரங்களை அவர்களின் ரசிகர்களோடு ஒருங்கிணைக்கும் தளமாகும். செயலிகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த தொடக்கம், ஒரே இடத்தில் ரசிகர்களின் ஆதர்ச நாயகர்கள் மற்றும் நாயகிகள் ஒரே தளத்தில் இணைப்பதோடு, …
Read Moreரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கு ஐமேக்ஸ் திரையரங்குகள் தயாராகிறது! டிசம்பர் 5 ஆம் தேதி முதல் முன்பதிவுகள் தொடங்குகின்றன!
உலகின் மிகப்பெரிய திரைப்படமான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை ஐமேக்ஸின் சிறந்த இருக்கைகளில் அனுபவித்து பார்க்கும் வாய்ப்பைப் பெறுங்கள். மேலும், டால்பி விஷன் சினிமாவில் முதல் முறையாக வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய திரைப்படமான ‘அவதார்’ வெளியீட்டை ஒட்டி இந்த மாதம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகமாகத் தொடங்கியுள்ளது. ஐமேக்ஸ் மற்றும் டால்பி விஷன் திரையரங்குகளில் சிறப்பு சலுகையுடன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்திற்கான முன்பதிவு டிசம்பர் 5 ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்குகிறது. ’அவதார்’ திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் சிறந்த இருக்கைகள், பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் தரமான ஒலியுடன் படத்தை சிறந்த முறையில் கண்டு களிக்க ஐமேக்ஸ் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. முன்பதிவு தொடங்கும் வேளையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவதார் தீமுடன்…
Read MoreZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்தது !!
இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய க்ரைம் உலகின் கருவை மையமாக வைத்து, இயக்குநர் தினகரன் M, இந்த சீரிஸை உருவாக்கி – எழுதி – இயக்கியுள்ளார். இந்த சீரிஸை S.S Group Production சார்பில் S. சிங்காரவேலன் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர் உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது? S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க…
Read Moreஅம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பட பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன் !!
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய பாடல் வீடியோ வைரலாகி வருகிறது. புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை தனது அம்மாவுடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து பாடிய பாடல் தான் இப்போது இணையம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வீடியோவில் நடிகர் கார்த்தி சந்தோஷ் நாரயாணனின்…
Read Moreதேரே இஷ்க் மே – திரை விமர்சனம்
எப்பேர்ப்பட்ட கோபக்கார மனிதனையும் பொறுமை மிக்கவனாக மாற்ற முடியும் என்பதை தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக தேர்வு செய்கிறார் நாயகி. இதற்காக அவர் தேர்ந்தெடுப்பது அடிதடிக்கு அஞ்சாத கல்லூரி மாணவர் தனுஷை. அவரோ சின்ன கோபத்துக்கும் பெரிய சம்பவம் செய்கிறவர். நாயகியின் எந்த ஒரு அணுகுமுறைக்கும் அவர் இறங்கி வருவதாக தெரியவில்லை. ஆனாலும் தனுஷை சாந்தமிகு இளைஞனாக மாற்றும் தன் முயற்சியை தொடர்ந்து கொண்டே இருக்கிறார் நாயகி. தனுஷை மாற்ற முடிந்தால் மட்டுமே நாயகியின் ஆய்வறிக்கை நிறைவு பெறும் என்கிற இக்கட்டான நிலை ஏற்படுகிறது. இதனால் தனுஷுடன் பழக ஆரம்பிக்கிறார் நாயகி. ஒரு கட்டத்தில் அது காதலாக மாறுகிறது. அந்த காதல் கைகூடியதா? தனுஷ் வன்முறையை விட்டொழித்தாரா? என்கிற கேள்விகளுக்கான விடையே படம் கோபக்கார மாணவர், அன்பான காதலர், பொறுப்புள்ள அதிகாரி என வந்தாலும் ஒவ்வொன்றிலும் தனித்துவம்…
Read Moreதயாரிப்பாளராக அறிமுகமாகும் இயக்குனர் கணேஷ் K பாபு;
Draft by GKB தனது முதல் தயாரிப்பான Production No.1–ஐ அதிகாரபூர்வமாக அறிவிக்க பெருமைப்படுகிறது. சமகால அரசியலை மையமாக வைத்து உருவாகும் இந்த புதிய படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் சிறந்த நடிகர் பட்டாளம் இணைகின்றது. இன்று நடைபெற்ற பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்குநர்கள் H. வினோத், ராஜு முருகன் மற்றும் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கே செந்தில் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர். தயாரிப்பாளராக இயக்குனர் கணேஷ் கே பாபுவின் முதல் படைப்பு இது. இந்த படம், தயாரிப்பாளராக தன்னை அடையாளப்படுத்தி இருக்கும் கணேஷ் கே பாபு அவர்களின் முக்கிய தருணமாகும். ‘டாடா’ வெற்றிப் படத்தின் மூலம் அதிகம் அறியப்பட்ட அவர், தற்போது தான் இயக்கும் அடுத்த படமான **‘கராத்தே பாபு’**வில் பிஸியாக பணிபுரிந்து வருகிறார். இந்தப்…
Read More



